சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Growing warnings of another financial disaster

புதிய நிதியியல் பேரழிவு பற்றிய அதிகரித்துவரும் எச்சரிக்கைகள்

Nick Beams
25 March 2015

Use this version to printSend feedback

உலக நிதியியல் சந்தைகள், செப்டம்பர் 2008 பொறிவை விட இன்னும் அதிக மோசமான விளைவுகளைக் கொண்ட மற்றொரு உடைவின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. தற்போதைய நிதிய கொள்கைகள், பேரழிவுகரமான விளைவுகளோடு பாரிய நிதியியல் குமிழிகளை உருவாக்கி உள்ளதாக ஆளும் வர்க்கத்திற்குள் இருந்தே தொடர்ந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்தவாறு உள்ளன.

பைனான்சியல் டைம்ஸிற்கு அளித்த ஒரு நேர்காணலில், செயிண்ட் லூயிஸ் ரிசர்வ் வங்கி தலைவரும், தடையற்ற சந்தைக்கான மத்திய குழுவின் (Federal Open Market Committee) ஒரு வாக்குரிமையில்லா உறுப்பினருமான ஜேம்ஸ் புல்லர்ட் கூறுகையில், பெடரல் எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு உடனடியாக வழமையாக்கும் வட்டிவிகித கொள்கையை தொடங்க வேண்டி உள்ளதென தெரிவித்தார். தற்போதைய பூஜ்ஜியத்திற்கு அண்மித்த விகிதத்தைத் தொடர்வதென்பது ஒரு சொத்து விலை குமிழியை ஊதிப் பெருக்க செய்யும் என்பதோடு, அது "கட்டுப்பாட்டை மீறி வெடித்துவிடக்கூடும்."

புல்லர்டும் ஏனையவர்களும், தற்போது வெளிப்படையான உண்மையாக மாறியுள்ள மத்திய வங்கியின் பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கையின் (quantitative easing) மற்றும் வட்டி விகித குறைப்புகளின் ஒருங்கிணைந்த தாக்கங்கள், உலகளாவிய பங்கு விலை-நிர்ணய சந்தைகள் மற்றும் பத்திர சந்தைகளுக்கு வெறித்தனமாக தீனிபோட்டு வருகின்றன என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

அமெரிக்க கருவூலத்துறையுடன் இணைந்த நிதியியல் ஆய்வு அலுவலகத்திலிருந்து கடந்த வாரம் வந்த எஸ்&பி 500 குறியீடு பற்றிய ஒரு பகுப்பாய்வு, அமெரிக்க பங்குச்சந்தையானது 1929, 2000 மற்றும் 2007இல் பார்த்த வகையிலான ஒத்த ஒரு சூழலில் நுழைந்துள்ளதாக முடிவுக்கு வந்தது. அதாவது, ஒரு பொறிவு என்றில்லையென்றாலும், ஒரு பெரும் நிலைமுறிவு அச்சுறுத்துகின்றது. Quicksilver Markets (பாதரச சந்தைகள்) என்று தலைப்பிட்ட அவரது அறிக்கையில் அந்த கட்டுரையாளர் குறிப்பிடுகையில், குவிக்சில்வர் சந்தைகள் விரைவிலேயே அமைதியான நிலையிலிருந்து கொந்தளிக்கும் நிலைக்கு திரும்பக்கூடும், என்றார்.

எல்லா பிரதான முதலீட்டாளர்களும் ஊக வணிகர்களும், அனைவருமே அடிப்படையில் ஒரேமாதிரியான நிதியியல் வடிவமைப்பில் தான் செயல்படுகிறார்கள் என்ற நிலையில், அங்கே வாங்குபவர்கள் இல்லை என்று கண்டுகொள்ளும் போது, ஒரேநேரத்தில் அவ்வாறான நடவடிக்கையிலிருந்து வெளியேற முயன்றால், அங்கே ஒரு "பணப்பரிமாற்ற முறிவு" (liquidity crunch) ஏற்படுமென்ற அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

செவ்வாயன்று பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஓர் அறிக்கையின்படி, நிலையான வருவாய் சந்தைகளின் [அதாவது பத்திர சந்தைகளின்] கட்டமைப்பு மீது அங்கே அதுபோன்ற பரவலான கவலை, ஆகஸ்ட் 2007 இல் பணச் சந்தைகள் உறைந்து போன பின்னரில் இருந்தோ அல்லது செப்டம்பர் 2008 இல் லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவுக்கு பின்னரில் இருந்தோ மட்டும் இருக்கவில்லை" என்று சில நிதி மேலாளர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய வங்கிகளின் குறைந்த வட்டிவிகித முறையால் வழங்கப்பட்ட மலிவு பணத்தை முதலீட்டாளர்கள் "விழுங்கியுள்ள" நிலையில், பத்திரங்களின் விலைகள் கணிசமான அளவிற்கு உயர்ந்திருப்பதாக எச்சரித்த அந்த அறிக்கை, அவர்கள் "ஒட்டுமொத்தமாக வெளியேற போட்டியிடுகையில்" அங்கே ஒரு "பணப்பரிமாற்ற முறிவை" உண்டாக்க கூடுமென எச்சரித்தது.

மலிவு பணத்தைக் கொண்டு முன்னோக்கி உந்தப்பட்டுள்ள பெருநிறுவன மற்றும் அரசாங்க பத்திர சந்தைகளில், அதே சூழல் அபிவிருத்தி அடைந்துள்ளது. முன்னதாக முற்றிலும் அரிதாக இருந்த அவற்றின் எதிர்மறை வட்டிக்கான (negative yields) நிகழ்வுபோக்கிற்கு அவை ஒரு பொதுவான இடமாகி உள்ளன. (பங்குப்பத்திர விலை இந்த வட்டிக்கு எதிரான திசையில் நகர்ந்து வருகின்றன.)

அரசாங்கங்கள் அவர்களுக்கு தனிச்சிறப்புரிமையில் பணம் கொடுப்பதற்காக, முதலீட்டாளர்கள் அரசாங்கங்களுக்கு பணம் செலுத்தி வருகின்றனர் என்பதை எதிர்மறை வட்டிகள் அர்த்தப்படுத்துகின்றன. இந்த நிகழ்வுபோக்கினால் பின்வரும் நிலை உருவாகின்றது. மத்திய வங்கியின் பணஓட்டம் பத்திரங்களின் விலைகளை மேற்கொண்டு உயர்த்தும் என்பதால், பத்திரங்கள் வைத்திருப்பவர்கள் உயர்ந்த விலையிலான பத்திரத்தை அவற்றின் முதிர்வு காலம் வரையில் வைத்திருந்தால் அவர்கள் இழப்பைச் சந்திப்பார்கள் என்ற உண்மைக்கு இடையிலும், அவர்கள் ஒரு மூலதன ஆதாயத்தை பெறமுடியும். முதலீட்டாளர்களால் பத்திரங்களை மற்றொரு முதலீட்டாளருக்கு சாதாரணமாக விற்க முடியும். ஏனெனில் அந்த முதலீட்டாளரும் அதையே செய்யலாம் என்ற ஊகத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருப்பார்.

இதன் விளைவாக, பெருநிறுவன மற்றும் பத்திர சந்தைகள் ஒரு பிரமாண்ட பொன்ஸி திட்டமாக (Ponzi scheme) மாறிவிட்டிருக்கிறது, இதில் பணம் உள்ளே பாய்ச்சப்பட்டு கொண்டே இருக்கும் வரையில் இலாபங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 1920களின் போது அமெரிக்காவில் ஒரு குற்றகரமான அமைப்பாக எது தொடங்கியதோ அந்த செயல்முறை இப்போது பூகோளமயப்பட்ட பல ட்ரில்லியன் டாலர் நிதியியல் சந்தைகளின் மத்திய செயல்முறை கோட்பாடாக மாறியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட அவசியமானது என்பதே, இந்த அமைப்புமுறையை ஊக்குவிப்பவர்களால் முன்னெடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ நியாயப்பாடாக உள்ளது. அதுபோன்ற வாதங்களை, உண்மைகளும் புள்ளிவிபரங்களும் மறுத்துரைக்கின்றன. இந்த உலக பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக மந்தநிலை அல்லது குறைந்த வளர்ச்சி விகிதங்களுடன் சேர்ந்து அதிகரித்துவரும் பணச்சுருக்க போக்குகளால் குணாம்சப்பட்டுள்ளது.

பெப்ரவரியில், பிரிட்டன் நுகர்வோர் விலைகள் 55 ஆண்டுகளில் முதல்முறையாக உயர்வைக் காணத் தவறியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது, இது பொருளாதார சுருக்கத்தின் ஒரு நிச்சயமான அறிகுறியாகும். அதேநேரத்தில், சீனாவில் உற்பத்தி செயல்பாட்டிற்கான ஒரு முக்கிய குறியீடு 11 மாதங்களில் குறைந்தளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. புதிய கேட்பாணைகள், ஏற்றுமதி கேட்பாணைகள், வேலைவாய்ப்பு மற்றும் பொருட்களின் விலைகள் என முக்கிய பகுதிகள் சரிந்தன.

அதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக ஐரோப்பாவில், ஐரோப்பிய மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட உத்தேச கணிப்புகள், அடுத்த 18 மாதங்களில் நிதியியல் சந்தைகளுக்குள் 1 ட்ரில்லியன் யூரோவிற்கும் அதிகமான பணத்தை பாய்ச்சுவதை நோக்கமாக கொண்ட ஐரோப்பிய மத்திய வங்கியின் பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டம் தோற்றப்பாட்டளவில் வேலைவாய்ப்பை உயர்த்த ஒன்றும் செய்ய போவதில்லை என்பதையும், அந்த திட்டம் முடிந்த பின்னரும் கூட வேலையின்மை விகிதம் தொடர்ந்து 10 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்பதையும் கண்டறிந்தது.

பணத்தைப் புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளின் பிரதான விளைவே ஐரோப்பிய பங்குச் சந்தைகளை ஊக்குவிப்பதாக இருந்துள்ளது. இதுவரையில் ஐரோப்பிய பொருளாதார திறன் இன்னமும் 2007இல் இருந்ததற்கு கீழே இருக்கின்ற போதினும், அத்துடன் நிஜமான பொருளாதாரத்தில் முதலீட்டு நெருக்கடிக்கு முந்தைய மட்டங்களை விட 25க்கும் அதிக சதவீதத்திற்கு குறைந்து போயிருக்கின்ற போதினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இந்த ஆண்டில் அமெரிக்காவை விட வேகமான விகிதத்தில் உயர்ந்துள்ளது.

பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவம் தன்னைத்தானே தொடர்ந்து செழிப்பாக்கிக் கொண்டு வருகின்ற அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளோ ஒரு முடிவில்லா சிக்கன உந்துதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. கிரீஸிற்கு ஒத்தவகையில் நிதியியல் பிரபுத்துவத்தின் கட்டளைகள், மக்களின் முன்பினும் பரந்த அடுக்குகளை பலவந்தமாக வறுமைப்படுத்தும் மற்றும் பட்டினியில் தள்ளும் ஓர் உலகளாவிய திட்டத்திற்கு பூரண வெளிப்பாடாக உள்ளன.

1930களில் பெருமந்த நிலைமையால் பாழாக்கப்பட்டதற்குப் பின்னர், சோசலிச புரட்சி மீதான கடுமையான பயத்தினால் ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரதிநிதிகள் வளர்ச்சியை தூண்டுவதற்காக மற்றும் "இயல்பு நிலைமைக்கு" திரும்புவதைப் பாதுகாப்பதற்காக அரசு செலவினங்களின் அடிப்படையில் அமைந்த கீன்சிய நடவடிக்கைகள் என்றழைக்கப்படுவதைக் கொண்டு இலாப நோக்கு அமைப்புமுறையின் மோசமான தாக்கங்களை அவர்களால் ஒழுங்கமைக்க முடியுமென வாதிட்டனர்.

வரலாற்று அர்த்தத்தில், ஒரு மிகவும் குறுகிய காலத்திற்கு, இத்தகைய கொள்கைகள் வெற்றியைக் கொண்டு வருவனவாக தெரிந்தன. ஆனால் அவை அமெரிக்க முதலாளித்துவத்தின் பலத்திலும் மற்றும் ஒட்டுமொத்தமாக பூகோளமயப்பட்ட பொருளாதாரத்திற்கு வழங்கப்பட்ட அதன் மிக உற்பத்திபூர்வ வழிமுறைகளிலிருந்து கிடைத்த உயர்விலும் தங்கியிருந்தன.

நிலைமையோ இன்று முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் இப்போது பொருளாதார விரிவாக்கத்தின் மையத்தில் இல்லை, மாறாக அது உலகளாவிய ஒட்டுண்ணித்தனத்தின் தலைமையகமாக உள்ளது. உலக பொருளாதாரத்தின் மைய இடம் இப்போது போர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெருநிறுவனங்களால் அல்ல, மாறாக கோல்டுமென் சாஸ்ச், ஜேபிமோர்கன் சேஸ் மற்றும் சர்வதேச அளவில் அவற்றிற்கு சமமான ஒட்டுண்ணித்தனமான சக அமைப்புகளால் நிரப்பப்பட்டுள்ளது. அவை புதிய செல்வ வளங்களை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கவில்லை, மாறாக அதுவும் பெரும்பாலும் ஒட்டுமொத்த குற்றகரமான வழிமுறைகள் மூலமாக அவற்றை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ளன.

ஒட்டுமொத்த இலாப நோக்கு அமைப்புமுறையின் முழுமையான திவால்நிலைமை, இப்போது ஆளும் நிதியியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் நடந்து வரும் கொள்கை விவாதங்களில் எடுத்துக்காட்டப்படுகிறது. மத்திய வங்கிகளின் மலிவு பண கொள்கைகள், ஒரு பேரழிவுகரமான விளைவால் தடுக்கப்படும் வரையில் தொடரப்பட வேண்டுமென கூறுபவர்களுக்கும், மற்றும் மறுபுறம் பணப்புழக்க குழாய் அடைக்கப்பட்டு, இன்னும் பெரிய பேரழிவைத் தடுக்கும் முயற்சியில், அவசியமானால் திவால்நிலைமைகள் மற்றும் நிதியியல் பொறிவுகளைக் கொண்டு அமைப்புமுறை முன்னுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கூறுபவர்களுக்கும் இடையே அது நிற்கிறது.

ஊடகங்களில், கல்வித்துறைசார் வட்டாரங்களில் மற்றும் கிரீஸில் சிரிசா போன்ற போலி-இடது அமைப்புகளில் உள்ள இலாப நோக்கு அமைப்புமுறையின் பல்வேறு பாதுகாவலர்கள், ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதார முன்னோக்கு சாத்தியமில்லை என்பதால் ஒரே மாற்றீடு, "முதலாளித்துவத்தையே காப்பாற்ற" முயற்சிப்பதே ஆகுமென்பதை பேணி வருகின்றனர்.

உண்மையில் சர்வதேச சோசலிச முன்னோக்கு மட்டுமே முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடிக்கு ஒரே நம்பகமான மற்றும் நிஜமான பதிலாக உள்ளது. அந்த முன்னோக்கு அடையப்பட வேண்டுமானால், அது, போராட ஆரம்பித்துள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வேலைத்திட்டத்தின் அடித்தளமாக ஆக்கப்பட வேண்டும்.