சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The UK military, Jeremy Corbyn and the threat of dictatorship

இங்கிலாந்து இராணுவமும், ஜெர்மி கோர்பினும் சர்வாதிகார அச்சுறுத்தலும் 

Chris Marsden
11 November 2015

Use this version to printSend feedback

தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினுக்கு எதிரான இங்கிலாந்து இராணுவ படை தலைவரது பகிரங்க கருத்து பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு மைல்கல்லாகும்.

அவர் ஒருபோதும் அணுஆயுத பிரயோகத்தை அனுமதிக்க போவதில்லை என்ற கோர்பினின் கருத்தைக் குறித்து பாதுகாப்புப்படை தலைவர் சர் நிக்கோலஸ் ஹௌடனிடம் பிபிசி இன் ஆண்ட்ரூ மார் கேட்ட போது, ஹௌடன் பதிலளிக்கையில், “நல்லது, அந்த கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் எனக்கு கவலையளிக்கும்,” என்றார். சிரியாவில் குண்டுவீசும் நடவடிக்கைகளில் பங்குபற்றாமல் இருப்பதன் மூலமாக இங்கிலாந்து அதன் கூட்டாளிகளை "கைவிட்டுள்ளதாக" அவர் முன்னதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

ஒரு ஜனநாயகத்தில் இராணுவம் எல்லா நேரத்திலும் அரசியல்ரீதியில் நடுநிலைமையோடு இருப்பது இன்றியமையாததாகும். தற்போதைய அரசியல் வாதங்களில் பகிரங்கமாக ஒரு தரப்பு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமாக, சேர் நிக்கோலஸ் ஹௌடன் தெளிவாக அரசியலமைப்பு கோட்பாட்டை மீறிவிட்டார்என்று குறிப்பிட்டு கோர்பின் அலுவலகம் பாதுகாப்பு செயலர் மைக்கேல் ஃபலோனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

ஹௌடனைக் கண்டிப்பதை விடுத்து, பிரதம மந்திரி டேவிட் கேமரூனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அரசாங்கத்தின் பிரதான இராணுவ ஆலோசகராக" ஹௌடன்நமது ஆயுதக் களஞ்சியத்தில் மிகவும் முக்கியமான கருவிகள் ஒன்றின் நம்பகத்தன்மையை நாம் எவ்வாறு பாதுகாப்பது என்பதைக் குறித்து பேச" “பொறுப்புள்ளது" என்று குறிப்பிட்டு, அரசாங்கம் விரைவாக அவரை ஆதரிக்க சென்றது.

பிரிட்டனின் முப்படையிலும் அணுஆயுத திட்டத்தை கட்சி கொள்கையில் புதுப்பிப்பதை கோர்பின் எதிர்த்தால் தாங்கள் இராஜினாமா செய்வதாக கூறி, நிழல் அமைச்சரவையின் பாதுகாப்பு செயலர் மரியா ஈகிள் மற்றும் இங்கிலாந்து கடற்படையின் முன்னாள் மூத்த அதிகாரி (sea lord) லோர்டு வெஸ்ட் ஆகியோருடன் தொழிற்கட்சியின் முன்னணி பிரமுகர்களும் ஹௌடனின் பாதுகாப்பிற்காக எதிரொலித்தனர். தொழிற்கட்சியின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் Hutton of Furness பிரபு ரூபெர்ட் முர்டோச்சின் டைம்ஸிற்கு எழுதுகையில், “பாதுகாப்புப்படை தலைவரை வாய்திறக்காமல் செய்ய பயமுறுத்தவோ அல்லது தடுக்கவோ கூடாது,” என்று வலியுறுத்தினார்.

கோர்பினின் நிலைப்பாடு குறித்து அவரிடம் கேட்கப்படுமென்பது ஹௌடனுக்குத் தெரியும், அவரது பகிரங்கமான தாக்குதலை நடத்தும் வெளிப்படையான நோக்கத்திற்காகவே பிபிசி இல் அவர் தோன்றினார். அதுபோன்ற கருத்துகள் வெளியிடப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.

செப்டம்பரில் Sunday Times, கோர்பின் பிரதம மந்திரியானால், அங்கே "ஒரு இராணுவ கலகத்திற்கான" “நிஜமான சாத்தியக்கூறு" ஏற்படுமென்று கூறிய "சேவையிலிருக்கும் மூத்த தளபதியின்" கருத்துக்களைத் தாங்கி வந்தது. இராணுவத்திற்குள் இருக்கும் பிரிவுகள் "நியாயமானதோ அல்லது மோசமானதோ, என்ன வழிவகைகள் எல்லாம் சாத்தியமோ" அவற்றை பிரயோகிக்க தயாரிப்பு செய்யுமென அந்த அதிகாரி அறிவித்தார்.

நேட்டோவிலிருந்து முப்படையைத் திரும்ப பெறுவது மற்றும் ஆயுதப்படைகளின் அளவைக் குறைக்கும் மற்றும் பலவீனப்படுத்தும் ஏதேனும் திட்டங்கள் போன்ற மிகவும் முக்கிய கொள்கை முடிவுகள் மீது மூத்த தளபதிகள் நேரடியாகவும் பகிரங்கமாகவும் சவால்விடுத்து, மரபார்ந்த நடைமுறைகளில் ஒரு பெரும் பிளவுபடுவதை நீங்கள் காணவேண்டியிருக்கும்" என்று கூறுமளவிற்கு அவர் சென்றார். [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

இந்நடவடிக்கை போக்கு முன்பிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதையே ஹௌடனின் கருத்துக்கள் காட்டுகின்றன.

ஹௌடனை ஆதரித்தோ அல்லது வக்காலத்துவாங்கும் வகையிலோ இருந்த எண்ணிறைந்த கட்டுரைகளுக்கு இடையே, ஊடகங்களுக்குள் சிலர், அவரது கருத்துக்கள் ஆயுதப்படை கலகத்தின் ஓர் ஆழ்ந்த அபாயத்தைச் சமிக்ஞை செய்கிறதா என்று பகிரங்கமாக விவாதிக்க நிர்பந்திக்கப்பட்டனர். அவற்றில் குறிப்பிடத்தக்க குறிப்பு திங்களன்று கார்டியன் தலையங்கத்தில் இருந்தது, அது குறிப்பிட்டது: “இந்த நாட்டின் நவீன ஜனநாயக வரலாற்றில் இராணுவ கலகம் ஒன்று ஏற்பட்டிருக்கவில்லை மற்றும் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி கூட நடக்கவில்லை. அதனால் தான் ஜெர்மி கோர்பின் பற்றி பாதுகாப்புப்படை தலைவர் ஜெனரல் சர் நிக்கோலஸ் ஹௌடனின் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்க வேண்டியதாக இருக்கிறது.”

எந்த கட்டளைகளுக்கு அடிபணிவது என்பதிலிருந்து ஒன்றொன்றாக தேர்ந்தெடுக்கஇராணுவம் முடிவெடுத்த பல்வேறு சம்பவங்களை கார்டியன் பட்டியலிடுகிறது. 1970 களிலும் அதைத் தொடர்ந்து 1972 மற்றும் 1974 சுரங்கத் தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களிலும், ஹரோல்டு வில்சனின் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியிருந்த ஒரு பாசிசவாத இயக்கத்திற்குத் தலைமை கொடுத்த, “முன்னாள் நேட்டோ தளபதி சேர் வால்டர் வால்கர்”, சாத்தியமான ஒரு பொது வேலைநிறுத்தத்தை நசுக்க தயாரிப்பு செய்வதில் அர்ப்பணித்திருந்த விடயமும் அதில் உள்ளடங்கும்.

முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஜனநாயகம் மீதான நப்பாசைகள் இராணுவத்தின் அப்பட்டமான அரசியல் குறுக்கீட்டால் பலவீனப்பட்டு வருகின்றன என்பதே ஆளும் உயரடுக்கை நோக்கி அப்பத்திரிகையின் எச்சரிக்கையாக இருந்தது.

ஓர் இடதுசாரி அரசாங்கம் அதன் அதிகாரத்தை செயல்படுத்துவதிலிருந்து அதைத் தடுக்க, 'ஸ்தாபகம்' எப்போதும் ஒரு ஸ்பானிய-பாணியிலான கொள்கை விளக்கம் ஒன்றை ஆரம்பிக்கும் என்ற ஊகங்களுக்கே அதுபோன்ற சம்பவங்கள் ஊட்டமளிக்கின்றன. அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, தொழிற் கட்சி "இராணுவத்தைப் பலவீனப்படுத்த" முயன்றால், இராணுவக் கலகத்தைக் கொண்டு சமீபத்தில் அச்சுறுத்திய ஒரு பெயர் வெளியிட விரும்பாத தளபதியும் மற்றும் தளபதி ஹௌடனும் அந்த ஜ்வாலைகளை மீண்டும் ஊதிவிடுவார்கள்,” என்று அத்தலையங்கம் நிறைவு செய்கிறது.

உண்மையில், சிக்கனத் திட்டம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்க்கும் ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதென்ற கோர்பினின் குறிப்பிட்ட இலட்சியங்கள், வெற்றி அடைவதற்கான எந்த சாத்தியக்கூறும் அங்கே தெரியவில்லை. ஹௌடனின் கருத்துக்களுக்கு மொத்த தொழிற்கட்சி தலைமையின் பிரதிபலிப்பே கூட இந்த நீண்டகால பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கட்சியின் முற்றிலுமான வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோத சுபாவத்தை எடுத்துக்காட்டுகிறது.

செப்டம்பரில் கோர்பின் கட்சி தலைவராக ஆனதிலிருந்து, டோரி கட்சி, அவரது சொந்த நிழல் அமைச்சரவை உட்பட நாடாளுமன்றத்திலுள்ள தொழிற்கட்சி, ஊடகங்கள் என இவற்றின் நிலையான தாக்குதலின் கீழ் அவர் இருந்து வருகிறார், இப்போது ஆயுதப்படைகளின் தலைவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். முப்படையிலும் அணுஆயுதங்களை "நீக்குவது" மற்றும் சிரிய தலையீட்டை புதுப்பிப்பது ஆகிய இரண்டின் மீதும் அங்கே சுதந்திர வாக்கெடுப்பு இருக்குமென தெளிவுபடுத்துவது உட்பட, கோர்பின் அவரது எதிர்ப்பாளர்களைச் சாந்தப்படுத்த எதுவும் செய்யவில்லை என்பதால் அவர் நீக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளின் கூச்சலும் எந்த விதத்திலும் குறையவில்லை.

ஹௌடனின் பகிரங்கமான அறிவிப்புகளும் மற்றும் ஓர் இராணுவ கலகம் குறித்த அநாமதேயரின் அச்சுறுத்தல்களும் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் அதிகரித்துவரும் அபாயங்களுக்கு எச்சரிக்கைகளாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கார்டியன் எதை "ஊகம்" என்று வர்ணிக்கிறதோ அது முதலாளித்துவத்தின் கீழ் அரசியல் மற்றும் சமூக உறவுகளின் யதார்த்தமாக உள்ளது.

கோர்பின் வலியுறுத்துகிற ஆயுதப்படைகளின்நடுநிலைமைபேணப்பட வேண்டுமென்பது எப்போதுமே ஒரு கட்டுக்கதையாகவே இருந்துள்ளது. பிரெடெரிக் ஏங்கல்ஸ் ஆல் மூலதன ஆட்சியைப் பேணுவதற்கான இன்றியமையா கருவிகளாக அடையாளம் காணப்பட்டஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்புகளானஅவை, புற அச்சுறுத்தல்களுக்கு எதிரானவை மட்டுமல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தில் எழுகிற எந்தவொரு தீவிரமான சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு முன்னிறுத்தும் உள்நாட்டு அச்சுறுத்தலுக்கும் எதிரானவை ஆகும்.

இன்றைய நிலைமைகளின் கீழ், இந்த கட்டுக்கதையை இனியும் பேணி காப்பாற்ற முடியாது.

தசாப்தங்களாக, எல்லா பிரதான சக்திகளும் காலனித்துவ அடிமைப்படுத்தலுக்காக, பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் இப்போது சிரியாவில் என பல தொடர்ச்சியான முடிவில்லா போர்களை நடத்தியுள்ளன. உக்ரேனில் வாஷிங்டன் ஒழுங்கமைத்த பதவிக்கவிழ்ப்பு சதியுடன் தொடங்கி, நேட்டோ ரஷ்யாவுடன் ஒரு மோதல் போக்கில் நிற்கிறது, அதேவேளையில் கிழக்கில் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட ஓர் இராணுவ கூட்டணியை ஜோடிக்க முயன்று வருகிறது.

ஏகாதிபத்திய வன்முறையின் இந்த வெடிப்பானது, மக்கள் சுதந்திரத்திற்குக் குழிபறித்தும் மற்றும் உலகின் ஒவ்வொரு ஆண், பெண், குழந்தை என நடைமுறையளவில் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கண்காணிப்பிற்கு உட்படுத்தியும் "பயங்கரவாத-விரோத" சட்டமசோதாவின் ஒரு தொகுப்பின் வடிவில் ஜனநாயக உரிமைகள் மீது ஒரு நேரடி தாக்குதலைக் கோருகிறது. ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும், இராணுவத்தின் அதிகாரமும் மற்றும் அரசியல் செல்வாக்கும் வரையறைகளைக் கடந்து வளர்ந்து வருகின்றன.

2008 பொறிவுக்குப் பின்னர் வெறுமனே ஆழமடைந்துள்ள இலாப அமைப்புமுறையின் அமைப்புரீதியிலான நெருக்கடியாலும் மற்றும் உலகளாவிய நிதியியல் தன்னலக்குழுக்கள் இன்னும் அதிகமாக அதன் சொந்த-செல்வசெழிப்பிற்காக இந்த நெருக்கடியைப் பயன்படுத்த தீர்மானகரமாக இருப்பதிலிருந்தும் இத்தகைய அபிவிருத்திகள் உந்தப்பட்டுள்ளன. இதுவரையில், ஒவ்வொரு இடத்திலும் உள்ள அரசாங்கங்கள், அவர்களது உத்தியோகப்பூர்வ பதவிப்பெயர் என்னவாக இருந்தாலும், அவை தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், வாழ்க்கை தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான முன்பினும் அதிக மூர்க்கமான தாக்குதல்களைத் திணிக்க வேண்டுமென்று அவர்களது எஜமானர்களால் கட்டளையிடப்பட்டுள்ளன.

சமூக எதிர்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், அதற்கேற்ப, இராணுவ மற்றும் உளவுத்துறை பிரமுகர்களின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளிடமிருந்தோ அல்லது ஊடகங்களில் இருந்தோ எந்தவொரு முக்கிய எதிர்ப்பும் இல்லாமல் நடத்தப்பட்டு வருகின்றன.

சிக்கனத்திட்டம், இராணுவவாதம் மற்றும் போரை நோக்கிய திருப்பம் ஜனநாயகத்தைப் பேணுவதுடன் பொருத்தமற்றுள்ளது. தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு அர்ப்பணித்த ஒரு புதிய சோசலிச மற்றும் சர்வதேச தலைமையைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே இந்த சர்வாதிகார அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்க முடியும்.