சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The British election as seen from Europe

ஐரோப்பாவின் பார்வையில் பிரிட்டிஷ் தேர்தல்

By Peter Schwarz
7 May 2015

Use this version to printSend feedback

இன்றைய இங்கிலாந்து பொது தேர்தல் ஐரோப்பாவின் ஆளும் வட்டாரங்களில், அதுவும் குறிப்பாக ஜேர்மனில் அமைதியின்மையையும் கவலைகளையும் தூண்டிவிட்டுள்ளது. அது பொருளாதார ஸ்திரமின்மைக்குரிய ஒரு மூலகாரணமாக பார்க்கப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியம், தேசிய மற்றும் பிராந்திய பிரிவுகளாக உடைவதை நோக்கிய ஒரு படியாகவும் கருதப்படுகிறது.

வெளியிலிருந்து வரும் தலையீடு ஐரோப்பிய ஒன்றிய விரோத உணர்வுகளை தூண்டிவிடும் என்ற பயத்தினால் முன்னணி அரசியல்வாதிகள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்காது இருக்கின்றபோதிலும், முன்னணி ஊடகங்களோ பெருவணிக பிரதிநிதிகளின் கண்ணோட்டங்களை உள்ளடக்கிய தலையங்கங்களை மற்றும் பகுப்பாய்வுகளைப் பிரசுரித்துள்ளன.

ஜேர்மனியுடன் நன்கு இணைந்துள்ள பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் வொல்ஃப்காங் முன்சௌவ் எழுதினார், “பிரிட்டிஷ் தேர்தல்களுக்குப் பின்னரான விளைவுதான் ஐரோப்பிய ஒன்றிய கொள்கை முடிவெடுப்பாளர்களின் மூளையில் மிகவும் அழுத்தமளிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. இப்பிரச்சனை அதன் முக்கியத்துவத்தில் உக்ரேனில் இரண்டாம் மின்ஸ்க் போர்நிறுத்த உடன்பாடு உடைவதற்கு சற்று பின்னதாகவும், ஆனால் யூரோ மண்டலத்திலிருந்து கிரேக்கம் திடீரென வெளியேறுவதற்கு சற்று முன்னதாகவும் உள்ளது.”

பல தலையங்கங்கள், பழமைவாத பிரதம மந்திரி டேவிட் கேமரூன் மற்றும் அவருக்கு சவால்விடுக்கும் தொழிற்கட்சி தலைவர் எட் மிலிபாண்ட் ஆகிய இருவரது சந்தர்ப்பவாத அணுகுமுறையையும் குறை கூறுவதுடன், தலைமைத்தன்மை இல்லாதிருப்பது குறித்தும் புலம்புகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் எதிர்காலம் மீது இந்த வியாழக்கிழமை தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் ஐரோப்பா எந்தவித பெரியதொரு பாத்திரமும் வகிக்கவில்லை" என்பதை முன்சௌவ் ஆச்சரியத்தோடு காண்கிறார்.

அந்த தேர்தல் பிரச்சாரத்தை, Die Zeit, பிரிட்டனுக்குள் நடக்கும் அதன் உள் பிரச்சினையாக" குறிப்பிடுகிறது. பிரிட்டன் "பிராந்தியமாக மாற்றமடைந்து" மற்றும் "தனது பிரச்சனைக்குள்ளேயை ஆழ்ந்து" போயுள்ளது. “ஏனைய ஐரோப்பிய நாடுகளின் பார்வையில்" கேமரூன் தன்னை, “அவரது சொந்த கட்சியிலும் ஐரோப்பிய ஒன்றிய விரோத UKIP இலும் உள்ள  ஐரோப்பிய ஐயுறவுவாதிகளால் உந்தித்தள்ளப்படுவதாக காட்டிக்கொள்கின்றார்.

பிரதம மந்திரி தேசியவாத மற்றும் யூரோ-விமர்சகர்களது வாக்குகளை வென்றெடுக்க" விரும்புகிறார் என்பதுடன், அவர் "அவரது சொந்த வார்த்தைஜாலங்களில் கைதியாகியுள்ளதாக" வலதுசாரி Die Welt குற்றஞ்சாட்டுகிறது.

தேர்தல் முடிவு நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையில் போய் முடியும், பின்னர் அது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் பரவும் என சில தலையங்ககருத்துக்கள் கவலை வெளியிடுகின்றன. டோரிகளும் சரி தொழிற்கட்சியும் சரி இரண்டு பேருமே பெரும்பான்மை பெற போவதில்லையென கிடைக்கும் எல்லா முன்மதிப்பீடுகளும் எடுத்துக்காட்டுகின்ற நிலையில், அவை நீடித்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை எதிர்பார்க்கின்றனர், முடிவாக அது நீடித்த ஸ்திரமற்ற அரசாங்கமாக போய் முடியுமென கருதுகின்றன.

இன்னமும் தள்ளாடி கொண்டிருக்கும் பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டில்,” “இத்தகைய சிக்கலான நிலைமையில், ஒரு ஸ்திரமான புதிய கூட்டணி அனேகமாக உருவாகாது,” “... பொருளாதார மற்றும் அரசியல் அதிர்வலைகள் இலண்டனில் இருந்து பரவி பிரிட்டிஷ் தீவுகளைக் வெகுதூரம் கடந்தும் உணரப்படும்" என்று Spiegel Online கூறுகிறது.

அரசியல் ஸ்திரமின்மை குறித்த உணர்வு வெள்ளியன்று பலப்பட்டால்,” பங்குச்சந்தைகள் சாதனையளவிற்கு வீழ்ச்சி அடையும், பவுண்ட் மதிப்பு சரியும். … அன்னிய மூலதனத்தின் நிரந்தர உள்பாய்ச்சலின் அடிப்படையில் வியாபார மாதிரியைக் கொண்டுள்ள ஒரு நாட்டுக்கு, அது மிகவும் விருப்பமற்ற நிலைமையாகும்,” என்று அந்த செய்தியிதழ் அனுமானிக்கிறது.

அதனுடன் சேர்ந்து, Frankfurter Allgemeine எச்சரிக்கிறது, மூலதன உள்பாய்ச்சலை அந்நாடு சார்ந்திருக்கும் தன்மை அரசியல் நிலைகுலைவு நிகழ்வில் படுபயங்கர விளைவுகளைக் கொண்டிருக்கும். “ஆண்டுக்கு சுமார் 140 பில்லியன் யூரோ" என்ற இங்கிலாந்தின் நடப்பு கணக்கு பற்றாக்குறை "பொருளாதார உற்பத்தியில் 5.5 சதவீதத்தைக் குறிக்கிறது. இது பிரதான தொழிற்துறை நாடுகளிலேயே தனித்த சாதனை அளவாகும்,” என்று அப்பத்திரிகை எழுதுகிறது.

எவ்வாறிருந்த போதினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒரு சாத்தியக்கூறு, அதாவது Brexitஇன் விளைவுகள் குறித்த அச்சங்கள், தேர்தல் முடிவுகளின் சந்தர்ப்பசூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளை விட மிகவும் ஆழமாக உள்ளது. அவர் இரண்டாவது முறையாக பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பிரச்சினையின் மீது 2017இல் மக்களையே முடிவெடுக்க வாக்கெடுப்பிற்கு விடுவதாக கேமரூன் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுக்கு கணிசமான விட்டுக்கொடுப்புகளை வழங்கினால் மட்டும், அது பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருப்பதை ஆதரிப்பதாக இதுவரையில் அவர் பேசி வந்துள்ளார். அது 28 அங்கத்துவ நாடுகளுக்கு இடையே சிக்கலான உறவுகளை கொடுக்கும் என்பதுடன், நடைமுறையில் சாத்தியமும் இல்லை. பிரிட்டனில் பொதுமக்களின் கருத்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருப்பதற்கு சாதகமாகவே தெரிகிறது என்றாலும், நிச்சயமற்ற சர்வதேச நிலைமைகளின் கீழ், இரண்டு ஆண்டுகளில் ஒரு வெகுஜன வாக்கெடுப்பின் முடிவைத் தீர்மானிப்பது சாத்தியமில்லை.

ஒரு வெகுஜன வாக்கெடுப்பின் விளைவால் உண்டாகும் நிச்சயமற்றதன்மை மட்டுமே தீவிரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று Frankfurter Allgemeine நம்புகிறது. “உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டு திட்டங்களை நிறுத்திவைக்க கூடும் அல்லது அந்நாடு ஆண்டுக்கணக்கில் திக்குமுக்காடும் நிலைக்கு தள்ளப்படும் நிலையை முகங்கொடுக்கிறது என்று அனுமானித்து அந்நாட்டை விட்டே கூட வெளியேறலாம்.”

அப்பத்திரிகையின் பார்வையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நேசமான பார்வையைக் கொண்டுள்ள எட் மிலிபாண்டின் வெற்றியே கூட நீண்டகால ஓட்டத்தில் அந்த பிரச்சினையைத் தீர்க்காது என்பதாக உள்ளது. டோரிகள் எதிர்க்கட்சியாக இருக்குமானாலும்கூட, "யூரோ-ஐயுறவாதத்தால் மேலாளுமை" செலுத்தப்படுவார்கள் என்பதுடன், “ஐரோப்பிய ஒன்றிய விரோத பிரச்சாரத்துடன்" அடுத்த தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அது குறிப்பிடுகிறது.

தொழிற் கட்சியே கூட அதிகளவில் யூரோ-ஐயுறவாத கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாக வொல்ஃப்காங் முன்சௌவ் பைனான்சியல் டைம்ஸில் குறிப்பிட்டுக் காட்டுகிறார். அக்கட்சியின் 83 பக்க தேர்தல் அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மீதான தலைப்பு ஒரு பக்கத்திற்கு சற்று கூடுதலாக தான் இடம் பெற்றுள்ளது, ஆனால் அது "பிரிட்டனுக்கு சாதகமான நலன்களுக்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்தை" அது மாற்றும் என்றும், மற்றும் "நமது தேசிய நலன்கள் பாதுகாக்கப்படும்" என்றும் வாதிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்கள் முற்றிலுமாக குறிப்பிடப்படவே இல்லை.

பொருளாதார பிரச்சினைகளுக்கு கூடுதலாக, பல தலையங்கங்கள் பிரிட்டன் வெளியேறினால் ஏற்படும் அரசியல் மற்றும் மூலோபாய விளைவுகளைக் கையாள்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நோக்கிய தொடக்கமாக இதை அவை பார்க்கின்றன.

Spiegel Online தகவல்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஒரு பிரிட்டிஷ் முடிவு "ஒரு அச்சம்மிக்க சமிக்ஞையாக" இருக்கும். அது குறிப்பிடுகிறது: “ஒரு நாடு அதுவும் குறிப்பாக இந்தளவிற்கு ஒரு பெரிய, முக்கிய, மத்திய இடத்தில் இருக்கும் ஒரு நாடு தானே முன்வந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது இதுவே முதல்முறையாக இருக்கும். யூரோ ஐயுறவுவாதம் கொண்ட ஏனைய நாடுகளும் அதை பின்தொடரும். ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஒட்டுமொத்தமாக கேள்விக்கு உள்ளாகும்.”

அதுபோன்றவொரு நகர்வின் "சமிக்ஞை தாக்கம்" குறித்து Frankfurter Allgemeine உம் எச்சரிக்கிறது: “பிரிட்டனின் 'வெளியேறுவது' என்பது ஐரோப்பிய ஒருங்கிணைப்பும் அவ்விதத்தில் உள்சந்தையும் கூட திரும்பபெற முடியாதது என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை வழங்கும்.”

அந்த பத்திரிகை நிதியியல் மற்றும் கொள்கை வல்லுனர்களை மேற்கோளிடுகிறது, அவர்களின் கருத்துப்படி பிரிட்டன் வெளியேறுவது "அனேகமாக ஐக்கிய பேரரசின் உடைவிற்கு இட்டுச் செல்லக்கூடும்." அது "பிரிட்டன் வெளியேறுவது [Brexit] மற்றும் 'ஸ்காட்லாந்து பிரிவினை' [Sexit] ஆகியவற்றின் சங்கிலிபோல் தொடர்ச்சியான முக்கிய-எதிர்விளைவுகளைக் குறித்து அது எச்சரிக்கின்றது. “அனைதிலும் மேலாக என்ன மலைப்பூட்டுகிறது" என்றால், “ஐரோப்பா குறித்த முக்கிய தலைப்பு இதுவரையில் பிரிட்டிஷ் தேர்தல் பிரச்சாரத்திலேயே ஒரு மிகச்சிறிய பாத்திரம் மட்டுமே வகிக்கிறது,” என்று அந்த பத்திரிகை முடிக்கிறது.

பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை Die Welt இதழ் "2008-2009 நிதியியல் நெருக்கடி" உடன் ஒப்பிடுகிறது. “ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகள் மீது ஏற்படக்கூடிய அபாயங்கள் மிக பெரியளவில் இருக்கும், “ஒரு முக்கியமான கூட்டாளியை இழக்கும்" ஜேர்மனிக்கும் அது குறைவில்லாமல் இருக்கும். “சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் போலவே,” இலண்டனும் "எப்போதுமே ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டுமொத்தமாக போட்டித்தன்மை கொண்டு இருக்க வேண்டுமென வலியுறுத்தியது. இங்கிலாந்து இல்லையென்றால், பிரான்ஸ் உட்பட தெற்கில் உள்ள அரசுகளின் செல்வாக்கு ஏறத்தாழ அதிகரிக்கும்.”

பிரெஞ்சு செய்தி பத்திரிகை Le Figaro உம் பிரிட்டன் வெளியேறுவதைத் தடுக்க விரும்புகிறது. கேமரூன் "ஒரு குழப்பமான ஐரோப்பிய கொள்கையை பின்பற்றுவதாகவும், ஒரு தோல்வியடைந்த சூதாட்டத்தை நடத்துவதாகவும், படுபயங்கர இறுதி எச்சரிக்கைகளை விடுப்பதாகவும்" மற்றும் "ஐயப்பாடு கொண்ட வாக்காளர்கள் முன்னால் 'பிரிட்டன் வெளியேறும்' ஆபத்தை அவர் ஏற்றுக் கொள்வதற்காகவும் அவரை அது குற்றஞ்சாட்டுகிறது. அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐரோப்பியர்கள் தான் இந்த பொறியிலிருந்து அவர் வெளியே வருவதற்கு அவருக்கு உதவ வேண்டியிருக்கும், “ஏனென்றால் பிரிட்டனின் இயக்கவியலும் மற்றும் அதன் வெற்றிகர முன்மாதிரியும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவசியப்படுகிறது,”

அயர்லாந்திற்கான "மிகப்பெரிய சேதப்படும்" விளைவுகளைக் குறித்து Irish Times எச்சரிக்கிறது: “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது ஒட்டுமொத்த ஐரோப்பிய திட்டத்திற்கும் மற்றும் அதன் உலகளாவிய செல்வாக்கு மற்றும் மதிப்பிற்கும் ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.” அது "அயர்லாந்து வணிகம், விவசாயம், சமூக கொள்கை, நிதியியல் சேவைகள், வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றின் மீது ஆழ்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.” அது "டப்ளின் மற்றும் இலண்டனுக்கு இடையே நெருக்கமான உறவுகளைக் கட்டமைப்பதிலும்" அது பெரும் பாதிப்புகளைக் கொண்டிருக்கும். “அயர்லாந்து-பிரிட்டிஷ் உறவுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும்தன்மையை விட இன்னும் கூடுதலாக அதிகார உறவுகளின் அடிப்படையில் பரஸ்பர நல்லுறவுகள் பாதிக்கப்படும் நிலைக்குத் திரும்பும்.” மேலும் அது வடக்கு அயர்லாந்தை அரசியல்ரீதியிலும் பொருளாதாரரீதியிலும் ஆழமாக நிலைகுலைக்கும்.

பொது வானொலி ஒலிபரப்பு நிறுவனம் Deutschlandfunk இன் இதழாளர் கிறிஸ்டோப் வொன் மார்ஸால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு "உயிர்வாழ்விற்கான நெருக்கடி" பற்றி ஒரு சித்திரத்தை வரைந்து காட்டினார். ஐரோப்பிய பிரச்சனைக்குரிய பகுதிகளை எப்போதும் யாராலும் தனித்தனியாக கையாள முடியாது என்றவர் எச்சரித்தார். ஒரு கிரேக்க திவால்நிலையின் ஆபத்து, புட்டினுக்கு எதிரான தடையாணைகளின் அணியில் இருக்கும் உடைவு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது மற்றும் 2017 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் மரீன் லு பென்னின் ஒரு தேர்தல் வெற்றி ஆகியவற்றுடன் சேர்த்து இதை ஒருவர் கருத்தில் எடுத்துப்பார்த்தால், “நாம் காணும் ஐரோப்பிய ஒன்றிய ஐரோப்பா அனேகமாக விரைவிலேயே இல்லாமல் போய்விடும் என்பது உடனடியாக தெளிவாக" தெரியும்.

பிரதானமாக இந்த எச்சரிக்கைகள் பழமைவாத, வணிகம் சார்ந்த ஊடகத்திடமிருந்து வருகின்றன என்பதை அறிந்து வாசிக்கையில், ஒருவர் வரவிருக்கின்ற பொருளாதார பேரழிவை மற்றும் அக்கண்டம் பகுதிபகுதியாக உடைவதை தடுப்பதற்கு ஆளும் மேற்தட்டு சாத்தியமான அனைத்தையும் செய்யும் என்று கருதலாம். பிரிட்டன் வெளியேறுவதன் பேரழிவுகரமான பெரும் விளைவுகள் குறித்து எச்சரித்த பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வணிகத் தலைவர்களின் ஆய்வுகளையும் ஒருவர் அதனோடு சேர்த்துக் கொள்ளலாம்.

எவ்வாறிருந்தாலும், ஐரோப்பாவில் மத்தியிலிருந்து விலகிச்செல்லும் போக்குகளும் மற்றும் முரண்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இது கேமரூன் மற்றும் மிலிபாண்ட் போன்ற அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தோல்விகளைக் கொண்டோ, அல்லது நைஜல் ஃபராஜ் மற்றும் மரீன் லு பென் போன்ற வலதுசாரி ஜனரஞ்சகவாதிகளது அதிகரித்த அழுத்தங்களைக் கொண்டோ விளங்கப்படுத்த முடியாது. மிகவும் அடிப்படையான புறநிலைசக்திகள் இதற்கு காரணமாக உள்ளன.

2008 நிதியியல் நெருக்கடியில் ஆழமடைந்த முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி ஒவ்வொரு பகுதியிலும் தேசிய மற்றும் சமூக பதட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஐரோப்பா விதிவிலக்கல்ல. குறுகிய காலத்தில், ஐரோப்பிய ஒன்றிய உடைவு பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும், ஆனால் நீண்டகாலகட்டத்தில், மூலோபாய நோக்கங்கள் அதற்கும் மேலாக பலமாகிவிடக்கூடும்.

பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்க சக்தியாக ஜேர்மனி மாறுவதை நிறுத்த முடியாதளவிற்கு வெளிப்பார்வையிலேயே அது உயர்ந்துள்ள ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தில், தங்கியிருப்பதன் மூலமாக பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் உண்மையிலேயே உதவிகரமாக உள்ளதா? பாரீஸ் பேர்லினுக்கு இரண்டாவது பீடிகையை ஒத்து ஊதிக் கொண்டிருக்க வேண்டுமா, அல்லது அது மாஸ்கோ உடன் அல்லது ஜேர்மனி மோதலுக்கு வரக்கூடிய வாஷிங்டனுக்கு நெருக்கமாக நிலைநோக்கைக் கொள்ள வேண்டுமா? நிஜத்தில் 28 நாடுகளின் ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மனியின் நலன்களுக்காக ஒருங்கிணைந்து இருக்கிறதா, அல்லது ஒரு மத்திய ஐரோப்பாவிலிருந்து பின்வாங்கி கொண்டு, அதிலிருந்து கிடைக்கும் நிதிகளை இராணுவ கட்டமைப்பிற்கு பயன்படுத்துவது சிறந்ததாக இருக்குமா?

இத்தகைய அல்லது இதுபோன்ற பரிசீலனைகள் தான் பின்புலத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

முதலாம் உலக போரைக் குறித்த அவரது சிறப்பாக விற்பனையான நூலை கிறிஸ்டோபர் கிளார்க் தூக்கத்தில் நடப்பவர்கள் ("The Sleepwalkers”) என்று பெயரிட்டிருந்தார். அந்த தலைப்பு போரை நோக்கி தள்ளிச்சென்ற கதாபாத்திரங்களின் குற்றகரமான தீர்க்கமானதன்மையைக் குறைத்துமதிப்பிடுவதாக இருந்தது. ஆனால் தூக்கத்தில் நடப்பவர்களை போலவே  அவர்கள் இனியும் "பகுத்தறிவார்ந்த" வாதங்களைப் பெறக்கூடியவர்களாக இல்லை என்பதால் அவ்விதத்தில் அது உண்மையே. ஏகாதிபத்திய மற்றும் வர்க்க நலன்களால் உந்தப்பட்டு, அவர்கள் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே பேரழிவை நோக்கி செல்கிறார்கள்.

ஐரோப்பாவில் இன்று இதுபோன்ற தான் நிலைமை உள்ளது. அக்கண்டம் ஒரு பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதற்கான பதில் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதில் தங்கியில்லை. மிக சக்திவாய்ந்த வியாபார மற்றும் நிதியியல் நலன்களுக்கு கருவியாகி அது அக்கண்டத்தின் சமூக பிளவுக்கும் மற்றும் தேசிய விரோதங்கள் மேலெழுவதற்கும் பின்னால் இருக்கும் உந்துசக்தியாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல்களை ஒழுங்கமைத்து வருகிறது, அது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மீள்ஆயுதமயமாக்கலை முன்னோக்கி உந்து செல்கிறது. மேலும் ஐரோப்பிய அதிகாரங்கள் மேலாதிக்கம் செலுத்த போட்டியிடுவதற்கு அது ஒரு போர்களமாகவும் சேவை செய்கிறது.

ஐரோப்பாவை ஒரு முற்போக்கான அடித்தளத்தில் ஒருங்கிணைப்பதற்கான ஒரே வழி ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பது மட்டுமே ஆகும். சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, போர் மற்றும் இராணுவவாதத்தின் எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியம் ஆகியவை இந்த போராட்டத்தில் பிரிக்கமுடியாத உட்கூறுகளாகும்.