சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Financial parasitism and the destruction of democracy

நிதியியல் ஒட்டுண்ணித்தனமும், ஜனநாயகத்தின் சீரழிவும்

Andre Damon
24 November 2015

Use this version to printSend feedback

வரலாற்றிலேயே மூன்றாவது மிகப்பெரிய பெருநிறுவன ஒருங்கிணைப்பாக, திங்களன்று அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் Pfizer Inc. ஐ அதன் போட்டி நிறுவனம் Allergan Plc வாங்கவிருக்கும் திட்டங்களை அறிவித்தது.

Pfizer என்ற பெயரிலேயே நீடிக்கவிருக்கும் இந்த புதிய நிறுவனம், உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமாக இருக்கும். அயர்லாந்தை மையமாக கொண்ட சிறிய Allergan நிறுவனம் அமெரிக்காவை மையமாக கொண்ட மிகப்பெரிய Pfizer வாங்கும் என்பதால் அந்த உடன்படிக்கை "நேர்மாறல்" (inversion) என்று அறியப்படுகிறது, அந்த புதிய நிறுவனம் கடந்த ஆண்டு Pfizer செலுத்திய 25.5 சதவீத வரி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 17-18 சதவீதமே வரி செலுத்தும்.

இந்த ஒருங்கிணைப்பு இதுவரையில் இந்தாண்டில் அறிவிக்கப்பட்ட உலகளாவிய ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களின் மொத்த மதிப்பை $4.2 ட்ரில்லியனுக்குக் கொண்டு வருகிறது. 2015 இன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் மதிப்பு, உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடிப்பதற்குச் சற்று முன்னதாக $4.38 ட்ரில்லியனாக சாதனை படைத்த 2007 ஆம் ஆண்டு உள்ளடங்கலாக, முந்தைய வேறெந்தவொரு ஆண்டையும் கடந்து செல்ல உள்ளது.

Allergan உடனான ஒருங்கிணைப்பை அறிவித்து Pfizer தலைமை நிர்வாக அதிகாரி அயன் ரீட் கூறுகையில், இந்த உடன்படிக்கை "உலகெங்கிலும் அதிகளவிலான மக்களுக்கு நிறைய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கக்கூடிய, ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளக்கூடிய பலத்துடன் ஒரு முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனத்தை உருவாக்கும்" என்றார்.

யதார்த்தம் அதற்கு தலைகீழாக உள்ளது. ஒருங்கிணைப்பின் பாகமாக வெளியிடப்பட்ட நிதியியல் ஆவணங்கள், உருவாகவிருக்கும் நிறுவனத்தின் திட்டங்கள் ஒரு பாரிய செலவு வெட்டு நடவடிக்கைகளை நடத்த இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அந்நிறுவனம் சுமார் $2 பில்லியன் மதிப்பிலான செலவு சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிதி ஒதுக்கீட்டில் 660,000 டாலரும் அதில் உள்ளடங்கும், எஞ்சிய வெட்டுக்கள் வேலைநீக்கங்கள் மற்றும் ஏனைய விற்றல் வாங்கல்களில் இருந்து வரக்கூடும்.

முன்பினும் அதிக இலாபங்களைக் கோரிவரும் நிதியியல் முதலீட்டாளர்களின் பைகளுக்குள் பணத்தைப் பாய்ச்ச புதிய வழிகளைக் காண்பதே இந்த ஒருங்கிணைப்புகளது அலையின் அடிப்படை நோக்கமாக உள்ளது. இது, உலக பொருளாதாரத்தில் படர்ந்து பரவியுள்ள நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் ஒரு வெளிப்பாடாகும்.

இம்மாத தொடக்கத்தில், Birinyi Associates அறிவிக்கையில், இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் அமெரிக்க நிறுவனங்கள் அவற்றின் சொந்த பங்குகளையே வாங்கி விற்பதில் $516.72 பில்லியனைச் செலவிட்டதாகவும், இது 2007க்குப் பின்னர் மிக அதிகபட்ச அளவு என்பதையும் குறிப்பிட்டது. அந்த தொகை 45 பில்லியன் மக்கள் வாழும் ஒரு நாடான அர்ஜென்டினாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமம்.

உலகின் மிகப்பெரிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டில் இதுவரையில் பங்கு வாங்கி விற்பதில் 30.22 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. அதே காலத்தில், அந்நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக வெறும் சுமார் 6 பில்லியன் டாலர் மட்டுமே செலவிட்டது, மற்றும் அதன் தொழிலாளர்களுக்கான செலவில் 12 பில்லியன் டாலரை விட குறைவாக செலவிட்டது. இந்நிறுவனத்தில், ஒரு மணித்தியாலத்திற்கு $13 அடிப்படை கூலி பெறும் அமெரிக்க சில்லரை விற்பனைத்துறை பணியாளர்கள் மற்றும் ஒரு மணித்தியாலத்திற்கு வெறும் $1.50 மட்டுமே பெறும் சீனாவின் உற்பத்தித் துறை தொழிலாளர்களும் உள்ளடங்குவர்.

ஆப்பிள் நிறுவனம் மட்டுமே விதிவிலக்கான ஒரே நிறுவனம் அல்ல. இந்தாண்டின் தொடக்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில், மிகப்பெரிய அமெரிக்க பெருநிறுவனங்கள் சமீபத்திய ஆண்டுகளில் வேலைக்கு ஆட்களை எடுப்பது அல்லது தொழிற்சாலைகளைக் கட்டமைப்பதை விட அவற்றின் சொந்த பங்குங்களை வாங்கி விற்பதில் அதிக பணத்தைச் செலவிட்டிருப்பதாக குறிப்பிட்டது. பெருநிறுவன பங்கு விலைகளை அதிகரிப்பதே இந்த பங்கு வாங்கி விற்பதன் நடைமுறை விளைவாகும், இந்நிகழ்வுபோக்கில் உயர்மட்ட நிர்வாகிகளின் சம்பளமும் ஊதிப்பெருகுகிறது, அவர்களின் ஊதியங்கள் அதிகரித்தளவில் பங்கு "செயல்பாடுகளுடன்" பிணைந்து ஈடுகட்டப்படுகின்றன.

Bloomberg ஆல் மேற்கோளிட்டுக் காட்டப்பட்ட ஆனால் பிரசுரிக்கப்படாத பேங்க் ஆஃப் அமெரிக்காவின் ஆய்வு குறிப்பு ஒன்று குறிப்பிட்டதாவது, “இந்த தசாப்தத்தில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வேலைக்கும் ஈடாக, நிறுவனங்கள் அவற்றின் பங்கு வாங்கி விற்பதில் 296,000 டாலரைச் செலவிட்டன.”

சாதனை அளவிற்கு அண்மித்த இலாபகரமான ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க பெருநிறுவனங்கள் சுமார் $1.4 ட்ரில்லியன் பணக்குவியல் மீது அமர்ந்துள்ளன. ஆனால் உலகளாவிய பெருநிறுவனங்கள் இத்தகைய நிதிகளை உற்பத்தி முதலீட்டை விரிவாக்குவதற்கு பயன்படுத்துவதற்கு மாறாக, பங்குகளை வாங்கி விற்பது, ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் நிர்வாகிகளின் சம்பள உயர்வுகளுக்குச் செலவிட்டு வருகின்றன.

இந்நிகழ்வுபோக்கின் நடைமுறை விளைவு என்னவென்றால் நிஜமான பொருளாதார உற்பத்தியை மேற்கொண்டும் சுருங்குகிறது. திங்களன்று வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி அமெரிக்க உற்பத்தி வளர்ச்சி இரண்டாண்டுகளில் கடந்த மாதம் அதன் மிகக் குறைந்த வேகத்தில் அதிகரித்துள்ளது, அதேவேளையில் விமர்சகர்களால் "மிளிர்கிறது" என்றும் "எதிர்பார்ப்பையும் கடந்து நிற்கிறது" என்றும் பாராட்டப்பட்ட சமீபத்திய மாதாந்த வேலை அறிக்கை, அக்டோபரில் உற்பத்தித்துறையில் துல்லியமாக பூஜ்ஜிய வேலைகளையே சேர்த்திருப்பதாக எடுத்துக்காட்டியது.

வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன நிர்வாகக்குழு அறைகளில் செய்யப்படும் நிதியியல் ஊகவணிக விரயமானது, 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் செல்வவளத்தைப் பாரியளவில் உயர்மட்டத்தை நோக்கி பாய்ச்சிய மறுபங்கீட்டின் ஒரு பக்கம் மட்டுமே ஆகும், இதற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய உலகளாவிய மத்திய வங்கிளால் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்குள் பாய்ச்சப்பட்ட பணம் பெரும் உதவி செய்தது. மேலே குறிப்பிடப்பட்ட பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆராய்ச்சி குறிப்பின் தகவல்படி, 2008 லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவுக்குப் பின்னர், உலக மத்திய வங்கிகள் சொத்து வாங்குவதில் சுமார் 12.4 ட்ரில்லியன் டாலர் செலவிட்டுள்ளன, மேலும் வெவ்வேறு சமயங்களில் 606 முறை வட்டி விகிதங்களை வெட்டி உள்ளன.

செல்வ வளத்தை நிதியியல் உயரடுக்குகள் பாரியளவில் குவித்துக் கொள்வதென்பது, தொழிலாள வர்க்கத்திற்கு செல்லும் சமூக ஆதார வளங்களின் பங்குகள் தொடர்ந்து குறைக்கப்படுவதில் உறுதிப்படுத்தப்படுகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலும் தசாப்தங்களாக தொழிலாளர்களின் வருமானங்கள் மந்தமாகி உள்ளன, மற்றும் பல நாடுகளில் அங்கே நிதியியல் நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விட கணிசமான அளவிற்கு குறைந்து போயுள்ளது. அமெரிக்காவில், சான்றாக, ஒரு சாமானிய குடும்பத்தின் வருமானம் 2007 மற்றும் 2013 க்கு இடையே 12 சதவீத அளவிற்கு வீழ்ச்சியடைந்ததாக பெடரல் ரிசர்வின் வாடிக்கையாளர் நிதி ஆய்வு குறிப்பிட்டது.

இந்த நிகழ்வுபோக்கின் ஒரு விளைவாக, மக்கள்தொகையில் உயர்மட்டத்தில் இருக்கும் ஒரு சதவீதத்தினர் 2009 க்குப் பின்னரில் இருந்து மொத்த வருவாய் ஆதாயங்களில் 95 சதவீதத்தைச் சுருட்டிக் கொண்டனர், அதேவேளையில் அமெரிக்காவின் 400 மிகப்பெரிய செல்வந்தர்களின் செல்வவளம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது. சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி அதேபோல முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் நிதியியல் உயரடுக்கின் மேலாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அதிகரிப்பதற்கும் எரியூட்டியுள்ளது.

இது ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் பாரிஸில் நவம்பர் 13 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குக் காட்டும் மிரட்சியூட்டும் விடையிறுப்பைக் குறித்து நிறையவே விளங்கப்படுத்தும், அத்தாக்குதல்கள் பிரான்ஸ் மற்றும் புருசெல்ஸில், அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் மீதான அதிகரித்த மற்றும் நீண்டகால தாக்குதல்களை மேற்கொள்ளவும், எவரொருவரின் உடைமைகளைக் கைப்பற்ற மற்றும் கைது செய்ய பொலிஸிற்கு அனுமதி வழங்கவும், ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடைவிதிக்கவும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. பாரிஸ் தாக்குதல்கள், அமெரிக்காவில், குறியீட்டு தகவல் பரிமாற்றங்களைக் குற்றகரமாக்க கோரும் அழைப்புகளைப் புதுப்பிக்க பயன்படுத்தப்படுகிறது.

உலகத்தை உலுக்கிய மற்றும் முன்னுதாரணமற்ற மாற்றங்களைக் கொண்டு வந்த பாரிஸ் தாக்குதல்கள் என்று கூறப்படும் சம்பவங்களுக்கு இடையே, அண்மித்தளவில் இரண்டு நூற்றாண்டுகளாக கோட்பாடுகளைத் தாங்கிப் பிடித்து வருவதாக கூறிக்கொள்ளும் உலகின் மிகப்பழமை வாய்ந்த சில "ஜனநாயகங்கள்" அவற்றின் கோட்பாடுகளைக் கைவிட இட்டுச் சென்றுள்ள நிலையில், உலகளாவிய சந்தைகளோ எந்த கலக்கமுமின்றி இருப்பதாக தெரிகிறது என்பதைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் 10 நாட்களில், பங்கு விலைகள் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் உயர்ந்துள்ளன. பிரெஞ்சு CAC 1.69 சதவீதம் உயர்ந்துள்ளது, அமெரிக்க நாஸ்டாக் 3.5 சதவீதம் மற்றும் ஜேர்மன் DAX 3.59 சதவீதம் உயர்ந்துள்ளது.

“நிதியியல் மூலதனம், சுதந்திரத்திற்காக அல்ல, மேலாதிக்கத்திற்காக போராடுகிறது" என்று சோசலிச பொருளியல்வாதி Rudolf Hilferding ஐ மேற்கோளிட்டு, ரஷ்ய புரட்சியாளர் லெனின் குறிப்பிட்டார். முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களுக்கு முன்னர் இருந்த காலக்கட்டத்தைப் போலவே, ஆளும் வர்க்கங்கள் அவர்களது செல்வ வளத்தைப் பாதுகாப்பதை மற்றும் விரிவாக்குவதை உறுதிப்படுத்தி வைக்க, உறுதியான வழிவகைகளாக, பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கு அதிகரித்தளவில் பகிரங்கமாக ஒரு திருப்பமெடுக்க பார்க்கின்றன.