சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Erdoğans AKP wins surprise fourth term amid escalating violence in Turkey

துருக்கியில் தீவிரமடைந்துவரும் வன்முறைக்கு இடையே, எர்டோகனின் AKP கட்சி ஆச்சரிமூட்டும் வகையில் நான்காவது முறையாக பதவியை வென்றது

By Halil Celik and Alex Lantier
2 November 2015

Use this version to printSend feedback

ஞாயிறன்று துருக்கியில் நடந்த இடைத் தேர்தலில், ஆரம்ப முடிவுகளின்படி, ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) ஒரு பலமான நாடாளுமன்ற பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது. ஜூன் 7 தேர்தலில் AKP க்கு பெரும்பான்மை கிடைக்காததால், அதன் விளைவாக ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைந்திருந்தது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், AKP 49.4 சதவீத வாக்குகளுடன், துருக்கியின் 550 ஆசன நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 316 ஆசனங்களுடன் ஒரு சௌகரியமான பெரும்பான்மை பெற்றது. ஜூனில் பதிவான 85.8 சதவீத வாக்குப்பதிவை விட அதிகமாக, 87.3 சதவீத வாக்குகள் பதிவாயின.

25.4 சதவீத வாக்குகள் மற்றும் அண்மித்தளவில் 134 ஆசனங்களோடு, கீமலிச குடியரசு மக்கள் கட்சி (CHP), ஜூன் தேர்தல் முடிவுகளில் கிடைத்ததை விட எதிர்பார்த்த அதிக வாக்குகளைப் பெற தவறியது. நீண்டகாலமாக துருக்கி முதலாளித்துவ வர்க்கத்தினது விருப்பத்திற்குரிய ஆட்சி கட்சியாக இருந்துவந்த CHP, துருக்கியின் 81 மாகாணங்களில் வெறும் ஆறில் மட்டுமே முதலாவதாக வந்தது.

ஞாயிறன்று இரவு CHP தலைவர் Kemal Kilicdaroglu ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் சுருக்கமாக பேசினார்: இன்றைய முடிவு CHP மீது இன்னும் அதிக பொறுப்புகளைச் சுமத்துகிறது ஜூன் 7 இல் நாங்கள் ஏற்றுக்கொண்டதைப் போலவே இன்றைய முடிவையும் நாங்கள் மதித்து ஏற்றுக் கொள்கிறோம். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக யாரும் தன்னைத்தானே கருதக்கூடாது, ஒவ்வொரு குடிமக்களின் வாழ்வும் உடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும், என்றார்.

தீவிர-வலது தேசிய இயக்க கட்சி (MHP) மற்றும் குர்திஷ்-ஆதரவான மக்களின் ஜனநாயக கட்சி (HDP) இரண்டுமே ஜூன் தேர்தல்களோடு ஒப்பிடுகையில் வாக்குகள் இழந்திருந்தன. MHP 16 சதவீதத்திலிருந்து 11.9 சதவீதத்திற்குச் சரிந்திருந்தது, HDP இன் வாக்குகள் 13 சதவீதத்திலிருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதற்குரிய வரம்பான 10 சதவீதத்திற்கு சற்று அதிகம் என்றளவிற்குக் குறைந்து போயிருந்தது.

இத்தேர்தல்கள் தீவிரமடைந்திருந்த வன்முறை மற்றும் அரசியல் கொந்தளிப்பிற்கு இடையே நடந்திருந்தன. துருக்கிய பாதுகாப்பு படைகளுக்கும் தென்கிழக்கு துருக்கியின் குர்திஷ்-பெரும்பான்மை பகுதிகளில் உள்ள குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) அங்கத்தவர்களுக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது, மேலும் சிரியாவில் சிரிய குர்திஷ் போராளிகளை நசுக்க அண்டைநாடான சிரியாவின் உள்நாட்டு போரில் நேரடியாக தலையீடு செய்ய AKP அரசாங்கம் அச்சுறுத்தி உள்ளது.

அச்சமூட்டும் சூழ்நிலையோடு சேர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தின் போது தொடர்ச்சியான மரணகதியிலான குண்டுவெடிப்புகள் குர்திஷ் அமைப்புகள் மற்றும் HDP கூட்டங்களை இலக்கில் வைத்திருந்தன. அந்த குண்டுவெடிப்புகளுக்கு அண்டைநாடுகளான சிரியா மற்றும் ஈராக்கின் இஸ்லாமிக் அரசு (IS) போராளிகள் மீது AKP பழிசாட்டியது, ஆனால் துருக்கியில் பலர் அவற்றிற்காக AKP மீதே பழிசாட்டினர், அது நீண்டகாலமாக IS இன் பிரதான ஆதரவாளர்களில் ஒன்றாக இருந்துள்ளது.

அப்பிரச்சாரத்தின் போது, துருக்கியில் தவித்து நின்றிருந்த நூறாயிரக் கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவிற்கு வெளியேறினர், அது துருக்கிய நகரங்கள் மற்றும் கடல்புற பகுதிகளில் பெருகியளவில் மிகவும் மோசமான காட்சிகளுக்கு இட்டுச் சென்றது.

செய்தி ஒளிபரப்புகளில் செல்வாக்கு செலுத்தவும் மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்யவும், AKP, சுமார் 32 நாளிதழ்கள் மற்றும் 22 தொலைக்காட்சி சேனல்கள் உட்பட ஊடகங்கள் மீதிருந்த அதன் பலமான பிடியைப் பாவித்தது. அத்தேர்தல்களுக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான், எதிர்கட்சிகளுக்கு ஆதரவான பிரதான செய்தி வடிகாலாக இருந்துவந்த Koza-Ipek ஊடக பெருநிறுவனத்தைத் தாக்கி, ஒளிபரப்பை நிறுத்த பாதுகாப்பு படைகளுக்கு அது உத்தரவிட்டது.

அப்பிரச்சார பதட்டங்களுக்கு இடையே, அங்கே வாக்கெடுப்பின் போது நடந்த வன்முறை குறித்து எந்த செய்திகளும் இல்லை. PKK மற்றும் துருக்கிய படைகளுக்கு இடையே சண்டை நடந்துவரும் பகுதிகளில் பரந்த பாதுகாப்பு ஆயத்தப்பாடுகளுக்கு இடையே, 32 மாகாணங்களில், வாக்குப்பதிவு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக மாலை 4 மணிக்கே நிறுத்தப்பட்டது. சில பகுதிகளில் வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு படைகளிடமிருந்து தங்களைத்தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்காக உள்ளூர்வாசிகளால் அமைக்கப்பட்ட பதுங்குக்குழிகள் மற்றும் தடையரண்களுக்குப் பின்னால் இருந்ததால், அவற்றை வழமையான இடங்களிலிருந்து இடம் மாற்ற வேண்டியிருந்தது.

அத்தேர்தலுக்குப் பின்னர், எவ்வாறிருப்பினும், அந்நாட்டின் குர்திஷ்-பெரும்பான்மையினரைக் கொண்ட அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான Diyarbakır இல் HDP ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. பாதுகாப்பு படையினர் நீர்ப்பீய்ச்சிகளையும் கண்ணீர் புகைக்குண்டுகளையும் பிரயோகித்தனர்.

என்னால் இதை நம்ப முடியவில்லை. எனக்கு மனமே உடைந்துவிட்டது. [AKP] திருடுகிறது, கொலை செய்கிறது, அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் அழுத்தமளிக்கிறார்கள், அவர்கள் பத்திரிகைகளை வாய்மூட செய்கிறார்கள், இருந்தும் அவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத்தின் மீதே நான் நம்பிக்கை இழந்துவிட்டேன், இது Diyarbakır இல் ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியர் கார்டியனுக்குத் தெரிவித்தது.

குர்திஷ் மற்றும் துருக்கிய அரசாங்க படைகளுக்கு இடையே சண்டை தீவிரமடைந்து வருவது குறித்தும், HDP ஐ குறித்தும் ஏனையவர்கள் நிறைய விமர்சனப்பூர்வமாக இருந்தார்கள். இந்த படுமோசமான முடிவுகள் எவ்வாறு ஏற்பட்டதென்று கட்சி தன்னைத்தானே கேட்டு கொள்ள வேண்டும் என்பதையே இது காட்டுகிறது, என்று ஒரு Diyarbakır கடைக்காரர் கருத்துரைத்தார்.

AKP அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டு அத்தேர்தலை ஒரு வெகுஜன வாக்கெடுப்பாக மாற்றியதன் மூலமாக அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில், அங்கே எர்டோகனின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு மக்கள் ஆதரவு மிகக் குறைவாகவே உள்ளது. சிரியாவில் அமெரிக்க-தலைமையிலான பினாமி போரில் அவர் ஈடுபட்டமை ஆழமாக மக்கள் செல்வாக்கற்றதாகும், மற்றும் முன்னர் வளர்ச்சியிலிருந்த துருக்கிய பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகின்ற நிலையில், அங்கே சுரண்டல் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகளவில் எதிர்ப்பு உள்ளது.

இத்தகைய சமூக முரண்பாடுகளை ஒடுக்கவும், பிரதான எதிர்கட்சிகளின் திவால்நிலைமையைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக ஜனாதிபதி அலுவலகத்தின் மத்தியில் அதிக சர்வாதிகார ஆட்சி வடிவங்களைத் திணிக்கவும் எர்டோகன் நோக்கம் கொண்டுள்ளார். CHP, ஊதியங்கள் மற்றும் சமூக செலவினங்களை உயர்த்தும் என்ற வாக்குறுதிகளின் மீது அதன் பிரச்சாரத்தை ஒருங்குவித்திருந்தது, பெருந்திரளான துருக்கியர்கள் அதை நம்புவதாக இல்லை, அதேவேளையில் அமைதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான முறையீடுகளை அது வெளியிட்டமை AKP இன் கரங்களில் விளையாடியது. துருக்கியில் நேட்டோ மற்றும் இராணுவ ஆட்சிக்குழுக்கள் உடனான தொடர்புகளில் அதன் நீண்ட வரலாறைக் கொண்டுள்ள அது, எர்டோகனின் பிற்போக்குத்தனமான வெளிநாட்டு கொள்கை மீதான மக்கள் அதிருப்திக்கு முறையீடு செய்யவில்லை.

குர்திஷ் தரப்பைப் பொறுத்த வரையில், அங்கே HDP மற்றும் PKK க்கு இடையிலான பிளவுகள் விரிவடைந்து வருகின்றன, அத்துடன் சிரிய போரைத் துருக்கிக்குள் இறக்குமதி செய்ய அச்சுறுத்துகிற துருக்கிய அரசாங்கத்திற்கு எதிராக ஓர் உள்நாட்டு போர் மீண்டும் தொடங்கப்படுவது குறித்த புரிதல் மீது துருக்கியின் குர்திஷ் மக்களுக்குள் மிக பரந்தளவில் பிளவுகள் உள்ளன.

பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் AKP இன் இரும்புப்பிடியாக விளங்கும் கொன்யாவில் முதல் வெற்றியுரை ஆற்றினார். நமது ஜனநாயகம் மற்றும் நமது மக்களுக்கு இன்று ஒரு வெற்றி நாளாகும். நாங்கள் அடுத்த நான்காண்டுகள் உங்களுக்காக இன்னும் சிறப்பாக ஆட்சி செய்து, 2019 இல் மீண்டும் உங்கள் முன்வந்து நிற்போமென நம்பலாம், என்று அறிவித்தார்.

அன்காராவில் AKP தலைமையிடத்தின் மேல்மாடத்திலிருந்து பின்னர் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்: நாடாளுமன்றத்தில் நுழையும் சகல கட்சிகளும் மக்களுக்கான ஒரு புதிய தேசிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நான் அழைப்புவிடுக்கிறேன். மோதல், பதட்டம், துருவமுனைப்பாடு இல்லாத மற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் சமாதானத்தோடு வணங்கும் ஒரு துருக்கியை நோக்கி நாம் ஒன்றாக பணியோற்றுவோம், என்றார்.

ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மையோடு AKP அரசாங்கம் ஒன்று உருவாவது, துருக்கியில் எளிதில் கையாளமுடியாத சமூக மற்றும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை, அது சர்வதேச பொருளாதார நெருக்கடியிலும் மற்றும் மத்திய கிழக்கின் தேசிய-அரசு அமைப்புமுறையின் முன்பினும் அதிக இரத்தந்தோய்ந்த உடைவிலும் வேரூன்றியுள்ளது. இந்த நெருக்கடியின் எந்த உந்துசக்திகளையும் துருக்கியின் எல்லைக்குள்ளே ஆளும் வர்க்கத்தால் கட்டுப்படுத்த முடியாது.

உழைக்கும் மக்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளது பாதிப்பின் கீழ், ஐரோப்பாவின் பொருளாதார கீழ்நோக்கிய சரிவு துருக்கியின் பிரதான ஏற்றுமதி சந்தைகளைப் பலவீனப்படுத்தி வருகிறது. அத்துடன் அந்நாட்டின் பொருளாதாரம் அமெரிக்க வட்டிவிகிதங்களின் சாத்தியமான உயர்வு சார்ந்த கருணையில் தங்கியுள்ள பெரும் வெளிநாட்டு மூலதன உள்வரவைச் சார்ந்துள்ளது. மத்தியக் கிழக்கின் ஏனையப் பகுதிகளில் இருக்கும் துருக்கியின் சந்தைகள், ஏதேனும் அவ்வாறு இருந்தால், அவையும் போர் தாக்கத்திற்கும், சிரியா, ஈராக் மற்றும் அதற்கு அங்காலும் பரவியுள்ள இரத்தக்களரிக்கு இன்னும் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன.

சிரிய உள்நாட்டு போரில் அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள், ரஷ்யா மற்றும் ஈரான் ஈடுபடும் ஒரு மோதலாக தீவிரமடைந்துள்ள நிலையில், அதில் துருக்கி சம்பந்தப்பட்டமை, படுபயங்கரமான விளைவுகளோடு துருக்கியை அச்சுறுத்துகிறது. சிரிய குர்திஷ் குழுக்களுக்கு அதன் எதிர்ப்பானது, சிரிய குர்திஷ் மற்றும் அரபு எதிர்ப்பு போராளிகளுக்கு இடையிலான ஒரு கூட்டணியை வாஷிங்டன் நேரடியாக ஆயுதமேந்த செய்ய தொடங்கியுள்ளதால் வாஷிங்டனுடன் மட்டும் அதை மோதலுக்குக் கொண்டு வராது, மாறாக துருக்கிக்குள்ளேயே கூட ஒரு நீண்டகால உள்நாட்டு போரைத் தூண்டிவிடும்.

அமெரிக்காவில் உள்ள புரூகிங்ஸ் பயிலக சிந்தனைக் குழாமின் ஒரு சமீபத்திய அறிக்கையில் Sinan Ekim மற்றும் Kemal Kirisci கூறுகையில், இந்த துருவமுனைப்பாட்டை துருக்கியால் எவ்வாறு கடக்க முடியும்? அதைக் கூற முடியாது, என்றனர். ஓர் உள்நாட்டு போரின் விளிம்பிலிருந்து துருக்கியை விலக்கி வைப்பது அந்நாட்டின் அடுத்த அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.