சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The significance of the “no” vote at Fiat Chrysler

பியட் கிறைஸ்லரில் "வேண்டாம்" வாக்குகளது முக்கியத்துவம்

Joseph Kishore
2 October 2015

Use this version to printSend feedback

ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் டென்னிஸ் வில்லியம்ஸ் மற்றும் பியட் கிறைஸ்லர் (FCA) தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜியோ மார்ச்சியோனால் வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பரீட்சார்த்த ஒப்பந்தம், அமெரிக்க வாகனத் தொழிலாளர்களின் கரங்களால் பிரமாண்டமாக தோற்கடிக்கப்பட்டது. வியாழனன்று, UAW உத்தியோகபூர்வமாக அறிவிக்கையில் அந்த உடன்படிக்கை 65 சதவீத வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகவும், இருப்பினும் பல ஆலைகளில் "வேண்டாமென்ற" வாக்கு சதவீதம் கணிசமானளவில் அதிகமாக இருந்ததாகவும் அறிவித்தது.

அந்த வாக்குகள் அமெரிக்காவின் வர்க்க போராட்ட அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லாகும். வாகனத் தொழிலாளர்கள் 33 வருடங்களில் ஒரு தேசிய ஒப்பந்தத்தை முதல்முறையாக நிராகரித்திருக்கிறார்கள். வெறுக்கப்படுகின்ற இரண்டு-அடுக்கு ஊதிய முறையை விரிவாக்குகின்ற மற்றும் தற்போதைய தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டின் மீது பிரதான தாக்குதல்களைத் தொடுக்கின்ற மற்றும் அமெரிக்க வாகனத்துறையில் மேற்கொண்டும் ஆட்குறைப்பு செய்கின்ற ஓர் ஒப்பந்தத்திற்கு பொய்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பீதியூட்டல்களைப் பயன்படுத்தி அழுத்தமளிக்கும் வாகன நிறுவனங்களின் மற்றும் UAW மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொழிலாளர்கள் பாரியளவில் உதறித்தள்ளியுள்ளனர்.

இந்த "வேண்டாமென்ற" வாக்குகள் பல தசாப்தங்களாக, அதாவது 1979 இல் முதல் கிறைஸ்லர் ஒப்பந்தம் தொடங்கி 2009 இல் ஒபாமா நிர்வாகத்தின் கட்டாய திவாலாக்கல் மற்றும் வாகனத்துறையின் மறுசீரமைப்பு வரையில் நடத்தப்பட்டு வந்துள்ள ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு எதிராக ஓர் எதிர்தாக்குதலின் தொடக்கமாகும். அக்காலகட்டத்தின் போது, தங்களைத்தாங்களே தொழிற்சங்கங்கள் என்று அழைத்துவந்த அமைப்புகள் ஒருங்கிணைந்த எதிர்ப்பைக் காட்டும் பாசாங்குதனத்தைக் கூட மொத்தத்தில் கைவிட்டிருந்தன, மேலும் அவற்றுடன் பாரம்பரியமாக இணைந்திருந்த மிக அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதைக் கூட நிறுத்தியிருந்தன.

1970களின் இறுதியிலிருந்து, தொழிற்சங்கங்கள் ஒட்டுமொத்தமாக பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் கட்டளைகளுக்கு எதிரான எந்தவொரு பகிரங்க எதிர்ப்பின் வெளிப்பாட்டையும் களைந்தெறிவதற்காக வேலை செய்துள்ளன. ஒப்பந்தங்கள் என்பது விட்டுக்கொடுப்புகள் என்ற அர்த்தத்திற்கு மாறிவிட்டன. உற்பத்தித்திறன் அதிகரிப்பிற்கும், ஊதியங்கள் மற்றும் சலுகைகளை அதிகரிப்பதற்கும் இடையிலான எவ்வித தொடர்பும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இது, நாடு முழுவதிலுமான தொழிலாள வர்க்க வாழ்க்கை நிலைமைகளின் நாசகரமான சீரழிவில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

வாகன ஆலை தொழிலாளர்கள், தோல்விகளையும் விட்டுக்கொடுப்புகளையும் தவிர வேறொன்றும் அறியாதவர்கள். அதிகரித்த கோபம் மற்றும் ஏமாற்றம், அதிகரித்த எதிர்ப்புணர்வை தோற்றுவித்துள்ளது.

நனவின் இந்த மாற்றம், பியட் கிறைஸ்லரில் பரந்த எதிர்ப்புப்பொறியை பற்ற வைத்துள்ளது. பாரியளவிலான "வேண்டாமென்ற" வாக்குகள் UAW தலைமையை முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துமளவிற்கு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடமிருந்து அன்னியப்பட்டிருக்கின்றன. அந்த உடன்படிக்கையை சாமானிய தொழிலாளர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து, தொழிற்சங்கமும் அதன் ஊடக கூட்டாளிகளும் அத்தோல்வியை மக்கள்தொடர்பு சார்ந்த பிரச்சினையின் தோல்வியாக—அதாவது தகவல் பரிமாற்றத்தின் தோல்வியாக—எடுத்துக்காட்டுகின்றன.

ஊடக கருத்துரைகளில் ஒரு திடமான உட்பொருளாக இருப்பது, “சமூக ஊடகங்களின்" பாத்திரம் மீதான சீற்றமாகும், அதன் மூலமாக அந்த விமர்சகர்கள், ஒப்பந்தம் குறித்து சாமானிய தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பரந்த விவாதத்தை, அதாவது WSWS வாகனத் தொழிலாளர் சஞ்சிகையால் அனுகூலமாக்கப்பட்ட ஒரு நிகழ்முறையைக் குறிப்பிடுகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக, அந்த சஞ்சிகை பல ஆயிர கணக்கான வாகனத் தொழிலாளர்களால் நாளாந்தம் பின்தொடரப்பட்டு வருகிறது. அது அந்த ஒப்பந்தம் குறித்த உண்மையைக் குறிப்பிட்டதோடு, UAW இன் பொய்களுக்கு எதிருரை வழங்கி, தொழிலாளர்களுக்கு எதிரான தொழிற்சங்கம்-பெருநிறுவன சூழ்ச்சியை அம்பலப்படுத்தியது. அது தொழிலாளர்கள் பேசுவதற்கு ஒரு தளத்தை வழங்கியுள்ளது. UAW இல் இருந்து சுயாதீனப்பட்ட சாமானிய தொழிலாளர்களது தொழிற்சாலை குழுக்களை உருவாக்குவதற்கான அதன் அழைப்பு,  கணிசமானளவில் விடையிறுப்பைக் கண்டுள்ளது.

இப்போது அந்த ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன நிறுவனங்களும், UAW மற்றும் ஒபாமா நிர்வாகமும் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு எவ்வாறு விடையிறுப்பதென ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்களின் வாக்குகளை மதிக்காமல், அவர்கள் தங்களின் நோக்கங்களை எட்டுவதற்காக முன்னோக்கி அழுத்தமளிக்க உத்தேசிக்கின்றனர். இத்தகைய நிலைமைகளின் கீழ், நடந்துவரும் போராட்டம் சாமானிய தொழிற்சாலை குழுக்களால் ஒழுங்கமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்படுவதன் மீதான கேள்வி அளப்பரிய முக்கியத்துவம் பெறுகிறது.

75 ஆண்டுகளுக்கும் முன்னர், ரஷ்ய புரட்சியின் துணை தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் டிரொட்ஸ்கி, வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தியில் தொழிற்சாலை குழுக்களின் முக்கியத்துவம் குறித்து விளப்படுத்தினார். தொழிற்சங்கங்கள் மிகப்பெரிய வர்க்க போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவொரு காலக்கட்டத்திலேயே, அவற்றின் பழமைவாதத்தை ஆழமாக விமர்சித்து டிரொட்ஸ்கி, 1938 இல் எழுதிய நான்காம் அகிலத்திற்கான ஸ்தாபக ஆவணத்தில், ஒவ்வொரு தொழிலிடத்திலும் அதுபோன்ற குழுக்களை நிறுவ அழைப்புவிடுத்தார்.

அவர் எழுதினார், “தொழிற்சங்கம் வழமையாக நடவடிக்கைக்குள் இறங்க இலாயக்கற்றதால், தொழிலாள வர்க்க அடுக்குகளுக்கான போராட்டத்தன்மை கொண்ட அமைப்புகளாக அவை ஆகிவிடுகின்றன என்ற உண்மையில் தான் அக்குழுக்களின் பிரதான முக்கியத்துவம் தங்கியுள்ளது". தொழிற்சாலை குழுக்கள் "ஒரு நேரடியான புரட்சிக்கு இல்லையென்றாலும், அப்போதைய புரட்சிக்கு-முந்தைய காலக்கட்டத்திற்கு—அதாவது முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கும் பாட்டாளிவர்க்க ஆட்சிக்கும் இடைப்பட்ட ஒரு காலக்கட்டத்திற்கு—கதவுகளைத் திறந்துவிடுகின்றன.” அதாவது அவை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டத்திற்குக் கதவுகளைத் திறந்துவிடுகின்றன.

இந்த வார்த்தைகள் எழுதப்பட்டதற்குப் பின்னரில் இருந்து, தொழிற்சங்கங்கள் ஒரு மாபெரும் சீரழிவுக்கு சென்றுள்ளன, அதுவும் குறிப்பாக கடந்த நான்கு தசாப்தங்களாக. தொழிற்சங்கங்கள் அவை செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் கூட தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு அடிபணிய வைக்க உழைத்தன, அவை உற்பத்தி பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு, தங்களைத்தாங்களே இன்னும் அதிகமாக நேரடியாக பெருநிறுவன நிர்வாகத்தின் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைத்துக் கொண்டதன் மூலமாக விடையிறுத்துள்ளன.

UAW மற்றும் AFL-CIO ஐ ஒருசேர இனியும் தொழிலாளர்களது அமைப்புகள் என்று கூற முடியாது. அவை தொழிலக பொலிஸ் படையாக செயல்படுகின்றன, அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள தனிச்சலுகைமிக்க உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கின் நலன்களை அவை பின்தொடர்ந்து கொண்டே, பெருநிறுவனங்களின் கோரிக்கைகளைத் திணிக்க முயல்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தினது அபிவிருத்தி தவிர்க்கவியலாது தொழிற்சங்கங்களுடன் ஒரு மோதல் வடிவத்தை ஏற்குமென உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவ கட்சியும் முன்கணித்தது. தொழிலாளர்களின் சாமானிய தொழிற்சாலை குழுக்களை நிறுவுவதற்கான வாகனத் தொழிலாளர் சஞ்சிகை விடுத்த அழைப்பானது, அத்தகைய அமைப்புகள் வேலைசெய்யும் இடத்தின் மீது கொண்டிருக்கும் சர்வாதிகாரத்தை கடந்துவரவும் மற்றும் தொழிலாளர்கள் தாங்களாகவே சாத்தியமான ஒவ்வொரு வழிகளிலும் சுயாதீனமான நடவடிக்கையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த முன்னோக்கு பலமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைச் சவால்விடுக்க அனுமதிக்கவியலாது என்று வலியுறுத்திய நடுத்தர வர்க்கமும் போலி-இடது அமைப்புகளும் அரசியல்ரீதியில் அம்பலப்பட்டு நிற்கின்றன. இத்தகைய அமைப்புகள், தொழிற்சங்க எந்திரம் மற்றும் அது அணிதிரண்டுள்ள ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் WSWS இணைந்து இயங்க மறுப்பதற்காக, அதை "குறுங்குழுவாத" அமைப்பு என்று வழமையாக கண்டிக்கின்றன. அவை "குறுங்குழுவாத" அமைப்பு என்பதன் மூலமாக எதை குறிப்பிடுகின்றன என்றால் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுவதையே ஆகும், இப்போராட்டம் தொழிலாளர்கள் மீதான தொழிற்சங்கங்களின் இறுக்கிப்பிடியை உடைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

வாகனத் தொழிலாளர்களின் எதிர்ப்பு அமெரிக்காவில் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சிக்கு ஒரு வெளிப்பாடாகும். இது ஆழ்ந்த சர்வதேச முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம், உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் அபிலாஷைகளோடு, உள்நாட்டில் அதிகரித்தளவில் கோபமான, விரோதமான மற்றும் புரட்சிகரமான சமூக சக்தியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிகழ்வுபோக்கு வர்க்க ஆட்சியின் அடித்தளங்களுக்கு எதிராகவும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கே எதிராகவும் அதிகரித்தளவில் பகிரங்கமாக அரசியல் வடிவம் எடுக்கும், எடுக்க வேண்டும்.