சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

German media lurches further to the right after Paris attacks

பாரிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் ஜேர்மன் ஊடகம் மேலும் வலதுசாரி-பக்க பக்கசார்பு எடுக்கின்றது

By Peter Schwarz
18 November 2015

Use this version to printSend feedback

பாரிஸில் கடந்த வார பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஜேர்மன் ஊடகம் கடுமையாக வலதுசாரி பக்கம் நகர்ந்துள்ளது. ஞாயிறு அன்று, Frankfurter AllgemeineZeitung மற்றும் Die Welt போன்ற பழமைவாத பத்திரிக்கைகள் போருக்கும் அரசை பலப்படுத்தவும் நெருக்குதல் கொடுக்கின்றன. Die Zeit  மற்றும் SüddeutscheZeitung போன்ற பாரம்பரிய மிதவாத ஊடக வெளியீடுகள் இப்பொழுது அதனை ஏற்றவாறு பின்பற்றுகின்றன.

முன்னர் ஆட்சேபிக்கத்தக்க நடவடிக்கைகளாக கருதப்பட்ட நடவடிக்கைகளான குண்டு வீச்சு விமானங்களை ஈடுபடுத்துதல், உள்ளூர் ஆயுதக்குழுக்களை ஆயுதமயப்படுத்துதல் உள்பட, விரிவுபடுத்தப்பட்ட ஒரு இராணுவத் தலையீட்டுக்கான அழைப்பானது ஜேர்மன் ஊடகத்தில் பிரதான விவாதத்தின் ஒரு பகுதியாக ஆகியுள்ளது. நவ-நாஜிகளின் குற்றங்களிலும், சட்டவிரோத அரசாங்க உளவறிதல் மற்றும் பாராளுமன்றத்திற்கு பொய் கூறல் என தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதற்காக, அண்மையில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றிருந்த ஜேர்மனின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு  நிறுவனங்கள் பலப்படுத்தப்படவும் மற்றும் நன்கு ஆயுதமயப்படுத்தப்படவிருக்கின்றன. அமெரிக்க நவ பழமைவாதிகள் மற்றும் அவர்களது ஜேர்மன் ஆதரவாளர்களது பிரபலமான போர் மற்றும் சட்டம் ஒழுங்கு பற்றிய பகட்டாரவார பேச்சு  மிதவாத ஊடகங்கள் முழுவதும் பரவிவருகின்றன.

இந்த விலகலை தோமஸ் அவேனாரியுஸ், செவ்வாய்க்கிழமை Süddeutsche Zeitung இற்கான கருத்துக் கட்டுரையில் தொகுத்துக் கூறினார். “இராணுவத்தையும் சேர்க்கஎனும் தலைப்பிடப்பட்ட பகுதியில், “இராணுவத்தை பயன்படுத்துவதனூடாகவும் இஸ்லாமிய அரசு(IS) இராணுவரீதியில் தடுத்து நிறுத்தக் கூடியதாய் இருக்க வேண்டும், முடிந்தால் மத்திய கிழக்கில் அழிக்கப்பட வேண்டும்என்று அது கோரியது.

இந்த செய்தித்தாளுக்கான நீண்டகால மத்திய கிழக்கு செய்தித்தொடர்பாளர் இராணுவத்தின் மீதான அரசியல் கட்டுப்பாடு, அதாவது இராணுவம் பாராளுமன்றத்திற்கு பதில்கூற கடமைப்பட்டுள்ளது என்பது ஜேர்மனியின் அடிப்படை சட்டத்தை இயங்கா வண்ணம் தடுத்துநிறுத்துகிறது. அது தளர்த்தப்பட வேண்டும் இராணுவம் எப்படி தலையிட வேண்டும் என்று  தீர்மானிக்க அதற்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டது. “சீருடை அணிந்தவர்கள் முடிந்தால் மற்றும் எப்படி இராணுவம் -Bundeswehr- பங்கேற்க வேண்டும் என்பதை அரசியல்வாதிகளுக்கு கூற வேண்டும்.” என அவர் எழுதினார். இராணுவ விவகாரங்கள்  ஒரு கலையாகும், அது அவற்றில் பயற்றுவிக்கப்பட்டவர்களிடம் விட்டுவிடப்பட வேண்டும் என அவர் தொடர்ந்தார்.

அவேனாரியுஸ், தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கடமை, “இஸ்லாமிய அரசுக்கு எதிராகப் போரிடுவதன் ஒரு பகுதியாக சமூகத்தில் ஆதரவைஉறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும், இதுமட்டும்தான் படையினரை போராடுவதற்கு இட்டுச்செல்லக்கூடியதுஎன்று குணாம்சப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு விமான தாக்குதல்கள் மற்றும் தரைவழி தலையீடுகள் இஸ்லாமிய அரசை அழிப்பதை விடாது தொடர முடியவில்லை என விவாதிக்கும் அவர், உள்ளூர் சக்திகளை விலைக்கு வாங்கல்மற்றும் ஆயுதமயமாக்குதல் என்ற ஒரு காலனித்துவ போர்வகைக்கு சார்பாக அவர் விவாதித்தார்.

மேற்கத்திய படையினர், ஆம், ஜேர்மனியர் கூட ஈராக் மற்றும் குர்திஷ் படைகளுக்கு அதிகமாக மற்றும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க வேண்டும், ஆலோசனை வழங்க வேண்டும், உதவ வேண்டும், போர்முனைகளில் அவர்களோடு நிறக வேண்டும்,” என அவர் எழுதினார். “விமான தாக்குதல்கள் மற்றும் உள்ளூர் சக்திகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றுடன்,” அவர் மேலும் குறிப்பிட்டார், “ஏனைய, அதிகமான மத்திய கிழக்கு வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்: ஈராக்கில் சுன்னி குழுக்களை காசுகொடுத்து விலைக்கு வாங்க வேண்டும் மற்றும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக போராடும் ஆயுதக்குழுக்களை கட்டி அமைக்க வேண்டும் மற்றும் ஆயுதமயப்படுத்தப்பட வேண்டும்.”

அவேனாரியுஸ் கொல்லும் ஆளற்ற குண்டுவீச்சு விமானங்களை மற்றும் கொமோண்டோக்களை பயன்படுத்துவதை அதிகரிக்கவும் வாதிட்டார். “ஆயுதம்தரித்த ஆளற்ற குண்டு வீச்சு விமானங்களைப் பயன்படுத்தல் கொன்றழிப்பதற்கான முற்றிலும் சட்டத்துக்கு புறம்பான வழிமுறைகளாக புரிந்துகொள்ளப்படக் கூடாது. இஸ்லாமிய மதகுரு பயணம் செய்யும் ஜீப் மீது தாக்குவது, துருப்புக்கள் மற்றும் டாங்கிகள் பயன்படுத்துவதுவதைவிட ஒரு சிலருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். சிலவேளைகளில் ஆபத்தான கொமோண்டோ நடவடிக்கைகளை பயன்படுத்தி பயங்கரவாத தலைமைகளுக்கு குறிவைக்கப்பட முடியும் என்பதை ஒசாமா பின்லேடனின் முடிவானது மெய்ப்பித்துக் காட்டியது.”

உள்நாட்டு பொலீஸ் மற்றும் உளவு சேவைகளை பலப்படுத்தத அழைப்பு விடுவதுடன் அவர் முடித்துக் கொண்டார். “ஐரோப்பாவில் எமது நலம்சார் சமூகங்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவதைக் காட்டிலும் போலீசாலும் உளவு சேவைகளாலும் செய்யக்கூடிய இன்னும் நிறைய விரிவான தலையீடுகள் தேவைப்படுகின்றன.”

Zeit Online இல் கார்ஸ்டன் லூதர் உம் அதேவிதமான வாதங்களை முன்வைத்தார், ஆனால் அவேனாரியுஸுக்கு மாறுபட்ட வகையில், அவர் பெரும் எண்ணிக்கையில் தரைப்படைகள்  இறக்கப்பட வேண்டும் என்று  வலியுறுத்தினார். ”பயங்கரவாத ஆயுதக்குழுக்களை தோற்கடிப்பதற்கு பழிவாங்குதல் என்பது ஒரு விஷயம், அது முற்றிலும் இராணுவ விஷயமாக காணப்பட்டால் அது வேறு விதமாகும்,” என்று எழுதினார்.

ரக்கா மீதான பிரெஞ்சு விமானத்தாக்குதல்கள் பலனற்றது என அவர் கருதினார். “ஒரே அடியில்  ஆயிரக்கணக்கான புதிய வெறிபிடித்தவர்களை ஒருவர் உருவாக்க விரும்பாமல், வானத்திலிருந்து தரையில் எல்லவாற்றையும் தரைமட்டமாக்குவது என்பது  தீர்வாக இருக்க முடியாது. தரைப்படைகள் இல்லாமல், குறைந்த பட்சம் அமெரிக்க இராணுவ வல்லுநர்கள் கணிக்கிறவாறு, பத்தாயிரக் கணக்கானவர் இல்லாமல்ரக்கா மற்றும் இதர நகரங்களை மீளக் கைப்பற்றுதல் என்பது சாத்தியம் இல்லை.”

எல்லாவற்றுக்கும் மேலாக, லூதர், மேற்கத்திய தலையீடுகளின் இலக்கு சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஆல் தலைமை தாங்கப்படும் ஆட்சியை தூக்கி எறிவதாக கட்டாயம் இருக்க வேண்டும் என்றார். அவர் எழுதுகிறார்: தனது சொந்த மக்களுக்கு எதிராக போர் தொடுப்பதை சிரிய ஆட்சி நிறுத்தும்பொழுது மற்றும் அக்கறை கொண்ட அனைவருக்கமாக ஒரு அரசியல் முன்னோக்கு இருக்கும்போது மட்டுமே இஸ்லாமிக் அரசுக்குக்கு எதிரான போராட்டத்திற்கு வாய்ப்பிருக்கும்.” இவ்வாறு அவர் சிரியா தற்போதைய அழிவுக்கு தள்ளப்பட்ட அதே கொள்கையைத்தான் தொடரவும் விரிவுபடுத்தவும் உறுதியாக இருக்கிறார்.

அசாத்தை கவிழ்ப்பதற்கான தமது முயற்சில் மேற்கத்திய அரசாங்கங்களால் வளர்க்கப்பட்ட அதே இஸ்லாமிய சக்திகளினால்தான் பாரிஸ் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற உண்மை இருப்பினும், இது கூறப்படுகிறது. சந்தேகத்திற்குள்ளான தாக்குதலாளர்கள் மற்றும் அவர்களின் திட்டம்தீட்டியவர் என்று கூறப்படும் அப்தெல்ஹமீத் அபாவூத் பற்றி இப்பொழுது அறிந்த பின்னரும், அத்துடன் கூட, தாக்குதல்களுக்கு முன்னரே உளவு முகவாண்மைகள் அது பற்றி ஒன்றும் அறியவில்லை என்பது நம்பமுடியாததாக இருக்கிறது. அபாவூத் என்பவர் உளவு முகவாண்மைகளின் கண்காணிப்பின் கீழ் சிலகாலம் இருந்திருக்கிறார், ஆரம்பகால தாக்குதல்கள் பலவற்றில் தொடர்பும் கொண்டிருந்திருக்கிறார்.

போருக்கும் எதேச்சாதிகாரத்திற்குமான இவ்வகையிலான பேரார்வமானது வெறுமனே பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு தன்னியல்பாக எழுந்த பிரதிபலிப்பு அல்ல. அரசையும் இராணுவத்தையும் கட்டி எழுப்புவதை முன்னர் ஐயுறவாதத்துடன் பார்த்த, பத்திரிகையாளர்கள் மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தனர் மத்தியிலான கருத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, ஆழமான சமூக நிகழ்ச்சிப்போக்குடன் தொடர்புடையதாக இருக்கிறது. சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்றுமில்லாதவாறு ஆழமடைந்துவரும் நிலைமைகளின் கீழ். இந்த சமூக அடுக்குகள் ஒப்பீட்டளவில் சலுகைமிக்க தங்களது சொந்த அந்தஸ்தை பாதுகாப்பவராக அரசை அதிகிரித்த அளவில் பார்க்கின்றன.

அவர்களின் பரிணாம வளர்ச்சியானது, உயர் நடுத்தர வர்க்க பரந்த பகுதியினருடன் சேர்ந்து, முன்னணி புத்திஜீவிகள் இராணுவவாதத்தை ஆரத்தழுவிய மற்றும் போர் வெடித்ததை புகழ்ந்து வரவேற்ற பொழுதான, முதலாம் உலக யுத்த்திற்கு முந்தைய அந்த காலகட்டத்தை நினைவூட்டுகிறது. இப்பொழுது போலவே அப்பொழுதும் அவர்கள் தேசியப்பதட்டங்களுக்கும் கூர்மை அடைந்து வந்த சமூக முரண்பாடுகளுக்கும் தமது பிரதிபலிப்பை காட்டினர்.