சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

NATO reveals plan for deploying 4,000 troops on Russia’s borders

ரஷ்யாவின் எல்லைகளில் 4,000 துருப்புகளை நிலைநிறுத்தும் திட்டத்தை நேட்டோ வெளியிடுகிறது

By Bill Van Auken
30 October 2015

Use this version to printSend feedback

சிரியாவில் முரண்பட்ட அமெரிக்க மற்றும் ரஷ்ய இராணுவ தலையீடுகளின் மீது வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே பதட்டங்கள் தீவிரமடைந்து வருவதற்கு இடையே, வியாழனன்று, ரஷ்ய எல்லையோர நாடுகளில் நேட்டோவின் சுமார் 4,000 தாக்கும்படை துருப்புகளை நிலைநிறுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த ஆயத்தப்படுத்தல் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ கட்டமைப்பு மற்றும் அமெரிக்கா-தலைமையிலான கூட்டணியின் சுற்றிவளைப்பில் ஒரு பண்புரீதியிலான தீவிரப்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும், அத்துடன் அது உலகின் அவ்விரு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதல் மற்றும் ஐரோப்பிய போர் ஆகிய இரண்டு அச்சுறுத்தலையும் அதிகரிக்கின்றது.

பரிந்துரைக்கப்பட்ட நிலைநிறுத்தலின் ஆத்திரமூட்டும் குணாம்சத்துடன் சேர்ந்து, பல்வேறு நேட்டோ நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அந்த துருப்புகள், ஒரு பொது எதிரிக்கு எதிரான நேட்டோ போர் சம்பவத்தில் பயன்படுத்தப்படுவதற்குரிய ஓர் ஏற்பாடான, உத்தியோகப்பூர்வ நேட்டோ கட்டளையகத்தின் கீழ் நிறுத்தப்படும். அதுபோன்றவொரு கட்டளையகத்தின் கட்டமைப்பு நடைமுறைரீதியில் சமாதான காலத்தில் முன்னோருபோதும் இல்லாத ஒன்றாகும்.

அக்டோபர் 26, 2015 இல் Operation Trident Juncture 15 போது ஜேர்மன் மலையேறும் காலாட்படை பயிற்சி எடுக்கிறது. புகைப்படம் - நேட்டோவினது.

கூட்டணிக்குள் விவாதங்களின் கீழ் இருக்கும் ஒரு முன்மொழிவு, படைப்பிரிவு பலத்தில் 800 இல் இருந்து 1,000 துருப்புகளை போலாந்திலும் மற்றும் முன்னாள் சோவியத் பால்டில் குடியரசுகளான லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியாவிலும் நிலைநிறுத்தும். ஓரளவு பரந்த ஒரு திட்டமானது, அப்பிராந்தியத்தில் ஒரேயொரு படைப்பிரிவை நிலைநிறுத்துவதோடு மட்டுப்பட்டு இருக்கும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தியின்படி, வாஷிங்டன் மிகவும் பரந்த படை நிலைநிறுத்தலுக்கு அழுத்தமளிக்கிறது, அதேவேளையில் "மாஸ்கோவை அவர்கள் ஒரு நிரந்தர எதிரியாகவோ அல்லது ஐரோப்பாவிலிருந்து வெளியே நிலைநிறுத்தியோ கையாள விரும்பவில்லை என்று தனிப்பட்ட விவாதங்களில் கூட்டாளிகளுக்குக் கூறி, குறிப்பாக ஜேர்மன் அதிகாரிகள் தமது பின்னடிப்புகளை வெளியிட்டுள்ளனர்...”

ஜேர்னல் வெளியிட்ட தகவல்படி, அமெரிக்க-தலைமையிலான கூட்டணியில் உள்ள ஏனையவை, ஊகிக்கக்கூடிய அளவிற்கு வாஷிங்டனும் சேர்ந்து, “அனேகமாக பெரும்பாலும் அசம்பாவிதங்களும் மற்றும் திரு. புட்டினின் பிழையான கணக்கீடுகளும் எதிர்பாராதவிதமாக ஒரு பரந்த மோதலைத் தூண்டுகையில், ஒரு சிறிய ஆயத்தப்படுத்தலானது, ரஷ்யாவுடன் சண்டையிடுகையில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்திவிடுமென" வாதிடுகின்றனர். அதைத் தவிர்க்க, அவ்வாறு வலியுறுத்துபவர்கள், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்லில் தற்போது நடந்து வருவதைப் போன்ற நடைமுறைகளோடு இன்னும் பெரிய எண்ணிக்கையிலான துருப்புகளைத் துரிதமாக நகர்த்துவதற்கான அதன் ஆற்றலை எடுத்துக்காட்டுவது போன்ற ஏனைய முன்னேற்பாடு முயற்சிகளை நேட்டோ அதிகரிக்க வேண்டுமென கூறுகின்றனர்.

36,000 துருப்புகள், 140க்கும் அதிகமான போர்விமானங்கள், 60 க்கும் அதிகமான போர்க்கப்பல்கள் மற்றும் ஏழு நீர்மூழ்கிக் கப்பல்கள் சம்பந்தப்பட்ட, 2002 க்குப் பிந்தைய மிகப்பெரிய நேட்டோ இராணுவ பயிற்சியான Operation Trident Juncture இன் மத்தியில் தான், ரஷ்ய எல்லைகளில் நிரந்தர துருப்புகளை நிலைநிறுத்துவதற்கான திட்டங்கள் மேலெழுந்தன.

கடந்த வாரம் இராணுவ ஒத்திகைகளின் இரண்டாவது கட்டத்தைத் தொடங்கி வைத்த நேட்டோ துணை பொது-செயலாளரும், அக்கூட்டணியின் அமெரிக்க தூதருமான அலெக்சாண்டர் வெர்ஷ்பொவ், அந்த போர் ஒத்திகைகள் ரஷ்யாவை மிரட்டுவதை நோக்கி திருப்பிவிடப்பட்டிருப்பதைத் தெளிவுபடுத்தினார்.

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் கீழ் ரஷ்யாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த வெர்ஷ்போ, “ரஷ்யாவினது இராணுவ ஆயத்தப்படுத்தலைக் குறித்து நாங்கள் மிகவும் கவலைக் கொண்டுள்ளோம்,” என்றார். அவர் பத்திரிகையாளர்களுக்குக் கூறுகையில், “கருங்கடலில் உள்ள கலீனின்கிராட் இல் மற்றும் இப்போது கிழக்கு மத்தியத்தரைக் கடலில் படைகளை அதிகரித்தளவில் குவிப்பது சில கூடுதல் சவால்களை முன்னிறுத்துகிறது,” என்றார்.

கிழக்கில், ரஷ்யா சட்டவிரோதமாக கிரிமியாவை இணைத்துக் கொண்டுள்ளதுடன், கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாதிகளை அது தொடர்ந்து ஆதரித்து வருகிறது; மேலும் இப்போது உறுதியாக அசாத்தின் தரப்பிலிருந்து சிரியா போருக்குள் நுழைந்திருப்பதாக தெரிகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

நவம்பர் 6 வரை தொடரவிருக்கின்ற அந்த ஒத்திகையானது, அதன் எதிரிகள் தாக்கினால் அதன் எல்லைகளுக்கு அங்காலும் நேட்டோவால் தீர்க்கமான இராணுவ படையைத் துரிதமாக நகர்த்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதை மையத்தில் கொண்டுள்ளது. ஒரு பிராந்திய விரோதியான "Kamon” இன் தாக்குதலுக்கு எதிராக "Lakuta” என்ற புனைவு நாட்டை நேட்டோ பாதுகாக்கும் ஒரு சூழலைச் சுற்றி அந்த போர் ஒத்திகைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அதிகரித்துவரும் அரசியல் ஸ்திரமின்மை, இனப் பதட்டம், மற்றும் நீடித்திருக்கும் சமூக-பொருளாதார சவால்கள் ஆகியவை ஒரு நாட்டின் எல்லை மீது மற்றொரு நாட்டின் அடாவடித்தனமான படையெடுப்பில் உச்சக்கட்டத்தை அடைகிறது,” என்று அந்த ஒத்திகைகளுக்கான உத்தியோகப்பூர்வ சூழல் எடுத்தியம்புகிறது.

வலது-சாரி, ரஷ்ய-விரோத வெறிபிடித்த அரசாங்கங்களால் ஆட்சி செலுத்திப்பட்டு வரும் அந்த எல்லா முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகளில் ஒரு சாத்தியமான பரிணாம நிலைமைகளை மீள்உருவாக்குவதையே இந்த ஒத்திகை நோக்கமாக கொண்டுள்ளது என்பது வெளிப்படையாகும். அந்நாடுகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்துள்ளதுடன், இனரீதியில் பெரும்பான்மை ரஷ்ய மக்களுக்கு எதிராக வேற்றுமைகளை வளர்க்கின்றன மற்றும் இரண்டாம் உலக போரில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த அவர்களது பிரஜைகளைப் பெருமைப்படுத்துகின்றன.

கடந்த செப்டம்பரில் எஸ்தோனியாவிற்குப் பயணம் செய்த ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்யாவிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் அதற்கு எதிராக பால்டிக் அரசுகளைப் பாதுகாக்க அமெரிக்க துருப்புகளைப் பிரயோகிக்க நேட்டோ சாசனத்தின் 5ஆம் ஷரத்தின் கீழ் ஒரு நிபந்தனையற்ற கடமைப்பாட்டை வழங்கினார். இந்த கடமைப்பாட்டை "அசைக்க முடியாத" மற்றும் "நிலைபேறானதாக" குறிப்பிட்டு, அவர் வலியுறுத்துகையில், "அமெரிக்க தரைப்படையை" அனுப்பவும் அவர் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

நேட்டோவில் அங்கத்துவம் வகிக்காத உக்ரேன், நேட்டோ போர் ஒத்திகைகளில் பங்குபற்றுவதற்காக அதன் இராணுவத்தை அனுப்பி உள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே தீவிரமடைந்துவரும் மோதல் பெப்ரவரி 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதியால் தூண்டிவிடப்பட்டது. விக்டொர் யானுகோவிச்சின் உக்ரேனிய அரசாங்கம் ஒரு முன்மொழியப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் சார்ந்த உடன்படிக்கையை நிராகரித்து அதற்கு பதிலாக ரஷ்ய கடன் பிணையெடுப்பைக் கோரியதும், அவரது அரசாங்கம் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது. அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி வாஷிங்டன் மற்றும் பேர்லினால் முடுக்கிவிடப்பட்டு, பாசிச போராளிகளால் முன்னெடுக்கப்பட்டது. அந்த அரசாங்கம் தூக்கியெறியப்பட்டதற்குப் பின்னர் அங்கே நடந்த ஓர் இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போரில், அமெரிக்க ஆதரவிலான புதிய கியேவ் ஆட்சி அந்நாட்டின் கிழக்கில் இருந்த  ரஷ்ய இன கிளர்ச்சியாளர்களை இராணுவரீதியில் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

ஹங்கேரி, ஸ்லோவேகியாவிலும், பால்டிக் அரசுகளான எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியாவிலும் அத்துடன் பல்கேரியா, போலாந்து மற்றும் ரோமானியாவிலும் நேட்டோ படை ஒருங்கிணைப்பு பிரிவுகள் என்றறியப்படும் சிறிய தலைமையிடங்களையும், 40,000 பலமான "விரைவு அதிரடி படைகளை" நிறுவும் நேட்டோவின் முந்தைய முடிவுகளையும் தொடர்ந்து, ரஷ்ய எல்லையோரங்களில் துருப்பு நிலைநிறுத்தல்களுக்கான இந்த சமீபத்திய பரிந்துரைகள் வந்துள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 80 நபர்களை உள்ளடக்கிய இத்தகைய கட்டளையகங்கள், ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ துருப்புகளின் துரித நிலைநிறுத்தல்களுக்குத் தயாரிப்பு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கும் கூடுதலாக, ரஷ்யாவைத் தாக்கும் தூரத்தில் டாங்கிகள் மற்றும் ஏனைய கனரக ஆயுதங்கள் உட்பட ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை முன்கூட்டியே நிலைநிறுத்துவதற்கான திட்டங்களும் விவரிக்கப்பட்டன.

நேட்டோவினது இராணுவ கட்டமைப்பு தீவிரப்பாட்டுக்கான புதிய பரிந்துரைகள் குறித்த செய்திகளுக்கு விடையிறுக்கையில், அமெரிக்க தலைமையிலான கூட்டணிக்கான மாஸ்கோவின் தூதர் அலெக்சாண்டர் குருஷ்கோ, இந்நடவடிக்கைகளும், அத்துடன் முந்தைய நடவடிக்கைகளும், 1990களில் எட்டப்பட்ட உடன்படிக்கையை மீறுகின்றன, அவற்றில் நேட்டோ ரஷ்ய எல்லைகளை ஒட்டி ஒரு கணிசமான அளவிற்கு தாக்கும்படை துருப்புகளை நிறுத்தாது என உறுதியளித்திருந்தது என்று குற்றஞ்சாட்டினார்.

அரசியல் கண்ணோட்டத்திலிருந்து இத்தகைய இராணுவ நடவடிக்கைகள், ஐரோப்பாவில் ஒரு புதிய 'இரும்பு திரையை' உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளன" என்று குருஷ்கோ தெரிவித்தார். “நமது பாதுகாப்பு எந்தவொரு விடயத்திலும் பாதுகாக்கப்படும், அதை நடைமுறையில் செய்வதற்கு நம்மிடம் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

திட்டமிட்டு தீவிரப்படுத்தப்படுவதாக தெரியும் கிழக்கு ஐரோப்பிய பதட்டங்கள், சிரிய நெருக்கடி குறித்து வியன்னாவில் கூடவிருக்கும் மற்றொரு பேச்சுவார்த்தை அமர்வுடன் பொருந்தி உள்ளது. சிரியாவில் ரஷ்யா நூற்றுக் கணக்கான விமான தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் ஒரு முயற்சியில் ஏனைய இராணுவ உதவிகளையும் வழங்கியது, அதேவேளையில் பயங்கரவாதத்திற்கு" எதிராக சண்டையிடுவதாக மாஸ்கோ கூறுவதைப் போலவே கூறிக்கொண்டு வாஷிங்டன் அசாத்தைப் பதவியிலிருந்து வெளியேற்ற முயலும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய தாக்குதலுக்கு ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அரசாங்கத்தின் விடையிறுப்பு பிற்போக்குத்தனமானதும் மற்றும் அரசியல்ரீதியில் திவாலானதுமாகும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும் அரசு சொத்துக்களைக் கொள்ளையடித்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களது நலன்களைப் பாதுகாப்பதிலும்  மற்றும் ரஷ்ய தேசியவாதத்தின் அடித்தளத்திலும், புட்டினின் கொள்கைகள் இராணுவ பலத்தை முடுக்குவதும் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் ஒரு இணக்கமான ஏற்பாட்டை செய்து கொள்ள முயல்வதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

கொரிய தீபகற்பத்திற்கு அருகே கடற்படை ஒத்திகைகளில் ஈடுபட்டுவந்த USS ரோனால்டு ரீகன் விமானந்தாங்கிய போர்கப்பலுக்கு அருகே பறந்து கொண்டிருந்த இரண்டு ரஷ்ய Tu-142 Bear போர்விமானத்தை எதிர்கொள்ள நான்கு ஆயுதமேந்திய போர் விமானங்களை அனுப்பியிருப்பதை அமெரிக்க கடற்படை வியாழனன்று ஒப்புக் கொண்டது. ரஷ்ய விமானங்கள் அமெரிக்க போர் கப்பல்களிலிருந்து ஒரு மைல் தூரத்திற்குள் 500 அடியில் பறந்து கொண்டிருந்ததாகவும், ரஷ்ய விமானத்தைத் தொடர்புகொள்ள முயன்ற அமெரிக்க ரோந்துபடை கப்பலின் முயற்சிகளுக்கு எந்த விடையிறுப்பும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் குறிப்பிட்டன.

கிழக்கு ஐரோப்பாவாக இருக்கட்டும், சிரியா அல்லது வேறெந்த இடமாகவேனும் இருக்கட்டும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஓர் இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறு அன்றாடம் அதிகரித்து வருகிறது. ஒரு மோதல் அணுஆயுத போருக்குள் செல்வதற்கான அபாயங்கள், பனிப்போரின் உச்சத்தில் இருந்ததை விடவும் இன்று அதிகமாக உள்ளன.