சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

EU threatens to push Greece into bankruptcy after collapse of debt talks

கடன் மீதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸை திவால்நிலைமைக்குள் தள்ள அச்சறுத்துகிறது

By Alex Lantier
17 June 2015

Use this version to printSend feedback

கிரேக்க அரசாங்கத்தின் கடன் மீது திவால்நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரீஸிற்கு இடையே ஓர் உடன்படிக்கையின் சாத்தியக்கூறுகள் தொடர்ந்து நேற்றும் மங்கிப்போனது, இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கிரீஸை திவால்நிலைமைக்குள் தள்ள அச்சுறுத்தினார்கள், கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் பகிரங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கினார்.   

நேற்று கிரேக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், சிப்ராஸ் கிரேக்க அரசுக்கு கடன்வழங்குவதை வெட்டிவரும் மற்றும் இம்மாத இறுதி வாக்கில் அதை திவால்நிலைமைக்குள் தள்ள அச்சுறுத்தி வரும் கிரேக்க கடன்வழங்குனர்களைக் குற்றஞ்சாட்டினார். திவால்நிலைமையானது கிரேக்க வங்கிகளை சீரழித்துவிடும் என்பதுடன், அதன் நிதியியல் அமைப்புமுறையின் பொறிவைத் தடுப்பதற்காக ஒரு தேசிய நாணயத்தை மறுஅறிமுகம் செய்ய கிரீஸை நிர்பந்திக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் யூரோவிலிருந்து கிரேக்கத்தின் வெளியேற்றம் (“Grexit”) என்பதாகும். 

கிரீஸின் பொருளாதார நெருக்கடிக்கு, சர்வதேச நாணய நிதியம் (IMF) “குற்றகரமான பொறுப்பைத்" தாங்கி இருப்பதாக கூறிய சிப்ராஸ், அதன் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களான சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றைக் கொண்டு கிரீஸின் "குரல்வளையை நெரிக்கும்" நடவடிக்கைகளை விமர்சித்தார்.

"தெளிவாக தோல்வியடைந்துவிட்ட ஒரு வேலைத்திட்டத்தை பின்தொடர்வதற்கு அந்த அமைப்புகள் வலியுறுத்துவது என்பது பிழையான அல்லது அதீத வைராக்கியத்திலிருந்து வரவில்லை; பெரும்பாலும் அனேகமாக அது ஓர் அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்கிறது,” என்று அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் "ஐயத்திற்கிடமின்றி சிக்கன நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் எந்தவொரு முயற்சியையும் கொன்று புதைப்பதை இலக்காக கொண்டு பலத்தைக் காட்டி வருகின்றனர்” என்று முடித்தார்.

எவ்வாறிருந்த போதினும், கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை 25 சதவீத அளவிற்கு சுருக்கி, அதன் கடன் சுமையை அதிகரித்து, மக்களை வறுமைக்குள்ளாக்கி இருப்பதால், அதன் மீது கிரீஸில் நிலவும் பரந்த மக்கள் எதிர்ப்புக்கு சிப்ராஸ் அழைப்புவிடுத்திருக்கின்ற போதினும் கூட, அவர் கிரேக்க மக்கள் மீது கூடுதலாக சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் அடிப்படையில் இன்னமும் கூட ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்படிக்கையைக் கோரி வருவதையும் சமிக்ஞை செய்தார்.

சிப்ராஸ், To Potami (“நதி”) கட்சியின் ஸ்டாவ்ரோஸ் தேடோராக்கேஸ், சமூக-ஜனநாயக PASOK கட்சியின் Fofi Gennimata, மற்றும் பழமைவாத புதிய ஜனநாயக (ND) கட்சியின் நிர்வாகிகளைச் சந்தித்து பேசினார். இந்த கட்சிகள் எல்லாமே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு சிக்கன உடன்படிக்கைக்கு வேலை செய்வதை ஆதரிக்கின்றன. சிப்ராஸைச் சந்தித்த பின்னர், தேடோராக்கேஸ் அறிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடுகளை நோக்கி சிப்ராஸ் "இரண்டு அல்லது மூன்று சைகைகளைக்" காட்ட தயாரிப்பு செய்திருப்பதை அவர் தெரிவித்ததாக அறிவித்தார். அரசாங்கம் தேடோராக்கேஸ் இன் அறிவிப்பை மறுக்கவில்லை.

To Vima செய்தியின்படி, அவரது அரசாங்கத்தில் உள்ள தீவிர-வலது சுதந்திர கிரேக்கர்கள் (Anel) கட்சி அல்லது சிரிசாவின் "இடது அரங்கம்" (Left Platform) போன்ற கூறுபாடுகளுடன் முரண்பாட்டுக்குள் வரவும் அவர் தயங்கப்போவதில்லை என்பதையும் சிப்ராஸ் அறிவித்தார். அந்த கூறுபாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்பாட்டிற்கு வேலை செய்யும் முயற்சிகளை விமர்சித்துள்ளன. “என்னை விட அதிகமாக யாரும் இடதில் இல்லை,” என்றவர் தெரிவித்தார்.

ஆனால் சிக்கன நடவடிக்கைகள் மீதான மக்கள் எதிர்ப்பிற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கும் இடையே சிப்ராஸின் எரிச்சலூட்டும் சமநிலைப்படுத்தும் நடவடிக்கை, முன்பினும் கூடுதலாக சிக்கலாகி உள்ளது. ஜனவரியில் பதவியேற்று வெறும் ஒருசில வாரங்களிலேயே, அவர் சிக்கன நடவடிக்கைகளை முடிவு கொண்டு வரும் அவரது தேர்தல் வாக்குறுதியை உதறிவிட்டு, ஜூன் இறுதி வரையில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை பிணையெடுப்புகளை விரிவாக்க உடன்பட்டார். இந்த முடிவால் சிரிசா மதிப்பிழந்துள்ளது என்ற அச்சத்தில், சிப்ராஸ் ஜூனுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை தொடர்வதற்கு உடன்படுவதற்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து சில மட்டுபடுத்தப்பட்ட விட்டுக்கொடுப்புகளை பெற முயன்று வருகிறார்.

ஆனால் அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய-கிரேக்க பேச்சுவார்த்தைகளின் முறிவு ஒரு நிதியியல் பொறிவுக்கும், "கிரீஸ் வெளியேற்றத்திற்கும்" இட்டுச் செல்லும் என்ற சாத்தியக்கூறு உள்ளதால், கிரேக்க அதிகாரிகளும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும், செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து வருகிறார்கள்.

கிரேக்க அதிகாரிகள் கிரீஸ் இறக்குமதி செய்துவரும் எரிபொருள் மற்றும் மருந்துபொருட்கள், இரண்டினதும் கடுமையான பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதற்காக தயாரிப்பு செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யூரோ மற்றும் டாலர்களுக்கு எதிராக, எதிர்கால கிரேக்க ட்ராக்மா நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதால், “ட்ராக்மாவில் இறக்குமதிகளின் விலைகள் நிச்சயமாக எட்டமுடியாத அளவிற்கு உயருமென அச்சம் நிலவுவதாக" நாளிதழ் Kathimerini எழுதியது.  

ஐரோப்பிய அதிகாரிகளை பொறுத்தவரை, மக்கள் மீது கடுமையான சமூக வெட்டுக்களின் ஒரு புதிய சுற்றைத் திணிக்கவில்லை என்றால், கிரீஸ் சூறையாடப்பட்டுவிடும் என்ற அச்சங்களை அவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

“ஓர் உறுதியான சீர்திருத்த பொதி முன்வைக்கப்படவில்லை என்றால், பின்னர் அவசியமானால் 'கிரீஸின் வெளியேற்றத்தை' ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும். கிரேக்கத்து மக்களின் சேதத்தை தடுப்பதில் கிரேக்க அரசாங்கத்திற்கு நிஜமான ஆர்வமிருப்பதாக இனியும் என்னால் நம்ப முடியவில்லை,” என்று ஜேர்மனியின் ஆளும் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் (CDU) சட்டவகுப்பாளர் Michael Grosse-Broemer தெரிவித்தார்.

கிரேக்க அரசாங்க திவால்நிலைமையானது, ஒட்டுமொத்த கிரேக்க நிதியியல் அமைப்புமுறைக்கே கடன்வழங்குவதை நிறுத்துவதற்கு இட்டுச் செல்லும் என்பதை ECB அதிகாரிகள் தெளிவுபடுத்தி வருகிறார்கள். டச் மத்திய வங்கியின் தலைவரும் ஐரோப்பிய மத்திய வங்கியின் நிர்வாக குழு அங்கத்தவருமான Klaas Knot நேற்று டச் நாடாளுமன்றத்திற்கு கூறுகையில், கிரேக்க அரசு திவாலானால், அதுமுதற்கொண்டு ஐரோப்பிய மத்திய வங்கி அதன் கடன்களுக்கான உத்தரவாதமாக கிரேக்க வங்கிகளின் பிணைஈட்டை ஏற்றுக் கொள்ளாது என்றார். ஒரு திவால்நிலைமைக்குப் பின்னர், “நிறைய விடயங்கள் ஏற்படும்,” என்றவர் தெரிவித்தார்.

கிரேக்க வைப்பீட்டாளர்கள் (depositors) ஏற்படக்கூடிய பொறிவில் அவர்களது நிதிகளை இழப்பதை தவிர்க்கும் பொருட்டு அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து அவர்களது யூரோக்களை திரும்பப்பெறுவதை தடுக்க, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மூலதன கட்டுப்பாடுகளுக்கு திட்டங்களை வரைந்து வருவதாக திங்களன்று ஜேர்மனியின் Suddeutsche Zeitung குறிப்பிட்டது. அதுபோன்ற நடவடிக்கைகளை ஏதென்ஸ் ஏற்க மறுக்கும் ஒரு நிலைமைக்கான திட்டங்களும் வரையப்பட்டு வருகின்றன. ஈரானுக்கு எதிராக வாஷிங்டனால் திணிக்கப்பட்ட நிதியியல் தடையாணைகளைப் போன்ற ஏதோவிதமான ஒன்றாக, உலக நிதியியல் அமைப்புமுறையிலிருந்து கிரீஸை "தனிமைப்படுத்தும்" நகர்வுகளும் அவற்றில் உள்ளடங்கும்.  

ஆனால் ஏதென்ஸ் SZ செய்தியை மறுத்தது, இருந்தபோதினும் பேர்லின் அதிகாரிகள் அதை மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள முன்னணி அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரீஸிற்கு இடையே ஒரு பேச்சுவார்த்தை உடன்பாட்டுக்குத் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகின்ற நிலையில், அங்கே அதுபோன்ற ஓர் உடன்பாடு எட்டப்பட முடியுமா என்பதன் மீது அதிகரித்தளவில் சந்தேகங்கள் நிலவுகின்றன.

லுக்சம்பேர்கில் யூரோ மண்டல நிதி மந்திரிமார்களின் வியாழக்கிழமை கூட்டத்தில் ஓர் உடன்பாடு எட்டப்படுவதன் மீது அவர் நிச்சயமற்று இருப்பதாக ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்தார். அவர் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில், “துரதிருஷ்டவசமாக, அங்கே புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை,” என்றார். அவர் தொடர்ந்து இதையும் சேர்த்துக் கொண்டார்: “கிரீஸை யூரோ மண்டலத்தில் வைத்துக்கொள்ள சாத்தியமான அனைத்தையும் செய்யவே நான் விரும்புகிறேன் என்பதை நான் எப்போதும் கூறி வந்துள்ளேன். இப்போதும் நான் தொடர்ந்து அதைத்தான் கூறுகிறேன்.”

வாஷிங்டனில், வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜோஸ் ஏர்னெஸ்ட், ஒரு "நம்பகமான சீர்திருத்த திட்டத்தை" ஏற்படுத்துவதற்கு பேச்சுவார்த்தையை தொடருமாறு கிரேக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

ஜேர்மனியின் மத்திய வங்கி Bundesbank இன், ஜென்ஸ் வைட்மான் பிராங்க்பேர்ட்டில் ஒரு கூட்டத்தில் கூறுகையில், கிரீஸிற்கான நேரம் கடந்து சென்று கொண்டிருக்கிறது, பேச்சுவார்த்தைகளின் "வேறுவேறு வளைவு சுளிவுகளைப்" பின்தொடர அதற்கு சாத்தியமில்லை என்றார்.   

ஒரு கிரேக்க திவால்நிலைமையால் தூண்டிவிடப்படும் நிதியியல் பதட்டம், வேகமாக ஐரோப்பா எங்கிலும் ஒரு பரந்த நெருக்கடிக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சங்களுக்கு இடையே, கிரேக்க நெருக்கடி ஏற்கனவே ஏனைய ஐரோப்பிய அரசாங்கங்களில் நிதியியல் சந்தைகளின் நம்பிக்கையை பாதிப்பிற்குள்ளாக்கி வருகிறது. கடன் பத்திர முதலீட்டாளர்கள் போர்ச்சுகீசிய, ஸ்பானிய மற்றும் இத்தாலிய 10 ஆண்டு பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்களை முறையே 3.33, 2.53 மற்றும் 2.45 சதவீதமாக உயரச்செய்தனர்.