சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Former French President Sarkozy in Moscow proposes closer ties to Russia

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி மாஸ்கோவில் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளுக்கு முன்மொழிகிறார்

By Stéphane Hugues
31 October 2015

Use this version to printSend feedback

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஐரோப்பாவால் ரஷ்யா மீது திணிக்கப்பட்ட நடப்பு நிதியியல் தடைகளை முடிவுக்குக் கொண்டு வருவது, உக்ரேனிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் சிரிய போரில் ரஷ்யா உடனான ஒரு கூட்டணியை ஜோடிப்பது குறித்து விவாதிக்க புதனன்று மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைச் சந்தித்தார்.

பிரான்சில் பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் (LR) தற்போதைய தலைவரான சார்க்கோசி, 2017 ஜனாதிபதி தேர்தல்களில் மீண்டும் போட்டியிட நோக்கம் கொண்டுள்ளார். வெளியுறவு கொள்கையில் சார்க்கோசிக்கு உத்தியோகப்பூர்வ பாத்திரம் இல்லையென்றாலும், அவரது விஜயம் ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் கொண்ட வாஷிங்டனின் ஆக்ரோஷ கொள்கை குறித்து ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களில் அதிகரித்துவரும் பிளவுகளையே நிரூபணம் செய்கிறது.

மாஸ்கோ பயணம் குறித்து வினவிய போது, வெளிநாட்டில் வாழும் பிரெஞ்சுவாசிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற குடியரசுக் கட்சியின் பிரதிநிதி தியரி மரியானி (Thierry Mariani) கூறுகையில், "ஐரோப்பா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றவொரு குறிப்பிட்ட சேதியுடன்" சார்க்கோசி சென்றுள்ளார் “என்று நான் நினைக்கிறேன்; ஐரோப்பாவிற்குள் பிரான்ஸ் ஒரு குறிப்பிட்ட பாத்திரம் வகித்து வருகிறது மற்றும் எனது பார்வையில் பிரான்ஸ் நீண்டகாலமாக அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. … நாங்கள் முற்றிலும் அமெரிக்க கொள்கையோடு அணிசேர்ந்துள்ளோம்,” என்று மழுப்பலாக தெரிவித்தார்.

தடையாணைகள் மூலமாக ரஷ்யாவை நிதியியல்ரீதியில் தவிக்கவிடும் மற்றும் உக்ரேனிலும் சிரியாவிலும் ரஷ்ய-ஆதரவிலான படைகளை நசுக்கும் அமெரிக்க கொள்கைகளோடு பெரிதும் முரண்பட்ட கடும்போக்குடன் ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரலைச் சார்க்கோசி மாஸ்கோவில் முன்வைத்தார்.

“ரஷ்யா உடனான ஒரு புதிய பனிப்போர்" என்று முன்னதாக விமர்சிக்கப்பட்ட உக்ரேனிய நெருக்கடி குறித்து சார்க்கோசி கூறுகையில், அந்நெருக்கடியின் முடிவு கண்ணுக்குத் தெரிவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், அவர்கள் "சரியான பாதையில்" இருப்பதாகவும் தெரிவித்தார். “[கிழக்கு உக்ரேனிய] பிரிவினைவாதிகளை மின்ஸ்க் உடன்படிக்கைகளுக்கு ஒப்புக்கொள்ள அவர்களுக்கு அழுத்தமளிக்குமாறு" அவர் புட்டினைக் கேட்டுக் கொண்டார்.

நேட்டோவின் கியேவில் உள்ள கைப்பாவை உக்ரேனிய ஆட்சியிடம் கிரிமியாவை ரஷ்யா ஒப்படைக்குமாறு அமெரிக்கா தொடர்ந்து கோரி வருகின்ற நிலையில், சார்க்கோசி புட்டினிடம் தெரிவித்தார்: “நான் அறிந்த வரையில், கிரிமியாவை உக்ரேனுக்குத் திருப்பியளிக்க கோருவதற்கு யாருக்கும் தகுதியில்லை … உக்ரேனைப் பலவந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒருங்கிணைத்துக் கொள்ள விரும்புபவர்கள் ஓர் அர்த்தமற்ற கொள்கையைத் தான் பின்பற்றுகிறார்கள். உக்ரேனை ஏதேனும் ஒரு பக்கம் எடுக்க நீங்கள் பலவந்தப்படுத்தினால், நீங்கள் அதை மற்றொரு தரப்பிலிருந்து வெட்டி விடுகிறீர்கள் என்றாகும். நீங்கள் சிதறடிக்கிறீர்கள், அது தான் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது.”

சிரியா விடயத்தில், சார்க்கோசி சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ ஆட்சி மாற்ற கொள்கையை நிராகரிக்கவில்லை, மாறாக சிரியாவில் நேட்டோ ஆதரவிலான இஸ்லாமிய எதிர்ப்புடன் ஏதோவொரு விதமான தீர்வுக்கு பேரம்பேசுவதன் மூலமாக அசாத்தை வெளியேற்றும் ஒரு கொள்கைக்கு ரஷ்யாவின் ஆதரவை வென்றெடுக்க முயன்றார்.

“பஷர் அல்-அசாத்தின் கீழ் சிரியாவில் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தைக் கொண்டு வர முடியாது,” என்று கூறிய சார்க்கோசி, ஆனால் "பாத் கட்சியிலோ அல்லது அல்வைட் சிறுபான்மையிலோ, அவரது குடும்ப பதவிகளிலோ" ஒரு தீர்வைக் காண்பதற்கு அசாத்தை வெளியேற்றுவது ஒரு "முன்நிபந்தனையல்ல" என்றார். “'இறுதி வரையில் அசாத்' என்பதற்கும் 'நாளையே அசாத்தின் வெளியேற்றம்' என்பதற்கும் இடையே நாம் ஒரு சமரசத்தைக் காண வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். இதில் புட்டின் நிலைப்பாடு "மக்கள் கூறுவதை விட இலக்கிற்கு மிகவும் நெருக்கமாக" இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக சார்க்கோசி தெரிவிக்கையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளால் ரஷ்யா மீது கொண்டு வரப்பட்ட "தடையாணைகளை நீக்குவதற்கான ஒரு தெளிவான முன்னோக்கிற்காக" அவர் இருப்பதாக தெரிவித்ததுடன், “ஐரோப்பா பலவீனமாக மற்றும் பிளவுபட்டிருப்பதாக தெரிந்தாலும் கூட, அதை குறைமதிப்பீடு செய்ய வேண்டாமென்றும், அது எப்போது வேண்டுமானாலும் மீள்எழுச்சிபெறுமென்றும்" புட்டினைக் கேட்டுக் கொண்டார்.

புட்டினுடன் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் தடைகளை அகற்றும் சார்க்கோசின் இப்போதைய முயற்சி, அவர் ஜனாதிபதியாக இருந்த போது பின்பற்றிய கொள்கைகளோடு அப்பட்டமாக முரண்படுகிறது. 2007 இல் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவர் "சார்க்கோசி அமெரிக்கர்" என்ற புனைப்பெயர் பெற்றிருந்தார். அமெரிக்காவின் ஈராக்கிய போருக்கு ஆதரவாக அவர் பிரெஞ்சு கொள்கையை வைத்திருந்தார், 2002-2003 இல் பிரெஞ்சு அரசாங்கம் அதை எதிர்த்திருந்தது, பின்னர் அவர் பிரான்சை மீண்டும் நேட்டோவிற்குள் கொண்டு வந்தார். 2011 லிபியா போரில் சார்க்கோசி அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகளோடும் நெருக்கமாக வேலை செய்தார்.

நாட்டின் வெளியிலிருந்து பிரெஞ்சு வெளியுறவு கொள்கையைச் சார்க்கோசி "கேள்விக்குட்படுத்த" கூடாதென பாரீஸிலிருந்து பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார். வால்ஸ் கூறுகையில், “இன்று நாம் செயல்படுத்தி வருகின்ற கொள்கைகளை எதிர்கட்சி தலைவர்கள் கேள்விக்குட்படுத்த கூடாதென நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். … நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது நாங்கள் அதுபோன்ற நடந்து கொண்டதாக எனக்கு எதுவும் நினைவில் இல்லை,” என்றார்.

எவ்வாறிருந்தபோதினும், புட்டினை மிகவும் வித்தியாசமான சூழலில் கோர்த்துவிடும் சார்க்கோசியின் முடிவு ஐரோப்பிய வெளியுறவு கொள்கை வட்டாரங்களின் பரந்த கவலைகளைப் பிரதிபலிக்கிறது. உக்ரேனிய பாசிசவாதிகள் மற்றும் இஸ்லாமிக் அரசு (ISIS) பயங்கரவாதிகளுடன் பினாமி போர்களை நடத்தும் அமெரிக்காவின் ஆக்ரோஷ கொள்கைகள் ஐரோப்பாவில் ஓர் அதிகரித்த நெருக்கடியை உருவாக்கி வருகின்றன என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் அகதி நெருக்கடியுமே கூட ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக் மற்றும் இப்போது சிரியாவில் நடக்கும் அதுபோன்ற போர்களின் விளைவுகளாகும்.

அமெரிக்காவிற்கும் ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையே தீவிரமடைந்துவரும் மோதல்களுக்கு இடையே, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் நேட்டோவிற்கும் மற்றும் ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவிற்கும் இடையே ஒரு "முழு அளவிலான போர்" அபாயம் குறித்து மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார்.

சார்க்கோசியின் விஜயத்திற்கு அடுத்த நாள், ஜேர்மனியின் துணை-சான்சிலர் சிக்மர் காப்ரியல் புட்டினுடன் அதேபோன்றவொரு விவாதம் நடத்துவதற்கு மாஸ்கோ சென்றடைந்தார். “இப்போதைய நாட்களில், சிரிய மோதல் சம்பந்தப்பட்ட பெரும் வேலைகளுக்கு இடையிலும், [புட்டின்]” அவரை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக காப்ரியல் புட்டினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான பிரச்சினைகள், குறிப்பிட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராக சண்டையிடுவதற்கான அவர்களது பொதுவான தகைமையை ஆழமாக மட்டுப்படுத்துவதாக காப்ரியல் தெரிவித்தார்.

“நாம் எட்டியுள்ள உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த சாத்தியமான அளவிற்கு நம்மால் ஆனமட்டும் அனைத்தும் செய்ய வேண்டும் மற்றும் சம்பவங்களின் கடந்தகால சூழல்கள் மற்றும் பல்வேறு பொருள்விளக்கங்களைப் பொறுத்த வரையில், நாம் அவற்றை கடந்த காலத்திலேயே விட்டுவிட்டு, குறிப்பாக ஜேர்மனி மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கூட்டுறவைப் புதுப்பிக்க புதிய வழிகளைக் காண வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்,” என்பதையும் காப்ரியல் சேர்த்துக் கொண்டார்.