சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Thousands of national guard troops occupy Baltimore, Maryland

மேரிலாந்தின் பால்டிமோரை ஆயிரக் கணக்கான தேசிய பாதுகாப்புப்படை துருப்புகள் ஆக்கிரமிக்கின்றன

By Jerry White
29 April 2015

Use this version to printSend feedback

தேசிய பாதுகாப்புப்படையின் 2,000 துருப்புகள், அத்துடன் அந்நகரத்தின் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஒன்றுதிரட்டப்பட்ட மற்றுமொரு 1,000 மாநில மற்றும் உள்ளாட்சியின் காவலர்களால் அந்நகரம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதுவொரு இராணுவ சட்டமல்ல, என்று மேரிலாந்தின் தேசிய பாதுகாப்புப்படை தலைவர் கூறிய போதினும், அந்நாட்டின் தலைநகரிலிருந்து வெறும் 40 மைல் தூரத்தில் உள்ள அந்நகரமோ, இராணுவ வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கனரக கவசம் பூண்ட துருப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஓர் அவசரகால நிலையை அறிவிப்பதற்கும் மற்றும் வாரம் முழுவதும் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கும், மேரிலாந்தின் குடியரசு கட்சி ஆளுநரும் மற்றும் அந்நகரின் ஜனநாயகக் கட்சி மேயரும் திங்களன்று இரவு நடந்த தனித்தனியான கொள்ளை சம்பவங்களைப் பயன்படுத்தினர். 25 வயதான ஃப்ரெட்டி க்ரேயின் பொலிஸ் படுகொலையின் மூடிமறைப்பால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களை மௌனமாக்குவதே அந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

அவர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த இருப்பதாகவும் மற்றும் அதை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ரோந்து கார்கள், கவச வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியும், அந்நகரின் ஒவ்வொரு தரைவழி தொலைபேசியில் நேரடியாக அழைத்தும் பொலிஸ் செவ்வாயன்று இரவு குடியிருப்போருக்கு தகவல் அளித்தது. குறிப்பிட்ட அந்நேரம் நெருங்கியதும், பாதிரிமார்களும் மற்றும் காங்கிரஸில் இடம் பெற்றுள்ள Elijah Cummings உட்பட உள்ளூர் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும் குடியிருப்போரை வீடுகளுக்கு போகுமாறு கேட்டுக் கொண்டனர்.

இருந்தபோதினும், ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்த பின்னரும், ஆயிரக் கணக்கானவர்கள் அந்த ஜனநாயக-விரோத பொலிஸ் அச்சுறுத்தல்களை மீறினர். இரவு 10.15 மணி வாக்கில், "முன்னால் சென்று இழுக்கும்" (step and drag) உபாயம் என்றழைக்கப்படுவதைப் பிரயோகித்து பொலிஸ் முன்னால் செல்ல தொடங்கியதுடன், போராட்டக்காரர்களை பீதியூட்ட அவர்களது கவசங்களை, கைத்தடிகளைக் கொண்டு தட்டிக் கொண்டே சென்றனர். செய்தி அறிவிப்பாளர்கள் அந்த நிகழ்வைப் பதிவு செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தனர். இரவு 10.23 மணிக்கு பொலிஸ் உயிர்கொல்லாத புகை குண்டுகளை (flash bang grenades) வீசத் தொடங்கினர், அவை உடனடியாக அவர்களையே நோக்கி திருப்பி வீசப்பட்டன. பின்னர் காவலர்கள் போராட்டக்காரர்களின் கண்களில் எரிச்சல் உண்டாக்க மற்றும் அவர்களைத் திணறடிப்பதற்காக, மக்களைக் கலைந்து போக செய்யும் மருந்துகள் நிரப்பிய மிளகுப்பொடி தோட்டாக்களைக் கொண்டு சுட்டனர். இரவு வாக்கில் முக்கியமாக ஊரடங்கு உத்தரவை மீறிய 10 நபர்களைப் பொலிஸ் கைது செய்திருந்தது.

திங்களன்று மதியம் அண்டைசமூகங்களில் மோதல் தொடங்கியதில் இருந்து, 300க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கைது நடவடிக்கை செவ்வாயன்று இரவு நடந்தது, ஒரு போராட்டக்காரரை தரையில் கிடத்தி பொலிஸ் வன்முறையாக அடித்துநொறுக்கிக் கொண்டிருந்தபோது, அதை தேசிய பாதுகாப்புப்படை ஹம்வீ வாகனங்கள் கேமராக்களுக்குக் குறுக்கே வந்து மறைத்துக் கொண்டது. எஞ்சியிருந்த கூட்டத்தை கலைக்க, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய போர் பகுதிகளில் இருந்து திரும்பியிருந்த கண்ணிவெடி அதிர்வைத் தாங்கும் வாகனங்கள் (MRAP) உட்பட பெரும் எண்ணிக்கையிலான கனரக கவச வாகனங்கள் பலத்தைக் காட்டுவதற்காக கொண்டு வரப்பட்டன.

துருப்புகள் அனுப்புவது "கடைசி புகலிடமாக" இருக்குமென்று முன்னதாக தெரிவித்திருந்த மேரிலாந்து ஆளுநர் லாரி ஹோகன், ஓர் அவசரகால கட்டளை மையத்தை திறந்திருப்பதாகவும், கடந்த சனியன்று ஆயிரக் கணக்கான போராட்டக்காரர்கள் அமைதியாக அணிவகுத்த அதேநாளில் துருப்புக்களை நிலைநிறுத்த கூடுதல் அதிகார ஆணையைத் தயார் செய்திருந்ததாகவும் செவ்வாயன்று ஒப்புக் கொண்டார்.

பால்டிமோர் மேயர் ஸ்டீபன் ராலிங்ஸ்-பிளேக் துருப்புகளைக் கோரியதும், பொதுவாக ஏற்படும் வழக்கமான எட்டு மணி நேரத்தை விட மிகவும் வேகமாக, மூன்று மணி நேரத்தில் அவற்றை அவரால் அனுப்ப முடிந்ததாக ஹோகன் பெருமைப்பட்டு கொண்டார். அவசியப்படும் வரையில் அந்த துருப்புகள் அங்கேயே இருக்கும், என்று தெரிவித்த ஆளுநர், அதிகாரிகள் உயிர்களைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர்" என்பதால், அவை "வீதிகளை துப்புரவாக்க" பயன்படுத்தப்படும் என்றார்.

தேசிய ஜனநாயகக் கட்சியில் மேலெழுந்துவரும் நட்சத்திரமாக கருதப்படும் ஆபிரிக்க அமெரிக்க பெண்மணி மேயர் ரோலிங்ஸ்-பிளேக் ஆளுநருக்கு துருப்புகளை அனுப்பியதற்காக நன்றி தெரிவித்தார். கையளவிலான சேதம்  விளைவிக்க முயல்பவர்களைப் பிடிக்க" அவை பயன்படுத்தப்படும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

துரத்திவிடப்பட்ட ஆயிரக் கணக்கான இளைஞர்கள் மீதான அவரது வெறுப்பு மற்றும் அச்சுறுத்தலை, திங்களன்று இரவு ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ரோலிங்ஸ்-பிளேக்கால் வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. நிறைய மக்கள் தலைமுறை தலைமுறையாக இந்நகரை கட்டமைத்திருக்கிறார்கள், நாசமாக்க முயற்சித்துவரும் குண்டர்கள் அழிப்பதற்காகவா அவர்கள் அந்த கடும் போராட்டத்தை நடத்தினார்கள். இவர்கள் வணிகங்களை நாசமாக்கி வருகிறார்கள், சொத்துக்களை அழித்து வருகிறார்கள், என்றார்.

பால்டிமோரில் தசாப்தங்களாக பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபகத்தை பெரிதும் நடத்திவரும் ஆபிரிக்க அமெரிக்கர்களின் செல்வாக்கு மிகுந்த அடுக்குகளின் ஒரு பிரதிநிதியாக உள்ள ரோலிங்ஸ்-பிளேக், பரந்த பெரும்பான்மை இளைஞர்களும் தொழிலாளர்களும் தொழிற்சாலை மூடல்கள், வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் மற்றும் முன்பினும் கூடுதலான அரசு ஒடுக்குமுறையால் தசாப்தங்களாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில், செழிப்படைந்துள்ளார்.

மில்லியனிய போதகரும் ஜனநாயகக் கட்சியின் சக செயல்பாட்டாளருமான அல் ஷார்ப்டனைச் செவ்வாயன்று சந்தித்த பின்னர், மேயர் கூறுகையில் வெள்ளியன்று அரசின் அட்டார்னி ஜெனரலுக்கு பொலிஸ் அவர்களது உள்-விசாரணையின் முடிவுகளை ஒப்படைப்பார்கள் என்று தெரிவித்தார். ஆனால் குற்றச்சாட்டுகள் மீது எந்த முடிவும் வெள்ளியன்று எடுக்கப்படாது என்று கூறிய அவர், அந்த புலனாய்வு நிகழ்முறையை நாம் மதிக்க வேண்டும், என்றார்.

இதற்கிடையே நேருக்கு நேராக முறைத்தார் என்ற குற்றத்திற்காக மற்றும் பொலிஸிடமிருந்து தப்பி ஓட முயன்றார் என்பதற்காக ஃப்ரெட்டி க்ரேயின் கழுத்தை உடைத்த மற்றும் அவரது முதுகுதண்டுவடத்தில் 80 சதவீதத்தைக் கடுமையாக காயப்படுத்திய அந்த காவலர்களின் அடையாளத்தை அதிகாரிகள் தொடர்ந்து மறைத்து வருகின்றனர்.

அந்த மேயர் எரிச்சலூட்டும் விதத்தில் செவ்வாயன்று அறிவித்தார், கலகம் செய்வது "ஆதாரவளங்களின் இழப்பை தாங்கவியலாத ஒரு சமூகத்திடமிருந்து அவற்றை அழிக்கிறது. உண்மையில் ஒவ்வொரு மிகப்பெரிய நகர ஜனநாயக கட்சி மேயரைப் போலவே ரோலிங்ஸ்-பிளேக்கும் அந்நகர சேவைகளின் கடுமையான வெட்டுக்களை மேற்பார்வையிட்டு வருகிறார். பொது குடிநீர் அமைப்புமுறையை தனியார்மயமாக்கும் திட்டத்தின் பாகமாக சுமார் 25,000 மக்கள் தண்ணீர் நிறுத்தப்படும் அச்சுறுத்தலில் உள்ளனர். இதற்கிடையே "வணிக சூழலை" மேம்படுத்துவதற்கும் மற்றும் நகரின் பிரதான பகுதிகளைப் புனரமைப்பதற்கும் ஆதாரவளங்கள் வாரியிறைக்கப்பட்டுள்ளன.

அம்மாவட்டத்தின் 85,000 பள்ளிக்கூட குழந்தைகளில் 84 சதவீத குழந்தைகள் இலவச அல்லது விலை குறைந்த மதிய உணவைப் பெற தகுதி பெறுகின்றன, இது ஏனென்றால் அவர்கள் குறைந்த-வருவாய் குடும்பங்களில் இருந்து வருகின்றனர். பால்டிமோர் பள்ளிக்கூடங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரி கிரிகோர் தோர்ன்டன், இப்போது நூற்றுக் கணக்கான ஆசிரிய மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களைக் குறைத்து வருகிறார், அத்துடன் அம்மாவட்டத்தின் 108 மில்லியன் டாலர் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை மொத்தத்தில் 63 மில்லியன் டாலராக குறைப்பதற்கு ஏனைய வெட்டுக்களும் செய்யப்பட்டு வருகின்றன.

தலைமுறை தலைமுறையாக கடுமையான வறுமை மற்றும் போதைப்பொருள்களின் போராட்டத்துடன் சேர்ந்து [ஃப்ரெட்டி க்ரே போன்ற] எண்ணற்ற இளைஞர்கள் அர்த்தமுள்ள வாய்ப்புகளின்றி சூறையாடப்படுகின்ற ஓர் அண்டைசமூகமாக" ஃப்ரெட்டி க்ரேயின் அண்டைசமூகமான சாண்ட்டவுனை, Baltimore Sun நாளிதழ் சமீபத்தில் வர்ணித்தது.

மேரிலாந்து மற்றும் பால்டிமோர் அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்ப்பில் இருந்துவரும் ஜனாதிபதி ஒபாமா அந்நகர இளைஞர்களை நோக்கி விஷத்தைக் கக்கினார். ஜப்பானிய பிரதம மந்திரி சின்ஜோ அபே உடனான ஒரு வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தின் போது பால்டிமோர் குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, எழுதிய வசனத்தைப் போல வழங்கிய ஒரு பதிலில், ஒபாமா கூறினார், நேற்று நாம் பார்த்த வன்முறை போன்றவற்றிற்கு மன்னிப்பே கிடையாது கொள்ளையடிப்பதற்காக நெம்புகம்பிகளைப் பயன்படுத்துபவர்கள் போராடுபவர்கள் கிடையாது அல்லது அவர்கள் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை, அவர்கள் திருடிக் கொண்டிருக்கிறார்கள்... அந்த முட்டாள்தனமான வன்முறை மற்றும் நாசச்செயலை நிறுத்த வேலை செய்யுமாறு மேயர் மற்றும் ஆளுநருடன் நான் பேசியது முற்றிலும் சரியானதே, என்றார்.

பால்டிமோர் மற்றும் அந்நாட்டெங்கிலும் உள்ள நகரங்களில் இளைஞர்கள் முகங்கொடுக்கும் மோசமான நிலைமைகள் குறித்துஇந்த நிலைமைகளை அவரது கொள்கைகள் தான் மோசமாக்கி உள்ளன என்றநிலையில்ஜனாதிபதி போலியாக அவற்றின் மீது அக்கறை காட்டினார். பள்ளிக்கூட சீர்திருத்தங்கள், சில உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் புதிய வணிகங்களை ஈர்க்கும் முயற்சி" ஆகியவற்றின் மீது குடியரசு கட்சியினருடன் இணைந்து வேலை செய்ய ஒபாமா வாக்குறுதி அளித்தார்.

அந்நாள் முழுவதிலும், தேசிய செய்தி வலையமைப்புகள் இளைஞர்கள் மீதான அனுதாபத்தைப் பலவீனப்படுத்த முனைந்தது. பொலிஸ் வன்முறை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக அந்த இளைஞர்களது முதிர்ச்சியில்லா வெடிப்பு மும்முரமாக அவ்விதமான ஒரு வடிவத்தை எடுத்தது, இரண்டு பெருவணிக கட்சிகளின் உத்தியோகபூர்வ அலட்சியமும் ஒடுக்குமுறையுமே அதற்கு காரணமாகும்.

போராட்டங்களை குற்றங்கூறுவதற்காக போதகராகவோ, வணிக பெருமக்களாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இல்லாதவர்களைஅதாவது சாமானிய குடியிருப்போரை காணும் முயற்சிகள் பெரிதும் தோல்வியடைந்தன. CNN அணுகிய ஒரு இளைஞர் கூறினார், அங்கே நிறைய வீடற்றவர்கள் உள்ளனர், நிறைய பேர் வீடுகளை இழந்துள்ளனர். இப்போது தான் எங்களுக்கு தேவையான கவனம் எங்களுக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு மூலைமுடுக்கெல்லாம் ஒரு சாராய கடை இருக்கக்கூடாது. மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இது தான் கடைசி துரும்பாக இருக்கிறது. மக்கள் சோர்ந்து போயுள்ளனர். நீதி எப்போதும் கிடைக்கும்? ஒரு அதிகாரி கொல்லப்பட்டிருந்தால், அந்த நபர் எப்போதோ கைது செய்யப்பட்டிருப்பார்.     

அவரது மகனை அடித்து பலவந்தமாக பொலிஸ்-விரோத போராட்டங்களில் இருந்து விலக்கி இழுத்துச் சென்ற ஒரு பால்டிமோர் அன்னையை, பொலிஸ் தலைவரும் செய்தி ஊடகங்களும் நாள் முழுவதும் பாராட்டினர். இன்றிரவு நிறைய பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன், என்று தலைவர் ஆண்டனி பட்ஸ் தெரிவித்தார்.

அந்த காணொளி பரவலாக பரவியதும், ஆறு குழந்தைகளின் ஒற்றை தாயாரான அவர், டோயா கிரஹாம், CBS Evening Newsக்கு கூறுகையில், அவன் மட்டுந்தான் எனக்கு ஒரே மகன், இந்த நாளின் இறுதியில் அவனுக்கும் ஃப்ரெட்டி க்ரேக்கு ஆனதைப் போல ஆகிவிட நான் விரும்பவில்லை, என்றார்.