சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

The conflict over the China-backed Asian investment bank

சீனா-ஆதரவு ஆசிய முதலீட்டு வங்கி மீதான முரண்பாடு

By Nick Beams
19 March 2015

Use this version to printSend feedback

50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா-ஆதரவு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) சேர பிரதான ஐரோப்பிய சக்திகள் எடுத்த முடிவு, அமெரிக்காவிற்கு ஒரு பலத்த அடியாகும். ஆழமடைந்துவரும் உலகளாவிய மந்தநிலைக்கு இடையே, ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் அவற்றின் தன்னிச்சையான நலன்களை முன்னெடுக்கின்ற நிலையில், எதன் மூலமாக அமெரிக்கா அதன் மேலாளுமையைப் பலப்படுத்தியதோ அந்த பொருளாதார இயங்குமுறைகள் உடைந்து வருகின்றன என்பதற்கு இதுவொரு தெளிவான அறிகுறியாகும்.

பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த வங்கியின் ஒரு ஸ்தாபக உறுப்பினராக ஆகும் என்று கடந்த வியாழனன்று அதன் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அறிவித்தபோது முதல் அடி விழுந்தது. சீனாவுடன் "நிலையாக இடமளிப்பதை நோக்கிய ஒரு போக்கு" “மேலெழுந்து வரும் அதிகாரத்தைக் கையாள்வதற்குரிய ஒரு சிறந்த வழி அல்ல" என்று கண்டித்ததன் மூலமாக ஒரு பெயர் வெளியிடாத வெள்ளை மாளிகை அதிகாரி விடையிறுத்தார்.

பிரிட்டனின் நடவடிக்கைக்கு அமெரிக்காவின் எதிர்ப்பு பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு கருத்துரையால் அடிகோடிடப்பட்டது. அது குறிப்பிடுகையில், இராஜாங்க கண்டனங்களின் அகராதியில் "இடமளிப்பது" (accommodation) என்பது "சமாதானப்படுத்துவது" (appeasement) என்பதற்கு ஒரேயொரு படி கீழே உள்ளது என்று குறிப்பிட்டது.

எவ்வாறிருப்பினும் பிரிட்டனின் முடிவைத் தொடர்ந்து ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியும் அவ்வங்கியின் ஸ்தாபக உறுப்பினராக விரும்புவதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் எதிர்ப்பு எதையும் தடுத்துவிடாதென நிரூபித்தது.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஆழ்ந்த எதிர்ப்புக்குப் பின்னர் கையெழுத்திட மறுத்திருந்த ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளும், அவற்றின் நிலைப்பாடுகளை செயலூக்கத்துடன் மறுபரிசீலனை செய்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் நிதித்துறை செயலர் ஜேக் லெவ் ஆகியோரின் தலையீடுகளுக்குப் பின்னர், கடந்த அக்டோபரில், ஆஸ்திரேலிய அரசாங்கம் அவ்வங்கியை ஆதரிப்பதென்ற அதன் முந்தைய முடிவை மாற்றிக் கொண்டது. ஆனால் இப்போது ஆஸ்திரேலியா அதன் பங்களிப்பை அறிவிக்கும் விளிம்பில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸிற்கு அவர் வழங்கிய கருத்துக்களில், லெவ் குறிப்பிடுகையில், அமெரிக்கா மேலாளுமை செலுத்தும் உலக வங்கிக்கும் மற்றும் அதன் கூட்டாளி ஜப்பான் தலைமையிலான ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் எதிர்விரோதமாக பார்க்கப்படுகின்ற அவ்வங்கி (AIIB) மீதான வாஷிங்டனின் பிரதான கவலை, அது "சர்வதேச நிதியியல் அமைப்புகள் அபிவிருத்தி செய்துள்ள உயர்தர நெறிமுறைகளைக் கடைபிடிக்குமா", தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலின் உரிமைகளைப் பாதுகாக்குமா மற்றும் "ஊழல் விவகாரங்களை உரிய முறையில் கையாளுமா" என்பதனால் உந்தப்பட்டுள்ளது என்றார்.

அமெரிக்க நிதியியல் ஸ்தாபகத்தின் ஒரு பிரதிநிதியிடமிருந்து, ஊழல் குறித்த கவலை வெளிப்படுவது, முக்கியமாக போலித்தனமாக உள்ளது. லெவ் சிட்டிகுழுமத்தில் ஒரு உயர்மட்ட பதவி வகித்தவராவார். 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியை வேகப்படுத்தியதில் ஒரு பிரதான பாத்திரம் வகித்த, குற்றகரமான நடவடிக்கைக்கு உரிய ஒன்றில், முன்னணி அமெரிக்க வங்கிகளும் மற்றும் முதலீட்டு அமைப்புகளும் ஈடுபட்டிருந்ததை 2011 அமெரிக்க செனட் அறிக்கை ஒன்று கண்டறிந்திருந்தது. இதே இது, சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்களது உரிமைகள் மீதான பாசாங்குத்தனமான கவலைகளுக்கும் பொருந்துகிறது.

சீனா-ஆதரவிலான AIIB ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க பொருளாதார மேலாளுமையை பலவீனப்படுத்தும் என்பதோடு, “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" கட்டமைப்பிற்குள் தொடர்ந்து இராணுவ மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைக்கும் அதன் உந்துதலுக்கும் குழிபறிக்கும் என்பதே அமெரிக்க எதிர்ப்பிற்கான நிஜமான நோக்கமாகும். துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே உட்பட அவ்வங்கியால் நிதியுதவி வழங்கப்படும் உள்கட்டமைப்பு திட்டங்கள் சீனாவின் இராணுவ மற்றும் மூலோபாய அந்தஸ்தை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும் என்ற அடித்தளத்தில் அது ஆஸ்திரேலிய பங்கெடுப்பை எதிர்த்தது.

அமெரிக்கா எதையுமே பிரதியீடாக திருப்பித்தர இயலாமல் அல்லது விருப்பமில்லாமல் இருக்கின்ற நிலையில், அமெரிக்க மூலோபாய உள்நோக்கங்களுக்குப் பின்னால் அணிதிரள்வதற்காக ஏன் தங்களது மதிப்பார்ந்த பொருளாதார வாய்ப்புகளை தியாகம் செய்ய வேண்டுமென்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லையென ஐரோப்பிய சக்திகள் தெளிவாக முடிவு செய்துவிட்டன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான விரிசல் பிரிட்டனின் மக்களவை வெளியுறவு விவகார குழுவின் தலைவர் ரிச்சார்ட் ஒட்டாவேயின் ஒரு கருத்துரையில் தொகுத்தளிக்கப்பட்டது. பிரிட்டனும் ஐரோப்பாவும் அமெரிக்கா தரப்பிலிருந்து சீனாவை வேறுவிதத்தில் பார்த்தன என்ற உண்மை, அந்த வங்கி மீதான முரண்பாட்டில் பிரதிபலித்தது என்று தெரிவித்தார். “அமெரிக்கா சீனாவைபசிபிக்கின் ஒரு கடல்சார் சக்தியாகமூலோபாய வழியில் பார்க்கிறது. ஐரோப்பியர்களோ சீனாவை வர்த்தக வரையறைகளில் பார்க்கின்றனர்.”

பிரிட்டிஷ் பொருளாதாரம் அதன் பிரதான வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் ஊக வணிக மற்றும் ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கைகள் மீது மேலதிகமாக சார்ந்துள்ள நிலையில், சீன செலாவணி ரென்மின்பியின் பொருளாதார மற்றும் நிதியியல் பலம் அதிகரித்து வருவதால், அதன் உலகளாவிய பாத்திரம் உயர்வதிலிருந்து இலாபமீட்ட இலண்டன் நகருக்கு மற்றொரு வாய்ப்பாக AIIB இல் பங்கெடுப்பது பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் அழுத்தம் வேறுவிதத்தில் இருக்கின்ற அதேவேளையில், ஏனைய ஐரோப்பிய சக்திகளின் பொருளாதார உள்நோக்கங்களும் சற்றும் சக்தி குறைந்ததல்ல. அவை ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் சொய்பிளவினால் பேர்லினில் செவ்வாயன்று சீன துணை பிரதமர் Ma Kai உடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில் உச்சரிக்கப்பட்டது. “நாம் ஆசிய பொருளாதாரத்தின் நேர்மறையான அபிவிருத்திக்கு ஒரு பங்களிப்பு செய்ய விரும்புகிறோம், அதில் ஜேர்மன் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக பங்கெடுத்து வருகின்றன,” என்றார்.

கடந்த 25 ஆண்டுகால அமெரிக்க மூலோபாய நோக்கங்களின் கட்டமைப்பிற்குள் நிறுத்தினால், அந்த முரண்பாட்டின் முக்கியத்துவம் மிகத் தெளிவாக தெரிகிறது. 1991 சோவியத் ஒன்றியத்தின் பொறிவை அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலைத் தொடர ஒரு சந்தர்ப்பமாக பார்த்ததுஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ் அவரது ஜனாதிபதி பதவிகாலத்தில் கூறியதைப் போல, ஒரு "புதிய உலக ஒழுங்கமைப்பை" வடிவமைப்பதற்காக இருந்தது.

இந்த புதிய ஒழுங்கமைப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தால் குணாம்சப்பட்டிருந்தது. உலகின் எந்தவொரு முக்கிய பிராந்தியத்திலும் எந்தவொரு சக்தியோ அல்லது சக்திகளின் குழுவோ மேலாதிக்கத்தை ஏற்பதிலிருந்து தடுப்பதே அமெரிக்க கொள்கையின் நோக்கமாகும் என்று அறிவித்து, 1992 இல், சோவியத்திற்குப் பிந்தைய உலகில் பெண்டகன் அதன் மூலோபாய நோக்கங்களை வெளியிட்டது.

இந்த மூலோபாயம் தான், 1997-98 ஆசிய நிதியியல் நெருக்கடியின் போது அமெரிக்க கொள்கைகளின் அடித்தளமாக இருந்தது. அந்த கொந்தளிப்பில் சிக்கிக் கொண்ட நாடுகளுக்கு பிணையளித்து உதவ 100 பில்லியன் டாலர் நிதியுதவியுடன் ஜப்பான் ஒரு முன்மொழிவைக் கொண்டு வந்தபோது, அது அமெரிக்காவினால் வீட்டோ அதிகாரம் கொண்டு தடுக்கப்பட்டது. வாஷிங்டனை மையமாக கொண்ட சர்வதேச நாணய நிதியமே அப்பிராந்தியம் எங்கிலும் "பொருளாதார மறுசீரமைப்பை" வழிநடத்த வேண்டுமென அது வலியுறுத்தியது. அமெரிக்காவுடன் ஒரு முகத்திற்கு நேரான மோதலை முகங்கொடுத்த ஜப்பான், பின்வாங்கி கொண்டது.

உலகளாவிய மேலாதிக்க தலைமையாக அதன் இடத்தைப் பேணுவதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நிர்ணயம், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய அந்தஸ்தில் ஏற்பட்ட தசாப்தகால நீண்ட வீழ்ச்சியால் மோதலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது. இதற்கு விடையிறுப்பாக, பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டுக்கள், இராணுவ படையைப் பிரயோகிக்க முன்பினும் பெரியளவில் அடாவடித்தனத்தின் மீது தங்கி உள்ளன.

ஆசிய நெருக்கடிக்குப் பின்னரில் இருந்து காலாகாலமாக சீனாவின் வெடிப்பார்ந்த பொருளாதார விரிவாக்கம், யார் ஆசியாவில் மேலாதிக்கம் செலுத்துவது? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பி உள்ளது.

ஏழு தசாப்தங்களுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இரண்டையும் ஸ்தாபித்து, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பிற்கு அமெரிக்கா அடித்தளமிட்டபோது, அது உலகளாவிய முதலாளித்துவத்தின் எதிர்ப்பில்லாத பொருளாதார மேலாதிக்க தலைமையாக விளங்கியது. ஆனால் விடயம் இப்போது அவ்வாறு இல்லை, மேலும் குறிப்பாக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் அவற்றின் நலன்களை வலியுறுத்தி வருகின்றன. உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருகின்ற நிலையில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைய மட்டுமே செய்யும்.

பிரத்யேகமாக முன்கணிப்புகளைச் செய்வது சாத்தியமில்லை என்றபோதினும், அபிவிருத்தியின் பொதுவான போக்கு தெளிவாக உள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் எதை "அதன் நெருக்கமான கூட்டாளிகளில் சிலவற்றிடம் இருந்து கடுமையான நிராகரிப்பாக" வர்ணித்ததோ, அமெரிக்கா அதனால் பாதிகப்பட்டுள்ளது. அது எவ்வாறு விடையிறுக்கும்? பொருளாதார விட்டுக்கொடுப்புகள் மூலமாக அல்ல, ஏனென்றால் இப்போது அதனிடம் செலவிட பணமும் இல்லை, அவற்றை உருவாக்குவதற்கான தகைமையும் இல்லை, மாறாக அது அதிகரித்த அரசியல் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்கள் மூலமாகவே விடையிறுக்கும்.

அதே நேரத்தில், ஏனைய பிரதான சக்திகளோ அவற்றின் பொருளாதார நோக்கங்களை பின்தொடர்வதற்கு அவற்றின் இராணுவ தகைமைகளை விரிவாக்குவது அவசியமென்ற முடிவுக்கு வர அவை நிர்பந்திக்கப்படும். AIIB மீதான முரண்பாடு, வெடிப்பார்ந்த அரசியல் மற்றும் இராணுவ விளைவுகளைக் கொண்டிருக்கும், பிரதான புவிசார்-பொருளாதார மாற்றங்களுக்கு ஓர் அறிகுறியாகும்.