சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

US ramps up pressure on Beijing over South China Sea

தென் சீனக் கடல் விவகாரத்தில் பெய்ஜிங் மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிக்கிறது

By Peter Symonds
4 November 2015

Use this version to printSend feedback

தென் சீனக் கடலில் சீனா உரிமைக்கோரும் எல்லைக்குள் அதன் கடந்த வார ஆத்திரமூட்டும் போர்க்கப்பல் தலையீட்டைத் தொடர்ந்து, ஒபாமா நிர்வாகம் அந்த வெடிப்பார்ந்த பிரச்சினையில் சீனா மீது அழுத்தத்தை அதிகரிக்க முயலும் வகையில், ஆசியா எங்கிலும் ஓர் ஆக்ரோஷமான இராஜாங்க தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

 

 

 

 

 

 

 


அக்டோபர் 27 இல், (மேலே உள்ள) USS லாசென் போர்க்கப்பல் சீனா உரிமைக்கோரும் எல்லைக்குள் 12 கடல்மைல் தூரம் நுழைந்தது

அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் ஹாரி ஹாரீஸ், பெய்ஜிங்கிற்கான அவரது பயணத்தின் போது நேற்று வேண்டுமென்றே பதட்டங்களைத் தூண்டினார். “எங்கெல்லாம் எப்போதெல்லாம் சர்வதேச சட்டம் அனுமதிக்கிறதோ,” அமெரிக்க இராணுவம் "தொடர்ந்து விமானங்களைப் பறக்கவிடும், கப்பல்களைச் செலுத்தும் மற்றும் செயல்பாடுகளை நடத்தும். தென் சீனக் கடல் அதில் விதிவிலக்கல்லவிதிவிலக்காகவும் இருக்காது,” என்றவர் உறுதியாக அறிவித்தார்.

சீனா கட்டுப்பாட்டிலுள்ள கடல்குன்றுகளைச் சுற்றி 12 கடல்மைல் தூரத்திற்குள் "கடல்போக்குவரத்துக்கான சுதந்திர" நடவடிக்கைகளுக்கு பச்சைவிளக்கு காட்டுமாறு ஹாரீஸ் மாதக்கணக்காக ஜனாதிபதி ஒபாமாவிற்கு அழுத்தமளித்து வந்தார். அப்பிராந்தியத்தில் சீனாவின் நிலச்சீரமைப்பு நடவடிக்கைகளை "ஒரு மிகப்பெரும் நிலச்சுவரை" உருவாக்கி வருவதாக வர்ணித்து, அது ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்துவதாக அட்மிரல் மார்ச் மாதம் சூசகமாக தெரிவித்திருந்தார்.

ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல் USS லாசென், அக்டோபர் 27 இல், ஸ்ப்ராட்லி தீவுக்கூட்டங்களில் சீன-நிர்வாகத்தில் உள்ள குறைந்தபட்சம் ஒரு கடல்குன்றிலிருந்து 12 கடல்மைல் எல்லைக்குள் ஊடுருவியது. அது பெய்ஜிங் உரிமைகோரல்களுக்கு விடுக்கப்பட்ட அதுபோன்ற முதல் சவாலாகும். சர்வதேச சட்டத்தின் கீழ் சீனாவின் கடல்குன்றுகளில் பல, அந்த நிலச்சீரமைப்பிற்கு முன்னதாக, பேரலைகளுக்கு அடியில் இருந்ததாகவும், ஆகவே அது கடல்எல்லைகளுக்குள் வராது என்றும் வாஷிங்டன் வலியுறுத்துகிறது. ஆனால் இந்த வலியுறுத்தலுக்கு அடித்தளமாக இருக்கும் கடல்சார் சட்டம் மீதான ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

USS லாசென் வெறுமனே வழமையான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக ஹாரீஸ் நேற்று அறிவித்தார். “நாங்கள் பல தசாப்தங்களாக உலகெங்கிலும் சுதந்திர கடல்போக்குவரத்து நடவடிக்கைகளை நடத்தி வருகிறோம், ஆகவே அவற்றால் யாரும் ஆச்சரியமடைய வேண்டியதில்லை,” என்றவர் தெரிவித்தார்.

யதார்த்தத்தில் சீன உரிமைகோரலை வேண்டுமென்றே மீறுவதற்கும், சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் தாங்கிபிடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு மாறாக அது ஒபாமா நிர்வாகத்தின் பரந்த "ஆசியாவை நோக்கிய முன்னிலையின்" ஒரு கூறுபாடாக உள்ளது —இது, அவசியமானால் இராணுவத்தைக் கொண்டும், சீனாவை தனிமைப்படுத்துவதை மற்றும் அமெரிக்க நலன்களுக்கு அதை அடிபணிய வைப்பதை நோக்கமாக கொண்ட இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவம் என மொத்தத்தையும் உள்ளடக்கிய மூலோபாயமாகும்.

ஹாரீஸின் கருத்துக்களுக்காக பெய்ஜிங்கில் சீன அதிகாரிகள் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர். மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமை தளபதி Fang Fenghui, “நமது சந்திப்பில் ஓர் அபாயகரமான சூழலை" உருவாக்குவதற்காக அவரைக் குற்றஞ்சாட்டினார். வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் Hua Chunying கடிந்துரைக்கையில், தென் சீனக் கடல் பிராந்தியத்திற்குள் போர்க்கப்பல்களை அனுப்பியதுடன், அப்பிராந்தியத்தில் பெய்ஜிங் இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டுமென கோரும் அமெரிக்காவின் "பாசாங்குத்தனம் மற்றும் மேலாதிக்கவாதத்தை" (hegemonism) குற்றஞ்சாட்டினர்.

அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான மோதல் அபாயத்தை ஹாரீஸ் குறைத்துக் காட்ட முயன்றார், அவர் கூறினார்: “எங்கள் நாடுகளுக்கிடையே மோதல் வரவிருப்பதாக சில பண்டிதர்கள் அனுமானிக்கின்றனர். இந்த எதிர்மறையான பார்வையை நான் ஏற்க மாட்டேன்.”

தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு முன்னால் பெய்ஜிங் பின்வாங்க வேண்டுமென்று வாஷிங்டன் எதிர்பார்க்கிறது என்பதை மறைமுகமாக உள்ளே கொண்டிருக்கும் இக்கருத்துக்கள், உண்மையில் மோதல் அபாயங்களை அதிகரிக்கிறது. மூலோபாயரீதியில் உணர்வுபூர்வமான அத்தகைய பகுதியில் சீனா காலவரம்பின்றி விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்காது. சீனப் பாதுகாப்பு மந்திரி Chang Wanquan அவரது அமெரிக்க சமதரப்பான அஷ்டன் கார்ட்டரை நேற்று மலேசியாவில் எச்சரிக்கையில், தென் சீனக் கடலில் அமெரிக்க நடவடிக்கைகளை பொறுத்த வரையில் அங்கே ஒரு "பொறுமைக்கோடு" உள்ளது என்றார்.

ஒரு பெயர்வெளியிட விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி நேற்று ராய்டருக்கு கூறுகையில், கடந்த வாரத்தின் கடற்படை ஊடுருவலை "சுமார் காலாண்டுக்கு இரண்டு முறையோ அல்லது சற்றே அதற்கு அதிகமாகவோ" திரும்பவும் செய்ய நோக்கம் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதுபோன்றவொரு கால அட்டவணையை "அது வழமையானதாக" செய்யும் "ஆனால் நிலையானதாக செய்யாது" என்றார். இருப்பினும் சீனாவை விடையிறுக்கச் சீண்டிவிடும் ஒரு நிலையான அவமதிப்பைத் தான் துல்லியமாக அமெரிக்க நடவடிக்கைகள் கொண்டுள்ளன.

அமெரிக்க பாதுகாப்பு செயலர் கார்ட்டர், ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான (ASEAN) பாதுகாப்பு மந்திரிமார்களது அமைப்பின் இவ்வார கூட்டத்தில் கலந்து கொள்ள கோலாலம்பூரில் உள்ளார். சீனாவை திட்டமிட்டு அவமதிக்கும் மற்றொரு நடவடிக்கையாக, அமெரிக்காவும் ஜப்பானும் இரண்டுமே தென் சீனக் கடலை அக்கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலில் கொண்டு வரவும் மற்றும் தீர்மான அறிக்கையில் உள்ளடக்கவும் அழுத்தமளித்து வருகின்றன.

கார்ட்டர் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உயர்மட்ட ஆதரவைப் பெற ஆசியா வந்துள்ளார். மலேசியாவிற்குச் செல்வதற்கு முன்னதாக, அவர் தென் கொரியா விஜயம் செய்தார். அங்கே பாதுகாப்பு மந்திரி ஹன் மின்-கூ வாஷிங்டனின் வரிகளையே கிளிப்பிள்ளைப் போல திரும்ப ஒப்பித்தார். “கடல்போக்குவரத்து சுதந்திரம் மற்றும் விமானங்கள் பறப்பதற்கான சுதந்திரத்தை இப்பிராந்தியத்தில் உறுதிப்படுத்தி வைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு" என்றவர் அறிவித்தார். வாஷிங்டனிடமிருந்து வரும் அழுத்தங்களைச் சுட்டிக்காட்டி, யொன்செ (Yonsei) பல்கலைக்கழகத்தின் ஒரு துணை பேராசிரியர் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குத் தெரிவிக்கையில், “தூர தேச கடல் பிரச்சினைகளில் கொரியர்களையும் இழுக்க அமெரிக்கர்கள் முயல்கின்றனர்,” என்றார்.

மலேசிய பாதுகாப்பு மந்திரி ஹிஷாமுதின் ஹூசைன் ஆசியான் பாதுகாப்பு மந்திரிமார் கூட்டத்தைத் தொடங்கி வைக்கையில் தென் சீனக் கடலைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை, ஆனால் வேறொரு செய்தியாளர் கூட்டத்தில் எச்சரிக்கையோடு அமெரிக்காவிற்குச் சிறிது ஆதரவைக் காட்டினார். அப்பிராந்தியத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் "சர்வதேச கடல்களில்" செயல்படுவதற்கான அவர்களது உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்றார். இருப்பினும் அவர், அது பாதுகாப்பு மந்திரிமார்களின் வரம்புக்குள் அல்ல வெளியுறவு மந்திரிமார்களின் வரம்புக்குள் வருகிறது என்று கூறி, அப்பிரச்சினை குறித்து எதுவும் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டார்.

ஹிஷாமுதினின் கருத்துக்கள் அதிகரித்துள்ள பதட்டங்கள் மீது ஆசியான் அங்கத்துவ நாடுகளிடையே நிலவும் நடுக்கத்தைக் காட்டுகிறது. வாஷிங்டனின் ஆக்ரோஷ நிலைப்பாட்டை பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் முழுமையாக ஆதரித்தாலும், மலேசியா போன்ற ஏனையவை சீனா உடனான அவற்றின் பொருளாதார உறவுகளில் ஏற்படும் பாதிப்பைக் குறித்து கவலைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவை ஆதரிக்கும் ஜப்பானும் தென் கிழக்கு ஆசியாவில் அதன் சொந்த உறவுகளை ஸ்தாபிக்க இப்பிரச்சினையை அனுகூலமாக்கப் பார்க்கிறது. நேற்று அது சீனாவை எதிர்கொள்வதற்காக வியட்நாமின் கடல்ரோந்து படையைப் பலப்படுத்தும் கடந்த ஆண்டு உடன்படிக்கை ஒன்றின் பாகமாக வியட்நாமுக்கு கூடுதலாக இரண்டு ரோந்து படகுகளை வழங்கியது. டோக்கியோ பிலிப்பைன்ஸுடனும் அதேபோன்றவொரு ஏற்பாட்டை சமீபத்தில் செய்தது, பிலிப்பைன்ஸ் சீனாவுடனான அதன் எல்லை பிரச்சினையை ஆக்ரோஷமாக பின்தொடர்ந்து வருகிறது.

தென் சீனக் கடலில் வாஷிங்டன் வேண்டுமென்றே வெடிப்புப்புள்ளிகளைக் கிளறிவிடுவது சீனாவிற்கு எதிராக மட்டும் நோக்கம் கொண்டிருக்கவில்லை, மாறாக பெய்ஜிங் உடன் நெருங்கிய உறவுகளை ஸ்தாபிக்க முயலும் அதன் ஐரோப்பிய போட்டியாளர்களின் முயற்சிகளை வெட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. கார்ட்டர் மற்றும் அட்மிரல் ஹாரீஸின் விஜயங்கள் பிரிட்டனுக்கான சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பயணத்தை அடுத்து வந்தது, அங்கே அவர் அரச மரியாதையோடு உபசரிக்கப்பட்டதுடன், அவ்விரு நாடுகளுக்கும் இடையே பிரதான பொருளாதார உடன்படிக்கைகளையும் இறுதி செய்தார். நெதர்லாந்து அரசர் வில்லெம்-அலெக்சாண்டர், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் ஒவ்வொருவரும் கடந்த வாரங்களில் அவர்களது பெருநிறுவன பரிவாரங்களோடு பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்திருந்தனர்.

இவற்றில் எதுவும் அமெரிக்காவால் கவனிக்காமல் விடப்பட்டிருக்காது, இந்தாண்டின் தொடக்கத்தில் பிரிட்டன், அமெரிக்க எதிர்ப்புகளுக்கு இடையிலும், சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (Asian Infrastructure Investment Bank) கையெழுத்திட்டபோது, அது கடுமையாக பிரதிபலிப்பு காட்டியது. பொருளாதார வழிவகைகளைக் கொண்டு அதன் உலக மேலாதிக்கத்தைப் காப்பாற்றிக் கொள்ள இயலாததால், அமெரிக்கா அதன் போட்டியாளர்களை அல்லது போட்டியாளர்களாக ஆகக்கூடியவர்களைப் பலவீனப்படுத்த மற்றும் அவர்களது உறவுகளைத் தொந்தரவுக்கு உள்ளாக்க அபாயகரமான இராணுவ நடவடிக்கைகளில் அதிகரித்தளவில் தங்கியிருப்பது போர் அபாயங்களை உயர்த்தி வருகிறது.