சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

US Congress applauds Japan’s militarist prime minister

ஜப்பானிய இராணுவவாத பிரதம மந்திரியை அமெரிக்க காங்கிரஸ் கரகோஷத்துடன் வரவேற்கிறது

Peter Symonds
30 April 2015

Use this version to printSend feedback

அமெரிக்க காங்கிரஸின் ஒரு கூட்டு அமர்வுக்கு ஜப்பானிய பிரதம மந்திரியால் நேற்று வழங்கப்பட்ட உரை, அவ்விரு ஏகாதிபத்திய சக்திகளும் ஆசியாவில் போருக்கு தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அவற்றின் கூட்டுறவை மேலும் இறுக்கமாக இணைக்கும் நோக்கில் உயர்ந்தளவில் ஆத்திரமூட்டும் ஒரு நிகழ்வாக இருந்தது. பெயரைக் குறிப்பிடவில்லை என்றபோதினும், பிழையின்றி சீனா தான் இலக்கில் இருந்தது—நிச்சயமாக இந்த முடிவுக்கு தான் பெய்ஜிங்கும் வந்திருக்கும்.

காணக்கிடைத்த ஒட்டுமொத்த காட்சியும் சூசகமயமாக (symbolism) இருந்தது, தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய நாள் கூட விடுபடவில்லை, அது ஹிரொஹிடோ பேரரசரின் பிறந்தநாள். இது வெறுமனே தற்செயலான பொருத்தமாக இருக்க முடியாது. ஜப்பானின் போர்கால ஆட்சியின் தலைவராக இருந்து, ஹிரொஹிடோ 1930கள் மற்றும் 1940களின் போது ஜப்பானிய ஆயுதமேந்திய படைகளின் பாரிய அட்டூழியங்கள் மற்றும் கொடூரமான போர் குற்றங்களுக்கு நேரடியாக பொறுப்பானவராவார், அவை தான் சீனா மீதான ஜப்பானின் சூறையாடலில் அவற்றின் மிக ஒன்றுதிரண்ட வெளிப்பாட்டைக் கண்டன.

காங்கிரஸில் உரையாற்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அபே அவரும் ஜனாதிபதி ஒபாமாவும் திங்களன்று கையெழுத்தான ஓர் இராணுவ உடன்படிக்கையில் புதிய "கூட்டு தற்காப்பு" (collective self-defence) என்றழைக்கப்பட்டதை வரையறைப்படுத்தினர். அந்த உடன்படிக்கை ஏற்கனவே நிறைய அமெரிக்க இராணுவ தளங்கள் இருக்கும் ஜப்பானின் கடற்கரைகளைக் கடந்து, அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்து செயல்பட ஜப்பானிய ஆயுதமேந்திய படைகளை அனுமதிக்கும். ஏற்கனவே சீனாவுடன் சச்சரவில் உள்ள தென் சீன மற்றும் கிழக்கு சீன கடல்களில் கூட்டு விமானப்படை ரோந்து படைகளை ஸ்தாபிக்க ஆத்திரமூட்டும் நகர்வுகள் நடந்து வருகின்றன.

இந்த புதிய பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முழு அடாவடித்தனத்தின் மற்றொரு காட்சிப்படுத்தலாக உள்ளன. மத்திய கிழக்கில் ஒரு புதிய போர் தொடங்கப்பட்டுள்ளதுடன், உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் ஓர் அபாயகரமான மோதல் இயக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்கா இராணுவ உடன்படிக்கைகளை ஜப்பானுடன் மட்டுமல்ல, இந்தோ-பசிபிக் முழுவதிலும் ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் உடனும் எட்டியுள்ளது, ஒரு மயிரிழையில் தூண்டிவிடப்படும் நிலையில் அந்த ஒட்டுமொத்த பிராந்தியமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் ஒரு மிகச் சிறிய சம்பவமே கூட, சான்றாக, பிரச்சினைக்குரிய சென்காயு/தியாவு தீவுக்குன்றுகள் மீது ஜப்பானிய மற்றும் சீன போர்விமானங்கள் ஈடுபட்டதைப் போன்றவை, அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு மோதலாக வெடிக்கும் தொடர்ச்சியான சம்பவங்களுக்குக் களம் அமைத்துவிடும்.

போருக்குப் பிந்தைய ஜப்பானின் மிகவும் வலதுசாரி தேசியவாத பிரதம மந்திரியான அபே, அமெரிக்க காங்கிரஸால் ஒருமித்து அரவணைக்கப்படுவதன் முக்கியத்துவம், டோக்கியோவின் ஆளும் வட்டாரங்களில் கண்டுகொள்ளாமல் விடப்படாது. மறைமுகமாக சீனாவிற்கு எதிரான அவர்களது கூட்டணியை அடிகோடிட்டு, அமெரிக்கா மற்றும் ஜப்பானை அபே "சுதந்திர உலகின்" பாகமாக மீண்டும் மீண்டும் கூறிய போது அவருக்கு மீண்டும் மீண்டும் எழுந்துநின்று கரகோசம் அளிக்கப்பட்டது.

அபே அவரது தாய்வழி தாத்தா, முன்னாள் பிரதம மந்திரி Nobusuke Kishi இன் ஒரு மேற்கோளுடன் அவரது உரையைத் தொடங்கினார். பாரிய போராட்டங்களுக்கு இடையே இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படுவதற்கு முன்னதாக 1960 இல் பெரும் சர்ச்சைக்குரிய அமெரிக்க ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கையில் அவர் கையெழுத்திட்டவராவார். அபே எப்போதும் கிஷியை—அதாவது, போர்கால மந்திரிசபை உறுப்பினராக இருந்து, போர் குற்றங்களில் நேரடியாக உடந்தையாய் இருந்த, அதற்காக கைது செய்யப்பட்டு ஆனால் ஒருபோதும் தண்டிக்கபடாமல் விடப்பட்ட அந்த மனிதரை—அவரது அரசியல் வழிகாட்டியாக கருதுகிறார்.

இரண்டாம் உலக போர் குறித்து அபே என்ன கூற இருக்கிறார் என்பதன் மீது உன்னிப்பாக கவனம் செலுத்தப்பட்டது. அவரது அரசாங்கம் இராணுவ வரவுசெலவு திட்டத்தை ஊக்குவித்து வருவதும் மற்றும் சீனாவிற்கு எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாடு ஜப்பானிய போர் குற்றங்களை பூசிமொழுகும் நோக்கில் ஒரு ஒருமித்த சித்தாந்தரீதியிலான பிரச்சாரத்துடன் இணைந்திருப்பதும் குறித்து அமெரிக்க காங்கிரஸின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவர். வாஷிங்டன் மற்றும் டோக்கியோ இரண்டுமே ஒரு வலதுசாரி பார்வையாளர்களின் முன்னால் விளையாட்டு காட்டி கொண்டிருக்கின்றன, அபே எவ்விதத்திலும் நேரடியாக மன்னிப்பு கோருவதைத் தவிர்த்துக் கொண்டு, “வரலாறு கடுமையானது. என்ன நடந்ததோ அது நடந்தது தான்,” என்று அறிவித்து, முற்றிலுமாக அந்த பிரச்சினையைக் கைகழுவிவிட்டார்.

அபேயை அமெரிக்க காங்கிரஸில் சவால் செய்ய எவருமே எழுந்திருக்கவில்லை என்பதை கூற வேண்டியதே இல்லை. அமெரிக்க ஆளும் மேற்தட்டு புதிய போர்கள் மற்றும் புதிய அட்டூழியங்களுக்கு தயாரிப்பு செய்து வருகையில், கடந்தகால குற்றங்களைப் புதைக்க தீர்மானகரமாக இருப்பதில் அவை ஜப்பானிய ஆளும் வர்க்கத்திற்குக் குறைந்ததில்லை—ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீசி பத்து ஆயிரக் கணக்கானவர்களை எரித்து சாம்பலாக்கியமை ஒன்றும் குறைவானது இல்லை.

ஆனால் அவசரகால போர் தருண நிகழ்வுகளாக அபே அந்த அட்டூழியங்களைத் தற்போது உதறிவிட்டாலும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் அவற்றை மறந்துவிட முடியாது. நான்ஜிங் கற்பழிப்பு என்று அறியப்படும் சம்பவத்தில், இதை ஜப்பானிய சித்தாந்தவாதிகள் குறைத்துக்காட்டுகின்ற அல்லது நடக்கவே இல்லையென மறுக்கின்ற நிலையில், டிசம்பர் 1937 இல் ஜப்பானிய துருப்புகள் அந்நகரைக் கைப்பற்றியதும் படுகொலைகள், கற்பழிப்பு மற்றும் கொள்ளையிடுதல் போன்ற களியாட்டத்தில் சம்பந்தப்பட்டன. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 300,000 ஆக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது—போரின் போது கொல்லப்பட்ட 10 மில்லியனுக்கு அதிகமான சீனர்களில் இதுவும் ஒரு பகுதியாகும்.

ஜப்பானுக்குள்ளேயே, அனைத்திற்கும் மேலாக அந்த இராணுவவாத ஆட்சி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திரும்பியிருந்த ஒரு பயங்கரவாத ஆட்சியுடன் கேள்விக்கிடமில்லா விசுவாசத்துடன் அதன் கோரிக்கைகளை திணித்தது.

இப்போதோ ஜப்பானிய ஏகாதிபத்தியம் இராணுவவாதம் மற்றும் போரின் பாதைக்குத் திரும்பி வருகிறது. "உலக சமாதான ஸ்திரப்பாட்டிற்குரிய கூடுதல் பொறுப்புகளை" ஜப்பான் எடுக்கும் என்றும், அந்த பாத்திரம் வகிக்க "அவசியமான எல்லா சட்டமசோதாக்களையும்" விரைவில் நிறைவேற்றும் என்றும் அபே அமெரிக்க காங்கிரஸில் தெரிவித்தார். வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட அபே அரசாங்கம், “சமாதானம்" காப்பதற்காக என்ற சாக்கில், ஜப்பானிய இராணுவத்தின் மீதான உத்தியோகப்பூர்வ தடைகளை மேற்கொண்டும் நீக்குவதற்காக அந்நாட்டின் போருக்குப் பிந்தைய அரசியலைப்பை அவர் "மறுதிருத்தம்" செய்துள்ளார்.

வாஷிங்டனில் அபேயின் புகழ்பாடப்பட்டதை பெய்ஜிங் ஒரேயொரு வழியில் தான் பொருள்விளக்கம் கொள்ள முடியும்: அதாவது, ஆசியா முழுவதிலும் ஈவிரக்கமின்றி இராணுவத்தைக் கட்டியமைப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது, அது பெய்ஜிங் முழுமையாக அடிபணிவதில் அல்லது போரில் மட்டுமே போய் முடியும். சீனாவில் உள்ள மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் எந்தவித முறையீடும் செய்ய தகைமையற்று, முதலாளித்துவ மீட்சியிலிருந்து எழுந்த பெரும் செல்வந்த தட்டுக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற சீன அரசாங்கம், வாஷிங்டனைச் சாந்தப்படுத்தும் அதன் பயனற்ற முயற்சிகளோடு சேர்ந்து அதன் சொந்த இராணுவத்தைக் கட்டமைப்பதில் ஈடுபட்டுள்ளது. அதன் நடவடிக்கைகள் போர் அபாயத்தை தீவிரப்படுத்த மட்டுமே செய்கின்றன.

2015 மே தினத்திற்கு முன்னதாக, சர்வதேச தொழிலாள வர்க்கம் பெரும் அபாயங்களை முகங்கொடுக்கிறது. உலக மக்களின் முதுகுக்குப் பின்னால், வெகுதூரத்திய எதிர்கால போர்களுக்காக அல்ல, மாறாக எப்போது வேண்டுமானாலும் வேகமாக பற்றிக் கொள்ளக்கூடிய மோதல்களுக்காக இப்போது இராணுவ தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஞாயிறன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இணையவழி மே தின கூட்டம் மட்டுமே போரில் மூழ்குவதைத் தடுக்ககூடிய—போருக்கு ஆணிவேராக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறையை அகற்ற உலகெங்கிலுமான தொழிலாளர்களைப் புரட்சிகரமானரீதியில் ஒன்றுதிரட்டும்—ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கைக் கொண்டுள்ளது.

உலக சோசலிச வலைத்தள வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் பதிவு செய்து, உலக தொழிலாள வர்க்கத்தின் இத்தகையவொரு சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.