சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

European Central Bank extends credit on fears of Greek bank collapse

கிரேக்க வங்கி பொறிவின் அச்சங்களால் ஐரோப்பிய மத்திய வங்கி கடன்வழங்குவதை நீடிக்கிறது

By Robert Stevens
20 June 2015

Use this version to printSend feedback

கிரேக்க வங்கிகளின் உடனடியான பொறிவுக்கு அஞ்சி அவற்றில் சேமித்து வைத்திருந்தவர்கள் முன்பில்லாத அளவிலான தொகைகளைச் சேமிப்பிலிருந்து வெளியே எடுத்த நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மீண்டும் வெள்ளியன்று கிரேக்க வங்கிகளுக்கு உதவ தலையீடு செய்தது.

மேலதிக செலவின வெட்டுக்களுக்கான திட்டங்களின் நிபந்தனைகளின் மீது கிரீஸ் மற்றும் அதன் கடன் வழங்குனர்களான ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையே பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, வைப்பில் வைக்கப்பட்டிருந்த பில்லியன் கணக்கான யூரோக்கள் கிரேக்க வங்கிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டன. வெள்ளியன்று 1.2 பில்லியன் யூரோ உள்ளடங்கலாக இந்த வாரத்தில் மட்டும் 4.2 பில்லியன் யூரோ வெளியே எடுக்கப்பட்டது.

நிதியியல் பொறிவைத் தடுப்பதற்காக மற்றும் 300 பில்லியனுக்கு அதிகமான அதன் மொத்த கடனைத் திரும்பி செலுத்தவியலா நிலைமையைத் தவிர்ப்பதற்காக, கிரீஸின் மத்திய வங்கிக்கு கூடுதலாக 3.5 பில்லியன் யூரோ கடன் வழங்குமாறு கிரீஸின் சிரிசா தலைமையிலான அரசாங்கம் ECB ஐ கோரியிருந்தது. மொத்தம் 84.1 பில்லியன் யூரோவை எட்டும் வகையில் "அவசரகால பண உதவியிலிருந்து" (Emergency Liquidity Assistance) புதனன்று கிரேக்க வங்கிகளுக்கு மற்றொரு 1.1 பில்லியன் யூரோ வழங்கிய ECB, மேற்கொண்டும் கூடுதலாக வெள்ளியன்று பணம் வழங்கியது, ஆனால் எவ்வளவு என்பதை வெளியிடவில்லை. சில செய்திகளின்படி, வெறுமனே அது திங்கட்கிழமை வரையில் கிரீஸைக் காப்பாற்றுவதற்கே போதுமானது.

கிரீஸ் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இந்த வாரயிறுதிக்குள் மூலதன கட்டுப்பாடுகளை விதிக்கவும் மற்றும் வெளியே எடுக்கும் சேமிப்பு பணத்திற்கு வரம்புகளை நிர்ணயிப்பதற்கும் கூட அது நிர்பந்திக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகங்கள் நிலவின. ஜூன் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திற்கு திரும்ப செலுத்த வேண்டிய அதன் 1.3 பில்லியன் யூரோ மீது கிரேக்க திவால்நிலைமையின் அச்சம், “வேகமாக வேறொன்றால் —அனேகமாக மிகவும் அபாயகரமான ஒன்றால்—தூண்டிவிடப்பட்ட நேரவெடிகுண்டு, அதாவது கிரேக்க வங்கிகளின் கடன்தீர்க்கும் திறனால் எடுத்துக்கொள்ளப்பட்டது,” என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டோனால்ட் டஸ்க் ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திங்களன்று மாலை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் அவசர கூட்டத்திற்குப் பின்னர் ஓர் உடன்படிக்கையை எட்டும் நோக்கில், உடனடியாக நிகழவிருக்கும் பொறிவை முகங்கொடுக்கும் நிலையில் கிரீஸை வைத்திருப்பதே ஐரோப்பிய மத்திய வங்கியின் மூலோபாயமாக உள்ளது. இது அபாயகரமான இராஜதந்திரத்திற்கு ஒரு அசாதாரணமான மற்றும் பொறுப்பற்ற எடுத்துக்காட்டாகும் —அதாவது கிரேக்க பொருளாதாரத்தின் சீரழிவை மட்டும் அச்சுறுத்துவதில்லை மாறாக ஒட்டுமொத்த ஐரோப்பிய பொருளாதாரத்தின் மீதே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெரும் டோமினோ விளைவைக் (domino effect) கொண்டு அச்சுறுத்துவதாகும்.

இந்த மூலோபாயத்திற்குத் தான் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கு மிகுந்த பிரிவுகள் அனைத்தும் அவற்றின் ஒப்புதலை வழங்கியுள்ளன. அந்த அமைப்புகள், ஏதென்ஸை ஒரு முன்னுதாரணமாக ஆக்குவதுடன் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் மீதான அவற்றின் கண்டந்தழுவிய தாக்குதல் மூலோபாயத்திற்கு எந்தவொரு தடங்கல்களையும் பொறுத்துக்கொள்ளாது.

இரண்டாண்டுகளில் செயல்படுத்த இருக்கும் 2.5 பில்லியன் யூரோ மதிப்பிலான சிக்கன நடவடிக்கைகளை ஏற்கனவே சிரிசா  முன்வைத்திருப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியமோ கடுமையான ஓய்வூதிய வெட்டுக்கள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் 3 பில்லியன் யூரோ நிதிய சேமிப்புக்கு வலியுறுத்தி வருகிறது.

வியாழனன்று கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சிரிசாவின் சமீபத்திய பரிந்துரை, ஒரு "பற்றாக்குறை தடுப்பு கருவியை" (deficit brake) அறிமுகம் செய்வதாக இருந்தது. இது, கிரேக்க அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டக்கணக்கு பற்றாக்குறைக்குள் சென்றால், தானாகவே நிர்வாகத்திற்குள் செலவுகளை வெட்டுவதாக இருக்கும். ஆனால் இதை யூரோ மண்டல அதிகாரிகள் பட்டவர்த்தனமாக நிராகரித்தனர்; “பேச்சுவார்த்தை அறைக்குள் முதிர்ச்சி பெற்றவர்களோடு" பேசுவது ஒரு அவசர தேவையாக இருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் அறிவித்தார்.

நிதியியல் செல்வந்த தட்டுக்களுடன் ஒரு "கௌரவமான சமரசத்தின்" மூலமாக கிரேக்க உழைக்கும் மக்களின் வாழ்நிலைமைகளை அதனால் பாதுகாக்க முடியும் என்ற சிரிசாவினது வாதங்கள் மீது வைக்கப்பட்ட மிகக்கடுமையான குற்றப்பத்திரிகை இதுவாகவே உள்ளது.

உலக பில்லியனர்களின் பிரதிநிதிகளோ, 2008 உலகளாவிய நிதியியல் பொறிவின் மிகப்பாரியளவிலான ஒட்டுமொத்த விலையையும் வரவிருக்கின்ற தசாப்தங்களில் தொழிலாள வர்க்கமே செலுத்துவதை உத்தரவாதப்படுத்துவதற்கு முன்பினும் கூடுதலாக கண்மூடித்தனமான வெட்டுக்களைக் கோரி வருகின்றனர்.

கடைசியாக எழுதிய அவரது வலைப்பதிவில், நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் கிரீஸில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள சமூக பேரழிவின் சில புள்ளிவிபரங்களைத் தொகுத்தளித்தார். 2010 க்குப் பின்னரில் இருந்து, “கூலிகள் 37 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன, ஓய்வூதியங்கள் 48 சதவீத அளவிற்கு குறைக்கப்பட்டன, அரசு வேலைவாய்ப்பு 30 சதவீதம் அளவிற்கு சுருக்கப்பட்டது,” மற்றும் "நுகர்வுவோர் செலவுகள் 33 சதவீத அளவிற்குக் குறைக்கப்பட்டன,” என்று அவர் எழுதுகிறார்.

“இன்றைக்கு சுமார் 1 மில்லியன் குடும்பங்கள் தாத்தா அல்லது பாட்டியின் சொற்பமான ஓய்வூதியத்தைக் கொண்டு பிழைத்திருக்கின்றன, ஏதேனுமொரு வேலைவாய்ப்பற்றோர் நலச்சலுகையை வேலைவாய்ப்பற்றோரில் வெறும் 9 சதவீதத்தினர் மட்டுமே பெற்று வருகின்ற ஒரு நாட்டில் அந்த குடும்பங்களின் மீத நபர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அத்தகைய ஒரேயொரு ஆளின் ஓய்வூதியத்தையும் வெட்டுவதென்பது ஒரு குடும்பத்தையே வீதிகளில் கொண்டு வருவதற்கு ஒப்பானதாகும்.”

மெதுமெதுவாக சிக்கன நடவடிக்கையைத் திணிப்பதற்கு சிரிசாவின் அழைப்புடன் தொடர்ந்து உடன்பாடு கொண்டுள்ள பைனான்சியல் டைம்ஸ் வெள்ளியன்று குறிப்பிடுகையில், “ஐரோப்பாவிடமிருந்து உடன்பாட்டை ஏற்பதற்கு சிப்ராஸிற்கு நேரம் வந்துவிட்டது,” என்று தலையங்கத்தில் எழுதியது.

அதற்கொரு மாற்றீடு என்பது மிகவும் மோசமானதாக இருக்குமென அது எச்சரித்தது. “ஐரோப்பிய மத்திய வங்கியிலிருந்து கிடைக்கும் நிதிகளைக் கிரேக்க வங்கிகள் சார்ந்திருக்கின்ற நிலையில், திவால்நிலைமை என்பது கிரீஸை யூரோமண்டலத்திலிருந்து வெளியே தள்ளக்கூடும்,” என்று அது எழுதியது. “கிரீஸின் நிதியியல் அமைப்புமுறையின் சீரழிவு அதன் பொருளாதார வாழ்வைச் சின்னாபின்னமாக்கிவிடும், அதேபோல அதன் அரசியல் அமைப்புமுறைக்கு நினைத்துப் பார்க்கவியலா பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்,” என்றது.

சிரிசா சிக்கன நடவடிக்கையை நிராகரிக்கவில்லை, ஆனால் அதை நடைமுறைப்படுத்த மிகவும் சாதகமான அரசியல் விதிமுறைகளைக் கோரி வருகிறது. கிரீஸை இப்போது குறைந்தளவிலான சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதித்தால், அது பொருளாதார மீட்சி ஏற்படும் போது பின்னர் அந்த அடித்தளத்தில் அது அதன் கடன்களை அதிகமாக திரும்ப செலுத்தும் என்று சிப்ராஸூம் வாரௌஃபாகிஸூம் வாதிடுகின்றனர்.

ஆனால் அதன் நிபந்தனைகளின்படியே கடைசி நிமிடத்தில் ஒரு உடன்பாடு எட்டப்பாட்டாலும் கூட, அது தொழிலாள வர்க்கத்தின் மீது மழையென பொழியப்படும் தாக்குதல்களை அடிப்படையில் மாற்றப் போவதில்லை. கிரீஸ் அதன் மலைப்பூட்டும் கடன்களைத் திரும்ப செலுத்த 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக, 2057 வரையில், ஆகலாம் என்று Daily Telegraph சமீபத்தில் குறிப்பிட்டது.

ஆண்டுக்கணக்கிலான சிக்கன நடவடிக்கைக்கு ஒரு மாற்றீடாக சிப்ராஸால் காட்டப்படும் தோரணையில் ஒரு மத்திய கொள்கையாக இருப்பது, அவரது அரசாங்கம் இன்னும் சிறப்பார்ந்த வரி சேகரிப்பாளர்களாக செயல்பட முடியும் என்பதாகும். ஆனால் கிரேக்க திவால்நிலைமையின் அச்சம் முன்பினும் அதிகமாக உச்சரிக்கப்படுகின்ற நிலையில், ஏதென்ஸின் நெருக்கடிக்கு எண்ணெய் வார்க்கும் வகையில் அரசு வருவாய் வீழ்ச்சிகளை ஏற்படுத்தி, செலுத்தப்படாத வரி பாக்கியின் அளவு உயர்ந்து வருகிறது. மே மாதம் செலுத்தப்படாத வரி பாக்கிகள் 1 பில்லியன் யூரோவாக அதிகரித்து, இந்த ஆண்டின் மொத்த தொகையை 5 பில்லியன் யூரோவிற்கு கூடுதலாக ஆனதை புதிய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின. நிலுவையில் உள்ள மொத்த செலுத்தப்படாத வரி பாக்கிகள் 77 பில்லியன் யூரோவிற்கு அதிகமாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு சிறந்த உடன்படிக்கையை பெறுவதற்கான ஒரு முயற்சியில், சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான கோரிக்கைகளுக்கு எதிராக, அவற்றை தடுப்பதற்காக, வாஷிங்டனின் ஆதரவைப் பெற முயன்றார். இந்த மூலோபாயத்தின் தோல்வி தான், சிப்ராஸ் இப்போது "ரஷ்யாவை துருப்புச்சீட்டாக்கி" விளையாடும் ஒரு முயற்சியில் தங்கி இருக்கிறார் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி அமர்வில் இருந்தபோதே, ஒரு கௌரவ அழைப்பாளராக மாஸ்கோவிலிருந்து கலந்து கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு முன்னால் சிப்ராஸ் பேசிக் கொண்டிருந்தார். அவரது உரையைத் தொடர்ந்து, கிரீஸ் வழியாக ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் எரிவாயுவைக் கொண்டு செல்லும் ஒரு எரிவாயுக்குழாய் நீட்சியை கட்டமைப்பதன் மீதான ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. ரஷ்யாவிடமிருந்து சிரிசா நிதியுதவி பெறும் சாத்தியக்கூறு குறித்தும் பேசப்பட்டது.

Russia Today தொலைக்காட்சிக்கு துணை பிரதம மந்திரி Arkady Dvorkovich கூறுகையில், “நிதி உதவி தேவையானால், நாங்கள் அந்த கேள்வியை பரிசீலிப்போம்,” என்றார்.

கிரீஸ் ஒரு நீண்டகால நேட்டோ அங்கத்துவ நாடு என்கிறபட்சத்தில், மாஸ்கோ மற்றும் சீனாவை நோக்கிய சிரிசாவின் நோக்குநிலை பெரும் உள்நோக்கங்களைக் கொண்டுள்ளது. அதுபோன்றவொரு நேரத்தில் சிப்ராஸ் மாஸ்கோவிற்கு விஜயம் செய்தமை கூட ஒரு மறைமுகமான அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. “இதுவரையில் ஐரோப்பிய நிதியியல் நெருக்கடியில் ரஷ்யா பெரிதும் விலகி இருந்தது. ஆனால் கிரேக்க புதிர் உள்ளே நுழைவதற்கு ஒரு காரசாரமான தூண்டுபொருளை வழங்குகிறது. மாஸ்கோவ் அதை செய்தால், அது ஐந்தாண்டுகால பொருளாதார நெருக்கடி என்பதை ஓர் புவிசார் அரசியல் நெருக்கடியாக மாற்றும்,” என்று அமெரிக்க இதழ் Foreign Policy கவலை வெளியிட்டது.

ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஆறு மாதங்களுக்கு தடைகளை நீடித்து வெறும் ஒருசில நாட்களுக்குப் பின்னர் புட்டின் இருக்கும்போது உரையாற்றுகையிலேயே, சிப்ராஸின் பேச்சு ஒரு மறைமுகமான அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது. “இந்த பூமியின் பொருளாதார மையம் மாறியுள்ளது. அங்கே புதிய பொருளாதார சக்திகள் ஒரு பாத்திரம் வகித்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார். “ரஷ்யா எங்களின் மிக முக்கிய பங்காளிகளில் ஒன்றாகும்,” என்றார்.

கிரீஸ் மூலோபாயரீதியில் முக்கியமானது என்பதுடன், அது “அப்பிராந்தியத்தில் இன்னமும் ஸ்திரப்பாட்டு மையத்தின் அந்தஸ்தைத் தாங்கியுள்ளது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சிப்ராஸ் கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்திற்கான சிறந்த நிபந்தனைகளை ஸ்தாபிக்க மட்டுமே முயல்கிறார், அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்படிக்கையை பாதுகாக்க பொறுப்பேற்றுள்ளார். மேற்கூறியதை எட்டுவதற்காக, உள்நாட்டு கூட்டணிகளை அவர் பலவீனப்படுத்தி வருகிறார். செவ்வாயன்று, அவர் To Potami (ஆறு) இன் தலைவர் ஸ்டாவ்ரோஸ் தேடோராக்கேஸ் மற்றும் சமூக ஜனநாயக PASOK இன் புதிய தலைவர் Fofi Gennimata ஐ சந்தித்தார். பிந்தையதுடன் சேர்ந்து 30 பிரதிநிதிகள் உள்ளனர்.    

அந்த அமைப்புகளின் கடுமையான நிபந்தனைகளின் மீது ஓர் உடன்படிக்கையை அவர் எட்டினால், அவரது சொந்த கட்சிக்குள்ளேயே சாத்தியமாகக்கூடிய கலகத்திற்கு எதிராக ஒரு வேலியமைக்க சிப்ராஸ் முயன்றுவருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளும் எந்தவொரு உடன்படிக்கையையும் அவர் ஆதரிப்பார் என்பது தேடோராக்கேஸ் இன் முந்தைய வெளிப்பாடுகளில் உள்ளது.