சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain’s general election: The need for a socialist alternative

பிரிட்டனின் பொது தேர்தல்: ஒரு சோசலிச மாற்றீட்டின் அவசியம்

Socialist Equality Party (Britain)
7 May 2015

Use this version to printSend feedback

முற்றுமுழுதான அரசியல் அமைப்புமுறையையும் ஒரு முன்னுதாரணமற்ற மற்றும் மோசமடைந்துவரும் நெருக்கடி பீடித்துள்ள நிலைமைகளின் கீழ் இன்று பிரிட்டனில் தேர்தல் நடைபெறுகின்றது.

ஆளும் வர்க்கத்திற்கு  பணயத்தில் இருப்பது என்னவென்றால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு உலக சக்தியாக எழுந்து நிற்பதற்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதாகும். அரசாங்கத்தை யார் அமைத்தாலும் சரி, இந்த தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான, அமெரிக்காவுடனான பிரிட்டனின் உறவுகள் மேற்கொண்டு மோசமடைவதற்கான மற்றும் இங்கிலாந்தே துண்டாடப்படுவதற்கு சாத்தியமான வாய்ப்பை தான் அதிகரிக்கிறது.

ஆகவே இத்தகைய அரசியல் காரணிகள் ஒவ்வொன்றும், ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரியதும் மற்றும் உலகில் ஐந்தாவது மிகப் பெரியதுமான இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்கு அவை ஒரு பிரதான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த கேள்விகள் முற்றிலுமாக இல்லையென்றாலும், குறைந்தபட்சம் பகிரங்கமாக, மிகவும் மேலோட்டமான வழிமுறைகளில் மட்டுமே விவாதிக்கப்படுகின்றன.

மிக முக்கியமாக, இராணுவவாதம் மற்றும் போரை பரந்தளவில் விரிவாக்குவதற்குரிய முன்-ஏற்பாட்டுகள் குறித்து அரசியல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஈராக் மற்றும் சிரியாவிலான நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தன்னை அர்ப்பணித்திருக்கின்ற மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ-தலைமையிலான ஆத்திரமூட்டல்களில் அதுவொரு முக்கிய பாத்திரம் வகித்து வருகின்ற நிலைமைகளின் கீழ் இவ்வாறு செய்யப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரம் நடந்து வந்த போதே கூட, ரஷ்ய கப்பல்களுக்கு எதிராக 13,000 நேட்டோ துருப்புகள், போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை உள்ளடக்கி, தெற்கு வேல்ஸில் வான்வழி போர் ஒத்திகைகளையும், ஸ்காட்லாந்திற்கு அருகே பாரிய கடற்படை ஒத்திகைகளையும் இங்கிலாந்து நடத்தி இருந்தது. செவ்வாயன்று, ராயல் கடற்படையின் பிரதான கப்பல் HMS Bulwark மத்தியதரைக் கடலில் புலம்பெயர்வோரை மீட்பதற்காக என்ற போலிச்சாட்டில் லிபியாவின் கடற்கரை ஓரங்களில் நடவடிக்கைகளைத் தொடங்கியது.

2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கை திட்டங்களைத் தொடரக் கூடிய வகையில், எந்த கட்சி அரசாங்கம் அமைக்கும் என்பதே ஆளும் வர்க்கத்திடையே மேலோங்கிய கவலையாக உள்ளது.

எவ்வாறாயினும் ஒரு "நிலையான அரசாங்கத்திற்கான" தேடல் ஒரு மிகவும் சிந்தித்துபார்க்கமுடியாத இலக்காக உள்ளது.

2010 இல் பழமைவாதிகள் அரசாங்கம் அமைப்பதற்கு தாராளவாத ஜனநாயகவாதிகளைச் சார்ந்திருந்தனர். ஆனால் 1930களில் இருந்து அந்த இரண்டு கட்சிகளுமே மிக கடுமையான செலவின வெட்டுக்களை நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில், அவை பரந்தளவில் வெறுக்கப்படுகின்றன.

அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பதன் மீது 2017இல் ஒரு வெகுஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென்ற பிரதம மந்திரி டேவிட் கேமரூனின் வாக்குறுதி மீது ஆளும் மேற்தட்டுக்கள் கவலை கொண்டுள்ளன. இந்த திட்டம் வாஷிங்டன் மற்றும் பேர்லினிலும் அதிகரித்த கவலைகளுடன் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இது வடக்கு அயர்லாந்து கட்சிகள் மற்றும் இங்கிலாந்து சுதந்திர கட்சியின் ஒரு கூட்டணியை இது அர்த்தப்படுத்தும் என்றாலும் கூட இரண்டாவது முறையாக டோரி தலைமையிலான கூட்டணிக்கு இலண்டன் நகரமும், பிரதான பெருநிறுவனங்களும், Guardian மற்றும் Daily Mirror நீங்கலாக ஏனைய அனைத்து செய்தி பத்திரிகைகளும் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளன.

தொழிற் கட்சியும் சிக்கன நடவடிக்கைக்கு சூளுரைத்துள்ளது, இதனால் தான் டோரி-எதிர்ப்பு உணர்வை அதனால் இன்னும் வெற்றிகரமாக அதன்பக்கம் ஈர்த்துக்கொள்ள முடியவில்லை. தொழிற் கட்சிக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் இடையே இப்போது நிலவும் பிளவு ஸ்காட்லாந்தை விட வேறெங்கும் இந்தளவிற்கு வெளிப்படையாக இருக்காது. அங்கே அது முற்றாக துடைத்தெறியப்படும் நிலையை முகங்கொடுக்கிறது.

பெருவணிகங்களுக்கு உகந்த கட்சியாக தன்னைத்தானே மீண்டும் எடுத்துக்காட்டுவதற்குரிய அதன் முயற்சிகளில், தொழிற் கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புநாடாக இருப்பது குறித்த ஒரு வெகுஜன வாக்கெடுப்பை எதிர்ப்பதுடன், அது தன்னைத்தானே ஒரு "வரவு-செலவு திட்ட கடமைப்பாடுகளுக்குள் அடைத்துக் கொள்ள" உறுதிகொண்டுள்ளது. குறிப்பாக இராணுவ முன்னணியில் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உறவுகளைப் பலப்படுத்த உறுதியளித்ததுடன், ஸ்காட்லாந்து தேசிய கட்சியுடன் எந்தவித உத்தியோகபூர்வ உடன்பாட்டையும் நிராகரித்தது.

அப்படியிருந்தும் கூட, தொழிற் கட்சி தலைவர் எட் மிலிபாண்ட் பயத்தால், வெட்டுக்களை மிகவும் மெதுவாக நடைமுறைப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்துரைத்தார். இன்னமும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், தொழிற் கட்சி அரசாங்கம் சிறுபான்மையாக இருந்தால் அது ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சார்ந்திருக்க வேண்டி இருக்கலாம் என்பதால், இங்கிலாந்தின் எதிர்கால ஸ்திரப்பாடு குறித்த கவலைகள் டோரிகளின் கீழ் "பிரிட்டன் வெளியேறுமோ" என்ற அச்சங்களுக்கு தற்போதை கூடுதலாக பலம் பெறுகின்றன.

முதல்முறையாக டோரி-தலைமையிலான அராசாங்கத்திற்கு சாதகமாக இருப்பதிலிருந்து வெளியேறி, Independent தலையங்கம் எழுதியது: “பிரிட்டன் ஒப்பீட்டளவில் நீண்டகால வீழ்ச்சிக்குள் நுழைந்துள்ளது, அதேவேளையில் சீனா மற்றும் இந்தியா போன்ற எழுச்சிபெற்றுவரும் சக்திகள் பெரும் செல்வாக்கைப் பெறுகின்றன. நமது நாட்டின் உடைவு, அது ஸ்காட்லாந்து சுதந்திரமாக இருக்கும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாக இருக்கட்டும், பேராபத்தான முட்டாள்தனமாக இருக்கும்...”

அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “தொழிற் கட்சி மற்றும் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு இடையிலான எந்தவொரு கூட்டு-பங்காண்மையும் பிரிட்டனின் வலுவற்ற ஜனநாயகத்தைப் பாதிக்கும். அதன் அனைத்து பிழைகளிலிருந்தாலும், மற்றொரு தாராளவாத-பழமைவாத கூட்டணி நீடித்திருக்கக்கூடியதாகவும் மற்றும் நமது பேரரசு தொடர்ந்து நீடித்திருக்க ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கும்,” என்று குறிப்பிட்டது.

இது பிரிட்டனின் அடிப்படை நெருக்கடியைச் சுட்டிக்காட்டும் ஓர் அசாதாரண அறிக்கையாகும். ஆனால் பிரிட்டன் நெருக்கடியானது முதலாளித்துவம் மற்றும் அதன் தேசிய-அரசு அமைப்புமுறையின் உலகளாவிய உடைவினதும் மற்றும் தேசிய, அதுவும் குறிப்பாக வர்க்க விரோதங்களின் வெடிப்பார்ந்த அதிகரிப்பின் ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடு மட்டுமேயாகும்.

இறுதியாக எந்த அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அது இத்தகைய கட்டுப்படுத்தவியலாத மற்றும் மூலோபாய அபாய பகுதிகளைக் கடந்து சென்றுவிட முடியாது. அதன் நிகழ்ச்சிநிரல், நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கொள்ளையடிக்கும் கோரிக்கைகளால் உருவாக்கப்படும். இந்த பொருளாதார மற்றும் சமூக பேரழிவிற்கு அதை தொடர்ந்து செய்வதை தவிர இந்த நிதியியல் செல்வந்த தட்டுக்களிடம் வேறெந்த பதிலும் கிடையாது.

வேலைகள், ஊதியங்கள் மற்றும் முக்கிய சமூக கொடுப்பனவுகள் மீதான நிரந்தர தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற அவர்களது விருப்பத்தை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ள மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் பார்வையிலோ, அந்த நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது.

ஸ்காட்லாந்து தேசிய கட்சி, வேல்ஸ் கட்சி (Plaid Cymru) மற்றும் பசுமை கட்சி ஆகியவற்றின் வாக்காளர்களின் பிடியில் தொழிற் கட்சி சிக்கியுள்ளதை இது எடுத்துரைக்கிறது. டோரிகளைப் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு ஒரு "முற்போக்கு கூட்டணி" என்ற பதாகையின் கீழ், அவை மிலிபாண்டுக்கு முட்டுகொடுக்க முயலுகின்றன, அதன் மூலமாக அவரால் தொழிற் கட்சியின் தொழிலாள வர்க்க விரோத நிகழ்ச்சிநிரலைக் கொண்டு செல்ல முடியும்.

இத்தகைய அரசியல் மோசடிக்குள் எண்ணற்ற போலி-இடது குழுக்களும் அவற்றின் இடத்தைப் பெற முயன்று வருகின்றன, அதாவது ஒன்று ஸ்காட்லாந்து தேசிய கட்சியுடன் ஒரு கூட்டணி அமைக்க அல்லது இங்கிலாந்தில் ஏனைய இடங்களில் உள்ள தொழிற் கட்சி மற்றும் பசுமை கட்சியின் பிரிவுகளுடன் ஒரு கூட்டணி அமைக்க அவை முயல்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய "இடதின் மறுஅணிசேர்க்கை" குறித்த விவாதங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கிணங்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல்களை நடத்த சூளுரைத்துள்ள, கிரீஸின் சிரிசாவை முன்மாதிரியாக கொண்டுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களான கிளாஸ்கோவ் சென்ட்ரலின் கேட் ரோட்ஸ், ஹோல்போர்னில் டேவிட் 'சுல்லிவன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் ஆகியோர் மட்டுமே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நிஜமான மாற்றீட்டை முன்வைக்கின்றனர்.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களது அரசாங்கத்திற்காக போராடுவதன் மூலமாக சிக்கன நடவடிக்கை மற்றும் போர் ஆகிய இரண்டு அச்சுறுத்தல்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட நாங்கள் ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கை முன்னெடுக்கிறோம். இந்த நெருக்கடிக்கு அங்கே எந்தவித நாடாளுமன்ற தீர்வும் கிடையாது. ஏனென்றால் படுமோசமான சமூக சமத்துவமின்மை மட்டங்களும், தீவிரமடைந்துவரும் இராணுவவாதமும் ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கு பொருத்தமற்றதாகும்.

எமது தேர்தல் அறிக்கை விவரிப்பதை போல, “1914 மற்றும் 1939 போலவே, உலகளாவிய உற்பத்தி மற்றும் பகைமைகொண்ட தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான, மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி கருவிகளின் தனியார்சொத்துடைமைக்கும் இடையிலான, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகள் மனிதயினத்தையே பேரழிவைக் கொண்டு அச்சுறுத்துகிறது.”

பிரிட்டனில் சோசலிசத்திற்கான போராட்டம் என்பது ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த எதிர்தாக்குதலின் உள்ளார்ந்த பாகமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். அத்தகையவொரு போராட்டத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்புவதே முன்நிபந்தனையாகும். அதை செய்ய கூடியவர்கள் அனைவரும் ரோட்ஸ் மற்றும் 'சுல்லிவனுக்கு வாக்களிக்க வேண்டும். அனைத்தினும் மிக முக்கியமாக, சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புதிய சோசலிச கட்சியாக அதை கட்டியெழுப்புமாறும் நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.