சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Syria’s Assad says Paris now “knows what Syria has lived for five years”

"ஐந்தாண்டுகளாக சிரியா எப்படி வாழ்ந்திருந்தது" என்பது பாரீஸிற்கு இப்போது "தெரிந்திருக்குமென" சிரியாவின் அசாத் தெரிவிக்கிறார்

By Kumaran Ira
18 November 2015

Use this version to printSend feedback

வெள்ளியன்று பாரீஸில் இஸ்லாமிய அரசின் (IS) பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், அவரது ஆட்சி, மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு நம்பகமான மற்றும் பயங்கரவாத-எதிர்ப்பிற்கான கூட்டாளி என்பதாக காட்டியதுடன், பிரான்ஸ் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கத்தில் ஆதரவை வென்றெடுக்க முயன்றார்.

சனியன்று அவரைச் சந்திக்க வந்த பிரெஞ்சு சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்றைச் சந்தித்ததுடன், Europe1 வானொலிக்கும் அவர் பேட்டி அளித்தார். அவர் பாரீஸ் தாக்குதலுக்கும் மற்றும் 2011 இல் இருந்து சிரியாவில் IS உட்பட மேற்கு-ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுவால் நடத்தப்பட்ட எண்ணிலடங்கா பயங்கரவாத தாக்குதல்களுக்கும் இடையே ஒரு சமாந்தரத்தை வரைந்தளித்தார். “கடந்த ஐந்தாண்டுகளாக சிரியா என்ன அனுபவித்து வந்ததோ இப்போது அதை பிரான்ஸ் கண்டுள்ளது" என்று Europe1க்குத் தெரிவித்தார்.

பாரீஸ் தாக்குதலானது, சிரியாவில், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் நேரடி விளைவாகும் என்பதை அசாத் சுட்டிக்காட்டினார்: பாரீஸில் தாக்குதல் நடத்திய அதே இஸ்லாமிய போராளிகளைத் தான் அவர்கள் 2011 இல் இருந்து அவரது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் பினாமிகளாக பயன்படுத்தி வந்தனர்.

“ஐரோப்பாவில் என்ன நடக்கும் என்பதை நாங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்னரே எச்சரித்திருந்தோம். 'சிரியாவில் என்ன நடந்து வருகிறதோ அதை சாதாரணமாக எடுக்க வேண்டாம், அதுவொரு பூகம்பம் மாதிரி, அது உலகெங்கிலும் பரவும்' என்று நாங்கள் கூறியிருந்தோம். துரதிருஷ்டவசமாக, ஐரோப்பிய அதிகாரிகள் நாங்கள் கூறியதற்குச் செவிசாய்க்கவில்லை! நாங்கள் அவர்களை அச்சுறுத்தியதாக அவர்கள் நினைத்தார்கள்,” இவ்வாறு சிரிய ஜனாதிபதி தெரிவித்தார்.

வாஷிங்டன், ஐரோப்பிய சக்திகள் மற்றும் அவர்களின் பாரசீக வளைகுடா கூட்டாளிகள் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சண்டையிட இஸ்லாமிய போராளிகளுக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் பயிற்சிகள் வழங்கி, ஒரு பேரழிவுகரமான உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டன. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஏகாதிபத்திய போரில் சுமார் 220,000 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேற அது காரணமாக இருந்துள்ளது. சிரியாவில் அல் கொய்தா இணைப்பில் உள்ள அல் நுஸ்ரா மற்றும் ISIS இரண்டுமே மேற்கத்திய நிதியுதவி பெற்ற அமைப்புகளில் உள்ளடங்கி உள்ளன.

பாரீஸ் தாக்குதலுக்கு பின்னர், பிரெஞ்சு அரசாங்கம் சிரியாவில் முன்பினும் அதிகமான ஒரு இரத்தஆறை ஓடச்செய்யவும் மற்றும் பிரான்சில் பொலிஸ் ஒடுக்குமுறைக்காகவும், அத்தாக்குதல்கள் மீதான மக்கள் அதிர்ச்சியை மற்றும் அதன் பயங்கரத்தை சுரண்டி வருகிறது. பிரதான அரசியல்வாதிகளும் மற்றும் ஊடங்கங்களும்தான் சிரியாவில் இழிவார்ந்த கொள்கையைத் தீவிரப்படுத்தினார்கள் என்ற நிலையில், பாரீஸ் அட்டூழியம் குறித்து அவர்கள் காட்டிய கடுமையான சீற்றத்தின் பாசாங்குத்தனத்தில் துர்நாற்றம் வீசுகின்றது.

பாரீஸ் தாக்குதல்களைப் போன்ற, 2011 இல் இருந்து மேற்கத்திய ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் நடத்திய நூற்றுக் கணக்கான பயங்கரவாத அட்டூழியங்களை சிரியா கண்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள சிரிய ஜனாதிபதியுடன் ஒருவர் அனுதாபம் கொள்ள வேண்டியதில்லை. நேட்டோ அரசாங்கங்களும் ஊடகங்களும் அசாத்தை பதவியிலிருந்து இறக்க மற்றும் முற்றிலும் வளைந்து கொடுக்கும் ஒரு ஆட்சியை நிறுவுவதற்கு, அவர்களின் பினாமிகளின் முந்தைய நடவடிக்கைகளை ஆதரித்தன என்றபோதினும், அவை அவற்றை எல்லாம் குறித்து மவுனமாக இருந்தன.

சிரியாவில் நூற்றுக் கணக்கான தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. பெப்ரவரி 2013 இல், தலைநகர் டமாஸ்கஸில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 80க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பெப்ரவரி 21 இல் குறைந்தபட்சம் மேலும் 250 பேர் காயமுற்றனர். சிரிய பாதிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு அருகில் ஒரு பாரிய கார் வெடிகுண்டு வெடித்ததில் 59 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இஸ்லாமிய சக்திகளால் நடத்தப்பட்ட ஏனைய மிகவும் இழிவார்ந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் டிசம்பர் 2011 டமாஸ்கஸ் குண்டுவெடிப்பும் உள்ளடங்கும், அதில் 44 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 166 பேர் காயமடைந்தனர். மே 2012 டமாஸ்கஸ் தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 பேர் காயமடைந்தனர்.

சிரியாவில் அவர்கள் உதவியுடன் உருவான அதே பயங்கரவாத போராளிகள் குழுக்களால், பாரீஸ் இல் பலியானவர்களுக்கு முதலைக் கண்ணீர் வடிக்கும் ஐரோப்பிய அரசியல்வாதிகளின் பாசாங்குத்தனம் அருவருப்பாக உள்ளதுஆனால் இவர்கள், சிரியாவில் அதேபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை வெளிநாட்டு கொள்கைக்கு ஒரு சட்டபூர்வ கருவியாக பார்க்கிறார்கள். பாரீஸ் தாக்குதலுக்கான முழு பொறுப்பும், ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனமான வெளிநாட்டு கொள்கையில் தங்கியுள்ளது என்பதையே இது அடிக்கோடிடுகிறது.

நேட்டோ கொள்கையின் மரணகதியிலான பாசாங்குத்தனத்தை சுட்டிக்காட்டுவது என்பது மறைமுகமாக அசாத்திற்கு ஏதேனும் அரசியல் ஆதரவு வழங்குவதாக ஆகாது. பாலஸ்தீன மற்றும் லெபனான் மக்களுக்கு எதிராக எண்ணிலடங்கா அரசியல் குற்றங்களை நடத்தி உள்ளதும் மற்றும் சிரிய தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களைத் தீவிரபடுத்தியதுமான அவரது ஆட்சி, அது IS போன்ற சக்திகளை விட மிகவும் நம்பகமான கைப்பாவை என்பதை மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு சமிக்ஞை காட்ட முயல்கிறது.

சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் வலதுசாரி குடியரசு கட்சி (LR) இரண்டினது பிரெஞ்சு நாடாளுமன்றவாதிகளும் அசாத் உடன் பேச்சுவார்த்தைகள் நடத்த சமீபத்திய மாதங்களில் டமாஸ்கஸ் பயணித்திருந்தனர். பாரீஸ் தாக்குதலுக்கு முன்னதாக, LR இன் தியரி மரியானி தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒரு பிரதிநிதிகள் குழு அவரைச் சந்தித்து, அசாத்-விரோத இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் மீது குண்டுவீசுவதற்கும், சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ தலையீட்டையும் பாராட்டி இருந்தது.

“ரஷ்யா ஒரு நிஜமான வெளியுறவு கொள்கையை செயல்படுத்தி வருகிறது. அது பொதுவான சமாதான நலனுக்காக செயல்படுகிறது,” என்று LR இன் பிரதிநிதி Nicolas Dhuicq அசாத்தைச் சந்தித்தப் பின்னர் தெரிவித்தார்.

தன்னுடைய பங்கிற்கு, மரியானி, ரஷ்ய தலையீட்டின் "செயல்திறனை" வலியுறுத்தினார், “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்கும் அனைவருமே வரவேற்க கூடியவர்களே" என்பதையும் அவர் சேர்த்து கொண்டார்.

தனது அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியை அவர்கள் நிறுத்திக் கொண்டால், ஒரு குற்றகரமான போரில் அவரது நாட்டை சீரழித்துள்ள பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் விசுவாசமாக வேலை செய்வதாக அசாத் சூளுரைத்தார். “அவர்கள் கேட்க வேண்டியதே இல்லை! அவர்கள் சீரிய அக்கறையோடு மட்டும் இருக்க வேண்டும்! நாங்கள் அவர்களோடு பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிட தயாராக உள்ளோம்,” என்றார். “இதுவரையில் பிரெஞ்சு அரசாங்கம் சீரிய அக்கறையோடு இருக்கவில்லை" என்று மட்டும் குறைபட்டு கொண்டார்.

ஹோலாண்ட் அவரது கொள்கைகளை மாற்றுமாறு, அசாத் அவருக்கு பலவீனமாக கோரிக்கை விடுத்தார். “பிரெஞ்சு இன்று எதிர்கொண்டிருக்கும் கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் பிரான்ஸ் பின்பற்றிய கொள்கை பிரான்சிற்கு நல்லதாக இருக்கிறதா? அதற்கான பதில் இல்லை என்பது தான்!” அசாத் கூறினார், ஹோலாண்டை அவரது கொள்கைகளை மீளாய்வு செய்யுமாறு கோரினார்: “பிரான்ஸின் நலன்களுக்காக அவர் செயல்பட விரும்புகிறாரா? அப்படி அவர் நடந்துகொள்ள விரும்பினால், அவர் அவரது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.”