சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

After protests Sri Lankan government unleashes crackdown in Jaffna

எதிர்ப்புக்களுக்கு பின்னர்  இலங்கை அரசாங்கம்  யாழ்ப்பாணத்தில் வன்முறையை கட்டவிழ்க்கிறது

Our correspondents
26 May 2015

Use this version to printSend feedback

யாழ்ப்பாண குடாநாட்டின் மேற்கில், புங்குடு தீவில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிரான  வெகுஜன எதிர்ப்பு,  போரினால் சீரழிக்கப்பட்ட வடக்கில் அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை ஏற்படுவதற்கான ஒரு ஊக்கியாக மாறலாம் என்ற அச்சத்தில்இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் மீது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள அதே சமயம், பொலிஸ் விசாரணை குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன மற்றும் இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 13, இளம் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. சந்தேக நபர்களை கைது  செய்வதில் போலீஸ் செயலற்று  இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி தெருவுக்கு வந்ததை அடுத்து, இந்த குற்றத்திற்காக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

புதன் கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் முழு அடைப்பின் போது, சீற்றமடைந்த மக்கள்  நீதிமன்ற வளாகங்களை தாக்கினர். பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர் மற்றும் 130 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில்  சுமார் 20 பேர் மாணவர்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறினர். காவலில் வைக்கப்பட்டவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டு வருகின்றனர். ஜூன் 2 வரை விளக்கமறியல் அளிக்கப்பட்டவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர், அங்கே பெரும்பான்மையானவர்கள் சிங்கள கைதிகள். தமிழ் கைதிகளை மிரட்டி மற்றும் தாக்குவதற்கு சிங்கள கைதிகளை தூண்டிவிடுவதில் அனுராதபுரம் சிறையில் உள்ள காவலர்கள் இழிபுகழ் பெற்றவர்கள்.

புதன்கிழமை முதல், மத்திய பேருந்து நிலையம் மற்றும் பிரதேச செயலகம் உட்பட யாழ்ப்பாண நகரத்திலுள்ள பிரதான இடங்களில் கனரக ஆயுதந் தாங்கிய போலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர், அதே சமயம் கவச வாகனங்கள் ரோந்து வருகின்றன.

 ஒரு மூத்த போலீஸ் அதிகாரி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்; அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் "சட்டம் ஒழுங்கை பராமரிக்க" பொலிஸ் விசேட அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடைகளை மூட வேண்டாம் என்றும் குழுக்களாக கூட வேண்டாம் என்றும் போலீஸ்  ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி எச்சரிக்கை செய்தது.

அரசின் உஷார் நிலையை அதிகரிக்க  கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த  உயர் அதிகாரிகள் மத்தியில் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் மற்றும் அவருடன் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனும் அடங்குவர்.

வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாண நீதவான் பி. சிவகுமார் யாழ்ப்பாண நகரத்தில் அனைத்து வகை ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்யும் ஒரு உத்தரவை பிறப்பித்தார். மூன்று குழுக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த முயற்சிக்கின்றனர் என புகார் செய்து போலீஸ் அனைத்தையும் தடைசெய்யும் உத்தரவை பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தலைமையிலான பெண்கள் புரட்சிகர அமைப்பு, மக்கள் சக்தி குழு மற்றும் பெண்கள் விடுதலை சிந்தனைக்கான அமைப்புமே இங்கே சுட்டிக்காட்டப்பட்ட அமைப்புகளாகும். இவை அதிகம் அறியப்பட்டிராத குழுக்களாக உள்ள அதே சமயம் சசிதரன் தீவிர தேசியவாதியாக காட்டிக் கொள்கிறார்.

அரசாங்கம், கடந்த வார நிகழ்வுகள் தொடர்பான ஒரு "அவசர விசாரணைநடத்த குற்ற புலனாய்வு பிரிவில் இருந்து 15 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பியதாக சண்டே டைம்ஸ் தெரிவிக்கின்றது. ‘’சம்பவங்களுக்கு வழிநடத்திய காரணிகளை மையமாக கொண்டு விசாரணை இருக்கும்மற்றும் இந்தக்குழு ‘’குடாநாட்டை நிலைகுலைய செய்ய ஏதாவதுதேச விரோதகுழுக்கள் முயற்சிக்கின்றனவாஎன்பதையும் ஆய்வு செய்யும் என்று டைம்ஸ்  குறிப்பிட்டது.

அவர்கள், நீதிமன்றங்களின் மீது தாக்குதல் நடத்திய ‘’நபர்களின் அடையாளங்களை பயன்படுத்துவார்கள்’’. சம்பவங்கள் பற்றிய வீடியோ காட்சிகளை வைத்திருப்பவர்கள் அவற்றை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சிரச தொலைக்காட்சி சேவையும் கூட நேற்று அறிவித்தபடி குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு விசாரணைகள் அலகு ஆகிய மூன்று அணிகளும் விசாரணைகளை ஆம்பித்துள்ளன.

டைம்ஸ் விவரித்த விசாரணையின் தன்மை, கடந்த வார சம்பவங்களுக்கு "தேச விரோதஅல்லது "பயங்கரவாதி" என ஒரு புதிய திருப்பங்களை கொடுக்க போலீஸ் முயற்சிப்பதையும், மற்றும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கில், மேலும் அடக்குமுறை நடவடிக்கைகள் திணிப்பதையுமே காட்டுகிறது.

ஒவ்வொரு மூலை முடுக்கிலும் போலீஸ், மற்றும் புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.

எனினும், குற்றவாளிகளை கைது செய்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஒரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்புக்கு தப்பிச் செல்ல பொலிஸ் அனுமதித்ததன் காரணமாகவே எதிர்ப்பு உடனடியாக வெடித்ததாக செய்திகள் காட்டுகிறன. சுவிட்சர்லாந்தில் வாழ்வதாக கூறப்படும் சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று மக்கள் அஞ்சினர். அவர் கொழும்பில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு  கொண்டு வரப்பட்டார்.

மக்கள் மத்தியில் கோபம் வெடித்து எழுந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். எனினும், இது வடக்கில்  போலீஸ் மற்றும் இராணுவத்தின் இரகசிய ஆதரவுடன் குற்றவியல் கும்பல்கள் செயல்படுகின்றன என்பது குறித்து மக்கள் மத்தியில் உள்ள நியாயமான சந்தேகத்தை வலுப்படுத்தியள்ளது. மேலும் இதில் ஒரு யூ.என்.பீ. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் ஈடுபாடு சந்தேகத்தை அதிகரித்திருப்பதாக  டைம்ஸ்  கட்டுரை  சுட்டிக்காட்டுகிறது.

உண்மையில், எதிர்ப்புக்கள் ஆதரவற்ற இளம் பெண் மீது இழைக்கப்பட்ட கொடூரமான குற்றம் தொடர்பான கோபத்தை பிரதிபலித்தன. ஆனால், இன்னும் பரந்தளவில் பார்த்தால் அவர்கள் மூன்று தசாப்தங்களாக வடக்கில் யுத்தத்தின் போதும் யுத்தத்திற்கு பிறகும் இன்னும் கூட மக்கள் அனுபவித்து வரும் பாதிப்பின் குமுறல்களாக இருக்கின்றன. யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் பெண்களின் பாதுகாப்பற்ற நிலை அதிகரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) தோற்கடித்து பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்ற  போர், ஆறு ஆண்டுகளுக்கு முன் மே மாதம் முடிவுற்ற நிலையிலேயே கடந்த வாரம் போராட்டங்கள் வெடித்தன.

அடக்குமுறையை அதிகரிக்கவும் வகுப்புவாத பதட்டங்களை ஆழப்படுத்தவும் அழுத்தம் கொடுக்கும் சிங்கள பேரினவாத குழுக்கள், யாழ்ப்பாண நீதிமன்றங்கள் மீதான தாக்குதல் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை சிடுமூஞ்சித்தனமாக பயன்படுத்திக்கொள்கின்றன. "புலி பயங்கரவாதம் வடக்கில் மீண்டும் தலை தூக்கி உள்ளது" என்பதே அரசாங்கத்திற்கு எதிரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் பிரச்சார கூட்டங்களில் மையக்கருத்தாக மாறியுள்ளது.

ஒரு கொடூரமான நடவடிக்கையாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரசு ஒடுக்குமுறையை ஆதரிக்க தமிழ் தேசியக் கூட்மைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (.பி.டி.பி) உட்பட அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. .பீ.டி.பீ தலைவர் டக்ளஸ் தேவானந்தா, குற்றவாளியை தப்பி ஓட உதவி செய்ததாக ஒரு முன்னணி அரசியல்வாதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளருமான ஒருவர் மீது குற்றம் சாட்டினார். மேலும் "சட்டம், ஒழுங்கு  நிலவ  வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்" என்றும் அவர் கூறினார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு மாறுபட்ட கருத்தை கூறிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஒரு ஆயுதக் குழு, போரின் போதும் அதற்கு பிறகும் மக்கள் மீது அடக்குமுறைகளை திணிக்க இராணுவம் மற்றும் கடற்படையுடன் நெருக்கமாக பணியாற்றியது என்றார். அவர் பெயர் குறிப்பிடாவிட்டாலும் அவர் சுட்டிக் காட்டிய அமைப்பு .பீ.டி.பீ. ஆகும். அவர், இரண்டு கிராமங்களில் இருந்து வந்த ஒரு குழுவே வன்முறையைத் தூண்டியுள்ளது என்ற போதிலும், அவர் அதற்கு ஆதாரத்தை காட்டவில்லை.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போரின் போது இராணுவம் ஆதரித்த ஒரு துணைப்படைக் குழுவாகும். அது தற்போது ஜனாதிபதி சிறிசேன பின்னால் அணி சேர முயற்சிக்கின்றது.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்தின் போது புலிகளின் ஊது குழலாக செயற்பட்டு, இப்போது சிறிசேனவுக்கு ஆதரவளிக்கின்றது. அமெரிக்கா மற்றும் இந்தியவின் ஆதரவுடன் அவருடன் ஒரு அரசியல் உடன்பாட்டுக்கு முயற்சிக்கின்றது. தங்கள் சலுகைகள் பற்றி மட்டுமே அக்கறை காட்டும் இந்த தமிழ் உயரடுக்குகளின் இரண்டு குழுக்களுமே மக்கள் படும் கஷ்டங்களுக்கு பொறுப்பாளிகள்.

யாழ்ப்பாணம் வழக்கறிஞர்கள் குழு, நீதிமன்ற வளாகத்தின் மீதான தாக்குதலை கண்டித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட அனைவருக்காகவும் வாதாட முடியாது என்று அறிவித்துள்ளனர். அத்தகைய கண்டனத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் விடுத்துள்ளது. அரசியல் மேல் தட்டுகளைப் போல் அரசுடன் நெருக்கமாக வேலை செய்யும் இந்த நிறுவனங்களும், அமைதியின்மை வளர்ச்சியடைவது பற்றியும் அது தமது நலன்களை பாதிக்கும் என்றும் பீதியடைந்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, .பி.டி.பி. மற்றும் பலரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக அணி சேர்வதில் விடுக்கும் செய்தி, அவர்கள் மக்களின் எந்த ஒரு சமூகப் போராட்டத்தையும் எதிர்ப்பவர்கள் என்பதே ஆகும்.

மக்கள் மத்தியில் கோபத்தை திசைதிருப்பும் மற்றும் அரசின் நசுக்குதலை மூடிமறைக்கும் ஒரு முயற்சியில், அரசாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, நீதி அமைச்சர் விஜேதாச இராஜபக்ஷ அரசாங்கத்தின் பெண்கள் விவகார அமைச்சரான ரோசி சேனாநாயக்காவுடன் சேர்ந்து கொழும்பில் மெழுகுவர்த்தி கொழுத்தும் ஒரு நிகழ்வை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்காததற்காக போலீசார் மீது சேனாநாயக்க குற்றம் சாட்டினார். ஆனால் அதே நேரத்தில், அவர் மேலும் சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அரசைப் பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.