சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Political issues in the Greek debt crisis

கிரேக்க கடன் நெருக்கடியில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

Alex Lantier
26 June 2015

Use this version to printSend feedback

கிரேக்கத்தின் சிரிசா தலைமையிலான அரசாங்கத்துடன் நேற்று புரூசெல்ஸில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு முற்றிலுமாக பேச்சுவார்த்தைகளை தன்னிச்சையாக நிறுத்தியதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸை அதன் போக்கிற்குள் கொண்டு வருவதற்கான மற்றும் ஐரோப்பிய வங்கிகளால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எந்தவொரு பாசாங்குத்தனத்தையும் கைவிடுமாறு அந்த அரசாங்கத்தை நிர்பந்திப்பதற்கான அதன் உள்நோக்கங்களை தெளிவுபடுத்தியது.

கிரீஸிற்கு கடன் கிடைப்பதை மீண்டும் திறந்துவிட மற்றும் கிரேக்க அரசு திவால்நிலைமையை தடுப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த டிசம்பரில் கோரிய வெட்டுக்களுக்கும் அப்பால், ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் 7.9 பில்லியன் யூரோ தொகுப்பை வழங்கி, திங்களன்று, சிரிசா புதிய விட்டுக்கொடுப்புகளைச் செய்தது. தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஓர் உடன்படிக்கைக்கான அடித்தளமாக இந்த பரிந்துரையை முன்நிறுத்தியது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பில்லியன் கணக்கான யூரோக்களை திரும்ப செலுத்துவதற்கு தேவைப்படும் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியைப் பெறுவதற்கு கிரீஸிற்கான ஜூன் 30 இறுதிக்கெடுவுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக, நேற்று, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஓர் உடன்படிக்கையானது முன்னெப்போதையும் விட வெகுதொலைவில் இருப்பதாக தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் புதிய வெட்டுக்களை கோரியதுடன், சனிக்கிழமை தான் அது பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமென கிரேக்க அதிகாரிகளுக்கு அறிவித்தது. பைனான்சியல் டைம்ஸிற்கு கசியவிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய ஆவணங்களின்படி, ஓய்வுபெறும் வயதை 62இல் இருந்து 67க்கு உயர்த்துவதை, சிரிசா திட்டமிட்டதை விட வேகமாக செய்யுமாறும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் ஆழ்ந்த ஓய்வூதிய வெட்டுக்களையும் கோரி வருகின்றன. அவை, அரசாங்கம் பரிந்துரைத்த பெருநிறுவன வரி உயர்வுகளைக் குறைக்கவும் விரும்புகின்றன.

கிரீஸிற்கு கடன்வழங்குனர்கள் ஒரு தவறுக்கிடமற்ற சமிக்ஞையை அனுப்பி வருகின்றனர்: ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாக்குறுதிகளின் அடித்தளத்தில்த்தான் சிரிசா தேர்ந்தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற நிலையில், அவர்கள் அதை அவமானகரமாக தொடர்ச்சியான பின்வாங்கல்கள் மற்றும் அடிபணிவுகளுக்குள் தள்ள நோக்கம் கொண்டுள்ளனர். கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ், ஐரோப்பிய ஒன்றியம், கிரீஸில் நடந்த ஜனவரி வாக்கெடுப்பின் முடிவை மதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் தலைவர் டோனால்ட் டஸ்கை நேற்று எச்சரித்தபோது, டஸ்க் அப்பட்டமாக அந்த "விளையாட்டெல்லாம் முடிந்துவிட்டது", பேச்சுவார்த்தைகள் உடைந்துவிட்டன என்று பதிலளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும்போக்கு கிரேக்க அரசிலும், சிரிசா மற்றும் வலதுசாரி சுதந்திர கிரேக்கர்கள் (Anel) கட்சியின் கூட்டணி அரசாங்கத்திலும் ஓர் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை தூண்டிவிட்டு வருகிறது. ஜனவரி தேர்தல்களுக்கு பின்னரில் இருந்து கிரேக்க அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கொள்கையும், அது ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு கோட்பாட்டுரீதியில் எதிராக இல்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது, அதுவும் சிப்ராஸே சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுமென அவர் எதிர்பார்ப்பதாக எப்போதும் வலியுறுத்தி உள்ளார். அதேநேரத்தில், ஒரு முழுமையான மற்றும் பகிரங்கமான அடிபணிவு பிரமாண்டமான எதிர்ப்பை மற்றும் சமூக கிளர்ச்சியை தூண்டிவிடுமென்பதை அவர் அறிந்து வைத்துள்ளார்.

ஐரோப்பிய மண்டலத்திலிருந்து கிரீஸ் வெளியேறுவதை ஏற்றுக்கொள்ள தயாரில்லாத கிரேக்க முதலாளி வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளும் அங்கே உள்ளன. அரசு திவால்நிலைமையை தடுப்பதற்கும் மற்றும் கடன் பெறுவதற்கு வழி செய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் என்ன விலை கொடுத்தாவது ஓர் உடன்படிக்கை செய்தே ஆக வேண்டுமென கடந்த வாரம் கிரேக்க மத்திய வங்கி தெரிவித்தது. அரசு திவாலாகிப் போனால் மற்றும் கிரேக்க வங்கிகள் யூரோக்களில் அவசரகால கடன்களை அணுக முடியாது போனால், கிரீஸ் யூரோவைக் கைவிட்டு, கிரேக்க தேசிய நாணயமான ட்ராக்மாவை பாரியளவில் உட்புகுத்துவதன் மூலமாக அதன் வங்கிகளைக் காப்பாற்றினால் ஒழிய, கிரேக்க நிதியியல் அமைப்புமுறையே பொறிந்து போகும். ஆனால் கிரேக்க பொருளாதாரத்தால் மட்டுமே ஆதரிக்கப்படும் இந்த நாணயம், யூரோவிற்கு எதிராக வீழ்ச்சி அடையுமென எதிர்பார்க்கலாம்.

சிரிசாவின் இடது ப்ளாட்பார்ம் (Left Platform) கன்னை மற்றும் Anel கட்சியின் பாதுகாப்புத்துறை மந்திரி பேனொஸ் கமெனொஸ், அதிக தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஆளும் வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளுக்காக பேசுகிறது என்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடைவை மற்றும் ட்ராக்மாவிற்கு திரும்புவதைக் குறித்து பரிசீலித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கையால் அதன் பொருளாதாரம் சுருங்கி வருகின்ற நிலையில், கிரீஸின் 300 பில்லியன் யூரோ கடனைத் திரும்ப செலுத்துவதற்கு அங்கே சாத்தியமே இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ட்ராக்மாவின் செலாவணி மதிப்பானது, விலைகளை விண்ணை முட்டும் அளவிற்குக் கொண்டு சென்று தொழிலாளர்களை வறுமைப்படுத்தும் அதேவேளையில், நிஜமான கூலிகளைக் குறைத்தும், அதன் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலமாக கிரீஸ் மலிவான நாணயத்தைக் கொண்டு அதன் கடன்களை திரும்ப செலுத்துவதற்கு அனுமதிக்கக்கூடும்.

தற்போதைய அரசாங்கத்தை பதவியிலிருந்து கீழிறக்கி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்படிக்கையை திணிப்பதில் மட்டுமே ஒருமுகப்படும் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கும் கிரேக்க ஆளும் மேற்தட்டில் தந்திரங்கள் முன்னுக்கு வந்துள்ளன. ஜனவரி வாக்கெடுப்பில் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்ட கிரீஸின் பிரதான எதிர்க்கட்சியான வலதுசாரி புதிய ஜனநாயகத்தின் (ND) முன்னாள் பிரதம மந்திரி அன்டோனி சமாராஸ், நேற்று கூறுகையில், “தேசிய ஒருமைப்பாட்டின் இடைமருவு அரசாங்கம்" ஒன்றை சிப்ராஸ் நிறுவ வேண்டுமென தெரிவித்தார். அது "எங்களின் உதவியுடன், ஐரோப்பாவுடனான ஓர் உடன்படிக்கைக்கு அவருடன் உடன்படுபவர்களை" ஒன்றாக்கும் என்றார்.

தொழிலாள வர்க்கத்திற்கு மிகப்பெரிய அபாயங்கள், குறிப்பாக கிரேக்க இராணுவத்தின் ஒரு தலையீடு முன்னிறுத்தப்பட்டுள்ளன. சிரிசா மற்றும் புதிய ஜனநாயகத்தின் ஓர் ஆட்சி ஒரு நாடாளுமன்ற சர்வாதிகாரமாக இருக்கும், அது ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஜனவரியில் வாக்களித்த கோபமான மக்கள் மீது அதையே திணிப்பதற்காக பாதுகாப்பு படைகள் மற்றும் இராணுவத்தின் மீது தங்கியிருக்கும். ட்ராக்மாவிற்கு திரும்பும் திட்டங்களை பொறுத்த வரையில், கிரேக்க எல்லைகளை மூடுவதற்கும் மற்றும் நாணய பொறிவுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் இராணுவத்தை ஒன்றுதிரட்டுவதை அவர்கள் உள்ளடக்கி உள்ளதாக கிரேக்க பத்திரிகைகள் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளன.

நிச்சயமாக, கிரேக்க மற்றும் எகிப்திய ஆயுத படைகளின் சமீபத்திய கூட்டு இராணுவ ஒத்திகைகளும், எகிப்திய ஆட்சிக்கவிழ்ப்பு தலைவரும் இராணுவ சர்வாதிகாரியுமான ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-சிசிக்கு பேர்லின் மற்றும் பாரீஸின் அழைப்புகள் நீடிக்கப்பட்டமையும் ஏதோ தற்செயலானதல்ல. சிரிசாவோ அல்லது அதைப் பின்தொடரும் அரசாங்கமோ உலகளாவிய நிதியியல் மூலதனத்தின் நலன்களை வெட்டுவதைப் பின்பற்றினால், பிரதான ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்பட்ட ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு இலக்கான எகிப்திய ஜனாதிபதி மொஹம்மத் முர்சியைப் போலவே, அதுவும் தன்னைத்தானே அதேயிடத்தில் காணும் என்பதற்கு அவையொரு அச்சுறுத்தலாகும்.

சிரிசா அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தமை, ஒரு கசப்பான விலை கொடுக்கப்பட்டு, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு மிகப்பிரமாண்டமான அனுபவத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வை அவர்களால் எட்ட முடியுமென சிரிசாவும் மற்றும் அதன் ஆதரவாளர்களுமே நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அதிகாரத்திற்கு வந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்காக முக்கிய நடவடிக்கைகளை கைத்துறந்தனர்: அதாவது கடனை இரத்து செய்வது, மூலதன கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது, வங்கிகள் மற்றும் பிரதான தொழில்துறைகளை தேசியமயமாக்குவது ஆகியன.

அனைத்திற்கும் மேலாக, கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் செல்வாக்குமிகுந்த மத்தியதர வர்க்கத்தினது அடுக்குகளின் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான போராட்டத்தில் கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீதான சிக்கன நடவடிக்கைக்கு எதிரான பரந்த கோபத்தை அணிதிரட்டுவது என்பது அவர்களிடையே கடைசியாக கருதிப்பார்க்கக்கூடியதாக கூட இருக்கவில்லை. அதற்கு மாறாக அவர்கள் கிரீஸ் மீது சுமத்தப்பட்டு வருகின்ற சிக்கன கொள்கைகளை இலகுவாக்க —ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி என— பிரதான ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு இடையிலான பிளவுகளை சுரண்ட முனைந்தனர். அந்த ஆட்சிகள் அனைத்தும் கிரீஸின் மீது சிக்கன நடவடிக்கைகளை சுமத்த ஆதரித்ததும், அந்த கொள்கையும் பொறிந்து போனது.

பகுப்பாய்வின் இறுதியாக சிரிசாவின் ஒட்டுமொத்த கொள்கையுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிசப் புரட்சியினது சாத்தியக்கூறை மறுப்பதை —மற்றும் செயலூக்கத்துடன் எதிர்ப்பதை— அடிப்படையாக கொண்டிருந்தது. அது சம்பந்தப்பட்டதில் அதுவே இப்போது கையாள வேண்டியிருக்கின்ற நிலையில், அதிகாரத்தை ஏற்றதும் அது நிறுத்திவிடுவதாக கூறிய கண்மூடித்தனமான சிக்கன கொள்கைகளை திணிப்பதில், அது அவமானகரமாக அரசியல்ரீதியில் உடைகலைந்து நிற்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக தன்னைத்தானே அது காண்கிறது.

சிரிசாவின் திவால்நிலைமையிலிருந்து தொழிலாளர்கள் அரசியல் தீர்மானங்களை எடுத்தாக வேண்டும். முதலாளித்துவத்தின் மற்றும் அரசியல் அமைப்புமுறையின் தோல்வியே கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் மேலெழுந்துள்ளது. அரசு அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தில் தன்னைத்தானே அணிதிரட்டுவதே தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் பணியாகும்.

ஒரு புரட்சிகர கொள்கை என்பது யதார்த்தமற்றது என சிரிசாவின் ஆதரவாளர்கள் ஐயத்திற்கிடமின்றி வலியுறுத்துவார்கள். உண்மையில், அவர்களது முன்னேற்பாடற்ற நடைமுறைவாத நடவடிக்கைகள் மற்றும் ஊடக தகிடுதத்தங்களைக் கொண்டு சிப்ராஸூம் சிரிசாவும் தான் முற்றிலும் யதார்த்தமற்ற கொள்கையை கொண்டிருப்பதை நிரூபித்தார்கள். வர்க்க சக்திகளின் சமரசத்திற்கு இடமில்லாத மோதல் குறித்த ஒரு மார்க்சிச மதிப்பீட்டின் அடிப்படையில், அந்த நெருக்கடிக்கு யதார்த்தபூர்வ மதிப்பீட்டை வழங்கக்கூடியது, புரட்சிகர அரசியலே என்பதை கிரீஸின் அனுபவம் எடுத்துக்காட்டி உள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர முன்னோக்கிற்கான போராட்டத்திற்கு அனைத்துலகக் குழுவின் பிரிவுகளாக கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் புரட்சிகர கட்சிகளைக் கட்டமைப்பதே அவசிய தேவையாகும்.