சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

September 11 and the Paris terrorist attacks

செப்டம்பர் 11 மற்றும் பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்கள்

By Peter Schwarz
25 November 2015

Use this version to printSend feedback

பல ஊடக நிறுவனங்கள் சமீபத்திய பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களை, நியூ யோர்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மற்றும் வாஷிங்டனில் பெண்டகனின் ஒரு பகுதியை அழித்த செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுடன் ஒப்பிடுகின்றன. அத்தாக்குதல்களின் அளவைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அந்த ஒப்பீடு மிகத் தெளிவாக மிகைப்படுத்தலாகும். ஆனால் ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்புகளை ஒருவர் கவனித்தால், அந்த ஒப்பீடு முற்றிலும் பொருத்தமானது தான்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் பதினைந்தாண்டு காலமாக இடைவிடாத போர், பாரியளவில் சர்வதேச சட்டமீறல்கள், ஒரு பொலிஸ் அரசு கட்டமைப்பைக் கட்டியெழுப்பியதைக் கொண்டு 9/11 க்குப் பிரதிபலிப்பு காட்டியது.

அந்த 9/11 சம்பவங்களின் பின்புலம் குறித்து இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், அத்தாக்குதல்கள் வெகு நீண்டகாலத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு சாக்காக சேவையாற்றின. உலகளாவிய அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே அதிகரித்துவருந்த வர்க்க பதட்டங்களே, 9/11 க்குப் பின்னர் அமெரிக்க இராணுவவாத வெடிப்புக்கான நிஜமான காரணமாகும். அமெரிக்காவின் போட்டியாளர்கள் மீது அதன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதையும் மற்றும் வர்க்க பதட்டங்களை வெளியிலிருக்கும் எதிரிக்கு எதிராக திருப்பிவிடுவதையும் அந்த இராணுவ கட்டமைப்பு நோக்கமாக கொண்டிருந்தது.

இது பாரிஸ் தாக்குதல்களின் விடையிறுப்புக்கும் பொருந்துகிறது. தாக்குதல் நடத்தியவர்களைக் குறித்து பாதுகாப்பு முகமைகளுக்கு நன்றாக தெரியும் என்றாலும், அவர்கள் நடைமுறையில் தொந்தரவின்றி செயல்பட முடிந்திருந்தது. அத்தாக்குதல்களின் சூத்திரதாரி என்று குற்றஞ்சாட்டப்படும் 27 வயதான அப்தெல்ஹமித் அபவூத் க்கு, பிடிக்கப்படாமலேயே, பெல்ஜியத்தில் இருபதாண்டுகால சிறைவாசம் விதிக்கப்பட்டிருந்தது, இருந்தாலும் அவரால் பல தருணங்களில் பிரான்சிலிருந்து உள்ளேயும் வெளியேயும் சென்று வர முடிந்தது.

பாதுகாப்பு முகமைகள் அந்த தாக்குதல்களுக்குப் பின்னர் தான் முழு பலத்துடன் தாக்குதலில் இறங்கின. ஒரு மூன்று மணிநேர முற்றுகையுடன், அப்போது பொலிஸ் 5,000 துப்பாக்கித் தோட்டாக்களைச் சுட்ட பின்னர், அபவூத் பாரிஸின் மக்கள் நிறைந்த நகரப் பகுதியில் கொல்லப்பட்டார். நாடாளுமன்றம் ஏறத்தாழ கருத்தொருமித்து முந்தைய பத்து நாள் அவசரகால நெருக்கடி நிலையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க ஒப்புதல் வழங்கியது. தேடுதல் ஆணைகள் இல்லாமலேயே பொலிஸ் பிரான்ஸ் எங்கிலும் வீடுகளுக்குள் நுழைந்து, ஏதேச்சதிகாரமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்பவர்களை, வீட்டுக் காவலில் அடைத்து வருகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் வந்திருந்த, பெல்ஜிய தலைநகரம் புருசெல்ஸூம் தோற்றப்பாட்டளவில் பெல்ஜிய அரசாங்கத்தால் பல நாட்களுக்கு அடைக்கப்பட்டது.

வரலாற்றிலேயே நீண்டகாலமாக மிகக் குறைந்த செல்வாக்கு விகிதம் பெற்றுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், தன்னைத்தானே ஒரு போருக்கான ஜனாதிபதியாக மீள்உருவம் கொடுத்து வருகிறார். கிழக்கு மத்திய தரைக்கடலில் சார்லஸ் டு கோல் விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்ததும், பிரான்ஸ் சிரியா மீதான தாக்குதல்களுக்காக 30க்கும் அதிகமான போர்விமானங்களை அனுப்பியுள்ளது. ஹோலாண்ட் போருக்கான ஒரு சர்வதேச கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தற்போது உலக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி வன்முறையின் தீவிரப்பாட்டை, ஆழமடைந்துவரும் சமூக பதட்டங்களின் உள்ளடக்கத்தில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். பல ஆண்டுகளாக, குறிப்பாக 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரில் இருந்து, மக்களின் பெரும் பகுதியினரின் வாழ்க்கை தரங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன, அதேவேளையில் ஒரு சிறிய சிறுபான்மை தன்னைத்தானே செழிப்பாக்கிக் கொண்டுள்ளது. ஸ்தாபக அரசியல் கட்சிகளிடமிருந்து பாரிய பெரும்பான்மை மக்களைப் பிரிக்கும் சமூக மற்றும் அரசியல் இடைவெளி சீர்செய்ய முடியாததாகி உள்ளது.

முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படைகளைத் தொடாமல் சமூக நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த சிரிசா போன்ற போலி-இடது சக்திகள், கூர்மையாக வலதிற்கு நகர்ந்திருப்பதுடன், தானாகவே பெரிதும் மதிப்பிழந்து போயுள்ளன.

சிரியாவிலிருந்தும் மற்றும் ஏனைய போர்-பாதித்த பகுதிகளிலிருந்தும் ஐரோப்பாவிற்குள் நூறாயிரக் கணக்கான அகதிகளின் வரவு, சமூகத்தை மேற்கொண்டும் துருவமுனைப்படுத்தியுள்ளது. மக்களின் பரந்த பிரிவுகள் அகதிகளை அனுதாபத்தோடும் ஆதரவோடும் அரவணைத்துள்ள போதினும், ஆளும் உயரடுக்கு எல்லைகளை மூடியும் மற்றும் பலப்படுத்தியும் மற்றும் உள்நாட்டிலும் அத்துடன் வெளிநாட்டிலும் தலையீட்டுக்காக அரசை ஆயுதமயப்படுத்தியும் விடையிறுத்துள்ளன.

இரண்டாம் உலக போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய மற்றும் சர்வதேச முதலாளித்துவம், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக 1914 மற்றும் 1939 இல் அது முட்டுச்சந்தில் இருந்ததைப் போலவே, மீண்டுமொருமுறை தன்னைத்தானே அதேபோன்ற ஒரு முட்டுச்சந்தில் காண்கிறது. ஆளும் முதலாளித்துவ உயரடுக்குகளிடம், சமூக ஒடுக்குமுறை, தேசிய ரீதியாக புறக்கணிப்பு மற்றும் போரைத் தவிர வழங்குவதற்கு வேறெதுவும் இல்லை. உழைக்கும் மக்களின் எதிர்ப்புக்கு ஒரு சர்வதேச சோசலிச நிலைநோக்கைப் புகட்டும் புதிய புரட்சிகர கட்சிகளைக் கட்டமைப்பதையே ஒவ்வொன்றும் சார்ந்துள்ளது.