சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French National Assembly passes draconian electronic surveillance law

பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் கடுமையான மின்னணுவியல் கண்கானிப்பு சட்டத்தை நிறைவேற்றுகிறது

By Anthony Torres
7 May 2015

Use this version to printSend feedback

செவ்வாய்க்கிழமை அன்று, உளவுச் சேவைகளால் பெரிய அளவில் உளவுவேலைகளை மேற்கொள்வதற்கு, பிற்போக்குத்தனமாக அனுமதி அளிக்கும் உளவறிதல் சட்டத்தை பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த பிற்போக்கு மற்றும் ஜனநாயக விரோதச் சட்டம், முழு மக்கள் தொகை மீதான தகவல்தரவுகளை அரசாங்கம் சேகரிப்பதற்கு அனுமதிக்கும், ஒரு போலீஸ் அரசுக்கான கண்காணிப்பு கட்டமைப்பை உத்தியோகபூர்வமாக நிறுவ வகைசெய்கிறது.

அரசியல் அமைப்பின் எல்லா கட்சிகளாலும் இச்சட்டம் ஆதரிக்கப்பட்டது, 42 பேர் வருகைதராதுவிட்ட நிலையில், 438-86 என்ற ஆதரவுடன் அனுமதிக்கப்பட்டது. அது ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பழமைவாத மக்கள் பெரும்பான்மைக்கான ஒன்றியம் (UMP) ஆலும் தீவிரமாக ஆதரிக்கப்பட்டது.

செனட்டானது மே 20 அன்று, இச்சட்டத்தை ஆய்வு செய்யத் தொடங்க இருக்கிறது மற்றும் அது அரசியல் அமைப்பு சபை அதனை ஆய்வு செய்யும் முன்னர், அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மசோதாவை ஆதரிப்பதற்காக பிரதமர் மானுவல் வால்ஸ் (PS) தேசிய சட்டமன்றத்தில் தானே சமூகமளித்திருந்தார். தேசத்தின் பிரதிநிதிகளிடம் ஒரு மசோதாவை ஒரு பிரதமர் முன்வைப்பது பிரத்தியேகமாக அரிதான ஒன்று என ஒப்புக்கொண்டு, சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தவே தான் அவ்வாறு செய்வதாக கூறினார்.

கடந்த வாரம் பாராளுமன்ற விவாதத்தின்பொழுது, அவர்கள் குடியரசை பாதுகாக்க மறுக்கிறார்கள் என்று கூறுவதன் மூலம், மசோதா பற்றி விமர்சன ரீதியாகப் பார்க்கும் பிரதிநிதிகளை வால்ஸ் அச்சுறுத்த முனைந்தார். மசோதாவிற்கு எதிர்ப்பாளர்களை, தேசத்துரோகம் செய்யக்கூடியவர்கள் என குற்றம்சாட்டி, சட்டத்திற்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிக்கும் முடிவு அரசுக்காக உணர்வு கொண்டவர்களை சிலவேளைகளில் அவ்விதம் இல்லாதவர்களிடமிருந்து பிரிக்கும் என்றார்.

பிரெஞ்சு ஆளும் தட்டானது, நீண்டகால தாக்கங்களை கொண்ட நடவடிக்கைகளை விரைந்து திணிப்பதற்கு ஜனவரியில் இஸ்லாமிய விரோத சார்லி ஹெப்டோ இதழ் மீதான தாக்குதல்களை பற்றிக்கொண்டது. சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம், அரசானது சட்டத்திற்கு ஆதரவானவர்கள் கூட சட்டவிரோதமானது என்று கருதும் அதிகாரங்களை, அவை பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டாலும், அனுமதிக்கிறது. கடந்த மாதம் லு மொண்ட் இந்த எழுத்துப்பகுதி இரகசிய உளவு சேவையால் மேற்கொள்ளப்படும், ஆண்டுக்கணக்காய் வேலைகளில் இருந்துவரும் நாற்பதாண்டு கால சட்டவிரோத நடைமுறைகளை சட்டபூர்வமாக்குகிறது மற்றும் அவற்றை ஏதோ ஒரு வகையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயல்கிறது என எழுதியது.

இவ்வாறு, ஒவ்வொருவரையும் உளவறிய குற்றவியல் நடைமுறைகளை உளவுச் சேவைகள் பயன்படுத்தி வந்தமை, பாராளுமன்றத்திலிருந்து பல ஆண்டுகளாக விமர்சிக்கப்படாதிருந்ததுடன், அது போலீஸ் உளவுச் சேவைகளின் ஆணைகளுக்கு அடிபணிந்து வந்தன. இப்பொழுது இந்த சட்டமானது, அதே உளவு நிறுவன அதிகாரிகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு ஒரு சட்ட ரீதியாக மூடிமறைப்பை வழங்கவும் தொழிற்படுகின்றன.

இந்தச் சட்டமானது, இணைய சேவை வழங்குநர்களை தங்களின் வாடிக்கையாளர்களின் தகவல் தரவுகளை நிகழ்நேரத்திலேயே தருவதற்கு கட்டாயப்படுத்துகிறது. பெரும் தகவரல், தரவுகளை திரட்டுவதுடன் மின்னணுவியல் கண்காணிப்பும் முடுக்கிவிடப்படும். உளவறிதல் காரணங்களுக்காக படப்பிடிப்புக்கருவிகளும் (Cameras) நுண் ஒலிவாங்கிகிகளும் (microphones) கூட பயன்படுத்திக்கொள்ளப்பட முடியும். பிரான்சில் உள்ள இரு மனிதர்களுக்கிடையிலான தகவல்தொடர்புகள் அதேபோல பிரான்சிலும் வெளிநாட்டிலும் உள்ளவர்களுக்கிடையிலான தகவல்தொடர்புகள் பதிவு செய்யப்பட முடியும்.

பயங்கரவாத அத்துமீறல்களை இழைப்பவர்களுக்கான தானியங்கும் தேசிய நீதிமன்ற கோப்பு 20 ஆண்டுகளுக்கு இந்த தகவல் தரவுகளைப் பராமரிக்கும், சட்டப்படி வயதுக்கு வராதவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும். சிறை அதிகாரிகள் கூட இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதற்கு உரிமை கொண்டிருப்பதை இந்த மசோதா சட்டபூர்வமாக்குகிறது. இது அவர்களையும், உளவுச் சேவைகளின் விரிவாக்கமாக ஆக்குகிறது.

இச்சட்டமானது, IMSI இயங்கா கைப்பேசி கோபுரங்கள் அந்த கருவிக்குப் பக்கத்தில் உள்ள கைபேசி பயன்படுத்துநரின் நகர்வை இனங்காட்டவும் கண்டறியவும் பொறுப்பாளர்களை அனுமதிக்கிறது. முன்னர், இந்த கருவிகளைப் பயன்படுத்துல் பிரெஞ்சு சட்டத்தின்படி சட்டவிரோதமாக இருந்தது.

மக்களுக்கு தெரியாமல் சட்டவிரோத நடத்தையை மறைப்பதன் மூலமும் நியாயப்படுத்துவதன் மூலமும் தற்போதைய சட்டமானது சட்டபூர்வ தன்மையுடன் முறித்துக்கொள்கிறது. சட்டம் ஐயத்திற்குரியவகையில் அவர்கள் மேல் திணிப்பதாக கூறும் பலவீனமான வரையறைகளை உடைத்துச்செல்வதற்கு அரசால் பாதுகாக்கப்படுவதாக அறியும், உளவு சேவைகளை இது ஊக்குவிக்கவே செய்யும்.

உண்மையில், சட்டமானது உளவு சேவைகளுக்கு வரையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. உளவு தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு தேசியக் குழு (CNCTR) மாநிலங்கள் அவை மற்றும் மேல்முறையீட்டு (Cassation) நீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியிலிருந்து மூன்று பிரிதிநிதிகள் மற்றும் மூன்று செனட்டர்கள், மற்றும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோரைக் கொண்டிருக்கும். இந்த அங்கமானது தற்போதைய பாதுகாப்பு இடைமறிப்புக்கள் கட்டுப்பாட்டு தேசிய குழுவினை (CNCIS) பதிலீடு செய்யும்.

CNCTR மிக தனிப்பட்ட விவகாரங்களில் உளவறிதலை அங்கீகரிப்பதற்கு ஆலோசனைக் கருத்துக்களை வழங்க முடியும், ஆனால் அவசர விடயங்களில் நடவடிக்கை குழுத் தலைவரோ அல்லது உளவுசேவையின் முகவர்களோ கூட CNCTR அறிவுரைகளைக் கேட்கும் சம்பிரதாயத்தை, பிரதம மந்திரியின் அனுமதியுடன் தவிர்த்து செல்ல முடியும்.

CNCTR இவ்வாறு உளவு சேவைகளால் மேற்கொள்ளப்படும் பெரும் கண்காணிப்புகளுக்கு ஒரு போலி ஜனநாயக மூடு திரையாக சேவை செய்யும்.

உளவறிதல் சட்டத்திற்கான வாக்களிப்பு பிரெஞ்சு மக்களின் முதுக்குக்குப் பின்னே இடம்பெற்றது. சில விமர்சனங்கள் தவிர, உளவு சேவைகளுக்கு கணிசமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டத்தின் பெரும் அரசியல் விளையன்கள் பற்றி குறிப்பிடப்படவும் இல்லை விவாதிக்கப்படவும் இல்லை.

இச்சட்டம் பற்றி இன்னும் கணிசமாக வந்த கருத்துக்களுள் ஒன்று, UMP பிரதிநிதி அலன் மார்சோ இடமிருந்து வந்தது. அவர் அதற்கு ஆதரவளித்த போதும் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: இந்த சட்டம் போதுமான அளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. தனிப்பட்ட விவகாரங்களை அனுமதிப்பதற்கான அதன் திறம் பேரளவிலானது. அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னரும் பின்னரும் எமது வாழ்க்கை ஒரேமாதிரியாக இருப்பதில்லை, ஏனெனில் நாம் கூறும் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்படும். இந்த சட்டம் நாம் இதுவரை கண்டிராதததைப் போன்ற ஒரு அரசியல் போலீசை உருவாக்குவதை அனுமதிக்க முடியும்.

பத்திரிகைகளில் அமெரிக்க தேசபக்த சட்டத்துடன் வெளிப்டையாக ஒப்பிடப்பட்டு வரும் ஊளவறிதல் சட்டத்தின் பகுதி, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். ஆளும் வர்க்கமானது ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் முறித்துக்கொண்டிருக்கிறது. அனைத்து பிரதான முதலாளித்துவ நாடுகளில் பயன்படுத்தப்படும் மாதிரியை பின்பற்றி, பிரான்சானது சமூகப் பகைமைகளின் வளர்ச்சிக்கு பரந்த அளவில் உளவு அறிதல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதாக ஒட்டுமொத்த தாக்குதல் மூலமாக பதிலிறுத்து வருகிறது.

எட்வார்ட் ஸ்நோவ்டென் ஆல் அம்பலப்படுத்தப்பட்டது போல, அமெரிக்க பாதுகாப்பு முகவாண்மையால் இம்மியும் பிசகாது மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மற்றும் அரசியற்சட்ட விரோத வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கம் முயல்கிறது. NSA ஆனது, எந்த ஜனநாயக கட்டுப்பாட்டுக்கும் வெளியிலான, இப்புவி முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் பில்லியன் கணக்கான மற்றவர்களின் தகவல் தரவுகளை திரட்டவும் கண்காணிக்கவும் வகைசெய்கிறது.

உளவறிதல் எந்திரத்தின் அதிகாரங்கள் பெரிதாய் விரிவுபடுத்தலானது, பிரெஞ்சு சமுதாயத்தை பொதுவாய் இராணுவமயமாக்கலின் ஒரு அங்கமாகும். சார்லி ஹெப்டோ மீதான ஜனவரி மாத பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், அரசானது 10,000 துருப்புக்களை பிரான்ஸ் முழுவதும் நிறுத்தி உள்ளது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ் நிர்வாகத்தால் பறைசாற்றப்பட்ட பயங்கரவாதம் மீதான யுத்தம் வெளிநாடுகளில் ஒருபோதும் முடிவடையா யுத்தத்திற்காக மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்காக அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் ஒரு கருத்தியல் கட்டமைப்பாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அது இப்பொழுது நாட்டுக்கு நாடு செயல்பாட்டு வழிமுறையாகி வருகிறது.

பிரான்சில் வாக்கெடுப்புக்கு அடுத்தநாள், புதன்கிழமை அன்று, கனேடிய பொதுமக்கள் அவை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை அங்கீரித்து வாக்களித்தது. அது, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அறிவித்து நடவடிக்கைக்கு இடையூறு செய்யவும் மற்றும் எந்த குற்றமும் சுமத்தப்படாமலேயே கைது செய்யவும் தடுப்புக்காவலில் வைக்கவும் திறமுள்ளதாக்குவது உள்பட, கனேடிய உளவு சேவை மற்றும் போலீசுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.