சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The social and political context of the Germanwings disaster

ஜேர்மன்விங்ஸ் விமான விபத்தின் சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கம்

By Peter Schwarz
28 March 2015

Use this version to printSend feedback

பிரான்சில், 150 நபர்களின் மரணத்திற்கு இட்டு சென்ற ஜேர்மன்விங்ஸ் நிறுவன விமான விபத்து, புலனாய்வாளர்களின் தகவல்படி, துணை-விமானி ஆண்ட்ரியாஸ் லுபிட்ஸின் (Andreas Lubitz) திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவு என்பதாக உள்ளது.

ஒலிப்பதிவு ஆதாரத்தைக் கொண்டு செய்யப்பட்ட மதிப்பாய்வைத் தொடர்ந்து, பிரெஞ்சு பயணிகள் விமானத்துறை ஆணையத்தின் (BEA) வல்லுனர்களும் மற்றும் மார்சைய்யில் அரசு வழக்கறிஞர் பிரைஸ் ரோபினும், விமானிகளின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதன் விமானி வெளியே சென்றதும், 27 வயதான அந்த இணை-விமானி விமானத்தை 38,000 அடி உயரத்திலிருந்து சாத்தியமான மிகக்குறைந்த உயரத்தை அமைக்கும் வகையில் 96 அடிக்கு தகவமைப்புகளை அமைக்க, ஏர்பஸ் A320 இன் தானியங்கி சாதனங்களை கைமுறையாக மீட்டமைத்தார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். பின்னர் லூபிட்ஸ், விமானியைக் கட்டுப்பாட்டு அறைக்கு திரும்ப வர அனுமதிக்கவில்லை என்பதோடு, அந்த விமானம் ஒரு மலையில் மோதும் வரையில் முற்றிலும் அவரே கட்டுப்பாட்டை வைத்திருந்தார்.

புலனாய்வாளர்கள் இதுவொரு விபத்தாக இருக்க முடியாதென கூறுகின்றனர். அந்த ஒலிப்பதிவில் கேட்கும் அந்த இணை-விமானியின் அமைதியான மூச்சுவிடும் ஒலியிலிருந்து, அவர் அந்த பாதிப்பு நிகழும் வரையில் முழு நனவுடன் இருந்ததாக அவர்கள் முடிவுக்கு வருகிறார்கள்.

பெரிதும் சர்ச்சைக்குரிய இந்த ஆய்வு தெரியப்படுத்தப்பட்ட உடனேயே, ஊடகங்களை விட பல்வேறு வகைப்பட்ட அரசியல்வாதிகளும் லூப்தான்ஸா நிர்வாகமும் அந்த விபத்தை, பெரிதும் சமூக முக்கியத்துவமற்ற, புரிந்துகொள்ள முடியாத ஒரு சம்பவமாக சித்தரிக்க முனைந்தனர்.

சிறந்த பாதுகாப்பு வழிமுறைகளாலும் மற்றும் மனநல காப்பமைப்புகளாலும் கூட தடுக்க முடியாதபடிக்கு அந்த விபத்து துன்பியலாக எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது என்று லூப்தான்ஸா தலைமை செயலதிகாரி கார்ஸ்டன் ஸ்போஹ்ர் தெரிவித்தார். அவரது "கெட்ட கனவிலும் கூட" அவர் "இதுபோன்று ஒன்று நிகழுமென கற்பனை செய்ததில்லையாம்.”

Frankfurter Allgemeine Zeitungஇன் வலைத் தளத்தில் கட்டுரையாளர் மத்தாயஸ் மெல்லர் வொன் புளூமென்க்ரோன் எழுதுகையில், “இந்த விபத்தை விளங்கப்படுத்த வேண்டியுள்ளது, அதன் மூலமாக மட்டுந்தான் நம்மால் அதைக்குறித்த முடிவுக்கு வர முடியும்,” என்றார். ஆனால் அவர் தனிப்பட்டரீதியில் தவறு செய்தவரின் தனிப்பட்ட உளவியலை விளங்கப்படுத்த முனைந்தார், அவர் அறிவித்தார்: “இந்த பொருள்விளக்கத்தின் இதயதானத்தில் ஒருவர் இருக்கிறார், மிகவும் துல்லியமாக கூறுவதானால், அவரது தலை, அனேகமாக பிழையாக வழிநடத்திய அவரது மூளை… புரிந்து கொள்ள முடியாத ஒன்றுக்கு காரணமாக ஆண்ட்ரியாஸ் லூப்ட்ஜின் உளவியல் உள்ளது. விடயங்களின் தற்போதைய நிலையின் அடிப்படையில், அந்த இணை-விமானியிடமிருந்து மட்டுந்தான் தீர்வை காண முடியும்?”

அப்படியா?

உள்நோக்கங்கள், தனிப்பட்ட சிக்கல்கள் அல்லது உளவியல் பிரச்சினைகள் என எது தான், இந்த பயங்கர செயலைச் செய்ய லூபிட்ஸை விரட்டிச் சென்றன என்பதை ஒருவர் நிச்சயமாக ஸ்தாபிக்க வேண்டி உள்ளது தான். ஆனால் உளவியல் பின்புலம் மட்டுமே இந்தளவிலான ஒரு விபத்தை விவரித்துவிட முடியாது. லூபிட்ஸ் ஒரு குறிப்பிட்ட சமூக சூழலிலுக்குள் செயல்பட்டு இருந்தார். அவரது நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஒருவர் அவரது தனிப்பட்ட வியாதியை மட்டுமல்ல, மாறாக அவர் வாழ்ந்த சமூகத்தைப் பீடித்துள்ள வியாதியையும் புரிந்துகொள்ள வேண்டும்.

நிதானமான, அமைதியான, அன்பான மற்றும் எளிதில் கையாளக்கூடிய ஒருவராக அவருக்கு தெரிந்தவர்கள் அனைவராலும் வர்ணிக்கப்படும், ஓர் இளைஞரை, 149 நபர்களைப் படுகொலை செய்ய உந்துவதற்கு என்ன ஆழ்ந்த சமூக அழுத்தங்கள் அவசியமாகின்றன? வரவிருந்த பேரிழப்பின் எச்சரிக்கையூட்டும் அறிகுறிகளை ஏன் ஒருவராலும் காண முடியவில்லை?

இத்தகைய கேள்விகளை முழு விசாரணைக்கு உட்படுத்துவதும், அதிகரித்துவரும் தொழில்ரீதியான மனஅழுத்தம், பொருளாதார பாதுகாப்பின்மை, மக்களின் பயம், சமூக பதட்டங்கள், அரசு வன்முறை மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றால் குணாம்சப்பட்ட ஒரு சமூக சூழலைக் கவனத்தில் கொள்வதும் தான், அந்த தவறை செய்தவரது "அனேகமாக பிழையாக வழிநடத்திய மூளையைக்" கடந்து சென்று பார்ப்பதற்கு, தவிர்க்கவியலாமல் அவசியப்படுகிறது.

டுஸ்செல்டோர்ப் (Düsseldorf) அரசு வழக்கறிஞரின் அலுவலம், மொன்டபோரில் மற்றும் டுஸ்செல்டோர்பில் உள்ள லூபிட்ஸின் வீட்டை சோதனையிட்டது. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒரு கடிதமோ அல்லது ஓர் அரசியல் அல்லது மதரீதியிலான உள்நோக்கமோ எதுவும் கண்டறியப்படவில்லை. மாறாக அவர்கள் மன அழுத்தத்திற்கு சாத்தியமான ஆதாரங்களை அவர்கள் கண்டறிந்தனர். விபத்து நடந்த அந்நாள் உட்பட வேலையிலிருந்து ஓய்வாக இருக்க பரிந்துரைத்த ஒரு கிழிக்கப்பட்ட மருத்துவரின் குறிப்புரையை அவர்கள் கண்டவுடன், நோய்வாய்ப்பட்டிருந்த அவர் அவரது தொழில்வழங்குனரிடம் இருந்தும் மற்றும் வேலையில் உடனிருந்தவர்களிடம் இருந்தும் அவரது நோயை மூடிமறைத்துவிட்டதாக" முடிவுக்கு வந்தது.

வியாதி குறித்த குறிப்புக்கு இடையிலும் லூபிட்ஸ் ஏன் வேலைக்குச் சென்றார்? வெளிப்படையாக அவரது இலட்சிய வேலையாக இருந்த அந்த வேலையை இழந்துவிடுவோமோ என்று அவர் பயந்தாரா? 15 வயதிலேயே உள்ளூர் சிறுவிமான பயிற்சியகத்தில் சேர்ந்திருந்த அவர், ப்ரெமென் பள்ளியில் படித்து முடித்ததும் ஒரு விமானஓட்டியாக லூப்தான்ஸாவினால் பயிற்சி அளிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆறு மாதங்களுக்கு, உறுதிசெய்யப்படாத செய்திகளின்படி, மன அழுத்தத்தின் காரணமாக, அவரது பயிற்சியை இடையில் நிறுத்தி இருந்தார்.

அதிகரித்த வேலை அழுத்தத்துடன், அதுவும் குறிப்பாக லூப்தான்ஸாவிலும் மற்றும் அதன் மலிவு-கட்டண துணை நிறுவனம் யூரோவிங்ஸிலும் அது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், லூபிட்ஸால் சமாளிக்க முடியவில்லையா? இந்த பிரச்சினை தான் ஓராண்டுகாலமாக நீடித்த விமானிகளது தொழில்துறை பிரச்சினைக்கு ஆதார அடித்தளமாக இருந்துள்ளது.

வேலை சார்ந்த அழுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட மனரீதியிலான நோய்கள், விமான தொழில்துறையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திலும், வியக்கத்தக்களவில் அதிகரித்துள்ளன. உலக சுகாதார அமைப்பின் ஆய்வு ஒன்றின்படி, வேலை செய்யும் வயதில் உள்ள ஜேர்மனிய மக்களில் 5 சதவீதத்தினர், அல்லது 3.1 மில்லியன் மக்கள், பெரும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார காப்பீட்டு நிறுவனங்களின் தகவல்படி, மனநோயின் காரணமாக எடுக்கப்பட்ட சுகவீன விடுப்பு நாட்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் 18 மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளன. 2012இல் மட்டும் அது 10 சதவீதம் அதிகரித்தது.

அதுபோன்றவொரு ஓர் அசுரத்தனமான செயலைச் செய்ய, லூபிட்ஸ் தன்னைதானே பெரும் அழுத்தத்தின் கீழ் உணர்ந்திருக்க வேண்டும். அனுபவம்மிக்க உளவியலாளர்களே கூட இதுபோன்றவொரு அதீத சம்பவத்தை நினைவுகூர முடியாது.

தற்கொலை செய்கிறவர் அவருடன் சேர்ந்து ஏனையவர்களையும் கொல்லும் தற்கொலை-நீட்சி (extended suicide) நிகழ்வாக இருந்தாலும் கூட, அதில் கொல்லப்படும் ஏனையவர்கள் பொதுவாக குற்றம் செய்பவரின் உறவினர்களாகவோ அல்லது அவருடன் தொடர்புட்டவர்களாகவோ இருப்பார்கள். லூபிட்ஸின் நடவடிக்கைகளை, அமெரிக்காவில் நடந்த கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் நடந்த படுகொலை போன்ற வெறிச்செயல்களோடு அல்லது ஜேர்மனியில் Erfurt Gutenberg உடற்பயிற்சி கூடத்தில் நடந்த இரத்தக்களறியுடன் மட்டுமே பகுதியாக ஒப்பிட முடியும்.

இதுபோன்ற சம்பவங்களில், பலியாகிறவர்கள் வழக்கமாக குற்றம் செய்பவரின் சமூக அடுக்கைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதோடு, அவர்கள் சில உணர்வுபூர்வமான அவமதிப்புகளுக்காக இலக்கில் வைக்கப்படுவார்கள். ஆனால் ஜேர்மன்விங்ஸ் பேரழிப்பில், லூபிட்ஸிற்கு எந்த விதத்திலும் அந்த 149 பேரை தெரியாது என்பதோடு, அவர்கள் விமானத்தில் ஏற நேர்ந்ததற்காகவே மனம்போன போக்கில் அவர்களின் மரணங்கள் நேர்ந்தன.

மனரீதியில் நோய்வாய்பட்ட மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களே கூட அதுபோன்றவொரு படுகொலையைச் செய்ய தயங்குவார்கள் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். வெளிப்படையாக தெரியாத இவை போன்றவை, மனித வாழ்விற்கு பொதுவான மதிப்பைக் கூட அளிக்காத பின்புலத்தில் தான் பார்க்கப்பட வேண்டும்.

இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய முதல் ஜேர்மன் இராணுவ வெளிநாட்டு நடவடிக்கையாக ஜேர்மன் இராணுவம் யூகோஸ்லாவியாவிற்கு சென்ற போது, ஆண்ட்ரியாஸ் லூபிட்ஸ் 11 வயதில் இருந்தார். அதன்பின்னர் அவர், ஒரு போர் மாற்றி ஒரு போர் நடந்த காலத்தில் வாழ்ந்திருந்தார். அவற்றில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் துருப்புகள் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றதுடன், அதிகாரிகளோ இத்தனை எண்ணிக்கையிலான சட்டவிரோத பயங்கரவாதிகள் "களையெடுக்கப்பட்டார்கள்" என்று பகிரங்கமாக பெருமை கொண்டனர்.

மத்தியதரைக்கடல் பகுதியில் ஆயிரக் கணக்கான அகதிகள் ஒவ்வொரு ஆண்டும் நீரில் மூழ்கி இறக்கிறார்கள், அதேவேளையில் ஐரோப்பிய ஒன்றியமோ அந்த கண்டத்தை அவர்கள் அடைந்துவிடாமல் தடுக்க புதிய தடைகளை உண்டாக்குகிறது. ஜேர்மன் அரசாங்கத்தால் கோரப்பட்ட சிக்கன வெட்டுக்கள் மில்லியன் கணக்கானவர்களை கிரீஸில் வறுமைக்குள் தள்ளியதோடு, எண்ணிக்கையில்லாமல் மக்களைத் தற்கொலைக்கு உந்துகிறது.

ஜேர்மன்விங்ஸ் விபத்தின் விளக்கத்தை, வெறுமனே ஆண்ட்ரியாஸ் லூபிட்ஸினது மனம் மற்றும் உளவியலுக்குள் கண்டு பிடிக்க முடியாது. மாறாக அவரது குறைபாட்டை அதன் நிஜமான உள்ளடக்கத்திற்குள் —அதாவது செயற்பிழற்ச்சி கொண்ட மற்றும் நோய்பீடித்த ஒரு சமூக ஒழுங்கமைப்பிற்குள்— நிறுத்திப் பார்க்க வேண்டும்.

அதேநேரத்தில் விபத்து நடந்த இடத்தில் மக்கள் வெளிப்படுத்தி காட்டிய அனுதாப அலைகளும், மனிதாபிமான ஒற்றுமையுணர்வும் மற்றும் உதவ முன்வந்த ஆர்வமும் பிரான்ஸ் எங்கிலும் மற்றும் பலியானவர்களின் அந்தந்த நாடுகளிலும் வித்தியாசமான வேறொன்றை —அதாவது ஒரு நிஜமான மனிதாபிமான சமூகத்திற்கான ஓர் ஆழ்ந்த தேவைகளை— வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

பலியானவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்தம் அரசியல்வாதிகள் இந்த தேவையைப் பூர்த்தி செய்ய மாட்டார்கள். அவர்கள் இந்த நினைவாஞ்சலி நிகழ்வுகளுக்குப் பின்னர், மீண்டும் சுகாதாரத்துறை வெட்டுக்கள், தொழிலாளர் சந்தை "சீர்திருத்தங்கள்", உள்நாட்டில் முன்பினும் கூடுதலாக பொலிஸ் அதிகாரங்களையும் மற்றும் அன்னிய நாடுகளில் பெருமளவில் இரத்தந்தோய்ந்த போர்களையும் விரிவாக்குவது என அவர்களின் கொள்கையை பின்தொடர திரும்பிவிடுவார்கள்.