சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan protests demand release of Tamil political prisoners

இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி போராட்டம்

By S. Jayanth 
18 November 2015

Use this version to printSend feedback

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள், தமிழ் பேசும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கடந்த வெள்ளியன்று ஹர்த்தாலில் இணைந்து கொண்டனர்.

ஹர்த்தால் வடக்கு மாகாணத்தில் முழுமையாக நடந்திருந்தது. அனைத்து கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதோடு போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் உட்பட படையினர் நிலைகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் எந்தவொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் தடுக்க விசேட அதிரடிப்படை பொலிஸ் படைகள் ரோந்து சென்றன. யாழ்ப்பாணத்திற்கு அருகில் சாவகச்சேரியில், போலீசார் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இரண்டு பேரை கைது செய்தனர்.

கிழக்கில் மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அம்பாறையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் மூடிய கடைகளை மீண்டும் திறக்க முயன்றார்.

இந்த எதிர்ப்பு போராட்டம், தீவு பூராவும் 14 சிறைகளில் இருந்து 180க்கும் மேற்பட்ட கைதிகள் நவம்பர் 10 தொடங்கிய உண்ணாவிரத பிரச்சார இயக்கத்திற்கு ஆதரவாக நடந்தது. விரதம் இருப்பவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையை நிராகரித்து வருவதாக திங்களன்று அறிவிக்கப்பட்டது.

அரசாங்கம் அவர்களை "புனர்வாழ்வு முகாம்களுக்கு" "விடுவிக்கும்" ஒரு புதிய திட்டத்தை முன்வைத்த பின்னர், நேற்று காலை கைதிகள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். இந்த புனர்வாழ்வு நிலையங்கள் மீள்கல்வியூட்டல் அல்லது மூளை சலவை செய்தலை இலக்காகக் கொண்டவையாகும்.

இந்த கைதிகள், மே 2009ல் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகால சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு 8 முதல் 20 ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலருக்கு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவில்லை.

இந்த ஹர்த்தாலை எதிர்ப்பு மற்றும் உண்ணாவிரதமும் தமிழ் கைதிகளை விடுதலை செய்வதாக "உறுதிமொழி" கொடுத்த போதிலும் அவ்வாறு செய்யத் தவறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க-சார்பு அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ் முதலாளித்துவக் கும்பலின் பிரதான கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) மற்றொரு இனவாத குழுவான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், அரசாங்கத்தின் மீது பெருகி வரும் எதிர்ப்பை சிதைக்கவும் அரசாங்கம் மற்றும் அதன் அமெரிக்க ஆதரவாளர்களுடன் உடந்தையாக அணிதிரள்வதில் தமது சொந்த பங்கை மூடி மறைப்பதற்குமான முயற்சியாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

இந்த உண்ணாவிரதம் சமீபத்திய மாதங்களில் இரண்டாவது நடவடிக்கை ஆகும். அக்டோபர் 12, அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் ஒன்றைத் தொடங்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தில் உள்ள தமிழ் அமைச்சர்களதும் தலையீட்டின் பின்னர் அக்டோபர் 17 அதை நிறுத்திக்கொண்டனர். தமிழ் கூட்டமைப்பு தலைவர் ஆர் சம்பந்தன் மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனும், உண்ணாவிரதத்தை நிறுத்தக் கோரியும், அவர்களது "விடுதலையை" மனிதாபிமானத்துடன் நோக்கி, நவம்பர் 10 இந்து தீபாவளி கொண்டாட்டத்துக்கு முன்னதாக அவர்களை விடுதலை செய்வதாக வாக்குறுதியளித்தும் ஒரு செய்தியை சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவிடம் இருந்து கொண்டு சென்றிருந்தனர்.

எனினும், அக்டோபர் 27 அன்று, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதை எவ்விதத்திலும் நிராகரித்த அரசாங்கம், அதற்கு பதிலாக பிணை கொடுப்பது பற்றி பரிசீலிக்க முடிவு எடுத்திருந்தது. இந்த முடிவானது பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளுடன் விக்கிரமசிங்க நடத்திய கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது. இதில் மனோ கணேசனும் பங்கு கொண்டிருந்தார்.

நவம்பர் 11 அன்று மூன்று பெண்கள் உட்பட 31 கைதிகளை அரசாங்கம் பிணையில் விடுதலை செய்தது. கொழும்பில் உள்ள ஒரு நீதவான், பத்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணை உட்பட கடுமையான நிபந்தனைகளை விதித்தார். கைதிகளின் பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டதுடன், கொழும்பு அல்லது வவுனியாவில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் கையொப்பம் இடுமாறும் கைதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனவரி 16 அன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. மேலும் 8 கைதிகள் இதே நிபந்தனைகளின் கீழ் திங்களன்று விடுவிக்கப்பட்டனர்.

சாதாரண தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து விமர்சனத்தை எதிர்கொண்ட தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபை முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், கைதிகளின் விடுதலையை நாடி கடந்த வாரம் சிறிசேனவைச் சந்தித்தார். ஜனாதிபதி எந்தவொரு நேரடி பதிலும் கொடுக்கவில்லை. அவர் கைதிகளை விடுதலை செய்யும் நோக்கம் கொண்டிருந்தாலும் "அரசியல் தலையீடுகள்" அவரை தடுக்கின்றன, என்று விக்னேஸ்வரன் சிறிசேனவை நியாயப்படுத்தினார்.

இது அரசியல் கைதிகளை விடுதலையை தடுக்கும் மற்றொரு சூழ்ச்சித் திட்டமே ஆகும். சிறிசேன தனது சிங்கள இனவாத ஆதரவாளர்களை திருப்திபடுத்துகின்றார். சிங்களப் பேரினவாத ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஒரு தலைவரும் அரசாங்க அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, கடந்த மாதம் பாராளுமன்றத்தில் பேசிய போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழர்கள் அரசியல் கைதிகள் அல்ல, "அவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள். அவர்களை விடுதலை செய்வதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்" என்றார்.

பிரதமர் விக்கிரமசிங்க மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் "நாட்டின் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் கிடையாது" என்று மீண்டும் மீண்டும் கூறிவந்துள்ளனர். இந்த கைதிகள் "புலி சந்தேக நபர்களாக" கைது செய்யப்பட்டவர்கள். அரசாங்கமானது அவர்களுக்கு வஞ்சத்தனமாக அத்தகைய பொதுவான குற்றவியல் முத்திரையை குத்தி, அவர்களது அரசியல் உரிமைகளை மறுக்க முயற்சிக்கின்றது.

கைதிகளை விடுவிக்க சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மறுக்கின்றமை, அதன் இனவாத மற்றும் ஜனநாயக விரோத இயல்பையும், அத்தகைய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் தமிழ் கூட்டமைப்பின் உடந்தையையும் நிரூபிக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி, நல்லாட்சியை ஸ்தாபிக்கும் சாக்கில், அவரது அமைச்சர்களில் ஒருவரான சிறிசேனவை அவருக்கு பதிலாக இருத்திய, ஜனவரியில் நடந்த அமெரிக்க ஆதரவுடைய ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக துணைபுரிந்தது. அரசாங்கத்துக்குப் போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் ஆக்கிரோஷமான "ஆசியாவில் முன்னிலை" கொள்கைக்கும் ஆதரவு கொடுக்கின்றது.

பதிலுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய சக்திகளின் ஆதரவுடன் கொழும்புடன் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை நாடுகின்றது. கடந்த மாதம், யுத்தத்தின் போது இராணுவம் செய்த போர் குற்றங்களை மூடி மறைக்க இலங்கை அரசாங்கத்துக்கு உதவுவதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது .நா. மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) ஒரு தீர்மானத்தை முன்நகர்த்த வாஷிங்டனுடன் ஒத்துழைத்தது.

ஹர்த்தாலை போது, உலக சோசலிச வலைத தள செய்தியாளர்களிடம் பேசிய யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள், அரசாங்கம் மற்றும் தமிழ் தலைவர்கள் மீது விரோதப் போக்கை வெளிப்படுத்தினர்.

ஒரு போக்குவரத்து தொழிலாளி கூறியதாவது: "இது ஒரு ஜனநாயகத் அரசாங்கம் அல்ல. ஒரு பாடசாலை மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் தாக்கி கைது செய்தனர். பலர் கைது செய்யப்பட்டு பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த அரசாங்கத்துடன் இணைந்தே செயற்படுகின்றது. நாம் செய்த தவ்று தமிழ் கூட்டமைப்புக்கு வாக்களித்ததே. இது ஒரு ஜனநாயக அரசாங்கமாக இருந்தால், அது உடனடியாக கைதிகளை விடுவிக்க வேண்டும்."

ஒரு இளைஞர் பேசுகையில், "அமெரிக்கா தனது சொந்த நலன்களுக்காகவே [.நா. மனித உரிமைகள் பேரவையில்] போர் குற்ற தீர்மானத்தைக் கொண்டு வந்த்து,” என்றார். “நாம் [கொழும்பு இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது] யுத்த வலயத்தில் சிக்கிக்கொண்டோம். பாதுகாப்பு வலயங்கள் அமெரிக்க ஆதரவுடனேயே தாக்கப்பட்டன என்று நான் நம்புகிறேன். எப்படி அமெரிக்க போர் குற்றங்கள் தொடர்பான ஒரு விசாரணையை மேற்கொள்ள முடியும்? நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக அன்றி, கைதிகளை விடுதலை செய்யக் கோரியே ஹர்த்தாலில் கலந்து கொண்டோம்."

இன்னுமொருவர் தெரிவித்தாவது: "சிறிசேன தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகளிலேயே தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், இப்போது அவர் பேரினவாத சக்திகளுடன் வேலை செய்கின்றார். அவர் கைதிகளை விடுதலை செய்ய தயங்குவது அதனால் தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து இயங்கி வருகிறது ஆனால் அது இந்த சிக்கலை தீர்க்க இயலாத நிலையில் உள்ளது." கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம் தொடர வேண்டும் என்று அவர் கூறினார். "நீங்கள் யுத்த குற்றங்கள் பற்றி கூறியவை சரி. அமெரிக்கா மற்றும் இந்தியா தமது சொந்த நலன்களுக்காகவே தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிடுகின்றன. அவர்கள் தமிழ் மக்களின் துன்பங்களைப் சுரண்டிக்கொள்கின்றனர். இந்த அரசியல் கட்சிகள் அத்தகைய சக்திகளுக்கு எதிராகச் செல்லும் என்று நம்புவது பயனற்றது. ஒரு புதிய கொள்கை நமக்குத் தேவை."