சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

After Syriza’s concessions, EU demands more austerity at Greek debt summit

சிரிசாவின் விட்டுக்கொடுப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க கடன் விவாத கூட்டத்தில் அதிக சிக்கன நடவடிக்கைகளைக் கோருகிறது

By Alex Lantier
23 June 2015

Use this version to printSend feedback

நேற்று புருசெல்ஸின் ஒரு அவசர ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்க தலைவர்கள் சிரிசா தலைமையிலான கிரேக்க அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு புதிய சமூக வெட்டுக்களின் தொகுப்புக்கு ஒப்புதல் வழங்கியது, ஆனால் கிரீஸின் 300 பில்லியன் யூரோ கடன் மீது ஓர் உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்னதாக இன்னும் அதிகமான சிக்கன நடவடிக்கைகள் அவசியப்படுவதாக குறிப்பிட்டனர். 

இதேபோன்ற அவசர பேச்சுவார்த்தைகள் ஒரு வாரத்திற்கு முன்னர் உடைந்து போயிருந்தன. கிரீஸ் இம்மாத இறுதியில் அதன் கடன்வழங்குனர்களுக்கு செலுத்த வேண்டிய 7.2 பில்லியன் யூரோ தொகையை வழங்குவதை நியாயப்படுத்துவதற்கு சிரிசாவின் வெட்டுக்கள் போதியளவிற்கு ஆழமாக இல்லையென அந்நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தினர். கிரேக்க அரசு திவால்நிலைமை குறித்த ஐரோப்பிய ஒன்றிய அச்சம் மற்றும் கிரேக்க வங்கிகளிடமிருந்து தீவிரமடைந்துவந்த விமர்சனம் ஆகியவற்றிற்கு முன்னால், சிரிசா, பிற்போக்கு வரியை (regressive tax) அதிகரிப்பது, ஓய்வூதியங்கள் மற்றும் சுகாதார பராமரிப்புகளில் கூர்மையான வெட்டுக்களுக்கான அதன் கோரிக்கைகளுக்கு இணங்கி, மீண்டுமொருமுறை ஐரோப்பிய ஒன்றியத்திடம் மானக்கேடாக மண்டியிட்டது.

ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோன்-குளோட் ஜுங்கர்க்கு திங்களன்று எழுதிய ஒரு கடிதத்தில், கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ், உண்மையில் அவரது பரிந்துரை கிரீஸின் அமைப்புகளுக்கு கடன்வழங்குபவர்களால் —ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றால்— கோரப்பட்ட வெட்டுக்களையும் விட அதிகமாக இருந்ததாக தெரிவித்தார்.

“2015-2016க்கான நிதியியல் இடைவெளியை அடைப்பதற்கு அமைப்புகளின் தேவைப்பாடுகளுக்கு கிரேக்க அரசாங்கத்தின் விடையிறுப்பானது நேரடியாக மற்றும் முழுவதுமாக இருந்துள்ளது என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் எழுதினார்.

2015 இன் கிரேக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மொத்தம் 1.5 சதவீதத்தையும், 2016 இல் 2.5 சதவீதத்தையும் வெட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருந்ததாகவும், ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிரிசாவின் வெட்டுக்கள் 1.51 மற்றும் 2.87 சதவீதமாகும் என்றும் சிப்ராஸ் எழுதினார். ஆகவே, “அங்கே நிதியரீதியில் நழுவல்கள் இல்லை என்பதும், வகுத்துரைக்கப்பட்ட நோக்கங்களை விட அதிகமாகவே இருப்பதும் இதிலிருந்து தெளிவாக உள்ளது,” என்றவர் முடித்தார்.

மிகப்பெரிய வெட்டுக்கள் ஓய்வூதியங்களில் விழுங்கின்றன. முன்னதாக ஓய்வூதிய வெட்டுக்கள் ஒரு "அபாய பகுதியில்" இருப்பதாகவும், அதை அது தாண்டாது என்றும் சிரிசா அறிவித்திருந்தது. ஆனால் இப்போது அது ஓய்வூதிய வயதை 62 இல் இருந்து 67 ஆக அதிகரிக்கவும் மற்றும் முன்னதாக ஓய்வு பெறுவதைத் தவிர்ப்பதற்கும், 2015 இல் 30 மில்லியன் யூரோ அளவிற்கும் மற்றும் 2016 இல் 300 மில்லியன் யூரோ அளவிற்கும் ஓய்வூதிய செலவை வெட்டுவதற்கும் பல ஆண்டுகளாக பரிந்துரைத்து வருகிறது.

தற்போதைய ஓய்வூதியங்கள் பெயரளவிற்கு வெட்டப்படவில்லை என்றாலும், உண்மையில் கிரேக்க அரசு பில்லியன் கணக்கான யூரோக்களை ஓய்வூதியங்களில் இருந்து எடுத்து வருகிறது. ஓய்வூபெறுபவர்கள் மருத்துவ பராமரிப்புக்காக மொத்தமாக 2015 இல் 135 மில்லியன் யூரோவிற்கு கூடுதலாகவும், 2016 இல் 490 மில்லியன் யூரோவிற்கு கூடுதலாகவும் செலுத்த நிர்பந்திக்கப்படுவார்கள், அரசு ஓய்வூதிய திட்டத்திற்கான  ஊழியர் பங்களிப்பு இந்த ஆண்டு 350 மில்லியன் யூரோ அளவிற்கும் மற்றும் அடுத்த ஆண்டு 800 மில்லியன் யூரோ அளவிற்கும் உயரும்.

பிற்போக்கு மதிப்பு கூட்டு வரியில் (மதிப்பு கூட்டு அல்லது விற்பனை வரி) ஒரு மக்கள்விரோத உயர்வு மூலமாக இந்த ஆண்டு 680 மில்லியன் யூரோவும் மற்றும் 2016 இல் 1.36 பில்லியன் யூரோவும் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்களின் இந்த பரந்த தொகுப்பு தொழிலாள வர்க்கத்தைப் பாதிக்கும், ஆனால் ஆண்டுக்கு 500,000 யூரோவிற்கு அதிகமாக இலாபமீட்டும் பெருநிறுவனங்கள் மீது 12 சதவீத ஒரேமுறை வரியைக் கொண்டு வரவும் சிரிசா பரிந்துரைத்து வருகிறது.      

சிரிசா ஒப்புக்கொண்ட வெட்டுக்களோடு அவர்கள் உடன்படுவதாக குறிப்பிட்ட போதினும், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கிரீஸூடன் ஓர் இறுதி உடன்படிக்கையை முடிவுசெய்ய மறுத்தனர். அதற்கு மாறாக, அவர்கள் கிரிஸிற்கு நிதியுதவிகளை வழங்குவதற்கு முன்னதாக இன்னும் அதிக வெட்டுக்களைக் கோர விரும்புவதைத் தெளிவுபடுத்தினர்.  

பேச்சுவார்த்தைகளுக்குப் பிந்தைய ஒரு பத்திரியாளர் கூட்டத்தில், ஜூங்கர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டோனால்ட் டஸ்க் கூறுகையில், இந்த பரிந்துரைகள் விளைவுகளை உண்டாக்குமென அவர்கள் நம்புவதாக தெரிவித்தனர். சிரிசாவின் முன்மொழிவுகளை "ஒரு சாதகமான படியாக" டஸ்க் குறிப்பிட்டதுடன், தொடர்ந்து கூறுகையில், அவை "வரவிருக்கின்ற மணிதிலாயங்களில் மதிப்பீடு செய்யப்படும்" என்பதையும் சேர்த்துக் கொண்டார். கிரீஸ்-ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கை, யூரோ குழும நிதி மந்திரிமார்களின் புதன்கிழமை கூட்டத்திற்குப் பின்னர், இந்த வாரம் இறுதி செய்யப்படுமென ஜூங்கர் கணித்தார். பின்னர் அந்த உடன்படிக்கை வியாழனன்று ஓர் ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்படும்.

ஆனால் வேறொரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில், கிரேக்க அரசு திவால்நிலையைமை தடுக்கும் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு "ஆழ்ந்த வேலை" இன்னமும் அவசியப்படுவதாக தெரிவித்தார்.

யூரோ குழுமத்திற்கு தலைமை வகிக்கும் டச் நிதி மந்திரி ஜெரொன் திஜிஸ்செல்ப்லோம், ஐரோப்பிய ஒன்றியத்தைத் திருப்திப்படுத்த மேலதிக வெட்டுக்கள் அவசியப்படுவதை தெளிவுபடுத்தினார். நிதித்துறை அதிகாரிகளால் கிரேக்க பரிந்துரையை ஒரே நாளில் ஒரு திருப்தியான வழியில் பகுத்தாராய முடியாது என்று கூறி, சிரிசாவின் புதிய திட்டம் "பேச்சுவார்த்தைகளை உண்மையில் மீண்டும் தொடங்குவதற்கும், உண்மையில் ஒரு முடிவை எட்டுவதற்கும் அடித்தளத்தை" மட்டுமே வழங்குகிறது என்றவர் தெரிவித்தார்.

அங்கே எந்த முடிவும் எடுக்கப்படாது என்றால் பின் ஏன் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்க தலைவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினார்கள் என்பதை விவரிக்க கேட்டபோது, ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி கார்டியன் இதழுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்: “அந்த கூட்டத்தில் ஒரு சிறந்த உடன்படிக்கையை அவரால் எட்ட முடியும் என்ற, அல்லது அந்த கூட்டத்தின் மட்டத்தில் ஒரு முடிவெடுக்க முடியும் என்ற பிரமையை சிப்ராஸிடமிருந்து நீக்குவதே கருத்தாகும். விடயம் என்னவென்றால் ஏனைய தலைவர்களின் நிலைப்பாட்டை சிப்ராஸ் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது தான்.” 

சிப்ராஸினது சிரிசா கட்சியின் ஒரு புதிய அவமானகரமான சரணடைவு மட்டுமே அந்த கூட்டத்தின் விளைவாக இருக்கவில்லை, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேரம்பேசப்பட்ட உடன்படிக்கைகள் மூலமாக சிக்கன நடவடிக்கைக்கு எதிரான அதன் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கு திவாலானதன் குறித்த ஒரு கசப்பான படிப்பினையும் அதிலிருந்து கிடைத்தது.

கிரீஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர்கள் அதிகரித்தளவில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை நிராகரிக்கின்றனர். இதுதான் கிரீஸில் சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னால் இருந்த உந்துசக்தியாக இருந்தது. இது கடந்த வாரயிறுதியில் பிரிட்டனில் நடத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைக்கு எதிரான, ஜேர்மனியில் ஹார்ட்ஸ் IV சமூக வெட்டுக்கள் எதிரான பாரிய போராட்டங்களிலும், மற்றும் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் செல்வாக்கு இழந்தநிலைமையிலும் பிரதிபலிக்கிறது. இருந்தபோதினும், முன்பினும் அதிக மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க செய்ய சிரிசாவை நிர்பந்திப்பதிலும் மற்றும் அதன் சொந்த "அபாய பகுதிகள்" அனைத்தையும் மீறுமாறு செய்யவதிலும், வங்கிகளால் கோரப்பட்ட எல்லா வெட்டுகள் மற்றும் அதற்கும் அதிகமாகவும் ஏற்று கொள்ளுமாறு செய்வதிலும் ஐரோப்பிய ஒன்றியம் வெற்றிபெற்றுள்ளது.

இது, ஐரோப்பிய மக்களில் ஒரு சிறிய சிறுபான்மையாக உள்ள ஒரு நிதிய பிரபுத்துவத்திற்காக பேசுகின்ற, பரவலாக வெறுக்கப்படும் ஒரு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் பலத்தின் வெளிப்பாடல்ல. மாறாக, சிரிசாவின் வர்க்க குணாம்சத்தினதும் மற்றும் சோசலிச புரட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்குமான அதன் விரோதத்தினதும் ஒரு வெளிப்பாடாகும்.

கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்காக மற்றும் மத்தியதர வர்க்கத்தின் செல்வாக்குமிக்க அடுக்குகளுக்காக பேசும் ஒரு கட்சியாக, அது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த சுதந்திர-சந்தை பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது. தொடக்கத்திலிருந்தே அது கிரேக்க கடன்களை மறுத்தளிக்காது என்பதற்கும் அல்லது கிரேக்க வங்கிகளிலிருந்து பணம் வெளியேறுவதை நிறுத்துவதற்கு மூலதன கட்டுப்பாடுகளைத் திணிப்பதற்கும் சூளுரைத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கடன்கள் வெட்டப்படுவதை முகங்கொடுத்திருந்த அது, அதன் கடன்வழங்குனர்களுக்கு பணத்தைத் திரும்ப செலுத்த கிரேக்க பொது அமைப்புகளிலிருந்து பில்லியன் கணக்கான யூரோ கையிருப்பு நிதி ஆதாரங்களைக் கொள்ளையடித்தது. இத்தகைய கடன்வழங்குனர்களில், சிரிசா நிர்வாகிகளும் அவர்களது நிதிய வங்கியாளர்களும் அவர்களின் செல்வவளத்தின் பெரும்பகுதியை சேமித்து வைத்திருக்கும் கிரிஸின் சொந்த உண்மையற்ற வங்கித்துறையும் உள்ளது.

சிப்ராஸூம் ஏனைய சிரிசா நிர்வாகிகளும், ஒரு நாடு மாறி மற்றொரு நாட்டின் நிதிய மூலதனத்தின் பிரதிநிதிகளை வசப்படுத்தவும் மற்றும் மன்றாடவும் சொல்லொணா மணிதிலாயங்களை செலவிட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு அரசாங்கங்களின் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பை ஒன்றுதிரட்டுவதற்கு ஒருபோதும், கிரீஸின் அல்லது ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளின், தொழிலாள வர்க்கத்திடம் முறையிடவில்லை.

ஐரோப்பி ஒன்றிய தலைவர்கள், அவர்கள் பாகத்தில், ஏற்கனவே சிரிசா அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே அதை அளவிட்டு வைத்திருந்தனர். அவர்கள் அதை கிளர்ந்தெழும் கிரேக்க மக்களின் பிரதிநிதியாக அல்ல, மாறாக திவாலான கிரேக்க முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக பார்த்தனர். அதனால் தான், ஐரோப்பிய ஒன்றியத்தின் இரக்கமற்ற வெட்டுக்கள் மற்றும் யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேறுவதற்கு அதன் அச்சுறுத்தல்களால் ஒரு நிதிய நெருக்கடியின் விளிம்பில் ஐரோப்பா அதிர்ந்து நின்றபோதும் கூட, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இரக்கமின்றி அவர்களின் ஆதாயங்களுக்கு அழுத்தமளித்து வந்தனர்.