சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Turkey’s downing of a Russian jet and the danger of world war

துருக்கி ஒரு ரஷ்ய போர்விமானத்தை சுட்டுவீழ்த்தியமையும், உலக போர் அபாயமும்

World Socialist Web Site Editorial Board
25 November 2015

Use this version to printSend feedback

1. துருக்கிய-சிரிய எல்லையில், குண்டுவீசும் ஒரு ரஷ்ய போர்விமானத்தை நேற்று துருக்கிய போர்விமானங்கள் சுட்டுவீழ்த்தியமை, வெளிப்படையான ஒரு போர் நடவடிக்கையாகும். சிரியாவில் நேட்டோ ஆதரிக்கும், ஆட்சி எதிர்ப்பு இஸ்லாமியவாத  போராளிகளுக்கும் மற்றும் ரஷ்யா ஆதரிக்கும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கும் இடையிலான பினாமிப் போரைப் பாரியளவில் தீவிரப்படுத்த, துருக்கிய அதிகாரிகள் அவர்களின் வான்எல்லையை ரஷ்யா மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டைக் கைப்பற்றியுள்ளனர். ஒருபுறம் இது ரஷ்யா மற்றும் துருக்கிக்கும், மறுபுறம் நேட்டோ கூட்டணியில் உள்ள ஏனையவர்களுக்கும் இடையே முழு அளவிலான போரைத் தூண்ட அச்சுறுத்துகிறது.

ரஷ்ய SU-24 ஒரு நிமிடம் துருக்கிய வான்எல்லையை மீறியதாக துருக்கிய அதிகாரிகள் வாதிடுகின்றனர், ஆனால் ரஷ்ய அதிகாரிகள் கூறுகையில் அது ஒருபோதும் சிரிய எல்லைக்கு வெளியே போகவில்லையென தெரிவித்தனர். துருக்கிய விமானப்படை அதன் விமானங்களைக் கொண்டு ரஷ்ய போர்விமானத்தை எச்சரிக்கவோ அல்லது சிரியாவின் வான் எல்லைக்குத் திருப்பி அனுப்புவதற்காக அதைச் சுற்றி வளைக்கவோ இல்லை, மாறாக, ஐந்து நிமிடங்கள் ரஷ்ய விமானத்தை எச்சரித்ததாக குற்றஞ்சாட்டியப் பின்னர், அதை சுட்டு வீழ்த்தியது.

ஒரு சக்திவாய்ந்த அண்டை நாட்டுக்கு எதிராக, கணக்கிடவியலாத விளைவுகளைக் கொண்ட ஒரு முடிவை, துருக்கி, அமெரிக்காவிடமிருந்து நேரடியான முன்கூட்டிய ஒப்புதல் இல்லாமல் எடுத்திருக்குமென நினைத்துப் பார்க்க முடியாது.

2. அமெரிக்க அதிகாரிகள், ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்தியதை ஆதரித்ததன் மூலமாக, சிரியாவில் அசாத் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான அதன் தலையீட்டை நசுக்க, ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் நேரடியான இராணுவ மோதலை அவர்கள் ஏற்க விரும்புகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்..

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் உடன் வாஷிங்டனில் நேற்றைய ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், ஒபாமா, துருக்கிக்கு "அதன் எல்லையை மற்றும் அதன் வான்எல்லையை பாதுகாக்கும் உரிமை இருக்கிறது" என்று கூறி, ரஷ்ய போர்விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதை ஆமோதித்தார். இது, அதேபோன்ற சூழல்கள் மீண்டும் ஏற்பட்டால், ரஷ்ய போர்விமானங்களை மீண்டும் துருக்கிய படைகள் தாக்கலாம் என்பதற்கு ஒரு வெற்றுக் காசோலை வழங்குவதாக உள்ளது.

ஒபாமா பின்னர், மேற்கு சிரியாவில் நேட்டோ ஆதரிக்கும் ஆட்சி எதிர்ப்பு இஸ்லாமியவாத போராளிகளை ரஷ்யா தாக்கக் கூடாதென அப்பட்டமாக எச்சரித்தார்: ரஷ்ய நடவடிக்கைகள் துருக்கிய எல்லைக்கு மிக நெருக்கத்தில் நடக்கின்றன என்ற அர்த்தத்தில் பார்த்தால், ரஷ்ய நடவடிக்கைகளுடன் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதையே இது காட்டுகின்றது என நான் நினைக்கிறேன், மேலும் அவர்கள், துருக்கியால் மட்டுமல்ல பல நாடுகளால் ஆதரிக்கப்படும் ஒரு மிதவாத எதிர்ப்புக்குப் பின்னால் போய் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யா அதன் ஆற்றல்களை Daesh மற்றும் ISIL ஐ நோக்கி திருப்பி வருகிறது என்றால், அந்த மோதல்களில் சில, அல்லது, தவறுகள் அல்லது தீவிரப்பாட்டுக்கான சாத்தியக்கூறுகள், ஏற்படுவதில் குறைவிருக்காது.

ஒபாமா பேசிய பின்னர், நேட்டோவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பேர்ன்ஸ் கூறுகையில், துருக்கிய அரசாங்கம் ரஷ்ய விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதன் மூலமாக வாஷிங்டனுக்கான ஒரு பினாமியாக நடந்திருப்பதை மீண்டும் தெளிவுபடுத்தினார். அவர் PBS News க்கு கூறுகையில், அமெரிக்க அதிகாரிகள் சிரிய-துருக்கிய எல்லை பகுதியில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியை அறிவிக்க பரிசீலித்து வருவதாக தெரித்தார். அப்பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்தால் ஆட்சி எதிர்ப்பு இஸ்லாமியவாத படைகளை பாதுகாப்பதற்காக அவற்றை சுட்டுவீழ்த்துவதுஅதாவது, துருக்கி என்ன செய்ததோ துல்லியமாக அதையே செய்வது என்பதே இதன் அர்த்தமாகும்.

3. ஒபாமா மற்றும் பேர்ன்ஸின் கருத்துக்கள், ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) போராளிகளை இலக்கில் கொண்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடத்துவதாக கூறும் வாஷிங்டன் கூற்றுகளின் மோசடியை எடுத்துக்காட்டுகின்றன. இஸ்லாமியவாத பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக கூறிக்கொள்கின்ற அதேவேளையில், வாஷிங்டன் உண்மையில் அல் கொய்தா உடன் தொடர்புபட்ட அல் நுஸ்ரா முன்னணி, அத்துடன் செச்செனிய இஸ்லாமிய ஆயுத குழுக்கள் உட்பட லட்டாக்கியா மலைப்பகுதிகளில் உள்ள இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களைப் பாதுகாத்து வருகிறது. ISIS க்கு எதிரான போர் என்ற சாக்கில், வாஷிங்டன் உண்மையில் பொறுப்பில்லாமல் அதன் புவிசார் அரசியல் அபிலாஷைகளை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது, இது இப்போது மத்திய கிழக்கில் அசாத்தை அதிகாரத்திலிருந்து நீக்குவதில் மையம் கொண்டுள்ளது.

இது, அசாத்தின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் ஈரான், அத்துடன் சீனா உள்பட, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபிலாஷைகளுக்கு ஓர் இராணுவ முட்டுக்கட்டையாக முன்நிற்கும் எந்தவொரு சக்திகளுடனான அடுத்தடுத்த மோதல்களில் ஒரு படியாக மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கு மோதலை தீவிரப்படுத்த தயாரிப்பு செய்து வருகின்ற அதேவேளையில், ஒபாமா, தென் சீனக் கடலில் சீனாவின் எல்லை உரிமைகோரல்கள் மீது சீனாவுடனான அமெரிக்க மோதலைத் தீவிரப்படுத்த கடந்த வாரம் ஆசியாவில் நடந்த உயர்மட்ட மாநாடுகளை பயன்படுத்தினார்.

4. ISIS ஐ அதுவே ஏகாதிபத்திய சக்திகளின் தேவைகளுக்கேற்ப அவற்றின் போர்களுக்கான ஒரு போலிக்காரணமாக உருவாக்கப்பட்டு, பிரதானமாக சர்வதேச ஊடகங்களால் முன்கொண்டு வரப்பட்டது என்பது முன்னரைவிட இப்போது அதிகளவில் தெளிவாகிறது. 2011 இல் ஒசாமா பின் லேடனைக் கொன்றதன் மூலம் அப்போது அவர் அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளியான பாகிஸ்தானில் ஒளிந்திருந்தார் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளைத் திரும்பப்பெறுவதை ஒபாமா நிர்வாகம் நியாயப்படுத்த முனைந்ததும், அங்கே "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு" தெளிவான இலக்கு கிடைக்கவில்லை. 2011 லிபிய போரில் மற்றும் சிரியா மோதலின் ஆரம்பத்திலும் வாஷிங்டனும் ஏனைய நேட்டோ சக்திகளும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களைப் பினாமிகளாக கொண்டு அவற்றுடன் நேரடியாக கூடி இயங்கின.

இருப்பினும் 2013 இல் சிரியா மீதான ஒரு திட்டமிட்ட போருக்கு மக்களிடையே இருந்த விரோதம் மற்றும் வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தில் நிலவிய ஆழ்ந்த பிளவுகளின் காரணமாக, வாஷிங்டனும் பிரான்ஸூம் அதிலிருந்து பின்வாங்க நிர்பந்திக்கப்பட்ட போது, நிலைமை மாறியது. நேட்டோ அதிகாரங்கள் போரை நியாயப்படுத்த ஒரு பாதையைக் காண முயன்ற நிலையில், அவை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதாக கூறிய கூற்றுகள், அவை அந்த சக்திகளைத் தான் சார்ந்திருந்தன என்ற அவற்றின் உண்மையான முன்வரலாறால் முற்றிலும் பொய்யாகி போயிருந்த போதினும், போரை சந்தைப்படுத்தும் ஒரு வழியாக அவை மீண்டும் அவற்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சிரியாவில் ஏனைய இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் நடத்திய குண்டுவீச்சுக்கள் மற்றும் அட்டூழியங்களை விட அதன் நடவடிக்கைகள் சிறிது தான் வேறுபட்டிருந்தன என்றாலும், ஊடகங்களில் தாக்குதலுக்காக ISIS தேர்ந்தெடுக்கப்பட்டது, அதேவேளையில் ஏனைய அதேபோன்ற இஸ்லாமிய குழுக்கள் தொடர்ந்து மறைமுகமான மற்றும் நேரடியான அமெரிக்க ஆதரவையும் கூட அனுபவித்து வந்தன.

நேற்றைய சம்பவங்கள், பாரிஸில் நடந்த நவம்பர் 13 தாக்குதல்கள் மீது தொங்கி கொண்டிருக்கும் விடயங்கள் மீதும் மற்றும் உளவுத்துறை சேவைகள் மோப்பம் பிடிக்காதவாறு ஒரு நடவடிக்கையை நடத்த முடிந்த பயங்கரவாதிகளின் மலைப்பூட்டும் ஆற்றல் மீதும் உள்ள சந்தேக மேகங்களை இன்னும் இருட்டாக்குகின்றன. உண்மையில் இஸ்லாமியவாத பயங்கரவாத குழுக்கள் மற்றும் நேட்டோ அதிகாரங்களுக்கு இடையே நெருக்கமான தொடர்புகள் நிலவுகின்றன. அந்த தாக்குதல்களுக்குப் பின்னர் ஐரோப்பாவின் ஆளும் வட்டாரங்களால் தூண்டிவிடப்பட்ட பாதுகாப்பு பீதி, அத்துடன் ISIS உடனான பொய்முக போர் மீதிருக்கும் குழுப்பங்களுடன் சேர்ந்து, பேரழிவுகரமான உலகளாவிய போர்கள் மூலமாக அவர்களின் அபிலாஷைகளை அடைவதற்கான அரசியல் சூழலை உருவாக்க இந்த ஏகாதிபத்திய சக்திகளுக்கு உதவுகிறது.

5. சுட்டுவீழ்த்தப்பட்ட இந்த நேரம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும், குறிப்பாக ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், மற்றும் வாஷிங்டனுக்கும் இடையிலான மோதல்களின் பின்புலத்தில் இது நடந்துள்ளது. சிரிய போரின் ஒரு திட்டமிட்ட நவ-காலனித்துவ உடன்பாடு ஒன்றில் ரஷ்யா ந்தளவிற்கு சம்பந்தப்படுவது குறித்து, ரஷ்யாவுடன் பேரம்பேசுவதற்கான ஐரோப்பிய முயற்சிகளை வாஷிங்டன் தீர்க்கமாக கீழறுக்க நகர்ந்து வருகிறது.

பாரிஸில் ISIS தாக்குதல்கள் மற்றும் நவம்பர் 14 வியன்னா பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றிற்குப் பின்னர், ஹோலாண்ட், சிரியாவில் ISIS க்கு எதிராக சண்டையிட அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஒரு ஐக்கிய கூட்டணியை ஏற்படுத்தவும் மற்றும் எல்லா பிரதான சக்திகளும் ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகளின் மீது அசாத்தை வெளியேற்றுவது குறித்து பேரம்பேசவும் திட்டங்களை அறிவித்தார்.

ஆனால் வாஷிங்டனில் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஹோலாண்ட் வந்த வேளையில், ரஷ்ய போர்விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு, ரஷ்யாவை நோக்கிய அவரது இராஜாங்க யோசனைகளை ஒன்றுமில்லாததாக்கி, வரது இலக்கை அடையாத நிலையில் இருத்திவிட்டது. USA Today குறிப்பிடுகையில், அத்தாக்குதல் "இஸ்லாமிய அரசைத் தோற்கடித்து பாரிஸ் தாக்குதல்களுக்கு பழிவாங்குவதற்காக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உடனான ஒரு கூட்டணியை கட்டமைக்கும் பிரான்ஸின் முயற்சியைப் படுமோசமாக நாசமாக்கியது, என்று குறிப்பிட்டது.

6. கடந்த ஆண்டு உக்ரேனில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மீண்டும் மீண்டும் உலக போர் அபாயம் குறித்து எச்சரித்து வந்தது. இந்த எச்சரிக்கைகள் அசாதாரண வேகத்தில் நிஜமாகி வருகின்றன.

இன்று, அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் அணுஆயுத சக்திகளான நேட்டோ கூட்டணிக்கு இடையிலான போர் அபாயம் குறித்து ஊடகங்களும் மற்றும் முன்னணி அரசியல்வாதிகளும் பகிரங்கமாக குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த அபாயம் ஏகாதிபத்திய நலன்களின், அனைத்தினும் மேலாக அமெரிக்கா பொறுப்பற்றவிதத்தில் டைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக கூட தடுத்துவிடவில்லை. அதற்கு மாறாக, அவை போர் முனைவை அதிகரித்து வருகின்றன.

7. ஏகாதிபத்திய சக்திகளின் முன்பினும் அதிக கட்டுப்பாடற்ற கொள்கைகளுக்கு ரஷ்ய மற்றும் சீன ஆட்சிகள் எவ்வித மாற்றீட்டையும் முன்வைக்கவில்லை.

சிரியாவின் சம்பவங்கள், ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவுகரமான புவிசார்-அரசியல் விளைவுகளை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன. மாஸ்கோ மத்திய கிழக்கில் அதன் எச்சசொச்ச செல்வாக்கைப் பாதுகாக்க மற்றும் அசாத்தை கவிழ்ப்பதற்காக செசென்யா மற்றும் ரஷ்யாவின் ஏனைய பகுதிகளிலிருந்து இஸ்லாமிய போராளிகள் வருவதையும் பின்னர் அவர்கள் மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பி வருவதையும் தடுக்க பெரும்பிரயத்தனம் செய்து வருகிறது. ரஷ்யாவிற்கு திரும்பிவரும் அவர்களால், அங்கே பேரழிவுகரமான சமூக நிலைமைகள் மற்றும் கிரெம்ளினின் ரஷ்ய-பேரினவாத கொள்கைகளால் உருவாகியுள்ள கோபத்தைச் சுலபமாக சுரண்டிக் கொள்ள முடியும்.

ரஷ்ய முதலாளித்துவ மீட்சி, ஓர் அரை-காலனியாக மாற்றமடைய செய்வதை பின்தொடரும் என்ற ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கை, ஊர்ஜிதமாகி வருகிறது. ஏகாதிபத்திய தாக்குதலுக்கு ரஷ்யாவின் இராணுவ பலத்தைக் கொண்டு பதிலளிக்க முடியும் என்ற புட்டினின் தவறான நம்பிக்கை வெறுமனே அவநம்பிக்கையானது என்பது மட்டுமல்ல, அது பேரழிவுகரமான விளைவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. கிரெம்ளின் கொள்கை, ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதற்கும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுடன் உலக போர் அபாயத்தை முன்னிறுத்தும் பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடையே ஊசலாடுகிறது.

8. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தின் எழுச்சியால் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், ஓர் உலக போரானது சாத்தியம் என்பது மட்டுமல்ல, தவிர்க்கவியலாததும் ஆகும்.

சிரிய போர், மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை நாசமாக்கி மற்றும் அப்பிராந்தியத்திற்குள் சகல பிரதான சக்திகளையும் உள்ளிழுத்து, ஒரு வெடிப்பார்ந்த பினாமி போராக உருவாகி வளர்ந்துள்ளது, அதேபோல எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து கவிழ்த்த எகிப்திய புரட்சியை ஏகாதிபத்திய சக்திகள் நசுக்கியுள்ளன. ஏகாதிபத்திய உலக போரின் அதிகரித்த அபாயத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் அடுத்த அரசியல் எதிர்ப்பினூடாக, அது தன்னைத்தானே சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடித்தளத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும்.