சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் எதிர்ப்பில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கொடூரமான பொலிஸ் தாக்குதலை நடத்தியது

By our correspondent
1 November 2015

Use this version to printSend feedback

பல கோரிக்கைகளை முன்வைத்து உயர் தேசிய கணக்காளர் பட்டம் (எச்.என்.டி.) கற்கும் மாணவர்கள் கடந்த 29 அன்று கொழும்பில் நடத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு எதிராக சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் கொடூரமான பொலிஸ் தாக்குதலை நடத்தியது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (..மா.) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பிரச்சாரத்துக்கு, எச்.என்.டி.. மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தது.

எச்.என்.டி.. டிப்ளோமா சான்றிதழுக்கு உரித்தாக இருந்த பட்ட சமநிலையை மீண்டும் ஸ்தாபி, எச்.என்.டி.. மாணவர்களின் மஹபொல கொடுப்பனவை 5,000 வரை அதிகரி, உயர் பொறியியல் பாடவிதானங்களை காசுக்கு விற்பதை நிறுத்து போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை சுமந்துகொண்டு சுமார் 500 மாணவர்கள் கொழும்பு கோட்டையில் இருந்து ஊர்வலமாக வந்து, வோர்ட் பிளேசில் உள்ள உயர் கல்வி அமைச்சின் முன்னால் உள்ள வீதியில் அமர்ந்துகொண்டனர். அவர்கள் சுலோகங்களைக் கூறிக்கொண்டு உயர் கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்றைக் கோரினர்.

http://www.wsws.org/sinhala/images/2015/hnda-01n-img3.gif
கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் கொண்டு பொலிஸ் தாக்குதலைத் தொடங்கியது படங்கள்: ஷெஹான் குணசேகர

கேடயம் மற்றும் பொல்லுகளுடன் நின்றிருந்த 200 க்கும் அதிகமான பொலிசாரும், தண்ணீர் பீய்ச்சும் இயந்திரத்துடன் ஆயுதபாணியாகி இருந்த பொலிஸ் கலகம் அடக்கும் பொலிசாரும் வீதித் தடைகளை போட்டு மாணவர்கள் அமைச்சுக்கு செல்வதை தடுத்துக்கொண்டிருந்தோடு, மாணவர்களிடம் வந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், அமைச்சரை பார்க்க முடியாது எனக் கூறி உடனடியாக கலைந்து செல்லுமாறு மாணவர்களுக்கு கட்டளையிட்டார். அதை நிராகரித்த மாணவர்கள், வீதித் தடையை அகற்றுவதற்கு முயற்சித்த உடனேயே கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாக்குதலை நடத்தி பொலி தாக்குதல் தொடங்கியது. தாக்குதலில் இருந்து தப்புவதற்காக ஓடிய மாணவர்களை விரட்டிச் சென்ற பொலிஸ், ஆண் பெண் பாராமல் அவர்களைக் கொடூரமாக தாக்கியது. அடிபட்டு கீழே விழுந்து கிடந்த மாணவிகளையும் அடித்த பொலிசார் அவர்களை தரையில் இழுத்துச் சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றினர். காயமடைந்த ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு 39 மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

http://www.wsws.org/sinhala/images/2015/hnda-01n-img1.gif
அடிபட்டு கீழே விழுந்த மாணவிகளையும் பொலிசார் தாக்குகின்றனர்

போராட்டத்தில் பங்குபற்றிய ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவரான ரொஷான், உலக சோசலிச வலைத் தளத்துடன் தனது அனுபவத்தை விளக்கினார்: “எங்களுக்கு அமைச்சரைப் பார்க்க முடியாது அதனால் கலைந்து செல்லுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அமைச்சரை பார்க்காமல் நகரமாட்டோம் என நாம் கூறினோம். இருக்க வேண்டாம் இருந்தால் மண்டையை உடைப்போம் என அந்த அதிகாரி கூறினார். அதற்குள் சில மாணவர்கள் பொலிஸ் வீதித் தடையை உலுக்கிய போது அது விழுந்துவிட்டது. உடனடியாக பொலிசார் அதிவேகமாக தண்ணீரை அடித்தனர். கண்ணீர் புகை வீசினர். கண்ணீர் புகையை தொலைவில் வீசிவிட்டு முன்னணியில் இருந்த மாணவர்களை சுற்றிவளைத்து பொல்லுகளால் தாக்கினர். எனக்கும் பல பொல்லு அடிகள் விழுந்தன. தப்பி ஓடிய மாணவர்களை தொலை தூரம் விரட்டிச் சென்று பிடித்து அடித்தனர். கைது செய்த மாணவர்களை பொலிஸ் வாகனத்தின் அருகில் வைத்து அடித்து உதைத்தனர். மாணவியரை முழங்காலுக்கு கீழ் அடித்தனர். அவர்கள் கீழே விந்த பின்னரும் கூட அடித்தனர். இரு மாணவர்களது மண்டை உடைந்தது. 30க்கும் அதிகமான மாணவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். நேற்றுவரையும் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கி சகிச்சை பெற்றனர்.”

http://www.wsws.org/sinhala/images/2015/hnda-01n-img2.gif
பொலிஸ் தாக்குதலில் தலையில் காயமடைந்த மாணவன்

போராட்டத்தில் பங்குபற்றிய எச்.என்.டி.. கற்கும் மாணவன் கசுன் குமாரதுங்க தெரிவித்ததாவது: “பொல்லுகள் ஏந்திய கலகம் அடக்கும் பொலிசார் 200 பேர் வரை நிலைகொண்டிருந்தனர். குறைந்தளவு வீதித் தடைகளை போட்டு, தாக்குதல் தொடுப்பதற்கான முன் தயாரிப்புடன் பொலிசார் நின்றிருந்தமை வெளிப்படையாகத் தெரிந்தது. எமது கோரிக்கைகளை அமைச்சரிடம் கையளிக்கவே நாம் இங்கு வந்தோம், எங்களுக்கு பொலிசாருடன் மோதிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என நாம் கூறினோம். எனினும் பொலிசார் எங்களை மிலேச்சத்தனமாகத் தாக்கினர்.”


பொலிஸ் தாக்குதலில் தலையில் காயமடைந்த மாணவி

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துடன் (எஸ்.எல்...டீ..) இணைந்த நான்கு ஆண்டுகால எச்.என்.டி.. கல்விக்கு வாணிபவியலாளர் பட்டத்துக்குரிய சம அந்தஸ்து 30.10.1990 அன்று அரச நிர்வாக அமைச்சினால் 46/90 சுற்று நிரூபத்தின் மூலம் வழங்கப்பட்டது என்றும், 03.04.2014 அன்று 10/2014 சுற்று நிரூபத்தின் மூலம் அது இரத்துச் செய்யப்பட்டது என்றும் எச்.என்.டி.. மாணவர்கள் கூறுகின்றனர். கற்கை நெறியை முடித்துக்கொண்ட பின்னர், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் ஊடாக பணம் கொடுத்து பட்டத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முறையொன்றை திட்டமிடும் நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராவதாக அவர்கள் கூறினர்.

மாணவர்களையும் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கொடுத்த போலி வாக்குறுதிகளுக்கு மாறாக, ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்கள் கடந்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதல், ஒட்டு மொத்த தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுக்கப்படும் கடும் எச்சரிக்கையாகும். அதாவது, அரசாங்கத்தின் எதிர்கால சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது, தலையெடுக்கும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க பொலிஸ்-இராணுவ அதிகாரம் நன்கு பயன்படுத்தப்படும். கடந்த அக்டோபர் 12 அன்று, ஹம்பந்தொட்ட பெந்தகிரிய கிராமத்தவர்கள் துப்பரவான குடி தண்ணீர் கோரி முன்னெடுத்த பிரச்சாரத்துக்கும் பொலிசாரை பயன்படுத்தி தாக்குதல் தொடுத்து, அரசாங்கம் அதன் தயார் நிலையை வெளிப்படுத்தியது.

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டனம் செய்து, தாக்குதலுக்கு கலகம் அடக்கும் பொலிசாரை ஈடுபடுத்தியமை குறித்து இலங்கை பொலிஸ் ஆணைக்குழு விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபற்றுவது இலங்கை அரசியல் யாப்பில் அடங்கியுள்ள உரிமையாகும். இலங்கையும் கைச்சாத்திட்டுள்ள சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமைகள் பிரகடனமும் இந்த உரிமையை ஏற்றுக்கொள்கின்றது. எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது பொலிசாரின் கடமையாகும். எவ்வாறெனினும் கடந்த பல ஆண்டுகளில் பிரஜைகளின் முறையான கூட்டங்களை நடத்துவதற்கான உரிமையை பாதுகாக்கும் கருத்து முழுமையாக காணாமல் போயுள்ளதோடு சகல எதிர்ப்பாளர்களும் அரச எதிரிகளாக கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.”

இந்த அறிவித்தல் மூலம், கூறப்படாமல் உள்ள விடயம் என்னவெனில், பொலிஸ் தாக்குதலின் பின்னணியில் அரசாங்கத்தின் அரசியல் பலம் உள்ளது என்பதும் போலி பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பது இந்த அரசியல் தலைமைகளாலேயே என்பதும் ஆகும்.

ஆயினும், இந்த பொலிஸ் தாக்குதல் மற்றும் மிரட்டலை அலட்சியம் செய்து அந்த தாக்குதலுக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் அதற்கு மறுநாள் (30) களனி, ஜயவர்தனபுர, ரஜரட்ட போன்ற பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் பிரச்சார ஊர்வலங்களில் கலந்துகொண்டு தமது உரிமைகளுக்காகப் போராடுவதற்கான தயார் நிலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

தாக்குதலுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு தோன்றிய நிலையில், தாக்குதல் அரசாங்கத்தின் அனுமதியின்றி நடத்தப்பட்டதாக சித்தரிக்கும் முயற்சியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பவம் சம்பந்தமாக அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு சட்டம், அமைதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரபனவுக்கு கட்டளையிட்டார். இது மோசடி என்பது தெளிவு. மாணவர்கள் மீதான தாக்குதல் அரசாங்கத்தின் கட்டளையின் கீழ் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.

விக்கிரமசிங்கவின் ஜனநாயக முகமூடியின் கீழ், ஒரு கொடூரமான சரித்திரம் அவருக்கு இருக்கின்றது. தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல், கல்வி தனியார்மயமாக்கல் உட்பட இலங்கையில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்துள்ள மட்டுப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி உரிமைகளைக் கூட வெட்டித் தள்ளும் வெள்ளை அறிக்கையை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின் கல்வி அமைச்சராக இருந்து அவர் செயற்பட்டார். 1988/89 காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 60,000 கிராமப்புற இளைஞர்களை கொன்றுதள்ளிய ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராக இருந்த அவர், அந்த படுகொலைகளை மேற்பார்வை செய்தவராவர்.

போர் முடிந்து 6 ஆண்டுகளுக்குப் பின்னரும், தற்போதைய அரசாங்கம் கடந்த மாதம் பாராளுமன்றத்துக்கு முன்வைத்த ஒதுக்கீட்டு மசோதாவின் மூலம் பாதுகாப்புச் செலவுகளுக்காக முன்னெப்போதும் இல்லாதளவு உயர்ந்த, அதாவது 306 பில்லியன் ரூபா தொகையை ஒதுக்கீடு செயதிருப்பது, வேறு எதுவுக்கும் அன்றி, அரசாங்கத்தின் எதிர்கால தாக்குதல்களுக்கு எதிராக எழுச்சிபெறத் தயாராக இருக்கும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை இரத்த வெள்ளத்தில் ஒடுக்குவதற்கே என்பது மிகவும் தெளிவானதாகும்.

அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்க தலைமைத்துவத்தின் கீழ் சோசலிச வேலைத்திட்டத்துக்காக போராடுவதில் இருந்து மாணவர்களை தடுத்து, அவர்களை எதிர்ப்பு அரசியலுக்குள் முடக்கி வைத்திருக்கின்ற ..மா.., இந்த பொலிஸ் தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புச் சொல்ல வேண்டும். போலி இடது அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ..) மூலம் இயக்கப்படும் ..மா.. குறைந்த கெடுதியை தேர்வு செய்துகொள்ளும் கொடூரமான அரசில் பொறிகளுக்குள் மாணவர்களை சிக்க வைத்து, அமெரிக்க சார்பு மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்வதற்காக மறைமுகமாக வக்காலத்து வாங்கியது.

பின்னர் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காகவும் அதே போன்ற பங்கை ஆற்றியது.

சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய ..மா.. “நாங்கள் தங்களது தற்காலிக அரசாங்கத்தின் மூலம் ஏதாவது ஜனநாயக சீர்திருத்தம் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்என்று கூறி, மாணவர்கள் மத்தியில் மாயை ஒன்றை பரப்பச் செயற்பட்டனர். இப்போது ஊடக மாநாடுகளில் பேசும் ..மா.. அழைப்பாளர் லஹிரு வீரசேகர, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒடுக்குமுறை கொள்கையையே நடைமுறைப்படுத்துகிறது எனக் கூறுகின்றார். இதன்படி, மாணவர்களை பொலிஸ் தாக்குதல்களுக்கு உள்ளாக்கி இரு அரசாங்கங்களதும் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதற்கே ..மா.. இந்த எதிர்ப்பை ஏற்பாடு செய்துள்ளது.

ஏதாவதொரு முதலாளித்துவ அரசாங்கத்திடம் இருந்து கல்வி உரிமைகளை வென்றெடுக்கும் பெயரில், அடுத்தடுத்து எதிர்ப்பு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலம், கல்வி வெட்டுக்கு எதிராக வளரும் மாணவர் தீவிரமயமாதலை கரைத்துவிடுவதே இதன் அரசியலாகும். மு.சோ.. போலவே ..மா.ஒன்றியமும், மாணவர்களை தொழிலாள வர்க்க தலைமையின் கீழ் அணிதிரட்டுவதற்கும் தொழிலாள வர்க்கத்தின் வர்க்கச் சுயாதீனத்திற்கும் முழு எதிரியாகும். மாணவர்கள் ..மா.ஒன்றியத்தில் இருந்து தீர்க்கமாக உடைத்துக்கொள்ள வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (.வை.எஸ்.எஸ்..) அமைப்பும் அழைப்பு விடுப்பது இதனாலேயே ஆகும்.

கடந்த டிசம்பரில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கியிருந்த நிலையில், எச்.என்.டி.. மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்துக்கு ராஜபக்ஷ அரசாங்கம் தொடுத்த தாக்குதலை கண்டனம் செய்து சோ... ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் பிரதான அமைச்சராக இருந்துகொண்டு, இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மாணவர் அடக்குமுறையை முழுமையாக அங்கீகரித்திருந்தார். சிறிசேன இப்போது கூட்டுச் சேர்ந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், கல்வி வெட்டுக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் படுகொலைக்கும் பொறுப்பாளியாகும். சிறிசேனவும் அவரை சூழ்ந்துகொண்டுள்ள ஆளும் கும்பலும் ஆட்சிக்கு வந்தால், இதே போன்ற கொடூரமான தாக்குதல்களையே முன்னெடுப்பர்.” இப்போது எம் கண்களின் முன்னால் நிரூபிக்கப்படுவது இதுவே ஆகும்.