சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The death of British Labourism

பிரிட்டிஷ் தொழிற்கட்சிவாதத்தின் முடிவு

Chris Marsden and Julie Hyland
11 May 2015

Use this version to printSend feedback

வியாழனன்று இங்கிலாந்து பொது தேர்தலில் படுதோல்வி அடைந்த தொழிற் கட்சி, "புதிய தொழிற் கட்சியாக" திரும்புவதற்கும் மற்றும் அதன் முன்னாள் தலைவர் டோனி பிளேயரின் பாரம்பரியங்களுக்கு திரும்புவதற்கும் காலந்தாழ்த்தாது பல கோரிக்கைகளை செய்து வருகிறது என்பதே தொழிற் கட்சி எந்தளவிற்கு வலதுசாரியாக திரும்பியுள்ளது என்பதற்கு ஓர் அளவுகோலாகும்.

பேராவல்மிகுந்த மத்தியதர வர்க்கங்களுக்கு தொழிற் கட்சி அழைப்புவிட தவறியதனாலேயே அது தோல்வியடைந்தது என்ற தகவலை மீள்வலியுறுத்துவதற்கு பிளேயரும் மற்றும் அவரது தலைமை மூலோபாயவாதி பீட்டர் மாண்டெல்சனும் தலையீடு செய்துள்ளனர். மாண்டெல்சன் கருத்துப்படி, அக்கட்சி "ஏழைகளுக்கானது, பணக்காரர்களை வெறுக்கிறது" என்ற உணர்வை அது காட்டியதுதான் மிகவும் மோசமானதானதாக இருந்ததாம்.

எட் மிலிபாண்ட் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தலைமைக்கான போட்டி நடந்து வருகிறது. அதில் ஏற்கனவே ஏழு பேர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர், அனேகமாக இன்னும் பலரும் அதில் சேரக்கூடும். இவர்கள் அனைவருமே மதிப்பிழந்த பிழைப்புவாதிகள், நெறிமுறையற்ற முதலாளித்துவம், தனியார்மயமாக்கல் மற்றும் இராணுவவாதத்தின் மூர்க்கமான பாதுகாவலர்களாவர். மிலிபாண்ட் மிகவும் இடதுசாரியாக இருந்து, அவரது மூலோபாயத்தை அக்கட்சியின் "மையக்கருவான" தொழிலாள வர்க்க வாக்குகளை ஒன்றுதிரட்டுவதன் மீது ஒருமுகப்படுத்தியதால்தான் தொழிற் கட்சி தோற்றுபோனது என்றும் அதற்கு பதிலாக, பிளேயரின் "பெரிய முகாம்" மூலோபாயத்திலும் மற்றும் பழமைவாத கட்சியின் வாக்காளர்களை வென்றெடுப்பதற்கான முயற்சிகளிலும் தொழிற் கட்சி திரும்பி இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த மதிப்பிழந்த அரச கட்சியிடமிருந்து யாரும் எதிர்கட்சிக்குரிய ஒரு பாசாங்குத்தனத்தை கூட எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையை அடிக்கோடிடும் வகையில், 10-ஆண்டுகால நிகழ்ச்சிப்போக்கில் தொழிற் கட்சியை மறுகட்டுமானம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கிறது

உண்மையில், தொழிற் கட்சியின் மத்திய வாக்காளர்கள் வட்டத்தை  இழந்திருப்பதையே இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. அதேவேளையில் அக்கட்சியை தொழிலாளர்கள் கைவிட்டுவிட்டார்கள் ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் அதை பழமைவாத கட்சியின் இரண்டாம் நகலாக பார்ப்பதுடன், அதனோடு சேர்ந்து வாக்காளர்களில் ஏறத்தாழ மூன்றில் ஒருபங்கினர், எந்த கட்சியிடமும் தமக்கு வழங்குவதற்கு எதுவும் இல்லை என்பதால் மொத்தத்தில் வாக்களிப்பதிலேயே எந்த அர்த்தமும் இல்லை என்று பார்க்கின்றனர்.

இடதை நோக்கிய மிலிபாண்டின் நொண்டி சாக்குபோக்குகள் சிறிதும் கூட நம்பத்தக்கவையாக இல்லை. இது பெருவணிகங்களின் ஒரு கருவியாக மற்றும் ஈராக் போரின் வடிவமைப்பாளராக இருந்த பிளேயர் மற்றும் அவருக்கு அடுத்து வந்த கோர்டன் பிரௌனின் உண்மையான வரலாற்றை அதற்கு பின்னால் மறைக்க தகைமையற்றதும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்ட ஒரு கட்சியிலிருந்து இது வருகிறது.

இந்த காரணத்திற்காக தான், தொழிற் கட்சியின் மிக பெரிய தோல்விகள் ஸ்காட்லாந்திலிருந்து வந்தன என்ற உண்மையைக் குறித்த எவ்வித கருத்தும் கூட அங்கே அரிதாக உள்ளது. ஸ்காட்லாந்தில் ஸ்காட்டிஷ் தேசிய கட்சி (SNP) அது சிக்கன நடவடிக்கைக்கு எதிராக இருப்பதாக பொய்யாக அறிவித்தது.

தொழிற் கட்சிக்கு எதிரான வர்க்க கோபத்தை, ஸ்காட்டிஷ் தேசிய கட்சியால் ஒரு தேசியவாத திசையில் வெற்றிகரமாக திருப்பிவிட முடிந்தது. இதனால்  அவர்கள் பிரிட்டிஷ் தேசியவாதத்தையும், ஆங்கிலேய தேசியவாதத்தையே கூட தூண்டிவிட்டு பழமைவாதிகள் வெற்றியடைய கூடியதாக இருந்தது. அது ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சி (UKIP), முன்பு தொழிற் கட்சியின் வலுவான பிடியிலிருந்த இடங்களுக்குள் கணிசமாக ஊடுருவுவதற்கும் உதவியது.

தொழிலாள வர்க்கத்தினுள் பிளவுகளை விதைப்பதில் மற்றும் எல்லையின் இருதரப்பிலும் தேசியவாதிகளின் கரங்களைப் பலப்படுத்துவதில், போலி-இடது அமைப்புகள் முக்கிய அரசியல் பொறுப்பேற்கின்றன.

பல ஆண்டுகளாக, அவை ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் ஸ்காட்டிஷ் பிரிவினைவாதம் (Scottish separatism) ஆகியவற்றை வெஸ்ட்மின்ஸ்டர் ஆட்சிக்கு ஒரு முற்போக்கான மாற்றீடாக பாதுகாத்துள்ளன. தேர்தலுக்கு முன்னதாக, அவை தொழிற் கட்சியைச் சாடின, அது தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுத்ததற்காக அல்ல, மாறாக ஒன்றியத்தை அது பாதுகாப்பதற்காக.

ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் வெற்றிக்குப் பின்னர், அவற்றின் முன்னோக்கு, ஸ்காட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் அந்த கட்சியுடன் ஏதேனும் வடிவத்தில் கூட்டணி அமைப்பதன் மீது குவிந்துள்ளது. அல்லது, அது முடியாமல் போனால், சிக்கன நடவடிக்கையை எதிர்ப்பது மற்றும் சுதந்திரத்திற்காக போராடுவது என்ற "அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற" அழுத்தமளிப்பது என்பதாக உள்ளது.

எல்லைக்கு தெற்கே, தொழிற் கட்சியின் தோல்வியின் மீது போலி-இடதுகள் அவநம்பிக்கையுடன் ஓலமிட்டன. ஆனால் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களை இடதிற்கு திருப்ப அழுத்தமளிப்பது என்ற திவாலான வாதங்களைத் தவிர, அவற்றிடம் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குவதற்கு மீண்டும் ஒன்றுமில்லை.

இடது ஐக்கியம் (Left Unity), 2020 இல் டோரிக்கள் மீண்டும் வெற்றி பெறுவது குறித்து பேசுகிறது. "டோரி பொய்களை அவிழ்த்துவிட" உதவுவதை நோக்கி அதன் முயற்சிகள் திருப்பிவிடப்படுமென அது வலியுறுத்துகிறது. “தொழிற்சங்க தலைவர்கள்போராட தொடங்குவதற்கு அழுத்தமளிக்கப்பட வேண்டும்,” என்று ஸ்காட்டிஷ் தொழிலாளர்கள் கட்சி குறிப்பிடுகிறது. தொழிற்சங்கவாத மற்றும் சோசலிஸ்ட் கூட்டணியில் (Trade Unionist and Socialist Coalition) கூடுதலான தனது அங்கத்தவர்களை கொண்டுள்ள சோசலிஸ்ட் கட்சி, "ஐக்கியத்தின் (Unite) பொதுச் செயலாளர் லென் மெக்கிளஸ்கியின்" மீது நம்பிக்கை வைக்கிறது. இவர் "தொழிற் கட்சியால் டோரிக்களைத் தோற்கடிக்க முடியாவிட்டால், ஒரு புதிய கட்சியைப் பார்ப்பதற்கு நேரம் வந்துவிட்டதாக அறிவுறுத்தியவாராவர்”. “முழு தொழிற்சங்க இயக்கமும்" இதை விவாதிக்க தொடங்க வேண்டுமென அது குறிப்பிடுகிறது.

இந்த போக்குகளில் எதுவுமே தொழிலாள வர்க்கத்தைக் குறித்து பேசுவதில்லை. அவை முற்றிலுமாக முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புகளுக்குள் ஒருங்கிணைந்துள்ளன. அவை ஒரு தனிச்சலுகை கொண்ட மத்தியதட்டு வர்க்கத்தின் அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்வதுடன், பிரதான கட்சிகளின் மற்றும் முன்னணி தொழிற்சங்க நடவடிக்கையாளர்களின் அரசியல் ஆலோசகர்களாக மற்றும் கல்வித்துறைக்குள் முதலாளித்துவ கொள்கை அபிவிருத்தியாளர்களாக அவற்றின் இடங்களைப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே அவை அக்கறை கொண்டுள்ளன.

ஒரு புரட்சிகர சோசலிஸ்ட் இயக்கத்தின் அபிவிருத்தியை எதிர்ப்பதும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை மூலதன அரசியல் பிரதிநிதிகளுக்கு அடிபணிய செய்வதுமே அவர்கள் வகிக்கும் குறிப்பிட்ட பாத்திரமாகும்.

மே 7 ஆம் தேதி சம்பவங்கள் நீண்டகாலத்திற்கு முன்பே கருத்தரித்திருந்தன என்பதுடன், அவை வேகமாக தீர்க்கப்பட எவ்விதமான வழியுமில்லை.

இங்கிலாந்தில் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினதும் மற்றும் சர்வதேசரீதியாக சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்தின் தசாப்தகால அரசியல் காட்டிக்கொடுப்புகள் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு திருப்பத்திலும், அவை வர்க்க போராட்டத்தை தடுத்ததுடன், அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தின் எவ்வித சோசலிச அரசியல் நனவுக்கும் எதிராகவும் ஒரு பாரபட்சமற்ற சித்தாந்த தாக்குதலை நடத்தி உள்ளன.

உண்மையில், தொழிற் கட்சியின் படுதோல்வி வெறுமனே ஒரு கட்சியின் தோல்வி என்பதற்கும் அப்பாற்பட்டதாகும். அது ஓர் ஒட்டுமொத்த அரசியல் முன்னோக்கின் மற்றும் அதை அடிப்படையாக கொண்ட அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தோல்வியாகும். ஐரோப்பாவெங்கிலும், முன்னாள் சமூக ஜனநாயக அமைப்புகள் உடைந்து வருகின்றன. பொருளாதார பூகோளமயமாக்கல் மற்றும் முதலாளித்துவ உடைவிற்கு விடையிறுப்பதில் அவற்றின் சீர்திருத்த பாசாங்குத்தனங்களை நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டு விட்ட அவை, பிரிட்டன், பிரான்ஸ், கிரேக்கத்தில் ஆகட்டும் அல்லது ஏனைய இடங்கள் ஆகட்டும், சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு தீவிர ஆதரவாளர்களாக மாறியுள்ளன.

இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மரணகதியிலான அபாயங்களை முன்னிறுத்துகிறது. கூடுதல் வெட்டுக்களில் பில்லியன் கணக்கான பவுண்டுகளுக்கு ஏற்கனவே உறுதியளித்துள்ளதும் மற்றும், அரசு மற்றும் கண்காணிப்பு எந்திரங்களின் அதிகாரத்தைப் பலப்படுத்த ஒரு புதிய "தகவல் சேகரிப்பு சாசனத்தைத்" துரிதப்படுத்திவரும் ஓர் அரசாங்கத்தை அவர்கள் முகங்கொடுக்கின்றனர். அது ஐக்கிய இராச்சியத்தில் (UK) தேசிய பதட்டங்களை அதிகரிக்க செய்யும் என்பது மட்டுமல்ல, மாறாக புலம்பெயர்வு மற்றும் ஐரோப்பிய பிரச்சினைகளையும் அதிகரிக்க செய்யும்.

அனைத்திற்கும் மேலாக, இது முதலாளித்துவம் மற்றொரு நிதியியல் பொறிவின் விளிம்பை நோக்கி சென்றுகொண்டிருக்கையிலும் மற்றும் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஏனைய பிரதான சக்திகளின் இராணுவ ஆக்ரோஷம் உலகை ஓர் இரத்தந்தோய்ந்த மோதலுக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ் நிகழ்கின்றன.

இந்த அரக்கத்தனமான நிலைமைகளிலிருந்து வெளியேறுவதற்கான பாதை ஒரு உண்மையான சோசலிச கட்சியைக் கட்டியெழுப்புவதைச் சார்ந்துள்ளது. ஒரு புதிய போராட்ட அச்சிற்கு அதாவது சோசலிச சர்வதேசியவாதத்திற்கு திரும்புவதைத் தவிர, ஒரு தேசிய சீர்திருத்தவாதத்திற்கு திரும்புவதிலே அங்கே எந்த முன்னோக்கிய பாதையும் கிடையாது. சமூகத்தின் உற்பத்தி சக்திகள் இலாபகர அமைப்புமுறையின் தளைகளிலிருந்தும் மற்றும் போட்டியிடும் தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதில் இருந்தும் விடுவிக்கப்பட்டாக வேண்டும். தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பொருளாதாரத்தின் அடிப்படையில் உலக பொருளாதாரம் நடத்தப்பட வேண்டும்.

அதுபோன்றவொரு சோசலிச வேலைத் திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே முன்னெடுக்கின்றன என்பதுடன், சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு மூலக்காரணமாக உள்ள முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் சர்வதேசரீதியில் ஐக்கியப்படுவதற்கு வழிவகைகளையும் வழங்குகின்றன.

தொழிலாளர்களது இயக்கத்தின், அனைத்திற்கும் மேலாக ஸ்ராலினிசத்திற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் நடத்தப்பட்ட தசாப்தகால போராட்டங்களின் மற்றும் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்காக இன்று வரையில் நடத்தப்பட்ட ICFI இன் போராட்டங்களின் முக்கிய வரலாற்று படிப்பினைகளில், அரசியல்ரீதியில் மிகவும் முன்னேறிய மற்றும் சுயநலமற்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தெளிவுபடுத்துவதன் மூலமாகவே, சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவது முன்னெடுக்கப்பட வேண்டும்.