சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The mergers boom, the financial oligarchy and imperialism

நிறுவனங்களை ஒருங்கிணைப்பது பாரியளவில் அதிகரிப்பதும், நிதியியல் தன்னலக்குழுவும், ஏகாதிபத்தியமும்

Andre Damon
30 October 2015

Use this version to printSend feedback

வியாழனன்று வெளியான பத்திரிகை செய்திகளின்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான Allergan மற்றும் Pfizer அவற்றின் ஒருங்கிணைப்பிற்கும் மற்றும் அயர்லாந்தை மையமாக கொண்ட $330 பில்லியன் மதிப்பிலான மற்றும் ஏறக்குறைய நடைமுறையில் வருமான வரி செலுத்தாத உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கும் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளன.

இந்தாண்டின் இதுவரையிலான மிகப்பெரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கையாக இருக்கக்கூடிய அது, பெருநிறுவன ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களின் அலையில் சமீபத்தியது மட்டுமேயாகும். வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு முந்தைய ஆண்டான 2007 இல் நடந்த $3.4 ட்ரில்லியன் கையகப்படுத்தல்களைத் தாண்டி, இத்தகைய ஏற்றுக்கொள்ளல்களின் ஒரு சாதனை ஆண்டாக 2015 மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கிலித் தொடர்போன்ற Walgreens மருந்து நிறுவனம், $17.2 பில்லியன் மதிப்பிலான உடன்படிக்கையில் அதன் போட்டி நிறுவனமான Rite Aid விலைக்கு வாங்கும் திட்டங்களை அறிவித்த ஒரு நாளைக்குப் பின்னர் Allergan-Pfizer அறிவிப்பு வெளியானது. இதன்விளைவாக உருவாகக்கூடிய நிறுவனம் அமெரிக்க மருந்து பொருள் சந்தையில் 41 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும், அதன் போட்டி நிறுவனமான CVS, மற்றொரு 58 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும். ஏனைய அனைத்து நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக 0.6 சதவீதமாக கணக்கில் வரும்.

இது மருத்துவத்துறை ஒருங்கிணைப்புகளுக்கான ஒரு சாதனையில் வெறும் சமீபத்திய நடவடிக்கைகளாகும், இதில் மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் சிக்னா (Cigna) அதன் போட்டியாளர் Anthem ஆல் $54.2 பில்லியனில் வாங்கப்பட்டமை மற்றும் Aetna நிறுவனத்தால் ஹூமானா (Humana) $37 பில்லியனில் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் உள்ளடங்கும். இத்தகைய ஒருங்கிணைப்புகளின் விளைவாக, அமெரிக்காவில் உள்ள ஐந்து மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு சில வாரகால இடைவெளியில் மூன்றாகி விட்டன.

சந்தையை இன்னும் அதிகமாக ஏகபோகமாக்குவதன் மூலமாக விலை நிர்ணய அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதே, Walgreens/Rite Aid மற்றும் Allergan/Pfizer ஒருங்கிணைப்புகளின் மத்திய உள்நோக்கமாக உள்ளது. அமெரிக்க மருந்துப்பொருள் சந்தையை இரு-நிறுவன ஏகபோகத்திற்குள் (duopoly) மாற்றுவது வாடிக்கையாளர்கள் வாங்கும் மருந்து விலைகளில் ஒரு கடுமையான உயர்வைக் கொண்டிருக்கும்.

மருந்து துறையின் அதிகரித்தளவிலான ஏகபோகமயமாக்கல், அமெரிக்காவில் விலை உயர்வதற்குப் பங்களிப்பு செய்கிறது. 2013 இல், கடைசியாக இந்தாண்டின் புள்ளிவிபரங்கள் தான் கிடைக்கின்றன என்ற நிலையில், பரிந்துரைக்கப்படும் மருந்து பெயர்களில் முன்னிலை வகைகளது விலை, பணவீக்கத்தை விட எட்டு மடங்கு வேகமாக 12.9 சதவீத அளவிற்கு உயர்ந்தது.

இத்தகைய ஒருங்கிணைப்புகள், பொருளாதார ஆரோக்கிய நிலைமையை மற்றும் "உந்துசக்தியையும்" வெளிப்படுத்துகின்றன என்பதிலிருந்து வெகுதூரம் விலகி, உலகளாவிய முதலாளித்துவத்தின் இதயதானத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தின் அழுகிய நிலைமையைப் பிரதிபலிக்கின்றன. சாதனையளவிலான 2015 ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், 2008-2009க்குப் பிந்தைய மிகக் குறைந்த உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மட்டத்துடன் கை கோர்த்து செல்கிறது.

உடனடி அர்த்தத்தில், ஓர் உலகளாவிய மந்தநிலை மற்றும் தொழிலாளர்களின் வருவாய் பொறிந்து போயிருப்பதற்கு இடையே, தேவை குறைந்துவரும் நிலைமைகளுக்கு, இத்தகைய ஒருங்கிணைப்புகளானது இன்னும் நிறைய இலாபங்களுக்கான வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளால் உந்தப்பட்டுள்ள பெருநிறுவனங்கள் காட்டும் விடையிறுப்புகளாகும்.

சாதனையளவில் பங்கு வாங்கி-விற்பது மற்றும் ஏனைய முற்றிலும் ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கைகள் ஆகியவற்றோடு சேர்ந்து, இந்த ஒருங்கிணைப்பு அலைக்கு பெடரல் ரிசர்வ் தலைமையில் உலக மத்திய வங்கிகளது கொள்கைகள் ஒத்துழைத்துள்ளன. வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்கு அண்மித்தளவில் வைத்துள்ள பெடரல் ரிசர்வ், “பணம் புழக்கத்தில் விடுதல்" (quantitative easing) என்று கூறப்பட்ட பத்திர கொள்முதல்கள் மூலமாக நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலுத்தியது.

நிதியியல் அமைப்புமுறைக்குள் பாய்ச்சப்பட்ட நிதிகளை உற்பத்தி முதலீட்டிற்கு உபயோகிப்பதிலிருந்து விலகி, சாதனையளவில் கொழுத்த பிரதான பெருநிறுவனங்கள் $1.4 ட்ரில்லியன் மதிப்பிலான பணக்குவியல்கள் மீது உட்கார்ந்து கொண்டிருப்பதோடு, அந்த பணத்தை அவை இன்னும் அதிகமாக பங்கு விலைகளை ஊதிப் பெருக்க செய்வதற்காக, பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் செல்வவளத்தைப் பெருக்குவதற்காக, பங்குகள் வாங்கி-விற்பதிலும், நிர்வாகிகளது சம்பளங்களை அதிகரிப்பதிலும், ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களைச் செய்வதற்கும் பிரயோகிக்கின்றன.

முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரும் இலாபங்களை உருவாக்கி, பெருநிறுவன நிர்வாகிகளுக்கு மிகப்பெரும் சம்பள கையளிப்புகளை வழங்குகின்ற அதேவேளையில் இந்த ஒருங்கிணைப்புகள், பொதுவாக வேலைநீக்கங்கள், கூலி வெட்டுக்கள், வேகப்படுத்தல்கள், ஆலைகள் மற்றும் சில்லரை விற்பனை அங்காடிகளின் மூடல்களுக்கு இட்டுச் செல்கின்றன. அத்தகைய நிதியியல் ஒட்டுண்ணித்தனம் ஒரு நிகழ்வுபோக்காக உள்ளது, அதைக் கொண்டு நிதிய மூலதனம் சமூகத்தின் உற்பத்தி சக்திகளை விழுங்கி ஏப்பம்விட்டு இலாபங்களை அதிகரித்துக் கொள்கிறது.

இத்தகைய நிகழ்வுபோக்குகள் 2008 நிதியியல் பொறிவிற்குப் பின்னர் தீவிரமடைந்துள்ளன என்றாலும், அவை தசாப்தகாலமாக நடந்து வருவதுடன், தொழிலாள வர்க்கத்தின் முன்பினும் பரந்த பிரிவுகளுக்கு ஒரு சமூக பேரிடரை விளைவித்துள்ளன. மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள் ஆண்டுக்கு பாதி ஏழ்மை நிலைக்கும் அவர்களில் 40 விகிதமானோர் $20,000 ஐயும் விட குறைவாக சம்பாதிக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வெட்கக்கேடான சமூக வறுமையோடு நம்ப முடியாத செல்வவள மட்டங்களும் நிலவுகின்றன. ஒரேயொரு சான்றை மேற்கோளிடுவதானால், கடந்த ஆண்டு $1.3 பில்லியன் சம்பாதித்த சிக்காகோவை மையமாக கொண்ட தனியார் நிதி முதலீட்டு நிறுவனம் Citadel LLC இன் அதிபர் கென்னெத் க்ரீபின் (Kenneth Griffin), சுமார் $300 மில்லியனை வாரியிறைத்து மூன்று நகரங்களில் சொத்துக்கள் வாங்கியிருந்தார். நியூ யோர்க் நகர நில/கட்டிடத்துறையில் ஒரு சாதனையாக $200 மில்லியனில் அவர் வாங்கிய 220 சென்ட்ரல் பார்க் சவுத்தில் கட்டப்பட்டுவரும் மூன்று அடுக்கு condo கோபுரமும் அதில் உள்ளடங்கும்.

அமெரிக்காவில், உண்மையில் ஒட்டுமொத்த உலகிலுமே, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வானது, ஒட்டுண்ணித்தனமான மற்றும் பண-பைத்தியம் பிடித்த நிதியியல் செல்வந்த தட்டால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது, அதில் க்ரீபினும் ஒருவராக இருக்கிறார். உலகளாவிய மத்திய வங்கிகள் மற்றும் பிரதான முதலாளித்துவ அரசாங்கங்களின் ஒரே நோக்கம் இந்த நிதியியல் உயரடுக்கின் செல்வவளத்தைப் பாதுகாப்பதும் அதிகரிப்பதும் மற்றும் அவர்களது சொந்த தனிப்பட்ட செல்வசெழிப்பிற்காக உலகெங்கிலுமான மனிதர்களின் மொத்த ஆதாரவளங்களையும் அவர்கள் சூறையாடுவதற்குச் சலுகையளிப்பதுமே அவற்றின் கொள்கைகளாக உள்ளன.

இவை, அவற்றின் அபிவிருத்தியின் மிக மிக தொடக்க கட்டத்திலேயே ரஷ்ய புரட்சியாளரும் தத்துவவியலாளருமான விளாடிமீர் லெனினால் அடையாளம் காணப்பட்ட குணாம்சங்களாகும். அவரது 1917 இன் தலையாய படைப்பான ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்பதில், லெனின், நிதியியல் ஒட்டுண்ணித்தனம், ஏகபோகம், சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கிய போக்கு வெறுமனே அரசியல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் அகநிலை கொள்கைகளின் விளைவல்ல, மாறாக அவை முதலாளித்துவத்தின் வீழ்ச்சி மற்றும் நோய்பீடித்த காலக்கட்டத்தில் அதன் அடிப்படை போக்குகளின் ஒரு வெளிப்பாடாகும் என்று விளங்கப்படுத்தினார்.

லெனின் எழுதினார், “அரசியல் பிற்போக்குத்தனம் என்பது அதன் முழு நிலைப்பாட்டிலும் "பெரியளவில் ஊழல், இலஞ்சம் மற்றும் எல்லா வகையான மோசடி" ஆகியவற்றால் வரையறுக்கப்படுகின்ற ஏகாதிபத்தியத்திற்கே இயல்பான ஒன்றாகும். சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வங்கிகளின் மேலாதிக்கமானது, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதில் அரசியல் வெளிப்பாட்டைக் காண்கிறது. “நிதியியல் மூலதனம் மேலாதிக்கத்திற்காக போராடுகிறது, சுதந்திரத்திற்காக அல்ல,” என்றவர் எழுதினார்.

இந்த நிதியியல் செல்வந்த தட்டின் குற்றகரமான சுபாவத்திற்கும் வெளியுறவு கொள்கையின் குற்றகரமான சுபாவத்திற்கும் இடையே அங்கே ஒரு தொடர்பு உள்ளது. உள்நாட்டில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு எதிரான போர், மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்க மக்களுக்கு எதிராக அமெரிக்காவினால் தொடங்கப்பட்ட சூறையாடும் போர்களைப் பிரதிபலிக்கிறது. அது பில்லியன்களைத் திரட்டுவதற்காக ஊக வணிக சூதாட்டத்தைப் பயன்படுத்திய நிதியியல் உயரட்டு, அதன் சர்வதேச கொள்கையில் புவிசார்-அரசியல் "அபாயங்களுக்கு தயாராகவும்" (risk-taking) மற்றும் பொறுப்பற்ற மனிதப்படுகொலைகளுக்கும் திரும்புகிறது.

ஆனால் ஏகாதிபத்தியமானது பிற்போக்குத்தனம் மற்றும் போரின் சகாப்தம் மட்டுமல்ல, மாறாக புரட்சியின் சகாப்தமும் கூட என்பதை, 20ஆம் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் அடுத்தடுத்து நிரூபிக்கப்பட்ட, லெனின் தத்துவத்தின் உய்த்தறியப்பட்ட தீர்மானமாகும். இப்போது, முதலாளித்துவத்தின் அடிப்படை குணாம்சங்கள் தம்மைத்தாமே மிக அப்பட்டமான வடிவில் வெளிப்படுத்துகின்ற நிலையில், அதன் விளைவாக கூர்மையடையும் வர்க்க விரோதங்கள் தவிர்க்கவியலாமல் புரட்சிகர மேலெழுச்சிகளுக்கு இட்டுச் செல்லும்.