சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU begins military intervention in Mediterranean

ஐரோப்பிய ஒன்றியம் மத்திய தரைக்கடலில் இராணுவ தலையீட்டை தொடங்குகிறது

By Martin Kreickenbaum
25 June 2015

Use this version to printSend feedback

திங்களன்று லுக்செம்பேர்கில் அவர்களது கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை மந்திரிகள் மத்திய தரைக்கடல் கடத்தல்காரர்கள் என்றழைக்கப்படுபவர்களுக்கு எதிரான EUNAVFOR Med நடவடிக்கையைத் தொடங்க ஒப்புக் கொண்டனர். அகதிப் படகுகளை இலக்கில் கொள்ளும் இந்நடவடிக்கையின் திட்டங்கள், உளவுத்துறை மற்றும் பொலிஸ் அதிகாரங்களின் பாரியளவிலான விரிவாக்கத்தை உள்ளடக்கி உள்ளது.

இந்நடவடிக்கையின் முதல் கட்டம் ஒருசில நாட்களுக்குள் தொடங்க உள்ளது. குற்றஞ்சாட்டப்படும் கடத்தல் அமைப்புகள் மீதும் மற்றும் வட ஆபிரிக்காவில், குறிப்பாக லிபியாவில் உள்ள வலையமைப்புகளின் மீதும் உளவு அமைப்புகள் உளவுபார்ப்பதை அது உள்ளடக்கி உள்ளது.

உளவுத்துறை அதிகாரிகள் விபரங்களைக் கட்டளை மையத்திற்கு அனுப்புவதற்கு முன்னதாக, இலக்குகளைக் கண்டறிந்து, படகுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பார்கள். இந்த விபரங்களைக் கொண்டு, அகதிப் படகுகள் இடைமறிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அந்நடவடிக்கையின் இரண்டாவது கட்டத்தில் அவை பெருங் கடலில் கொண்டு சென்று அழிக்கப்படும். மூன்றாவது கட்டமானது, குற்றகரமான விதத்தில் வேட்டையாடும் டிரோன்கள், டோர்னாடோ போர் விமானங்கள் மற்றும் கடற்கரையோரங்களிலும், லிபிய துறைமுகத்திலும் இராணுவத்தைச் சேர்ந்த கடல்நீந்துவோரைப் பயன்படுத்துவதை உள்ளடக்கி உள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கை, இவ்வாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய லம்பெடுசா தீவை ஒட்டி படகுகள் துயரகரமான மூழ்கியதற்கு ஒரு விடையிறுப்பாகும். அச்சம்பவத்தில், மத்திய தரைக்கடலை கடந்து ஐரோப்பாவிற்கு வர முயன்றதில், ஒருசில நாட்களில் 1,200 அகதிகளுக்கு மேல் மூழ்கிப் போனார்கள். பாரிய உயிரிழிப்புகளின் மனித பேரழிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மத்திய தரைக்கடலில் இராணுவமயப்படுத்துவதன் மூலமாக விடையிறுத்துள்ளது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் குணாம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. EUNAVFOR Med நடவடிக்கைக்கு அரசு நிதியுதவி வழங்கப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அகதிகள் மீது போரை அறிவித்து வருகிறது.

மொத்தம் பத்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ அரசுகள், ஐந்து போர்கப்பல்கள், இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள், டிரோன்கள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வழங்கி, இந்நடவடிக்கையில் பங்கெடுத்து வருகின்றன. இந்த தொகுப்புக்கு இத்தாலிய விமானந்தாங்கி போர்க்கப்பல் Cavour தலைமை கொடுக்கும், அந்நடவடிக்கை இத்தாலிய ரியல் அட்மிரல் Enrico Credendino இன் கட்டளையின் கீழ் இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை விவகார பிரதிநிதி Federica Mogherini, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திற்குப் பின்னர் கூறுகையில், புலம்பெயர்வோர் பிரச்சினையை ஐரோப்பிய ஒன்றியம், நாங்கள் இப்போது எடுத்து வருவதை போல, தீவிரமாக ஒருபோதும் எடுத்ததில்லை, என்றார். அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் இந்தளவிற்கு ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததில்லை என்றே அந்த பெண்மணி கூறி இருக்கலாம்.

அகதிகளைக் குறித்த ஐநா அமைப்பின் சமீபத்திய ஆண்டு அறிக்கை, உலகெங்கிலும் அண்மித்தளவில் 60 மில்லியன் அகதிகளைக் காண்கிறது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். ஆனால் இந்த மொத்த எண்ணிகையின் ஒரு சிறிய பகுதியை ஏற்றுகொள்வதற்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம் அதன் எல்லையோரங்களைத் தடுத்து, அவர்களுக்கு எதிராக போர்க்கப்பல்களின் ஒரு கூட்டத்தை அனுப்பி வருகிறது.

ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் இதழாளர்களுக்கு கூறுகையில், பிரச்சினை என்னவென்றால் "அகதிகளின் வருகை, அவர்கள் எங்கே இருந்து வருகிறார்கள், அதில் யார் தீர்க்கமாக செயல்படுபவர்களாக இருக்கலாம் என்பதைக் குறித்து கண்காணிப்பதாகும்," என்றார்.

யதார்த்தத்தில், அவருக்கு இது குறித்து நன்கு தெரியும். அது பிரதானமாக, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான போர்களுக்குத் தலைமை தாங்கிய, சிரியாவில் ஒரு கோரமான உள்நாட்டு போரைத் தூண்டிவிட்ட, லிபியாவில் குழப்பங்களை விட்டுவைத்த, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணியில் உள்ள ஐரோப்பிய சக்திகள்தான், தப்பிப்பிழைக்க முயன்ற பாதிக்கப்பட்டவர்களின் ஒரு பெரும் அலையைக் கட்டவிழ்த்துவிட்டன. ஆபிரிக்காவில் சுரண்டலுக்கான அவர்களது நவகாலனித்துவ கொள்கைகள், தங்களின் குடும்பங்களது உயிர்பிழைப்பை ஐரோப்பாவில் பாதுகாக்கும் ஒரு முயற்சியில் கூடுதலாக நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களின் சொந்த நாடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த உண்மைகளை ஒரு வார்த்தை மாறாமல் கொண்டு செல்கிறது. இந்த நடவடிக்கையைக் கொண்டு, புலம்பெயர்வோரின் அவலநிலைகளில் இருந்து ஆதாயந்தேடுபவர்களின் வியாபார மாதிரியை நாங்கள் இலக்கில் வைக்கிறோம், என்று Mogherini தெரிவித்தார். நிஜமான இலக்கு அகதிகள் அல்ல, மாறாக "அவர்கள் வாழ்விலிருந்தும், பெரும்பாலும் அவர்களின் மரணங்களிலிருந்தும் பணமீட்டுபவர்கள் தான், என்றவர் தெரிவித்தார். அகதிகளைக் கடலிலிருந்து காப்பாற்றி, அவர்களை ஐரோப்பாவில் ஏற்றுக் கொள்வதற்கு மாறாக, குற்றஞ்சாட்டப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கி உள்ளது. என்ன விலை கொடுத்தாவது இந்த அகதிகள் வெளியே நிறுத்தப்பட வேண்டும்.

இந்த கொள்கையின் செயல் விளைவில் அங்கே ஒரு நேர்மையற்ற குழப்பம் நிலவுகிறது. பழிக்கு அஞ்சாத கடத்தல்காரர்கள் தான், அசைக்கமுடியாத ஐரோப்பிய பாதுகாப்பரண் சுவர்களைக் கடப்பதற்கு அகதிகளுக்கு ஒரே வழிவகையாக இருக்கிறார்கள். இந்த பல மில்லியன் யூரோ கடத்தல் வியாபாரம், ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளை முன்பினும் இறுக்கமாக மூடும் கொள்கையின் நேரடி விளைவாக உள்ளது.

அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அவற்றின் உளவுத்துறை அமைப்புகளைப் பலப்படுத்த மற்றும் ஒருங்கிணைக்க, இராணுவ நடவடிக்கையை பிரயோகித்து வருகிறது. முதல் கட்டமாக உளவுத்துறை அமைப்புகள் மற்றும் இராணுவத்தை பயன்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ நியாயப்பாடு கேள்விக்குரியதை விட மேலதிகமானது, ஏனென்றால் கடத்தல்காரர்களின் வேலை முறைகள், போக்குவரத்து தடங்கள், வியாபார முறை மற்றும் நிதியியல் பரிவர்த்தனைகள் ஆகியவை குறித்து சேகரிக்க வேண்டிய தகவல்கள், ஏற்கனவே Eurosur உளவுபார்ப்பு திட்டத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உண்மையில், குற்றஞ்சாட்டப்படும் கடத்தல் வலையமைப்பை உளவுபார்ப்பதற்காக என்ற மூடிமறைப்பின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு பாதுகாப்பு முகமைகளை ஒருங்கிணைக்க வேலை செய்து வருகிறது. EUNAVFOR Med என்பது வெறுமனே மத்தியத்தரைக்கடலில் ஒரு கடற்படை ரோந்து நடவடிக்கை அல்ல, மாறாக உளவுத்துறை முகமைகள், இராணுவம், பொலிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லையோர முகமை Frontex ஆகியவற்றின் நெருக்கமான ஒருங்கிணைப்பை உள்ளடக்கி உள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், இத்தாலி மற்றும் பிரிட்டனுடன் ஒரு கூட்டு நடவடிக்கையில் பிரெஞ்சு உளவுத்துறையைப் பங்கெடுக்க செய்ய ஒப்புக்கொண்டார். ஐரோப்பிய பொலிஸ் ஆணையம் யூரோபோல் (Europol) கட்டுப்பாட்டின் கீழ் கடத்தல்காரர்களின் வலையமைப்புகளைக் கண்காணிக்க பணிக்கப்பட்ட ஒரு உளவுத்துறை முகமை சிசிலியில் கட்டமைக்கப்பட உள்ளது. பிரிட்டனின் தேசிய குற்றவியல் முகமை ஆறு அதிகாரிகளை அனுப்புகிறது. பிரிட்டன், GCHQ இல் இருந்து அதிகாரிகளின் ஒரு குழுவுடன் மத்தியத்தரைக்கடலுக்கு HMS Enterprise போர்க்கப்பலை அனுப்புவதாகவும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மார்ச்சில், ஜேர்மனியின் மத்திய குற்றவியல் முகமை (BKA) உள்ளடங்கலாக கூட்டு நடவடிக்கைகள் குழு Mare (JOT Mare) ஸ்தாபிக்கப்பட்டது. இது யூரோபோல் இன் ஒரு நடவடிக்கை குழுவாகும், அது உளவுத்தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் மூலமாக கடத்தல்காரர்களின் வலையமைப்புகளை புலனாய்வு செய்யவும் மற்றும் Frontex உடன் நெருக்கமாக ஒத்துழைக்கவும் உள்ளது.

அகதிகள் குறித்த ஜெனிவா தீர்மானத்தின்படி, பொலிஸ் அதிகாரிகள் அகதிகளைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக இராணுவ நடவடிக்கைக்குள் பொலிஸை ஒருங்கிணைப்பதற்காக, சாதுரிய நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் ஊடாக அகதிகளைக் கடத்துவது சமீபத்தில், புரிதலுக்கு நேர்மாறாக இருந்தபோதினும், "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக" அறிவிக்கப்பட்டது.

அமைப்புரீதியிலான குற்றவாளிகள் அகதிகளை மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு பயணிக்க கட்டாயப்படுத்துகிறார்கள் என்று வாதிடப்படுகிறது. ஆனால் இதில் உண்மைக்குரியதாக ஒன்றும் இல்லை. பிரிட்டனை அடித்தளமாக கொண்ட கார்டியன், தற்போது OECD இன் (பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு) அகதிகள் குறித்த திட்டத்தில் வேலை செய்து வரும் ஆராய்ச்சியாளர் Reitano கூறியதை செவ்வாயன்று மேற்கோளிட்டது. இந்த நாடகத்தில் உள்ள முறையான குற்றகர வலையமைப்புகள் அல்லது "முக்கியஸ்தர்கள்" யாராவது இருக்கிறார்கள் என்றால், ஒருசிலர் இருக்கலாம், இவர்களை வெளியேற்றினாலே அந்த ஓட்டத்தில் கணிசமான தாக்கம் ஏற்படும், என்று கூறியிருந்தார்.

ஆனால் அகதிகளைக் கடத்துவது அமைப்புரீதியிலான குற்றமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில், தகவல்களை யூரோபோல் சேகரித்து ஆய்வுக்குட்படுத்த முடியும், இதைச் செய்ய புரோன்டெக்ஸ் (Frontex) அனுமதிக்கபடாது. அதற்கு மேலதிகமாக, பொலிஸ் புலனாய்வுகளுக்கான யூரோடாக் (Eurodac) தரவுக் களஞ்சியம் திறந்துவிடப்பட்டது. அகதிகளின் கைரேகைகளும் மற்றும் ஏனைய பரந்தளவிலான தகவல்களும் அங்கே சேகரிக்கப்படுகின்றன.

புரோன்டெக்ஸ், யூரோபோல் மற்றும் யூரோஜஸ்ட் (Eurojust) போன்ற இராணுவமல்லாத ஐரோப்பிய ஆணையங்கள் இராணுவத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பது, அடிப்படை சட்ட பிரச்சினைகளை உயர்த்துகிறது. ஜேர்மனியில், சான்றாக, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு இடையிலான இடைவெளி அரசியலமைப்புரீதியில் உத்தரவாதமிடப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் நிலைப்புள்ளியிலிருந்து, அகதிகளை நாடுகடத்துவது ஒரு தனிப்பட்ட குற்றகரமான நடவடிக்கை என்பதால், அது பொலிஸ் விசாரணையின் மூலமாக மட்டுமே எதிர்கொள்ளப்பட முடியும். மத்திய தரைக்கடல் நடவடிக்கையில் ஜேர்மன் இராணுவம் பங்கெடுப்பதும் மற்றும் பொலிஸ், உளவுத்துறை முகமைகள் மற்றும் இராணுவத்தை ஒன்றோடொன்று இணைப்பதும் இவ்விதத்தில் ஓர் அடிப்படை ஜேர்மன் சட்டமீறலாகும்.

ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கையின் திட்டமிடப்பட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள், "ஒன்றோடொன்று பிணைந்த ஓர் உயர் அபாய சேதத்தை மற்றும் மனித உயிரிழப்பைக்" கொண்டிருக்கும் என்பதை EUNAVFOR திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதே ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் ஒப்புக் கொண்டது.

அகதிகள் மரணிக்கும் சாத்தியக்கூறை ஒருவர் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், ஒட்டுமொத்த திட்டமும் தோல்வியடைவதற்காக கண்டனத்திற்குள்ளாவார் என்று ஓர் உயர்மட்ட இத்தாலிய இராணுவ அதிகாரி EUObserverக்கு தெரிவித்தார். அவர் கூறினார், கடத்தல்காரர்களின் படகுகளை அழிப்பது என்று வரும்போது, அவர்கள் சுலபமாக புலம்பெயர்ந்தோரை, அவை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட, அவர்களை மனிதகேடயங்களாக பயன்படுத்துவதற்கு, அவற்றில் வைத்து கொள்வார்கள், என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையிலும், கடத்தல்காரர்களின் படகுகளை அழிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான குற்றகரமான திட்டத்தில் உறுதியாக நிற்கின்றன.

அகதிகள் பாதுகாப்பு அமைப்பான ProAsyl, அந்த நடவடிக்கையை சர்வதேச சட்டமீறலாக கருதுகிறது, ஏனென்றால் ஐநா சாசனத்தின் 39வது ஷரத்துப்படி, சமாதானத்திற்கு ஓர் அச்சுறுத்தல் இருக்கிறதென்றால், ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கைக்கு தேவையான ஓர் அனுமதியைப் பெற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஐநா உத்தரவாணை அவசியமாகும்.

ProAsyl எழுதியது: உயர்மட்ட அளவிலான அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய அரசை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி வருகிறார்கள் என்று கூறப்படுவதை வலியுறுத்தியதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதிநிதி இந்த அச்சுறுத்தலை கட்டமைத்துள்ளார். இந்த வாதத்தை சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்க முடியாது. அகதிகளை ஏற்றுக்கொள்வது என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு கடமைப்பாடாகும், அது சமாதானத்திற்கு ஓர் ஆபத்தல்ல.