சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New York Police Department caught whitewashing police crimes on Wikipedia

நியூ யோர்க் பொலிஸ் துறை விக்கிபீடியாவில் இருந்த பொலிஸ் குற்றங்களை மூடிமறைத்தமை கண்டுபிடிக்கப்பட்டது

By Mark Witkowski
16 March 2015

Use this version to printSend feedback

பிரபல வலைத்தள செய்தி களஞ்சியமான விக்கிபீடியாவில் நியூ யோர்க் பொலிஸ் துறை (NYPD) அதன் சொந்த நடவடிக்கைகள் குறித்த விபரங்களை திருத்தி எழுதியதன் மீது பிடிபட்டுள்ளது.

NYPD அதிகாரிகளால் கொல்லப்பட்ட எரிக் கார்னெர், அமாடொவ் தியால்லொ மற்றும் ஷாவ்ன் பெல் ஆகிய இவர்கள் அனைவரும் உள்ளடங்கலாக, பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் உயர் முக்கிய வழக்குகள் மீதான வலைப்பக்கங்களைத் திருத்துவதற்காக NYPD தலைமையகத்தில் உள்ள ஒரு பொலிஸ் வளாகத்தின் IP வலைத்தள முகவரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளியன்று Capital NY செய்தி குறிப்பிட்டது.

NYPD தலைமையகத்திலிருந்து பயனர்கள், தடுத்து-கைகளைக் கட்டும் விபரங்கள் (stop-and-frisk) மற்றும் பொலிஸின் முறைகேடான நடவடிக்கைகள் குறித்த விபரங்களையும் மாற்றியுள்ளனர். அந்த விவகாரத்தை விசாரித்து வருவதாகவும், அதுகுறித்து மேற்கொண்டு தகவலளிக்க முடியாது என்றும் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.

எரிக் கார்னர் குறித்த விபரங்களில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக Capital செய்தி அறிவித்தது, சான்றாக:

* “கார்னர் அவரது இரண்டு கைகளையும் மேலே தூக்கினார்" என்பது "கார்னர் பேசிக் கொண்டிருந்த போதே அவரது கைகளை மேலுயர்த்தி ஆட்டினார்" என்று மாற்றப்பட்டிருந்தது.

* “கார்னரின் முகத்தை நடைபாதையில் வைத்து அழுத்து" என்பது "கார்னரின் தலையைக் நடைபாதையை நோக்கி குனிய வை" என்று மாற்றப்பட்டிருந்தது.*

* “கழுத்தை இறுக்கும் பட்டையைப் பிரயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது" என்பது "கழுத்தை இறுக்கும் பட்டையைச் சட்டரீதியில் பயன்படுத்தலாம், ஆனால் தடை செய்யப்பட்டுள்ளது,” என்று மாற்றப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கைகள் வன்முறையாக இருந்ததாகவும், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகள் நியாயமாகவும் கட்டுப்பாடுடனும் இருந்ததாகவும் காட்டுவதே அந்த விக்கிபீடியா விபரங்களைத் திருத்துவதில் இருந்த தெளிவான நோக்கமாகும். பொதுமக்களின் கருத்தை அதற்கு சாதகமாக சாய்க்க, மற்றும் மக்களின் பரந்த அடுக்குகளால் அந்த பொலிஸ் துறை வெறுக்கப்படுகின்ற ஒரு நகரில், அதன் பிம்பத்தை உயர்த்திக் கொள்ளும் முயற்சிகளாக, துல்லியமாக, NYPD, ஒரு கோழைத்தனமான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சமீபத்திய வெளிப்பாடுகளில் உள்ள NYPDஇன் இணைய மோசடி, இணையத்திலும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பொலிஸ் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ள ஒரு பரந்த போக்கின் பாகமாக உள்ளன.

2011க்குப் பின்னரில் இருந்து NYPDஇன் சமூக ஊடக கண்காணிப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது கைகோடாரியுடன் நடத்தப்பட்ட ஒரு முதல் தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு சாத்தியமான "தனித்த ஓநாய்களான" (lone wolf) இந்த பயங்கரவாதிகளைப் பிடிக்க பொலிஸ் துறை கணிசமான அளவிற்கு சமூக ஊடகங்கள் மீதான அதன் பரந்த கண்காணிப்பை விரிவாக்குமென கடந்த நவம்பரில் பொலிஸ் கமிஷனர் வில்லியன் பிரெட்டொன் அறிவித்தார்.

டிசம்பர் 20இல் இரண்டு புரூக்லின் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடக தளங்களில் அச்சுறுத்தல்கள் விடுப்பதற்காக டஜன் கணக்கான மக்கள் நியூ யோர்க்கிலும் மற்றும் அமெரிக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கைது செய்யப்பட்டனர்.

17 வயது நிரம்பிய ஓசிரிஸ் அரிஸ்டி பேஸ்புக்கில் NYPDக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல்களை விடுத்து ஒரு கார்ட்டூன் பிரசுரித்தார் என்பதற்காக அவர் மீது குற்றப்பதிவு செய்ய, புரூக்லின் பெரு நடுவர் மன்றம் பெப்ரவரியில் மறுத்திருந்தது.

சமூக ஊடங்களில் "மீன்பிடிப்பதற்கான" நன்கு-வரையறுக்கப்பட்ட வழிமுறைகளையும் NYPD கொண்டுள்ளது, இதில் யாரையேனும் கண்காணிக்க வேண்டுமானால் ஒரு பொலிஸ் அதிகாரியே அவருடன் நண்பராகும் பொருட்டு ஒரு பொய் அடையாளத்தை ஏற்பதும் உண்டு.

பயங்கரவாதம் மற்றும் கும்பலான நடவடிக்கையைத் தடுப்பதற்காக என்பதே வெளியில் காட்டப்படும் இந்நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது. பொலிஸ் துறையின் வரலாறை, மற்றும் அந்நகரில் எழுந்துவரும் ஆழ்ந்த சமூக பதட்டங்களை எடுத்துப்பார்த்தால், NYPD அரசியல் அமைப்புகளின் ஒரு பரந்த வட்டாரங்களை உளவுபார்த்து வருகிறது என்பதற்கு அங்கே சிறிதும் சந்தேகம் இருக்காது.

குறைந்தபட்சம் ஒரு தசாப்தமாக, பொலிஸ் துறை மிகப்பெரிய அந்த நியூ யோர்க் நகர பகுதியில் முஸ்லீம் பிரஜைகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீது உளவுபார்க்கும் ஒரு நடைமுறையை நடத்தியுள்ளது. சட்டவிரோத பயங்கரவாத சதித்திட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்கும் விவகாரங்களில் தொடர்ந்து பொலிஸ் தகவலர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருந்த போதினும், NYPDஇன் உளவுவேலை எந்தவிதத்திலும் முஸ்லீம் சமூகத்துடன் மட்டுப்பட்டதல்ல. லோயர் மன்ஹட்டனில் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, நடவடிக்கையாளர்களை உளவுபார்த்து பல்வேறு அற்பமான விடயங்களுக்காக அல்லது வேறுவிதத்தில் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக பொலிஸ் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. போராட்டக்காரர்களை வீடியோ படமெடுத்தல் மற்றும் புகைப்படமெடுத்தல் ஆகியவற்றிற்கு கூடுதலாக, போராட்டங்களின் மையமாக இருந்த ஜூகோட்டி பூங்காவிலிருந்து வந்த ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகளையும் பொலிஸ் உன்னிப்பாக கண்காணித்தது.

அமெரிக்கா எங்கிலும் சமூக ஊடகங்கள் பொலிஸ் துறைகளால் நுணுகி ஆராயப்பட்டு வருகின்றன. பயனர்களைக் குறித்த ஆழ்ந்த விபரங்களை உருவாக்க பயனர்களது கருத்துக்கள், தொடர்புகள், தனிப்பட்ட சேர்க்கைகள், மற்றும் ஒப்புதல்கள் அல்லது "லைக்ஸ்" ஆகியவை பகுத்தராயப்பட்டு வருகின்றன. பொலிஸ் துறைகள் அவர்களது கட்டுப்பாட்டு வரம்புக்குட்பட்ட மக்களைக்க குறித்த தரவுகளைச் சேகரிப்பதற்காக சமூக ஊடகங்களை அலசிப்பார்க்க அது புதிய தொழில்நுட்பங்களையும் மற்றும் நடைமுறைகளையும் பயன்படுத்த தொடங்கி உள்ளது.

சான்றாக லோஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் துறை இலக்கில் வைக்கப்பட்ட குறிப்பிட்ட சிறிய குழுக்களிடமிருந்து அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வரும் சமூக ஊடக பதிவுகளைப் பின்தொடர ஜியோஃபீடியா (Geofeedia) என்றழைக்கப்படும் ஒரு சேவையைப் பயன்படுத்தி வருவதாக ராய்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

இந்த சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் பொலிஸால் ஒரே கட்டிடத்தில் அல்லது வளாகத்தில் இருந்து, அல்லது நெருங்கிய அருகாமையில் இருந்து—சான்றாக ஒரு போராட்டம் அல்லது கூட்டம் நடக்கும் பகுதிகளின் அருகாமையிலிருந்து—அப்போதைக்கு அப்போதைய சமூக ஊடக தரவுகளைக் கண்காணிக்க முடியும். இந்த ஜியோஃபீடியா சேவை சேகரிக்கப்பட்ட தரவுகளைக் காலவரம்பின்றி சேமித்து வைக்க அனுமதிக்கிறது.

மாசசூசெட்ஸ் லோவெலின் உள்ளூர் பொலிஸ் துறை அந்நகர எல்லையிலிருந்து சமூக ஊடங்களில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு கருத்தையும் கண்காணிக்கவும் மற்றும் பதிவு செய்யவும், அதற்கு வசதியை வழங்கும் வகையில் ஜியோபீடியா அல்லது அதேபோன்ற மற்றொரு சேவையான "Social Sentinel” என்றழைக்கப்படுவதைப் பெற ஆலோசித்து வருகிறது.

எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்களை அனுமானிப்பதற்காக, சூழ்நிலைக்கேற்ப சமூக உறவுகள் எவ்வாறு வளர்கிறது என்பதை கணிக்க வடிவமைக்கப்பட்ட பல நெறிமுறைகளின் (algorithms) அடிப்படையில் தரவுகளைக் குறுக்கீடு செய்துபெறும் வகையில், வலைப்பதிவுகள், செய்தி பிரசுரங்கள் மற்றும் சமூக ஊடங்களை அலசும் ஒரு வலைத்தள உளவுசேவையான Recorded Future என்றழைக்கப்படும் ஒரு சேவையை பயன்படுத்துவதற்கு அந்நாடு எங்கிலும் பல பொலிஸ் துறைகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.