சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Massive police mobilization against anti-austerity protest in Frankfurt, Germany

ஜேர்மனி பிராங்க்பேர்டில் சிக்கன-எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக பாரிய பொலிஸ் ஒன்றுதிரட்டல்

By Christoph Dreier and Alex Lantier
19 March 2015

Use this version to printSend feedback

ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது ஜேர்மன் பொலிஸ் புதனன்று ஒரு பாரிய ஒடுக்குமுறையைத் தொடங்கியது. பிராங்க்பேர்டில் நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில் 10,000 இல் இருந்து 20,000 வரையிலான மக்கள் பங்கெடுத்தனர். அது ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) புதிய தலைமையகம் திறப்புநாளுடன் சரியாக பொருந்தியிருந்தது.

39 ஐரோப்பிய நகரங்களில் இருந்து அறுபது பேருந்துகள் அந்த பேரணியில் கலந்து கொள்வதற்கு பிராங்க்பேர்டிற்கு வந்திருந்த. பேர்லினில் இருந்து வந்த ஒரு சிறப்பு ரயில் ஏறத்தாழ 900 ஆர்ப்பாட்டக்காரர்களை ஏற்றி வந்தது.

பாரியளவில் சுமார் 8,000 அதிகாரிகளை நிலைநிறுத்தி பொலிஸ் அதற்கு விடையிறுப்பு காட்டியது. இது பிராங்க்பேர்ட் பாதுகாப்பு படைகளின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒன்றுதிரட்டல் ஆகும். அவர்கள் 1.3 பில்லியன் யூரோ (1.4 பில்லியன் டாலர்) மதிப்பிலான அந்த புதிய ECB கட்டிடத்தை முற்றிலுமாக சுற்றி வளைத்து நின்றதோடு, முள்கம்பிகளையும் சுற்றி அமைத்து, அந்த ஒட்டுமொத்த நகரையுமே ஓர் உயர்-பாதுகாப்பு பகுதியாக மாற்றி இருந்தனர்.

அந்த போராட்டத்திற்கு முந்தைய நாள் இரவு பொலிஸ் அந்நகரம் முழுவதும் அடையாள சோதனைகளை மேற்கொண்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை ஏற்றி வந்த பல பேருந்துகள் நிறுத்தப்பட்டு பொலிஸால் சோதனையிடப்பட்டன.

ஆர்ப்பாட்ட பகுதிகளின் மத்திய இடத்திற்கு செல்லும் வழிகளில் போராட்டக்காரர்களின் குழுக்களுக்கு எதிராக பொலிஸ் கண்ணீர் புகைகுண்டுகள், நீர்பீய்ச்சிகள் மற்றும் ரப்பர் குண்டுகளைப் பிரயோகித்தது. போராட்டக்காரர்கள் பொலிஸ் கார்களுக்கு தீயிட்டதும், மோதல்கள் வெடித்தன. ஏற்பாட்டாளர்களின் கருத்துப்படி, குறைந்தபட்சம் 130 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர், அதேவேளையில் போராட்டக்காரர்களால் வீசப்பட்ட கற்களால் அல்லது அவர்களுடன் ஏற்பட்ட மோதல்களில் 15 அதிகாரிகளுக்கு காயமேற்பட்டதாக பொலிஸ் தெரிவித்தது.

பொலிஸ் பெருந்திரளான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது—ஒரு பெண் பொலிஸ் செய்தி தொடர்பாளரின் தகவல்படி, நண்பகல் வாக்கில் 350 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். Uhlandstraße இல், பெரும்பான்மையினர் இத்தாலியர்களான சுமார் 200 ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸ் சுற்றி வளைத்து, அவர்களது ஆவணங்களைச் சோதனையிட்டது. பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுற்றி வளைத்து மீண்டும் மீண்டும் மிளகு தூளைக் கொண்டு தாக்கியது.

மதியம் 2:00 இன் போது, அங்கே 47 எரிப்பு சம்பவங்கள் நடந்திருந்ததாக பிராங்க்பேர்ட் தீயணைத்துறை தெரிவித்தது. தீயணைப்பு வண்டிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.

ஐரோப்பாவில், குறிப்பாக கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற கடன்பட்ட தெற்கு ஐரோப்பிய யூரோ மண்டல நாடுகளில் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் ஐரோப்பிய மத்திய வங்கியின் முக்கிய பாத்திரத்தை எதிர்த்து, போராட்டக்காரர்கள் “ஐரோப்பிய நிதியியல் பாசிசம்" அல்லது "எல்லோரையும் விழுங்கவிடாதே" என்று எழுதிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நாடுகளின் உயர் கடன்நிலைமைகளைக் காட்டி, ஐரோப்பிய மத்திய வங்கி அந்நாடுகளின் வங்கிகளுக்கும் அரசாங்கங்களுக்கும் கடன் வழங்குவதை வெட்டியுள்ளது. அது ஒரு கடன்வழங்குமுறையை சிதைய செய்திருப்பதோடு, அவற்றை பிணையெடுப்புகளுக்கு விண்ணப்பிக்க நிர்பந்தித்துள்ளது. பிணையெடுப்புகளோ பத்து மில்லியன் கணக்கானவர்களை வறுமைக்குள் தள்ளியுள்ள சமூக திட்டங்களின் ஆழ்ந்த வெட்டுக்களுக்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இத்தகைய வெட்டுக்களை நிர்பந்திக்கும் அமைப்புகள்—அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை உள்ளடக்கிய "முக்கூட்டு" என்றழைக்கப்படுபவை—ஐரோப்பா எங்கிலும் பரந்தளவில் வெறுக்கப்படுகின்றன.

இதில் பங்கெடுப்பதும், முக்கூட்டின் கொள்கைகள் எங்களது பெயரில் நடத்தப்படக் கூடாது என்பதை எடுத்துக்காட்டுவதும் முக்கியமாகும்,” என்று 30 வயது நிரம்பிய ஒரு போராட்டக்காரர் தெரிவித்தார். “சோம்பேறி கிரேக்கர்கள் என்று அவர்களைக் குறிப்பிட்டு, அந்த ஏழை மக்களை விலையாக கொடுத்து தொடர்ந்து வெட்டுகளைச் செய்ய முடியாது, மாறாக நாம் அவர்களுடன் ஐக்கியப்பட்டு நிற்க வேண்டும்,” என்றார்.

ECB தலைவர் மரியோ திராஹி வெறும் 19 விருந்தினர்களுக்காக உரையாற்றியதுடன், அந்த வங்கியின் திறப்புவிழாவே ஒரு தோல்வியாக தெரிகிறது. ஹெசென் மாநில பொருளாதார மந்திரி பசுமை கட்சியின் தரீக் அல்-வஜிர் மற்றும் பிராங்க்பேர்டின் சமூக ஜனநாயக கட்சி மேயர் பீட்டர் ஃபெல்ட்மான், பெரிதும் ஊடக பிரதிநிதிகள் இல்லாதபோது பேசினர்.

மக்கள் மிகவும் கடினமான ஒரு காலத்தினூடாக சென்று கொண்டிருக்கிறார்கள்,” திராஹி அவரது உத்தியோகபூர்வ குறிப்புகளில் சாந்தமாக குறிப்பிட்டார். ஐரோப்பிய மத்திய வங்கி பொதுமக்களின் கோபத்திற்கு ஒரு "ஒருமுனைப்பு புள்ளியாக" மாறி உள்ளது என்று அவர் கூறினார். “அதுவொரு நல்ல மாற்றமல்ல—நமது நடவடிக்கை துல்லியமாக பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட அதிர்வுகளை மென்மையாக்க நோக்கம் கொண்டிருக்க வேண்டும்,” என்று திராஹி வாதிட்டார்.

நமது குடிமக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் மிகவும் கவனமாக காது கொடுத்து கேட்க வேண்டும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

திராஹியின் ஜனநாயக தோரணை பொய் மூட்டையாகும். உண்மையில் மக்கள் எதிர்ப்பை முழுமையாக எதிர்த்து சிக்கன நடவடிக்கைகளை இரக்கமின்றி தொடர்ந்து திணிப்பதே அவர்களது உள்நோக்கம் என்பதை ஐரோப்பிய அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கைகளை கிரீஸில் முடிவுக்குக் கொண்டு வரும் வாக்குறுதிகளின் அடிப்படையில் பிரச்சாரம் செய்த, போலி-இடது சிரிசா கட்சி தலைமையில் அந்நாட்டில் ஓர் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளைத் தொடர அவர்கள் நோக்கம் கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய சிக்கன முனைவின் தலைவர்களில் ஒருவரான ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி வொல்ஃகாங் சொய்பிள, அப்பட்டமாக தெரிவித்தார்: “தேர்தல்கள் ஒன்றையும் மாற்றப் போவதில்லை... அங்கே ஐரோப்பிய உடன்படிக்கைகளுக்கு எதிராக எந்த ஜனநாயக விருப்பதெரிவுகளும் கிடையாது,” என்றார்.

சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதே ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கட்டளைகளுக்கு எதிராக போராடுவதற்கான ஒரே முன்னோக்கிய வழியாக உள்ளது. ஒரு முதலாளித்துவ நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் திவாலாகிப் போனதை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன முறையீடுகளுக்கு சிரிசா மானக்கேடாக மண்டியிட்டதன் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் பிரச்சாரம் செய்து, ஜனவரி தேர்தலில் வெற்றி அடைந்த பின்னர் வெகு விரைவிலேயே, சிரிசா ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய அமைப்புகளுடன் கிரீஸின் புதிய சமூக வெட்டுக்களைப் பேரம்பேச அது தயாராக இருப்பதை அறிவித்தது.

பிராங்க்பேர்ட் போராட்டம் ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதிலும் சிக்கன நடவடிக்கைக்கு பரந்த எதிர்ப்பை பிரதிபலிக்கின்ற போதினும், அந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் முன்னோக்கு எந்தவித முன்னோக்கிய பாதையையும் வழங்கவில்லை என்பதுடன், உண்மையில் அது சிக்கன நடவடிக்கைக்கு எதிராகவும் இருக்கவில்லை.

அந்த ஆர்ப்பாட்டம், 2012இல் ஸ்தாபிக்கப்பட்ட "Blockupy Alliance” அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொழிற்சங்கங்களும், பூகோளமயமாக்கல் விரோத அற்றாக் இயக்கம் போன்ற போலி-இடது குழுக்களும் மற்றும் ஜேர்மன் இடது கட்சியும் உள்ளடங்கி உள்ளன. அது கிரீஸில் சிரிசாவால் மற்றும் ஸ்பெயினின் கூட்டாளி பெடெமோஸ் கட்சியாலும் ஆதரிக்கப்பட்டது.

பெடெமோஸ் மற்றும் இடது கட்சி இரண்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து திணிக்க, ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிரிசாவின் உடன்பாடுகளை பாராட்டி உள்ளன. கிரீஸின் சமூக சீரழிவுகளுக்குப் பொறுப்பானதும் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியை சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து திணிக்க அனுமதிப்பதும் ஆன, ஐரோப்பிய ஒன்றிய தலைமையிலான கிரீஸிற்கான நிதியியல் பிணையெடுப்பின் ஒரு விரிவாக்கத்திற்கு ஆதரவாக, பெப்ரவரி 27 அன்று, முதல்முறையாக, ஜேர்மன் இடது கட்சி வாக்களித்தது.

நாடாளுமன்றத்தின் இடது கட்சி கன்னையின் துணை தலைவர் Sahra Wagenknecht, ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்தவர்களின் முன்னோக்கைத் தொகுத்தளித்தார். “ஐரோப்பிய மத்திய வங்கி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஒரு நிலையான வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று, மத்தியதர வர்க்கத்தின் சேமிப்பை பயன்படுத்தாமல், புதிய ஊக குமிழிகளை உருவாக்காமல் அல்லது ஓர் உலகளாவிய செலாவணி போருக்கு எரியூட்டாமல் பணச்சுருக்கத்தை எதிர்கொள்ளும்,” என்று அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் Wagenknecht தெரிவித்தார்.

இடது கட்சி மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள, சிரிசா உள்ளடங்கலாக, அதன் கூட்டாளிகள், ஐரோப்பிய மத்திய வங்கி போன்ற யூரோ மண்டல அமைப்புகளின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையில், தந்திரோபாய மாற்றங்களைப் பெறுவதற்காக மட்டுமே முயன்று வருகின்றன. சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதன் மீதான அதன் வாக்குறுதிகளில் இருந்து சிரிசாவின் திடீர் மறுத்தளிப்பு தெளிவுபடுத்துவதைப் போல, இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முட்டுச்சந்தாகும்.