சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

US hypocritically denounces Chinese Internet spying

அமெரிக்கா போலித்தனமாக சீன இணைய உளவுவேலையைக் கண்டிக்கிறது

By Thomas Gaist
9 March 2015

Use this version to printSend feedback

சீனாவில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவற்றின் தரவு பாதுகாப்பு அமைப்புமுறைகளில் சிறப்பு பின்புல இரகசிய வழிகளை (special backdoors) நிறுவி, அவற்றிற்கான மறை குறியாக்க குறியீடுகளை (encryption keys) பெய்ஜிங்கிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரும், சீனாவின் "பயங்கரவாத எதிர்ப்பு" சட்டமசோதாவிற்காக சீன அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த வாரம் விமர்சனங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை வெளியிட்டார்.

ஏகாதிபத்திய போலித்தனத்தின் ஒரு மலைப்பூட்டும் காட்சியாக, அந்த கொள்கை மாற்றங்களைச் செய்ய முயல்வதற்காக ஒபாமா சீன ஆட்சியைக் கண்டித்தார். அந்த கொள்கைகளோ, கடந்த தசாப்தத்திலிருந்து அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற தரவு-பகிர்வு ஒழுங்குபடுத்தல்களுக்கு (data-sharing arrangements) மிக நெருக்கத்தில் சமாந்தரமாக உள்ளன. சீன உளவுத்துறைக்கு விட்டுகொடுக்கும் வகையில் அவற்றின் தரவு பாதுகாப்பு அமைப்புமுறையைப் (security systems) பேணுவதில் அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிவிலக்கு வழங்கவில்லை என்றால், சீனா உடனான பொருளாதார உறவுகள் முறிக்கப்படுமென ஒபாமா அச்சுறுத்தினார்.

"அதுபோன்ற கட்டுப்பாட்டு நடைமுறைகள், முற்றிலும் முரண்பாடான விதத்தில், நீண்டகால ஓட்டத்தில் சீன பொருளாதாரத்தைப் பாதிக்குமென நான் நினைக்கிறேன், ஏனென்றால் தரவுகளை, ஓர் அரசாங்கத்திற்கு சொந்தமான தனிப்பட்ட தரவுகளை, ஒட்டுமொத்தமாக நம்பகமானரீதியில் திரட்டி செல்லும் எந்தவொரு அமெரிக்க நிறுவனங்களோ அல்லது ஐரோப்பிய நிறுவனங்களோ, எந்தவொரு சர்வதேச நிறுவனமோ எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை,” என்றார்.

ஒபாமா தொடர்ந்து கூறுகையில், பெய்ஜிங் முன்மொழிந்த சட்டமசோதா, “அமெரிக்க நிறுவனங்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களையும் இன்றியமையாத விதத்தில் சீன அரசு இயங்குமுறையின் கட்டுப்பாட்டுக்குள் வர நிர்பந்திக்கும், அங்கே அவர்களால் குறுக்கீடு செய்து தகவல்களைப் பெற முடியும் என்பதோடு, அந்நிறுவனங்களில் இருந்து சேவைகளைப் பெறும் அனைத்து பயனாளிகளையும் அவர்களால் கண்காணிக்க முடியும்,” என்றார்.

அமெரிக்காவுடன் அவர்கள் வணிகம் செய்ய விரும்பினால், இதை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளோம்,” என்றார். “தொழில்நுட்ப நிறுவனங்கள் அதை செய்ய விரும்பாது என்பதை நீங்களே ஊகிக்கலாம்,” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதியின் போலித்தனம் மலைப்பூட்டுகிறது. அனைத்திற்கும் மேலாக சீன தொழிலாள வர்க்கத்தை நோக்கமாக கொண்ட இந்த உளவுவேலை மற்றும் இணைய தணிக்கைமுறைகளை சீன ஸ்ராலினிச ஆட்சி சந்தேகத்திற்கிடமின்றி அதிகரிக்கிறது என்றபோதினும், வாஷிங்டனே உலகின் தலையாய ஸ்னூப்பராக (குறுக்கீடு செய்து தகவல்களைப் பெறுபவராக), அந்தரங்க விதிமீறல் செய்பவராக உள்ளது என்பதே உண்மையாகும். அது மனிதயின வரலாற்றிலேயே மிக மிகப் பரந்த உளவுவேலை அமைப்புமுறைக்கு தலைமை தாங்குகிறது.

பல ஆண்டுகளாக, அமெரிக்காவின் இணைய மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்கள் அமெரிக்க பிரஜைகளைக் குறித்தும் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகின் பிரஜைகளைக் குறித்தும் மின்னணு தரவுகளைத் திரட்டி, NSA உட்பட அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளன. தரவுபகிர்வு கம்பிகளை மேவி ஊடுருவியும் மற்றும் தரவுகளைத் துருவியெடுக்கும் நிரல்கள் மூலமாகவும், அமெரிக்க உளவுத்துறையானது உலகெங்கிலும் உள்ள பெருநிறுவன சர்வர்களில் சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்தொடர்பு தரவுகளையும் தோற்றப்பாட்டளவில் சேகரித்து பகுக்கின்றன.

1978 இன் அன்னிய நாட்டு உளவுவேலை கண்காணிப்பு சட்டம் (FISA) தொடங்கியதில் இருந்து, நிறுவனங்களிடம் அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட்ட உத்தரவாணை இல்லாத பாரியளவிலான நேரடி கோரிக்கைகளுக்கு முத்திரை குத்தும் ஓர் இணை நீதிமன்ற முறையைக் கட்டியெழுப்புவதை, அமெரிக்க காங்கிரஸூம், நிர்வாக பிரிவும், நீதித்துறையும் மேற்பார்வை செய்துள்ளதோடு, ஒப்புதலும் வழங்கி உள்ளன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக, புஷ் நிர்வாகம் AT&Tஇன் மைய அமைவிடத்திற்குள் அந்நிறுவனத்துடன் செய்து கொண்ட ஓர் இரகசிய ஒப்பந்தத்தின் பாகமாக, AT&T உபகரணங்களினூடாக கடந்து செல்லும் அனைத்து தொலைபேசி மற்றும் இணைய தரவுகளையும் கைப்பற்ற, அது தரவுகளைத் துருவியெடுக்கும் (data mining) நடவடிக்கைகளைத் தொடங்கியது. 2007 வாக்கில், மைக்ரோசாப்ட், கூகுள், யாகூ மற்றும் பேஸ்புக் உட்பட அனைத்து முன்னணி பன்னாட்டு அமெரிக்க தொழில்நுட்ப மற்றும் தகவல்தொடர்பு நிறுவனங்களும், NSA இன் PRISM திட்டத்தில் பங்களிப்பவர்களாக இருந்து அவற்றின் மைய சர்வர்களை அமெரிக்க அரசாங்கம் தோற்றப்பாட்டளவில் கட்டுப்பாடின்றி அணுகுவதை அனுமதித்தன.

இரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்ட NSA ஸ்லைடுகள், பங்குபற்றி வந்த "பெருநிறுவன பங்காளிகளின்" சாதனங்களில் இருந்து "அப்போதைக்கு அப்போதைய தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஆவணக் கிடங்கில் இருக்கும் தகவல்கள் என அவற்றை பரந்துபட்ட விதத்திலும் மற்றும் ஆழமாகவும் கண்காணிக்க" அந்த முகமையை PRISM அனுமதித்திருந்ததை எடுத்துக்காட்டின. மின்னஞ்சல்கள், இணையவழி வீடியோ மற்றும் பேச்சுகள், ஸ்கைப் பேச்சுக்கள் மற்றும் சமூக ஊடக தகவல்கள் என அவற்றை அப்போதைக்கு அப்போதும் சரி, சேமிப்பில் இருப்பதையும் சரி தேடி அணுகுவதற்குரிய அனுமதி வழங்கப்பட்டிருந்ததும் அதில் உள்ளடங்குகிறது.

மிக முக்கியமாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) வாஷிங்டனால் நடத்தப்படும் ஒட்டுமொத்த இணைய உளவுவேலையையே முன்மாதிரியாக கொண்டிருப்பதாக வலியுறுத்தி, அதன் சட்டமசோதாவைப் பாதுகாத்தது.

இந்த அணுகுமுறையும் சர்வதேச நடைமுறை உடன் பொருந்தியதே என்பதுடன், இது இணைய சேவை நிறுவனங்களின் நியாயமான நலன்களைப் பாதிக்காது,” என்று கடந்த வாரம் தேசிய மக்கள் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஃபூ யிங் (Fu Ying) தெரிவித்தார். “எதார்த்தத்தில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அவற்றின் மறை குறியாக்க குறியீடுகளை வெளியிட வேண்டுமெனக் கோரி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளும், பல ஆண்டுகள் செலவிட்டுள்ளன,” என்றார்.

உண்மையில், பெருநிறுவன மறைக்குறியாக்கம் மற்றும் இணையவழி தரவு பாதுகாப்பு அமைப்புமுறைகளை அணுகுவதற்கான இரகசிய குறியீடுகள் மற்றும் பின்புல இரகசிய வழிகளுக்கான CCP இன் முறையீடு, தோற்றப்பாட்டளவில் FBI இயக்குனர் ஜேம்ஸ் கோமெயினால் புரூகிங்ஸ் பயிலகம் மற்றும் ஏனைய இடங்களிலும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உரைகளில் கோரப்பட்ட கோரிக்கைகளுடன் ஒத்துப் போகிறது.

தரவு மற்றும் தகவல்பரிமாற்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு-தடுப்பு தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அணுகுவதற்கு வாஷிங்டனுக்கு பின்புல இரகசிய வழி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய கோமெ, புதிய தலைமுறை ஸ்மார்ட் போன்களில் சேகரிக்கப்படும் தரவுகளை அரசாங்கம் கண்காணிப்பதை மட்டுப்படுத்தும் மிக குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குமே கூட கண்டனம் தெரிவித்தார். கோமெ தலைமையின் கீழ் தான், FBI எவ்வித சட்ட வழிமுறையோ அல்லது உத்தரவாணையோ இல்லாமல் அமெரிக்க கணினிகளில் நவீன உளவுபார்ப்பு மால்வேர்களை (malware - இரகசிய மென்நிரல்கள்) நிறுவ, கூடுதல் அதிகாரங்களுக்கு ஆக்ரோஷமாக அழுத்தம் அளித்தது.

வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, சீன சட்டமசோதா "இணைய அரங்கில் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே ஓர் ஆழமான பிளவை" தீவிரப்படுத்தி வருகிறது. சீன தகவல் திருட்டு (hacking) குறித்தும், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக இணையவழி போர்முறைகள் குறித்தும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அச்சமூட்டும் பிரச்சாரங்களை ஊக்குவிப்பதன் மூலமாக, அமெரிக்க ஊடகங்கள் சீன-விரோத முனைவிற்கு துணை நிற்கின்றன.

குற்றகரமான சீன தகவல் திருட்டு (hacking) மீதான விஷம பிரச்சாரத்தைத் தம்பட்டம் அடித்த இதேபோன்ற முயற்சிகள், 2013 இளவேனிலில் மேலெழுந்த போது, வெகு விரைவிலேயே மதிப்பிழந்து போயின. அப்போது NSA இன் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்ட ஆவணங்கள், சட்டவிரோத அமெரிக்க உளவுவேலை திட்டங்கள் சீனாவின் அடிப்படை இணைய கட்டமைப்பை மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த உலக மக்களையும் இலக்கில் கொண்டிருப்பதை திட்டவட்டமாக எடுத்துக்காட்டியது.

சீன கல்வியியல், இராணுவ மற்றும் பெருநிறுவன அமைப்புகளை இலக்கில் கொண்ட NSA, CIA மற்றும் பெண்டனால் செயல்படுத்தப்படும் ஊடுருவல், நாசவேலை மற்றும் தகவல் திருட்டு (hacking) நடவடிக்கைகளை ஸ்னோவ்டென் விரிவாக எடுத்துக்காட்டினார். ஆசியாவில் சீனாவைத் தனிமைப்படுத்தும் மற்றும் போரைக் கொண்டு அதை அச்சுறுத்தும் நோக்கம் கொண்ட வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" உடன், 2011 இல் அறிவிக்கப்பட்ட ஒரு பரந்த நிகழ்ச்சிநிரலின் பாகமாக அது இருந்தது.

அப்போதிருந்து, ஒபாமா நிர்வாகம் சீனாவின் அமெரிக்க இராணுவ சுற்றிவளைப்பை இறுக்கி உள்ளது. வடக்கு பசிபிக் பெருங்கடலில் பாரியளவில் கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படைகளை ஆயத்தப்படுத்தியதும் அதில் உள்ளடங்கும். அதேவேளையில் சீனாவின் தெற்கு மற்றும் கிழக்கு பக்கவாட்டு பகுதிகளின் மீது அழுத்தத்தைத் தூண்ட ஜப்பான், வியட்நாம் மற்றும் தென் கொரியா உள்ளடங்கிய சீன-விரோத இராணுவ அணியைச் சார்ந்துள்ளது.

முன்மொழியப்பட்ட அந்த சட்டமசோதாவை ஒபாமா சிதறடித்த நிலையில், அமெரிக்க கடற்படை அனைத்து சீன வாகனங்களின் இயக்கத்தையும் கண்காணித்து, சீனக் கடல்பகுதிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக உளவுவேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது என்று இந்த வாரம் Beijing Morning Post அறிவித்தது.

அமெரிக்க அரசியல் மற்றும் மூலோபாய அழுத்தம் குறித்து நிலவும் உத்தியோகபூர்வ அச்சங்களே CCP இன் புதிய தரவு துருவும் நெறிமுறைகளுக்கான (protocols) ஒரு பிரதான உந்துதலாகும் என்பதற்கு அங்கே அறிகுறிகள் உள்ளன. வெளி நாட்டின் நடவடிக்கை குழுக்கள், இலாப நோக்கற்ற குழுக்கள் மற்றும் ஏனைய "பொது சமூக" குழுக்கள் உட்பட அரசு-சாரா அமைப்புகளுக்கான (NGO) நிதி ஓட்டத்தை சீன அரசு முகமைகள் நெருக்கமாக கண்காணிக்க இத்தகைய தரவு நெறிமுறைகள் அவசியமாகின்றன.

அதுபோன்ற அமைப்புகள் சேர்பியா, ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் உட்பட ஐரோப்பாவிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் சிஐஏ-ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவின் மேற்கத்திய மாகாணங்களில் பிரிவினைவாத குழுக்களில் சில சிஐஏ மற்றும் ஏனைய அமெரிக்க அரசாங்க முகமைகளிடம் இருந்து ஆதரவைப் பெற்று வருகின்ற நிலையில், அவற்றை மேற்கோளிட்டுக் காட்டி சீனத் தலைவர்கள் அவர்களது புதிய உளவுவேலை சட்டங்களை நியாயப்படுத்தினர்.