சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

After the “no” vote: The way forward for autoworkers

வேண்டாமென்ற" வாக்களிப்புக்குப் பின்னர்: வாகனத்துறை தொழிலாளர்களின் முன்னே உள்ள பாதை

2 October 2015

Use this version to printSend feedback

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) மற்றும் பியட் கிறைஸ்லர் விற்றுத்தள்ளல் உடன்படிக்கையை துணிவுடன் நிராகரித்தமைக்காக உலக சோசலிச வலைத்தளமும் வாகனத்துறை சிற்றிதழும் கிறைஸ்லர் தொழிலாளர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

பல தசாப்தங்களில் முதல் முறையாக, பெருநிறுவன-UAW கூட்டணிக்கு எதிரான அவர்களது போராட்டத்தில் வாகனத்துறை தொழிலாளர்கள் உத்வேகமடைந்துள்ளனர், அதை விட்டுவிடக்கூடாது. இது ஆயிரக் கணக்கான வாகனத்துறை தொழிலாளர்கள் முன்வைக்கும், அடுத்தது என்ன? என்றவொரு கேள்வியை முன்னுக்குக் கொண்டு வருகிறது.

வாகனத்துறை செயலதிகாரிகளும் UAW நிர்வாகிகளும் இதே கேள்வியைத் தான் பதற்றத்தோடு தங்களைத்தாங்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெருநிறுவனங்களும், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமும், ஒட்டுமொத்தமாக அரசியல் ஸ்தாபகமும் என்ன விலை கொடுத்தாவது சாமானிய தொழிலாளர்களுக்குள் அதிகரித்துவரும் எதிர்ப்பை நசுக்குவதற்கு ஒரு மூலோபாயத்தைத் தயாரித்து வருகின்றன.

உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டதன் மீது அதன் "ஏமாற்றத்தைக்" குறிப்பிட்டு நேற்று மதியம் பியட் கிறைஸ்லர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நிறுவனம் ஒரு நீண்ட போராட்டத்திற்குத் தயாராகி வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது: “எங்களது தொழில்துறை நோக்கங்களை எட்டும் அடிப்படையில், எப்போதும் போல, நாங்கள் முடிவெடுப்போம்."

நிறுவனத்திற்கு ஒரேயொரு நோக்கம் தான் என்பதை வாகனத்துறை தொழிலாளர்கள் நன்கறிவார்கள்: அதாவது, அவர்களது உழைப்பைச் சுரண்டுவதன் மூலமாக எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்கு இலாபமீட்டுவது. விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தங்களைத் தொழிலாளர்களின் குரல்வளையை நெரித்தாவது திணிப்பதன் மூலமாக, நிறுவனங்களது நோக்கங்களை அவை எட்டுவதற்கு உதவுவதே, அதன் பங்கிற்கு, UAW இன் நோக்கமாக உள்ளது.

இதனால், வாகனத்துறை தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த அமைப்புகள் அவசியமாகும், அவை தான் ஒரு வர்க்கமாக அவர்களது நலன்களை பாதுகாக்கும், முன்னெடுக்கும். தொழிலாளர்கள் அவர்களது சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டங்களுக்கு அழைப்புவிடுத்தும், மிகவும் போராட்ட குணமுள்ள மற்றும் சுய-அர்பணிப்பு கொண்ட தொழிலாளர்களை தொழிற்சாலைகளிலிருந்து தலைமைப் பாத்திரம் ஏற்க தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாடெங்கிலுமான ஆலைகளில் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் முதல் வேலை, நடக்கும் சம்பவங்களைக் குறித்து எல்லா வாகனத்துறை தொழிலாளர்களும் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும் முக்கிய தகவல்கள் வேகமாக பரப்பும் விதத்திலும் பரந்த தொழிலாளர்களது வலையமைப்பை உருவாக்க, அக்குழுக்களை ஒன்றோடொன்றை இணைத்து UAW-பெருநிறுவனத்தினது தகவல் இருட்டடிப்பை முறிக்க வேண்டும்.

அந்த சாமானிய தொழிலாளர் குழுக்கள் தொடர்ச்சியான பல கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த முயலும், பின்வருவன அவற்றில் உள்ளடங்கும்:

1. இரகசிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துதல்

பேரம்பேசல்களில் அன்றாடம், ஒவ்வொரு மணித்தியாலமும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு. பேரம்பேசும் அறையில் ஒரு பொதுவான பார்வையிடம் அமைக்கப்பட வேண்டும், UAW மற்றும் பெருநிறுவனங்களுக்கு இடையிலான எல்லா கூட்டங்களும் எல்லா வாகனத்துறை தொழிலாளர்களும் பார்க்கும் வகையில் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்.

2. ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவதற்கான வாக்கெடுப்பு காலத்தை தொழிலாளர்களே நிர்ணயிக்க வேண்டும்

பல நூறு பக்கங்களில் இருக்கும் ஆவணம் முழுவதையும் ஒருசில நாட்களில் படிப்பது சாத்தியமில்லை. எந்தவொரு ஒப்பந்தத்தின் மீதும் வாக்கிடுவதற்கு முன்னதாக அதை படித்து, ஆராய்ந்து, விவாதிக்க தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் இரண்டு வாரகாலமாவது இருக்க வேண்டும்.

3. எல்லா வாக்கு எண்ணிக்கையையும் தொழிலாளர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்

சில ஆலைகளில் வாக்கு எண்ணிக்கை முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், UAW ஒரு நியாயமான, பாரபட்சமற்ற வாக்கு எண்ணிக்கையை நடத்தும் என்பதைத் தொழிலாளர்களால் நம்ப முடியாது. UAW வாக்கு எண்ணிக்கைகளை ஏன் தொழிலாளர்கள் கண்பார்வையில் நடத்த அனுமதிக்கவில்லை என்றால் அதற்கான ஒரே காரணம், அது திருட்டுத்தனம் செய்ய தயாரிப்பு வந்தது என்பது தான்.

4. வேலைநிறுத்த நிதிய பயன்பாட்டின் மீது தொழிலாளர்களே கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும்

தொழிலாளர்களது சந்தா பணம் தான் வேலைநிறுத்த நிதியத்தை உருவாக்கியிருப்பதால், அந்நிதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்கும் ஒவ்வொரு உரிமையும் தொழிலாளர்களுக்கு உண்டு.

5. ஓர் ஒப்பந்தம் உள்ளடக்கி இருக்க வேண்டியவை:

· எல்லா ஊதிய அடுக்குகளையும் உடனடியாக நீக்குதல்

· மாற்று வேலை நேர திட்டத்தை (Alternative Work Schedule) நீக்குதல்

· 30 சதவீத ஊதிய உயர்வும் மற்றும் வாழ்க்கை செலவுகளுக்கேற்ப சரிக்கட்டும் முறையை (COLA) மீளமைத்தலும்

· உத்தரவாதமான மருத்துவ காப்பீடு

· உத்தரவாதமான ஓய்வூதியத்தை மீளமைத்தல்

எல்லா வாகனத்துறை தொழிலாளர்களும் மற்றும் அவர்களின் சக்திவாய்ந்த கூட்டாளிகளான உலக தொழிலாளர் வர்க்கமும் இந்த கோரிக்கைகளை அறிய செய்வதன் மூலமாக மட்டுமே, வாகனத்துறை தொழிலாளர்கள் அவர்களது நிலைப்பாட்டை பலப்படுத்த முடியும்.

உலகெங்கிலும் சகல தொழில்துறையிலும் உள்ள வாகனத்துறை தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள், சக தொழிலாளர்கள் அனைவரும் அவர்களது வேலையிடங்களில், இலாப-பசி கொண்ட பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல்ரீதியில் திவாலான தொழிற்சங்கங்களுக்கு எதிராக இதேபோன்ற போராட்டங்களை முகங்கொடுக்கிறார்கள். இதனால், மிகப்பெரிய மூன்று வாகன பெருநிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தில் வாகனத்துறை தொழிலாளர்களைப் பாதுகாக்க அவர்களுக்கு முழுமையாக ஆர்வம் இருக்கிறது. உள்ளூரின் அண்டைபகுதி ஆலைகளிலும் மற்றும் வேலையிடங்களிலும் ஆதரவு திரட்டுவதற்காக, சாமானிய தொழிலாளர் குழுக்கள் தொழிலாளர்களின் பிரதிநிதி குழுக்களை ஒழுங்கமைக்கும்.

வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தைக் குறித்து தொழிலாளர் வர்க்கத்தைக் கல்வியூட்டுவதன் மூலமாக சாமானிய தொழிலாளர் குழுக்களால் அவர்களின் போராட்டத்திற்கான ஆதரவைச் கட்டமைக்க முடியும். அவர்களது போராட்டம் குறித்த உண்மைகளைப் பதிப்பிப்பதன் மூலமாக, வாகனத்துறை தொழிலாளர்கள், "பேராசைக்காரர்கள்" என்றும் "தவறான தகவல் அளிக்கப்படுகிறார்கள்" என்றும் அவர்களைத் தாக்கும் பெருநிறுவன பத்திரிக்கையின் பிரச்சார பொய்களை எதிர்க்கலாம். பெருநிறுவனங்கள் மற்றும் UAW இன் செய்தி ஏகபோகத்தை முறிக்க, தொழிலாளர்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள ஊடகங்களின் பலத்தைப் பிரயோகிக்கலாம்.

வாகனத்துறை தொழிலாளர்கள் விட்டுக்கொடுப்புகளை ஏற்க வேண்டும் ஏனென்றால் பெருநிறுவனங்களுக்கு அதிக இலாபங்கள் ஈட்டுவதற்கான "உரிமை" இருக்கிறதென வாகன நிறுவனங்களும், பெருநிறுவன பத்திரிகைகளும் மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமும் வலியுறுத்துகின்றன. உண்மையில் உள்ளூர் பொலிஸ் தொடங்கி ஒபாமா நிர்வாகம், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் வரையில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் இத்தகைய "உரிமை" என்றழைக்கப்படுவதை பாதுகாப்பதற்காகவே இருக்கின்றன.

முதலாளித்துவத்தின் கீழ், இலாபத்திற்கான பெருநிறுவன உந்துதலானது வீட்டுவசதி, மருத்துவ நலன், கல்வி, வேலையிட பாதுகாப்பு, ஏனையவற்றோடு சேர்ந்து போக்குவரத்து மற்றும் கலாச்சாரத்தை அணுகுவதற்கான உரிமை ஆகியவற்றிற்கான தொழிலாள வர்க்கத்தினது சமூக உரிமைகளுடன் மோதலுக்கு வருகிறது. முதலாளித்துவத்தின் கீழ், பரந்த பெரும்பான்மை மக்களின் தேவைகள் மூலதன நலன்களுக்கு அடிபணிய செய்யப்படுகின்றன.

பெருநிறுவனங்களது மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையினது தேவைகளுக்கு தொழிலாளர்களை அடிபணிய செய்ய முயலும் தொழிற்சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையிலிருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கான போராட்டத்தின் பாகமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களை முன்னெடுக்குமாறு சோசலிச சமத்துவ கட்சியும் உலக சோசலிச வலைத்தள வாகனத்துறை தொழிலாளர் சிற்றிதழும் அழைப்புவிடுக்கின்றன.

வாகனத்துறை தொழிலாளர்களே: இந்த முறையீடுகளோடு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்றால், உங்கள் வேலையிடங்களில் சாமானிய தொழிலாளர் குழுக்களை ஸ்தாபிக்கும் போராட்டத்தில் இணைய நேரம் வந்துவிட்டது. “வேண்டாம்" என்று வாக்களித்து, கிறைஸ்லர் தொழிலாளர்கள் அம்முனைவைத் தொடங்கி வைத்துள்ளனர், ஆனால் அப்பணியை இப்போது முன்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. “காத்திருந்து பார்ப்போம்" அணுகுமுறை பேரழிவுகரமாக இருக்கும். இங்கே இழப்பதற்கு நேரமில்லை.

ஒரு சாமானிய தொழிலாளர் குழுவில் இணைய அல்லது அதை தொடங்க, மற்றும் உங்கள் வேலையிடத்தில் WSWS வாகனத்துறை தொழிலாளர் சிற்றிதழின் ஓர் ஆக்கப்பூர்வமான பங்களிப்பாளராக ஆக இன்றே இங்கே பதிவிடுங்கள்.