சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Paris suburb of Saint Denis under military lockdown as gun battle plays out

துப்பாக்கி சண்டையை காரணமாக கொண்டு பாரீஸ் புறநகர் செயின்ட் டென்னிஸ் இராணுவக் கட்டுப்பாட்டில் அடைக்கப்பட்டது

By Stéphane Hugues
19 November 2015

Use this version to printSend feedback

ஒரு தொழிலாள வர்க்க பகுதியான பாரீஸின் வடக்கு புறநகர் செயின்ட் டென்னிஸ் (Saint Denis) இன் மத்திய பகுதியில் வசிப்போர், புதனன்று அதிகாலை 4:30 க்கு பெரிய குண்டு வெடிக்கும் சத்தம் மற்றும் கனத்த துப்பாக்கிச்சூடு சத்தத்தால் எழுப்பப்பட்டனர். பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களில் சந்தேகிக்கப்படுபவர்களை அந்த பழைய நகரின் ஒரு அடுக்குமாடி வீட்டில் அரசு படைகள் கண்டறிந்திருந்ததால், ஒரு RAID படையை (SWAT குழு) அனுப்பி இருந்தது.

அக்குழு அக்கட்டிடத்திற்குள் நுழைந்ததும், ஒட்டுமொத்த பகுதியும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் அடைக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான பொலிஸ், ஆயுதந்தாங்கிய காவல்படை (Gendarmes) மற்றும் இராணுவ சிப்பாய்கள் வீதிகளில் அணிவகுத்து சென்றனர், சோதனைக்கூடங்களை அமைத்தனர். அருகில் வசித்தவர்கள் அவர்களின் கதவுகளைத் திறந்த போது, பாதுகாப்பு படைகள் அவர்களது இயந்திர துப்பாக்கிகளுடன் அவர்களைக் குறி வைத்து, உள்ளே போகுமாறு உத்தரவிட்டதுடன், அவர்களை நோக்கி ஜன்னல்களில் இருந்து தூர விலகி இருக்குமாறு உரத்த குரலில் அறிவித்தனர். அத்தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகே 15,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

பொது போக்குவரத்து, ரயில்கள், சுரங்கப்பாதை போக்குவரத்துகள் மற்றும் பேருந்துகள், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அந்நாளில் மூடப்பட்டன மற்றும் நகருக்கு வரும் சாலைகள் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டன.

தேடுதல் வேட்டைக் குழு (RAID) அந்த அடுக்குமாடி குடியிருப்பை எட்டிய போது, 26 வயதான பெண்மணி Hasna Ait Boulahcen, அவர்களை நோக்கி ஒரு இயந்திர துப்பாக்கியால் சுட்டார், மற்றும் ஒரு வெடிகுண்டு பட்டையுடன் தன்னைத்தானே வெடித்து சிதறடித்துக் கொண்டார். Clichy-sous-bois இல் இருந்து ஒருசில மைல்கள் தூரத்தில் வசித்துவரும் Boulahcen, அப்தெல்ஹமீத் அபௌத்தின் உறவினராவார். இந்த அபௌத்தைத் தான் பிரெஞ்சு அரசும் ஊடகங்களும் ஐரோப்பாவில் ISIS க்கான பிரதான நியமிப்பாளராக மற்றும் வெள்ளிக்கிழமை பாரீஸ் தாக்குதல்களுக்குப் பின்னாலிருக்கும் மூளையாக கூறுகின்றன.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அபௌத் இருந்தார் என்று பொலிஸால் தற்போது உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த தாக்குதலில் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்த மற்றும் கையெறிகுண்டுகளில் சிதறிய ஒருவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

அங்கே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்னும் மூன்று பேரும் இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்திருந்த அந்த துப்பாக்கிச் சண்டை, காலை சுமார் 10.30 மணி வரையில் நீடித்தது, பின்னர் விட்டு விட்டு நடந்து வந்தது. மொத்தத்தில் ஆயிரக் கணக்கான தோட்டா குண்டுகள் சுடப்பட்டிருக்கலாமென மதிப்பிடப்படுகிறது.. காலை 11.30 க்கு அந்த முற்றுகை முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த முற்றுகையின் முடிவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அந்த ஆண்கள் மற்றும் ஒரு பெண் தோழிக்கு அவரது அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு அளித்தவர், அந்த குடியிருப்பின் அருகில் சிதைந்த பொருட்களுக்கிடையே ஒளிந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டார். மற்றொரு குடியிருப்பில் இருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஐந்து RAID குழு உறுப்பினர்களுக்குச் சிறியளவில் காயங்கள் ஏற்பட்டன.

110க்கும் மேற்பட்ட RAID படை அங்கத்தவர்களும் மற்றும் BRI (தேடுதல் மற்றும் தலையீட்டு படை) அங்கத்தவர்களும் அந்நடவடிக்கையில் ஒரு பின்புல பாத்திரம் வகித்தனர். அவர்களுக்கு ஆதரவாக மற்றொரு 50 சிப்பாய்கள் இருந்தனர் (இவர்கள் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூட்டில் இருந்து அன்றாடம் வீதிகளில் ரோந்து வந்த பத்தாயிரக் கணக்கான சிப்பாய்களின் பாகமாக), செயின்ட் டென்னிஸ் மத்திய பகுதியை இராணுவக் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக நூற்றுக் கணக்கான பொலிஸ் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளைக் குறித்து குறிப்பிட வேண்டியதே இல்லை.

இந்த தேடுதல் வேட்டை சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்குப் பிந்தைய பிரான்சின் இராணுவமயமாக்கலை எடுத்துக்காட்டுகிறது, மற்றும் கடந்த சனிக்கிழமைக்குப் பின்னர் அரசாங்கம் அறிவித்த அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் இப்போது அது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால நெருக்கடி நிலைமையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க நாளை தேசிய சட்டமன்றம் வாக்களிக்கும். ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை மேலும் தீவிரமாக பலவீனப்படுத்தும் வகையில் அரசியலைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் விவரித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்காக ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சியினது நியாயப்பாடாக இருப்பது, ISIS இன் பயங்கரவாதமாகும். ஆனால் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தும் மிகப் பெரும்பான்மை இளைஞர்கள் பிரான்சில் பிறந்து பிரான்சில் வளர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

உள்ளபடியே அவர்கள், முன்பினும் அதிக சிக்கனத் திட்டங்களை திணித்துள்ள அடுத்தடுத்து வெற்றிபெற்று வந்த பிரெஞ்சு அரசாங்கங்களின் கீழ் கடந்த 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் வளர்ந்தவர்கள். அந்த ஒட்டுமொத்த காலமும், புலம்பெயர்ந்த மக்கள், “வேலையிடங்கள் நியமிக்கப்பட்டுவிட்டன", “வீடு ஏற்கனவே வாடகைக்குக் கொடுத்தாகிவிட்டது" என்றும், இன்னும் இதரபிற வகையிலும், குட்டி-முதலாளித்துவ வகை அடுக்குகளிடமிருந்தும் மற்றும் அரசிடமிருந்தும் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை முகங்கொடுத்தார்கள். அவ்விதத்தில், புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பின்மை, குறிப்பாக இளைஞர்களிடையே, ஏனைய சமூக குழுக்கள் மத்தியில் இருப்பதை விட அதிகமாக இருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் அல்லது அதற்கு மேலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முஸ்லீம்கள், ஆபிரிக்கர்கள் மற்றும் ஜிப்சிக்களின் (Gypsies) தொழிலாள வர்க்கத்தை தாக்கியுள்ளன, அவர்களிடம் ஆவணங்கள் இல்லாத போது அவர்களை வெளியேற்றியது, பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது இடங்களில் முகத்திரை அணிவதற்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்து முஸ்லீம்களை இழிவுபடுத்தியது.

அனைத்திற்கும் மேலாக, பல ஆண்டுகளாக இத்தகைய சமூகங்கள் பொலிஸ் தொல்லைகளின் ஒரு மத்திய இலக்காக இருந்துள்ளன. 2005 இல், Clichy-sous-Bois இல் பொலிஸ் இரண்டு இளைஞர்கள் ஏதோவொன்றை திருடியதாக சந்தேகத்தின்பேரில் ஒரு மின்சார நிலையத்திற்குள் விரட்டிய போது, ஒருவர் அரபியர் மற்றொருவர் ஆபிரிக்கரான அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர். அது பாரீஸ் பகுதி எங்கிலும் மற்றும் பிரான்சின் ஏனைய பல பாகங்களிலும் கலகங்களைத் தூண்டிவிட்டது. அதுபோன்ற தாக்குதல்கள் மற்றும் அவர்களது சமூகத்தில் அதிகரித்துவரும் வறுமை மீதான இளைஞர்களின் கோபம், அத்தகையவொரு வெறுப்பார்ந்த சூழலில் இருந்து அவர்களை அதிகரித்தளவில் தனிமைப்படுத்திக் கொள்ள இட்டுச் சென்றுள்ளது. இந்த இளைஞர்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மிக சமீபத்தில் பிரான்சும், ஈராக், லிபியா மற்றும் இப்போது சிரியாவில் படையெடுப்பதையும் மற்றும் அவற்றின் பொருளாதாரங்களை அழிப்பதையும் கண்டனர்.

அவ்விதத்தில் இத்தகைய அன்னியப்பட்ட, பெரும்பாலும் வேலை இல்லாமல் மற்றும் பிரெஞ்சு சமூகத்தின் விளிம்பில் இருக்கும் இளைஞர்களில் சிலருக்கு ISIS ஆல் போதனை செய்ய முடிந்திருந்தது. அவர்களில் சிலர் ஆட்சி மாற்றத்திற்கான மேற்கு-ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களில் இணைய சிரியாவிற்கு பயணிக்கத் தொடங்கிய போது, பிரெஞ்சு இரகசிய சேவைகள் அவர்கள் திரும்புகையில் அவர்களை வெறுமனே விசாரித்து விட்டு, அவர்களைப் போக அனுமதித்தது.

இப்போது ஹோலாண்ட் ISIS க்கு எதிராக தேசிய ஐக்கியத்திற்காக அழைப்புவிடுக்கிறார் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்குக் குழிபறிக்கும் அவசரகால நெருக்கடி நிலைமையைத் திணிக்கிறார். ஆனால் அவரது அரசாங்கமும் மற்றும் அதற்கு முன்னர் இருந்த முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் அரசாங்கம் போன்றவையும் தான், அவற்றின் சிக்கனத் திட்டங்களுடன் சேர்ந்து வேறுபாடு காட்டியதன் மூலமாக மற்றும் பொலிஸ் தொல்லைகள் மூலமாக மற்றும் அவர்களின் ஏகாதிபத்திய போர்களில் ISISக்கும் மற்றும் அதேபோன்ற பினாமிப் படைகளுக்கும் ஆயுத உதவிகளும் நிதியுதவிகளும் வழங்கியதன் மூலமாக, முற்றிலும் ஒரு பிற்போக்குத்தனமான அமைப்பான ISIS க்கு எண்ணெய் வார்த்துள்ளன.

ஹோலண்ட், சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஒட்டுமொத்த பிரெஞ்சு ஆளும் உயரடுக்கும் அவர்களது வர்க்க நலன்களுக்காக ஏகாதிபத்திய போர் தொடுப்பதும் மற்றும் உள்நாட்டில் ஏதேச்சதிகார அரசு ஒன்றைக் கட்டமைப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்த கோபத்தைத் திணறடிப்பதையும் தொடர்வது மட்டுமே அவர்களின் ஒரே விடையிறுப்பாக உள்ளது.