சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

New defeat for Socialist Party as neo-fascists rise in French local elections

பிரெஞ்சு உள்ளாட்சி தேர்தல்களில் நவ-பாசிசவாதிகள் வெற்றியடைகையில் சோசலிஸ்ட் கட்சிக்கு புதிய தோல்வி

By Antoine Lerougetel
24 March 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று நடந்த பிரான்சின் முதல் சுற்று பிராந்திய தேர்தல்களில் ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS) பெற்ற 21.85 சதவீத வாக்குகள், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் PS அரசாங்கத்திற்கும், அதன் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் கொள்கைகளுக்கும் வழங்கப்பட்ட ஒரு கடுமையான கண்டனமாகும். வாக்களிக்காதோர் விகிதம் 50.17 சதவீதமாக இருந்தது போலவே, மரீன் லு பென்னின் (FN) நவ-பாசிசவாத தேசிய முன்னணிக்கு கிடைத்த 25.19 சதவீத வாக்குபதிவும் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் திவால்நிலைமையை மற்றும் பெருந்திரளான உழைக்கும் மக்களின் பரந்த பிரிவினரிமிருந்து அது அன்னியப்பட்டு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

மத்திய-வலது ஜனநாயகவாதிகள் மற்றும் சுயேட்சைகளின் சங்கத்துடன் (UDI) கூட்டணி சேர்ந்திருந்த முன்னாள் பழமைவாத ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் மக்கள் இயக்கத்திற்கான யூனியன் (UMP), 29.4 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டின் நகரசபை மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் பெற்றதைப் போலவே, முதல் சுற்றுக்குப் பின்னர் மீண்டும் முன்னணி வகிக்கலாம் என்ற FN இன் நம்பிக்கைக்கு இது ஏமாற்றமளித்துள்ளது. UMP மற்றும் அதனுடன் இணைந்த பழமைவாத கட்சிகள் மொத்தமாக 36 சதவீத வாக்குகளை பெற்றன.

எவ்வாறாயினும் உள்ளாட்சி தேர்தல்களில் பங்கெடுத்ததன் மூலமாக, FN, முன்னதாக அதன் பிரசன்னம் இல்லாத பல பகுதிகள் உட்பட பிரான்ஸ் முழுவதும் தன்னைத்தானே ஸ்தாபித்துக் கொள்ளும் அதன் நோக்கத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்குரிய 98 பிராந்தியங்களில் FN 43 இல் முன்னணியில் உள்ளது, அத்துடன் அது நிர்வாக மட்டத்தில் பிராந்தியங்களுக்கு கீழே இருக்கும் பிரான்சின் 2,054 உள்ளாட்சிகளில் (cantons) 1,100 இல் இரண்டாம் சுற்றில் பங்குபற்றும். Vaucluse, Gard, மற்றும் Aisne பிராந்தியங்களின் மாவட்ட சபைககளில் (conseils départementaux), அதுவும் முன்னர் PS இன் ஆதிக்கத்திலிருந்த Pas-de-Calais மாவட்ட சபைகளிலும் கூட பெரும்பான்மையை பெறுமென அது நம்ப முடியும்.

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), பசுமை கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலென்சோன் போன்ற சோசலிஸ்ட் கட்சியின் நீண்டகால அரசியல் கூட்டுக்களின் வாக்குகளுடன் சேர்ந்து சோசலிஸ்ட் கட்சியின் வாக்குகள் மொத்தமாக 36 சதவீதமாக இருந்தது. இது சோசலிஸ்ட் கட்சியின் மீதும், தனிப்பட்டரீதியில் ஹோலாண்ட் மீதும் நிலவும் ஆழ்ந்த அதிருப்திக்கு சான்று பகிர்கிறது. இத்தகைய அதன் நீண்டகால பாதுகாவலர்களின் வரிசையிலிருந்தவரகள் கூட சில குறிப்பிட இடங்களில் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து போட்டியிட நிர்பந்திக்கப்பட்டிருந்தன.

எவ்வாறிருந்த போதினும், ஏனைய இடங்களில் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு அவை ஒரு மாற்றீட்டை பிரதிநிதித்துவம் செய்வதாக பாசாங்குத்தனமாக பொய்யுரைத்துக் கொண்ட போதும், சோசலிஸ்ட் கட்சியுடன் ஒருங்கிணைந்தே போட்டியிட்டன. சோசலிச கட்சியுடன் மட்டுமின்றி, அதன் கூட்டினர் மீதும் ஆழமாக அவநம்பிக்கை கொண்டுள்ள உழைக்கும் மக்கள் மீது இந்த பாசாங்குத்தனம் மிகச் சிறியளவே மேலாதிக்கத்தையே செலுத்தியிருந்தது.

மாவட்ட சபைகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் உள்ளாட்சிகளில் நடக்கும் இரண்டாம் சுற்று தேர்தல்கள், ஞாயிறன்று நடைபெறும். “அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி வெற்றி பெறுவதைத் தடுக்க" UMP உடன் ஐக்கியப்படுமாறு சோசலிஸ்ட் கட்சி தலைவர் கம்படெலிஸ் அழைப்புவிடுத்துள்ளார், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் பியர் லோரன்டும் அவ்வாறு செய்தார்.

பிராந்தியத்தின் உள்ளிருக்கும் ஒவ்வொரு உள்ளாட்சியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை உள்ளடக்கிய ஒரு ஜோடியை மாவட்ட சபைகளுக்கு தேர்ந்தெடுக்கிறது. அவர்கள் வெவ்வேறு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஒரு ஜோடி குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகள் பெற்றால், அது முதல் சுற்றிலேயே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. இல்லையென்றால், அதிக வாக்குகள் பெற்ற இரண்டு ஜோடிகள் இரண்டாம் சுற்று போட்டிக்கு நகர்கின்றன. அவற்றுடன் மொத்த வாக்காளர்களில் 12.5 சதவீத எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்ற எந்தவொரு ஜோடிகளும் போட்டியிடும். இதன் பொருள் என்னவென்றால் உண்மையில் 50 சதவீத வாக்காளர்களே வாக்குபதிவு செய்துள்ளனர் என்றால் அவர்களுக்கு 25 சதவீத வாக்குகள் தேவைப்படும்.

இந்த அடிப்படையில் சோசலிஸ்ட் கட்சி 524 உள்ளூராட்சிகளில் இருந்து, அதாவது மொத்த எண்ணிக்கையில் ஒரு கால் பகுதி இடங்களிலிருந்து, வெளியேறியது. அது தற்போது நிர்வகித்து வரும் 61 பிராந்தியங்களில் சுமார் 20 இல் மட்டுமே வெற்றி பெறுவதற்காக போட்டியிடுகிறது. வரலாற்றுரீதியில் அதன் பலமான இடங்களாக இருந்த சுமார் 15ஐ அது இழந்துள்ளது. அதில் Nord, Pas de Calais, மற்றும் Seine-et-Marne ஆகியவையும் அதில் உள்ளடங்கும்.

வரவிருக்கும் மாவட்ட சபைகள் (conseils départementaux), அவற்றின் அரசியல் வர்ணங்கள் என்னவாக இருந்தாலும், வரவிருக்கும் காலத்தில் பாரிய வெட்டுக்களை திணிக்க உள்ளன. தேசிய அளவில் சோசலிஸ்ட் கட்சியால் திணிக்கப்பட்ட வரவு-செலவு திட்ட வெட்டுக்களின் காரணமாக, உள்ளூர் அரசாங்களுக்கான அரசு மானியங்களில் சுமார் 11 பில்லியன் யூரோ (12 பில்லியன் அமெரிக்க டாலர்) அகற்றப்பட உள்ளன. இது ஆயிரக் கணக்கான கட்டுமானத்துறை மற்றும் மருத்துவத்துறை தொழிலாளர்களின் வேலைநீக்கங்கள் உட்பட, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார பராமரிப்பின் மீது ஒரு பேரழிவுகரமான தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

சோசலிஸ்ட் கட்சியிடமிருந்தும், அதன் அரசியல் மற்றும் தொழிற்சங்க ஆதரவாளர்களிடமிருந்தும் தொழிலாளர்களை பிரிக்கும் வர்க்க பிளவை இந்த தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. இந்த சக்திகள் பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் பத்து பில்லியன் யூரோ சமூக செலவின வெட்டுக்கள் உட்பட சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சிக்கன நிகழ்ச்சிநிரல் மீது தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பை ஒடுக்க தொடர்ந்து வேலை செய்துள்ளன. தொழிலாள வர்க்கத்தின் மீதான இந்த அரசியல் ஒடுக்குமுறை தான் தேசிய முன்னணியை ஒரே எதிர்ப்பு சக்தியாக காட்டிக்கொண்டு, சோசலிஸ்ட் கட்சியின் கடந்தகாலத்தை வீராவேச வார்த்தைஜாலங்களுடன் விமர்சித்தும் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத பேரினவாதத்திற்கு அழைப்புவிட்டும், வளர்ச்சி அடைவதற்கு அனுமதிக்கிறது.

தேசிய முன்னணி முதல் இடத்திற்கு வர முடியாமல் போனதால் அவர்கள் நிம்மதி அடைந்திருப்பதாக வாதிட்டு சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அந்த தோல்வியின் மீதுஅதாவது, பழமைவாத UMP முதல் இடத்தைப் பெற்றிருப்பதன் மீதுபெருமைபட்டுக் கொள்ள முனைந்தனர்.

தீவிர வலது பிரான்சில் முன்னணி அரசியல் அமைப்பு அல்ல நான் அதற்காக பெருமைப்படுகிறேன், ஏனென்றால் நான் தனிப்பட்டரீதியில் அதற்காக கடுமையாக போராடினேன்,” இது வால்ஸ் அறிவித்தது. தேர்தல் முடிவுகளைச் செவியுற்றதும், அவர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அதை கொண்டாடியதாக ஊடகங்களுக்கு அவரது அலுவலகம் தகவல் அனுப்பியது.

அவரது கட்சிக்கு ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதற்கு இடையிலும் வெற்றியென வால்ஸ் கூக்குரலிடுவது பொருத்தமற்றுள்ளது. தேசிய முன்னணிக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தை அவர் நடத்தி வந்துள்ளதாக கூறப்படும் வாதமே ஒரு மோசடியாகும். பிரான்சில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் ஆளும்பிரிவும்அதாவது தேசிய முன்னணிக்கு ஒரு தடையாக வால்ஸ் பார்க்கும் UMP, அதுமட்டுமின்றி சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் போலி-இடது கட்சிகளும்முன்பினும் கூடுதலாக வலதுசாரி, சட்டம் ஒழுங்கு மற்றும் சர்வாதிபத்திய கருத்துருக்களை ஊக்குவித்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாட்களில், சார்க்கோசி, தேசிய முன்னணியால் தீட்டப்பட்ட இனவாத கருப்பொருட்களையே ஏற்று, வலதை நோக்கி ஒரு கூர்மையான திருப்பம் எடுத்தார். “தேசிய முன்னுரிமை" என்ற தேசிய முன்னணியின் (FN) இனவாத அழைப்பிற்கு ஒத்த வகையில், குழந்தைகளின் மத நம்பிக்கைகளை மதிக்க என்று, கோஷர் அல்லது ஹலால் உணவு வகைகள் போன்ற மாற்று உணவுகளுக்கு அவர் தடை விதிக்க அழைப்புவிடுத்ததுடன், புலம்பெயர்ந்தவர்கள் மீது ஓர் ஒடுக்குமுறைக்கும் அழைப்புவிடுத்தார்.

அவரது பதவி காலத்திற்கு பின்னர் ஒரு மதிப்பிழந்த ஜனாதிபதியாக 2012 இல் பதவியிலிருந்து வெளியேற வாக்களிக்கப்பட்ட சார்க்கோசி, UMP இன் உட்பூசல் கன்னைகளை ஒருங்கிணைத்து நிறுத்த போராடி வருகிறார். அவற்றில் பல தேசிய முன்னணி உடன் கூட்டணி அமைப்பதை ஆதரித்து வருகின்றன.

சோசலிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில், அது பர்க்கா மீதான தடைகள் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் முஸ்லீம்களது முக்காடு மீதான தடைகளை அங்கீகரித்துள்ளதுடன், அது, PCF மற்றும் போலி-இடது கட்சியின் ஆதரவுடன் ரோமா இனத்தவரின் பாரிய வெளியேற்றங்களை நடத்தி, அவ்விதத்தில் தேசிய முன்னணிக்கு சட்டபூர்வத்தன்மை கிடைக்க உதவியுள்ளது. இத்தகைய சக்திகளோ இப்போது அதைச் சுற்றித்தான் வட்டமிட்டுக்கொண்டு, சோசலிஸ்ட் கட்சி முகங்கொடுக்கும் தேர்தல் படுதோல்வியை குறைத்துக் காட்ட முனைந்துள்ளன.

சில நேரங்களில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஓர் எதிர்ப்பாளராக காட்டிக் கொள்ளும், ஒரு சோசலிஸ்ட் கட்சியினது "கிளர்ச்சி" கன்னையின் (frondeur) தலைவர் பெனுவா அமோன், “இடதை ஐக்கியப்படுத்துங்கள்" என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.

ஸ்ராலினிச நாளிதழ் L’Humanité இல் பாட்ரிக் அப்பெல்-முல்லர் கூறுகையில், சோசலிஸ்ட் கட்சி "கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை" அளித்திருந்தது, “இருந்தும் அவை துயரகரமாக காட்டிக்கொடுக்கப்பட்டன,” என்று கூறியதோடு, “ஆளும் இருவரும் [ஹோலாண்டும் வால்ஸூம்] இந்த செய்திகளுக்கு காது கொடுக்காமல் இருக்கமுடியாது" எனவே சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைகள் ஒரு மாற்றம் எடுக்கும் வரை காத்திருக்குமாறு அவரது வாசகர்களை ஊக்குவித்தார்.

உண்மையில், “அடுத்த ஞாயிறன்று இரண்டாம் சுற்று முடிவு என்னவாக இருந்தாலும் சரி", சோசலிஸ்ட் கட்சி அதன் மக்களுக்கு விரோதமான கொள்கைகளை தொடருமென வால்ஸ் ஆணவத்தோடு வலியுறுத்தி உள்ளார்.