சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

UK Labour Party paves way for Syria intervention

இங்கிலாந்து தொழிற் கட்சி சிரியா தலையீட்டுக்கு வழி வகுக்கிறது

Robert Stevens and Chris Marsden
19 October 2015

Use this version to printSend feedback

பிரதம மந்திரி டேவிட் கேமரூன் கூறுகையில், அவருக்கு நாடாளுமன்றத்தில் "முழு சம்மதம்" கிடைத்தால் மட்டுமே சிரியாவில் இராணுவ நடவடிக்கை மீது வாக்கெடுப்பு நடத்த அழைப்புவிடுப்பதாக தெரிவித்தார். இதற்கு விடையிறுப்பாக தொழிற் கட்சியின் நிழல் அமைச்சரவை அதற்கு ஆதரவளிப்பதை சமிக்ஞை செய்துள்ளது.

ஆகஸ்ட் 2013 இல் அப்போதைய தலைவர் எட் மிலிபாண்ட் தலைமையின்கீழ் தொழிற் கட்சி ஏனைய எதிர்கட்சிகள் மற்றும் டோரி எதிர்பாளர்களோடு சேர்ந்து சிரியாவில் விமானத் தாக்குதல்கள் நடத்தும் பிரச்சினையில் "வேண்டாமென" வாக்களித்த போது, பழமைவாத-தாராளவாத ஜனநாயக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது என்ற உண்மையே, கேமரூனின் இந்த முன்னெச்சரிக்கையான சூத்திரமாக்கலுக்கான காரணமாகும்.

சிரியாவில் போர் நடத்துவதற்கு பெருகியளவில் மக்கள் எதிர்ப்பு நிலவியதன் காரணமாக, அத்துடன் வெற்றி பெறுவதற்கான எந்த திட்டமும் இங்கிலாந்திடம் இல்லை என்று இராணுவத்திற்குள் கவலைகள் நிலவியதாலும், தொழிற் கட்சி அதன் எதிர்ப்பைக் காட்ட கடமைப்பட்டிருந்ததாக உணர்ந்தது.

அந்த வாக்கெடுப்புக்குப் பின்னர், திருத்தங்கள் கொண்டு வர தொழிற் கட்சி அதனால் ஆனமட்டும் அனைத்தும் செய்ததுகடந்த ஆண்டு செப்டம்பரில் ஈராக்குடன் மட்டுப்படுத்தப்பட்ட விமானத் தாக்குதல்களுக்காக வாக்கெடுப்பில், வெறும் 24 நாடாளுமன்ற பிரதிநிதிகள் மட்டுமே எதிராக வாக்களித்தனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் ஒரு சிறிய பெரும்பான்மையோடு இருப்பதாலும் மற்றும் 2013 இல் 30 பிரதிநிதிகளது எதிர்ப்பைக் கண்டுள்ள நிலையிலும், பழமைவாதிகளுக்கு நிச்சயமாக வெற்றி பெறுவதற்கு மதிப்பிடத்தக்களவில் 35 தொழிற் கட்சி பிரதிநிதிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

கேமரூன் ஏற்கனவே நம்பிக்கையோடு இருப்பதற்கு எல்லாவிதத்திலும் காரணம் உள்ளது, அந்நடவடிக்கையை தொழிற் கட்சியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களாவது ஆதரிப்பார்கள் என்ற செய்தி கிடைத்துள்ளது. ஆனால் இது அரசியல்ரீதியில் சவாலுக்குட்படுத்தப்படலாம், ஏனெனில் சிக்கனத்திட்ட-எதிர்ப்பு மற்றும் போர்-எதிர்ப்பு கொள்கைகளை அவர் அறிவித்ததன் அடிப்படையில் தான் தொழிற் கட்சியின் தலைவராக ஜெர்மி கோர்பின் செப்டம்பரில் பிரமாண்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் கூறுகையில், பிரிட்டிஷ் துருப்புகள் நிலைநிறுத்தப்படுவதை அவர் ஆதரிக்கும் எந்தவொரு சூழ்நிலையையும்" அவரால் நினைத்தும் பார்க்கவியலாது என்றார்.

எவ்வாறிருப்பினும் அவரது நிலைப்பாட்டிற்காக போராடுவதற்குப் பதிலாக, கோர்பின் நாடாளுமன்ற தொழிற் கட்சியில் உள்ள போர்-ஆதரவு சக்திகளுக்கு எதிரான எல்லா அரசியல் முன்னெடுப்புகளையும் விலக்கிக் கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை நிழல் செயலராக ஹிலாரி பென் மற்றும் பாதுகாப்புத்துறை நிழல் செயலராக மரியா ஈகிள் உட்பட, அவரது நிழல் அமைச்சரவையில் போருக்கு ஆதரவளிக்கும் வலதுசாரி நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஒரு பெரும்பான்மையை நியமித்துள்ளார்.

தொழிற் கட்சியின் செப்டம்பர் மாத மாநாட்டில், சிரியா மீது குண்டுவீசுவதா என்றவொரு விவாதம் இறுதி நாளன்று 20 நிமிடங்களில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை ஆதரவில்லையென்றால் சிரியாவில் இங்கிலாந்து குண்டுவீச்சு நடவடிக்கையை எதிர்ப்பது என்றவொரு நிபந்தனைக்குட்படாத தீர்மானம் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ரஷ்யாவும் அமெரிக்காவும் இரண்டும் சிரியாவில் குண்டுவீசி வருகின்ற நிலையில், .நா. சபையின் ஒரு தீர்மானம் இல்லை என்பது ஒரு தாண்டமுடியாத தடையாக இனியும் கருத்தில் கொள்ள முடியாது. அதற்கும் கூடுதலாக, தொழிற் கட்சி மாநாட்டு தீர்மானம், விமானங்கள் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதிகளையும் மற்றும் இராணுவத்தை அனுமதிக்கும் .நா. ஷரத்து 7 தீர்மானத்தின் கீழ் துருப்புகளையும் பேணுவதன் மூலமாக, "பாதுகாப்பான புகலிடங்கள்" என்றழைக்கப்படுவதை அமைக்க ஆதரவளித்தது.

டோரிக்களால் அது நகர்த்தப்படுகையில் சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அங்கீகரிக்க, தொழிற் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவர்களது "மனசாட்சிப்படி சுதந்திரமாக வாக்களிக்க" விடப்படுவார்கள் என்று அம்மாநாடு முடிந்த உடனேயே, கோர்பினும் மற்றும் அவரது நிழல் அமைச்சரவை சான்சிலர் ஜோன் மெக்டொன்னெலும் தெளிவுபடுத்தினர்.

இதுவுமே கூட அக்கட்சியின் வலதுசாரிகளைச் சாந்தப்படுத்த போதுமானதாக இல்லை.

அக்டோபர் 11 அன்று, “சிரியாவில் ஒரு நியாயமான தீர்வை எட்ட பிரிட்டிஷ் படைகளால் உதவ முடியும்" என்று தலைப்பிட்டு முன்னணி பழமைவாதியான ஆண்ட்ரூ மிட்செல் மற்றும் தொழிற் கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர் Jo Cox ஆல் எழுதப்பட்ட ஒரு கூட்டறிக்கை Observer இல் பிரசுரமானது. அக்கடிதம், "உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர" இராணுவ நடவடிக்கைக்கு வலியுறுத்தியது. ரஷ்யாவும் சீனாவும் .நா. தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தில் நிராகரித்தாலும் கூட சிரியாவிற்குள் விமானம் பறக்க தடைசெய்யப்பட்ட பகுதியை அமுலாக்குவதற்கு பிரிட்டனைத் தயாராக இருக்க வலியுறுத்தும் ஓர் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்துமாறு Cox அறிவித்தார். அப்பெண்மணி டோரிக்களுடன் பகிரங்கமான வேலை செய்வதென்ற அவரது முடிவுக்காக பென்னால் ஆதரிக்கப்படுகிறார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், நிழல் அமைச்சரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பிரபலங்கள் கோர்பினைச் சந்தித்தனர், அதில் பென், ஈகிள் மற்றும் மேதகு நிழல் சான்சிலரான Lord Falconer ஆகியோர் உள்ளடங்கி இருந்தனர். சிரியா மீதான தொழிற் கட்சியின் நிலைப்பாட்டை "தெளிவுபடுத்தும்" அக்குழுவின் அறிக்கை ஒன்று, பென்னால் எழுதப்பட்டு கோர்பினால் ஒப்புதல் வழங்கப்பட்டு, கார்டியனில் பிரசுரமானது. .நா. அங்கீகாரம் இல்லையென்றாலும் தொழிற் கட்சி போரை ஆதரிக்குமென அது குறிப்பிடுகிறது.

அக்கடிதம் குறிப்பிடுவதாவது: “ஐந்தில் நான்கு அங்கத்துவ நாடுகள்அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யாஏற்கனவே ஈராக் அல்லது சிரியா அல்லது இரண்டு நாடுகளிலுமே ISIL/Daeshக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதால், .நா. பாதுகாப்பு அவை ஷரத்து VII தீர்மானத்தின் மீது உடன்பாடு பெற வேண்டிய அவசியம் இப்போது இல்லை.”

அது தொடர்கிறது, ஆனால், “எந்தவொரு தீர்மானமும் வீட்டோ அதிகாரத்தில் நிராகரிக்கப்படலாம் என்பதை நாம் அறிந்துள்ள" நிலையில்... “அத்தகைய சூழ்நிலைகளில் நாம் மீண்டும் நிலைப்பாட்டை காண வேண்டிய அவசியம் இருக்கும்.”

கோர்பின் "தைரியமானவர் மற்றும் உறுதியானவர்" என்பதுடன், “சரியானதைச்" செய்கிறார் என்று தொழிற் கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர் Cox விடையிறுத்தார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் உட்பட எண்ணற்ற போர்களில் பிரிட்டிஷ் இராணுவம் சம்பந்தப்பட்டிருந்ததை நியாயப்படுத்துவதற்காக டோரி பிளேயரின் கீழ் தொழிற் கட்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட "நியாயபூர்வமான வெளியுறவு கொள்கையிலிருந்து" இதில் எதுவுமே வேறுபட்டு ஒன்றும் இல்லை. அனைத்திற்கும் மேலாக, “பாதுகாப்பான புகலிடங்களுக்கான" முறையீடு சிரியாவைச் சுற்றி வளைப்பதற்கான அடித்தளத்தை மட்டும் வழங்கவில்லை, மாறாக அசாத் அரசாங்கத்தை ஆதரித்து வருகின்ற ரஷ்யாவுடன் நேரடியான இராணுவ மோதலையும் அச்சுறுத்துகிறது. “சிரிய உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர அவசியமான நடவடிக்கைக்கு இன்னும் அதிகமாக அழுத்தமளிக்கும்" வகையில் ரஷ்யாவின் தலையீடு அடித்தளத்தில் நிலைமையை மாற்றுகிறது" என்று பென் அப்பட்டமாக குறிப்பிடுகிறார்.

கோர்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை தொழிற் கட்சியின் அரசியல் மறுமலர்ச்சியின் தொடக்கத்தைக் குறிப்பதாக பிரிட்டனின் எண்ணற்ற போலி-இடது குழுக்கள் குறிப்பிடும் வாதத்தைச் சம்பவங்கள் மீண்டும் மறுத்தளிக்கின்றன. “மக்களின் வெற்றி", அதாவது கோர்பின் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை, “அனைத்தும் சாத்தியம்" என்பதை அர்த்தப்படுத்துவதாக இடது ஐக்கியம் குறிப்பிட்டது.

தொழிற் கட்சியின் அரசியல் குணாம்சம் தலைவரை மாற்றியதாலோ, அல்லது புதிய அங்கத்தவர்களின் உள்வரவாலோ கூட மாறிவிடவில்லை. அது, ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னோக்கி நீண்டுசெல்லும், அதன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வரலாறு மற்றும் அதன் வேலைத்திட்டத்தில் தீர்க்கமாக உள்ளது.

அவரது "மனசாட்சியின்" கட்டளைகள் என்னவோ அதன் அடிப்படையில் கோர்பின் வேண்டுமானால் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக வாக்களிக்கலாம். ஆனால் தொழிற் கட்சியின் வலதுசாரியிடம்மொத்தத்தில் "கட்சி ஐக்கியம்" மற்றும் "கூட்டு தலைமையின்" “புதிய அரசியல்" என்ற பெயரில்ஒரு போராட்டமின்றி வெற்றி ஒப்படைக்கப்படும். இராணுவத் தலையீட்டை ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக காட்டுவதன் மூலம் ஏறக்குறைய (232 இல்) 100 தொழிற் கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் ஆதரவை கேமரூனால் வென்றெடுக்க முடியுமென இப்போது மதிப்பிடப்படுகிறது.

கடந்த வாரயிறுதியில், கோர்பின் அணுஆயுதக் குறைப்பு பிரச்சாரத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், ஆனால் தொழிற் கட்சியோ அணுசக்தி ஆற்றலை விடாது வைத்திருப்பதை ஆதரிக்கிறது. சிக்கனத் திட்டத்தை நடைமுறையில் சட்டமாக்கும் அரசாங்கத்தின் "நிதிய கடமைப்பாட்டு சாசனம்" (charter of fiscal responsibility) என்பதை எதிர்ப்பதற்காக, கோர்பின் கடந்த வாரம் தொழிற் கட்சிக்குள் வாக்குகளைப் பெற்றார், ஆனால் அந்நாடெங்கிலும் மூலை முடுக்கில் இருக்கும் தொழிற் கட்சி உள்ளூர் நிர்வாகிகளோ டோரிக்களால் கோரப்படும் ஒவ்வொரு வெட்டையும் தொடர்ந்து திணிக்க இருக்கிறார்கள்.

போருக்கான மூலக் காரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராக பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதன் அடிப்படையில், ஒரு நிஜமான போர்-எதிர்ப்பு இயக்கம் இருக்க வேண்டும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் வெளிப்பட்ட உணர்வுகளான சிக்கனத் திட்டம், இராணுவவாதம் மற்றும் போர் ஆகியவற்றிற்கு எதிராக அதிகரித்துவரும் எதிர்ப்பு, தொழிற்கட்சிக்கு எதிராக அவசியமான அரசியல் கிளர்ச்சியையும் மற்றும் தொழிலாள வர்க்கம் அதன் ஒரு புதிய நிஜமான சோசலிச கட்சியைக் கட்டமைப்பதையும் தடுப்பதே கோர்பினின் பாத்திரமாகும்.