சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Canadian election and the intensification of class conflict

னேடிய தேர்தலும் வர்க்க மோதல் தீவிரமயமாதலும்

Keith Jones
22 October 2015

Use this version to printSend feedback

திங்களன்று நடந்த னேடிய தேர்தலில் ஸ்டீபன் ஹார்பரின் வலது-சாரி பழமைவாத கட்சி அரசாங்கத்தை மக்கள் நிராகரித்த அளவானது கனடாவிலும் சர்வதேசரீதியாகவும் அரசியல் ஸ்தாபகத்தையும் மற்றும் பெருநிறுவன ஊடகங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒரு தசாப்தகாலமாக பதவியிலிருந்த போது, பழமைவாதிகள் பத்து பில்லியன் கணக்கான டாலர் சமூக செலவினங்களைக் குறைத்ததுடன், ஜனநாயக உரிமைகள் மீது பலமான தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர், அத்துடன் மத்திய கிழக்கிலும் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய தாக்குதல்களுக்குள் கனடா கூடுதலாக ஒருங்கிணைக்கப்பட்டது.

ஹார்பருக்கு மக்கள் காட்டிய எதிர்ப்பிலிருந்து முற்றிலும் தகுதியின்றி ஆதாயமடைந்தவர்கள் ஜஸ்டின் ட்ரூடோவும் (Justin Trudeau) மற்றும் தாராளவாத கட்சியும் ஆகும். கடந்த நூற்றாண்டின் கூடியகாலப்பகுதியில் அரசாங்கம் அமைக்க கனடிய முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பமான கட்சியாக இருந்த தாராளவாதிகள், கடந்தமுறை அவர்கள் பதவியிலிருந்த போது ஹார்பர் பதவிக்குவர வழியமைத்தனர். கிறிஸ்டீன்-மார்ட்டின் தாராளவாத அரசாங்கம் கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய சமூக செலவின வெட்டுக்களை நடைமுறைப்படுத்தியது, பெரு வணிகங்களுக்கு பத்து பில்லியன் கணக்கான வரி வெட்டுக்களை வழங்கியது, யூகோஸ்லேவியா மற்றும் ஆப்கானிஸ்தானிய வாஷிங்டனின் போர்களில் னேடிய இராணுவ படைகள் ஒரு முன்னணி பாத்திரம் வகிக்க உத்தரவிட்டதன் மூலமாக கனடிய இராணுவவாதத்திற்குப் புத்துயிரூட்டியது.

நான்காண்டுகளுக்கு சற்று முன்னர், தாராளவாத கட்சி அதன் முன்பில்லாத வகையில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" முன்னணியில் நின்று வக்காலத்துவாங்கியவர்களில் ஒருவரான மிகையில் இக்னாரீவ் தலைமையில் அப்போது தாராளவாதிகள், 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளோடு, பெரும் வாக்கு வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தை அடைந்தனர்.

தாராளவாதிகள் புத்துயிர் பெற்றதில் ஒன்றோடொன்று இணைந்த இரண்டு காரணிகள் கணக்கில் வருகின்றன. முதலாவது, முதலாளித்துவ வர்க்கத்தின் முக்கிய பிரிவுகள் ஹார்பர் மீது நம்பிக்கை இழந்து விட்டிருந்தன. இது கனடாவின் நவ-பழமைவாதிகளில் ஒருவரான கொன்ராட் பிளாக், ஒரு தாராளவாத அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க விடுத்த அழைப்பால் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது.

ஹார்பர் சமூக எதிர்ப்பைத் தூண்டுவதில் எரி பிழம்பாக மாறியிருந்தார் என்ற கவலை அங்கே நிலவியது. அக்கவலை கல்லில் இருந்து எடுக்கும் shale oil எண்ணெய் உற்பத்தி சரிவு மற்றும் கனடா மந்தநிலைமைக்குள் சரிந்தமை ஆகியவற்றோடு சேர்ந்து அதிகரித்திருந்தது. குழாய்வழித்தடம் Keystone Xl க்கு அமெரிக்க ஒத்துழைப்பை பெறுவதிலும் மற்றும் மக்கள் எதிர்ப்பின் முன்னால் இராணுவ செலவினங்களைப் பலவந்தமாக பெரியளவில் அதிகரிப்பதிலும் அவரது இலாயக்கற்றத்தன்மை உட்பட, ஆளும் வர்க்க நிகழ்ச்சிநிரலின் முக்கிய கூறுபாடுகளை ஹார்பர் நடைமுறைப்படுத்த தவறியதன் மீதும் அங்கே ஏமாற்றம் இருந்தது.

மாற்றத்திற்கு" வாக்குறுதியளித்து, ஒரு தாராளவாத அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்ததன் மூலமாகவும், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை மீதான மக்கள் கோபத்திற்கு மட்டுப்பட்ட அளவில் முறையிட்டும், னேடிய ஆளும் வர்க்கம், பொது சேவைகளைக் கலைப்பது, சமூக உரிமைகளை வெட்டுவது, மற்றும் உலகளாவிய அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவது ஆகியவற்றிற்கு மிகவும் நடைமுறைரீதியிலான ஒரு கருவியை வடிவமைக்க முடியுமென கணக்கிடுகிறது.

தாராளவாத தலைவராக அவர் தேர்வு ஆவதற்கு முன்னாள் தாராளவாத பிரதம மந்திரி பியர் ட்ரூடோவிற்கு முதலாவதாக பிறந்தவர் என்ற சாதனையை மட்டுமே கொண்டிருந்த ட்ரூடோ, வலது-சாரி பெரு வணிக அரசாங்கத்தை வழிநடத்துபவராக இருக்கப் போகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி பதவியை வெல்வதில் ஒபாமா பயன்படுத்திய அதே வார்த்தை வரிகளை முன்மாதிரியாக கொண்டு, “முற்போக்கான" வார்த்தைஜாலங்களைப் பாவித்து, ஒரு சில உயர்மட்ட மாற்றங்களுடன், பெரும்பாலும் அலங்கார கொள்கை மாற்றங்களைக் கொண்டு, ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரலை மீள்தொகுப்பு செய்ய அவர் பணிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களில் அவர்களது பகிரங்கமான வலது-சாரி எதிர்ப்பாளர்களை எதிர்கொள்வதற்கான கொள்கை முன்மொழிவுகளில் மட்டுமே "முற்போக்கான" முறையீடுகளை செய்யும் ஒரு நீண்ட வரலாறைத் தாராளவாதிகள் கொண்டுள்ளனர். தொழிலாள வர்க்கத்தின் கூலிகள் மீதான தாக்குதல்களுக்கு இடையே, முற்போக்கான பழமைவாதிகள் 90-நாள் கூலி முடக்கத்திற்கு அழைப்புவிடுத்ததை உதாசீனப்படுத்தியதன் மூலமாக, ட்ரூடோவின் தந்தை 1974 இல் ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை நிறுவினார். ஓராண்டுக்குப் பின்னர், அவரே மூன்றாண்டுகால ஊதிய-கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை கொண்டு வருவதாக அறிவித்தவராவார்.

தாராளவாதிகளின் மீளெழுச்சியில் உள்ள இரண்டாவது மற்றும் மிகவும் அடிப்படையான காரணி, தொழிற்சங்கங்களும் மற்றும் சமூக ஜனநாயக புதிய ஜனநாயக கட்சியும் (NDP) வர்க்க போராட்டத்தை ஒடுக்கியமையாகும். உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, கனடாவிலும் வெளிவேடத்திற்கு "இடது" மற்றும் தொழிலாள வர்க்கத்தினதாக காட்டிக்கொள்ளும் அமைப்புகள் வேலை வெட்டுகள், தொழிலாளர்கள் மீது விட்டுக்கொடுப்புகளைத் திணிப்பதற்கும் மற்றும் பொதுச் சேவைகளைக் கலைப்பதற்கும் தசாப்தகாலமாக பெரு வணிக கருவிகளாக செயல்பட்டுள்ளன. 1930களின் பெரு மந்தநிலைமைக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்தின் மிகப்பெரும் நெருக்கடிக்கான பிரதிபலிப்பாக, இத்தகைய அமைப்புகள் இன்னும் மேற்கொண்டு வலதிற்கு நகர்ந்துள்ளன.

ஹார்பர் அரசாங்கம் மற்றும் தாராளவாத, பழமைவாத, கியூபெக் கட்சி (Parti Quebecois) மற்றும் NDP மாகாண அரசாங்கங்கள் ஆகியவற்றால் நிறைவேற்றப்பட்ட வேலைநிறுத்த-எதிர்ப்பு சட்டங்களைத் தொழிற்சங்கங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளன.

2012 இல், கியூபெக் மாணவர் போராட்டம் சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிரான ஒரு பரந்த தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கொண்டு வர அச்சுறுத்திய போது, தொழிற்சங்கங்கள் அதை முடிவுக்குக் கொண்டு வர தலையீடு செய்தன. கியூபெக் தாராளவாத அரசாங்கத்தின் சட்டத்திற்குக் கீழ்படிவதாக அவை அறிவித்ததுடன், அந்த வேலைநிறுத்தத்தை உடைப்பதில் உதவ கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்க அங்கத்தவர்களைப் பெறுவதில் அவர்களின் சக்திக்குட்பட்டு அனைத்தும் செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டன. அதேநேரத்தில், தாராளவாதிகளின் சிக்கன நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பை அவை பெரு வணிக கியூபெக் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதை நோக்கி திசை திருப்பிவிட்டார்கள். புதிய ஜனநாயக கட்சி (NDP) பெயரளவிற்கு கூட மாணவர்களை ஆதரிக்கவோ அல்லது தாராளவாதிகளின் சட்டமசோதா 78 விமர்சிக்கவோ மறுத்தது.

வர்க்க போராட்டத்தை ஒடுக்குவதில் தொழிற்சங்கங்கள் மற்றும் புதிய ஜனநாயக கட்சி முயற்சிகளது பிரதான அரசியல் வெளிப்பாடு, தாராளவாதிகள் ஒரு மத்திய பாத்திரம் வகிக்கும் ஒரு "முற்போக்கான அரசாங்கத்திற்காக" என்ற அவர்களது நீண்டகால பிரச்சாரத்தில் வெளிப்பட்டதுஅதாவது இது சிக்கனத் திட்டம் மற்றும் போருக்கான ஒரு மாற்று அரசாங்கமாகும்.

ஹார்பர் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில், தாராளவாதிகள் உழைக்கும் மக்களின் ஒரு கூட்டாளி ஆவர் என்ற பொய்யைத் தொழிற்சங்கங்களும் NDP உம் முன்னிலைப்படுத்தின. அதற்கு முன்னர் இருந்த கிறிஸ்டீன்-மார்ட்டினின் தாராளவாத அரசாங்கத்தினது முக்கிய வலது-சாரி முறைமைகளைத் தான் ஹார்பர் விரிவுபடுத்தினார் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.

டிசம்பர் 2008 இல், ஹார்பருக்கு எதிரான கூட்டு அரசாங்கம் நிறுவும் ஒரு குறைபிரசவ முயற்சியில் இணைய, NDP தாராளவாதிகளை இணங்க செய்தது. கூட்டணி உடன்படிக்கையின் கீழ், “நிதிய கடமைப்பாட்டிற்கும்", 2011 முழுவதிலும் ஆப்கானிஸ்தானில் போர் தொடுப்பதற்கும், மற்றும் 50 பில்லியன் டாலர் பெருநிறுவன வரி வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்பான ஒரு தாராளவாத-தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இளைய பங்காளியாக இருக்க NDP ஒப்புக் கொண்டது.

2015 இல், தாராளவாதிகளை முன்னிலைப்படுத்தும் நோக்கில் தொழிற்சங்கங்கள் "பழமைவாதிகளைத் தவிர வேறு எவரும்" என்ற மூலோபாய-வாக்களிப்பு நடவடிக்கைகளுக்குள் மில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சின. அதேவேளையில் தேர்தலுக்கு வெறும் ஒருசில நாட்களுக்கு முன்னதாக வெளியிட்ட தமது தேர்தல் அறிக்கையில், ஒரு கூட்டணி அரசாங்கத்தில் தாராளவாதிகளுடன் கூட்டு சேர தயாராக இருப்பதை அறிவித்தது.

ஆளும் வர்க்கத்தின் நலன்களை நிபந்தனையின்றி அது தாங்கிப் பிடிக்குமென்று ஆளும் வர்க்கத்தைச் சமாதானப்படுத்தும் நோக்கில், தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்போடு, புதிய ஜனநாயக கட்சி முன்பினும் அதிக வெளிப்படையாக வலதுசாரி கொள்கைகளை ஏற்றது. தோமஸ் முல்கர் தலைமையின் கீழ், அவரே கூட ஒரு முன்னாள்-தாராளவாத மந்திரிசபை அமைச்சராக இருந்தவர் என்ற நிலையில், புதிய ஜனநாயக கட்சி ஒரு "ஹார்பரை பெரிதாக தாக்காத" (Harper lite) தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியது. அது நான்காண்டுகளுக்கு மிதமான வரவுசெலவு திட்டக்கணக்கிற்கும், பணக்கார கனடியர்களுக்குமே கூட வரி உயர்வுகள் இல்லை என்றும், கிட்டத்தட்ட முழுமையாக மிகப்பெரிய பெருநிறுவனங்களுக்கும் கூடுதல் வரி வெட்டுக்களுக்கும், மற்றும் இராணுவ செலவுகளை அதிகரிப்பதற்கும் வாக்குறுதியளித்தது.

இது, ட்ரூடோவும் மற்றும் அவரது தாராளவாதிகளும் தங்களைத்தாங்களே "நிஜமான மாற்றத்திற்கான" கட்சியாக விற்பனை செய்வதற்கு கதவைத் திறந்துவிட்டது. பே வீதியின் (Bay Street) கருத்தைக் கவரும் நம்பிக்கையில், புதிய ஜனநாயக கட்சி வலதிலிருந்து தாராளவாதிகளைத் தாக்கி விடையிறுத்தது.

தொழிற்சங்க அதிகாரமும் புதிய ஜனநாயக கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலில் அவர்கள் உடந்தையாய் இருந்தமைக்காக மதிப்பிழந்து போயிருந்த நிலையில், பல்வேறு போலி-இடது அமைப்புகள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இத்தகைய முதலாளித்துவ-சார்பு அமைப்புகளின் சுற்றுவட்டத்தில் வைத்திருக்க முன்வந்துள்ளன, அவற்றை இடதின் தரப்பிற்கு அழுத்தமளிக்க முடியுமென அவை வாதிட்டன.

அமெரிக்காவை மையமாக கொண்ட சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி ஆகியவற்றின் கனடிய சகோதரத்துவ அமைப்புகள் சிக்கன நடவடிக்கைகளுக்கு சார்பான NDP க்கு அடித்தளத்தில் இருந்தன. “ஹார்பர் இன்றி வேறு எவரும்" பிரச்சாரத்தை எதிர்ப்பதாக அவை கூறிக் கொண்ட போதினும், அவை அனைத்துமே 2013-14 இல் ஒன்டாரியோ தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்ட "Stop Hudak" பிரச்சாரத்தைப் பாராட்டின, அப்பிரச்சாரத்தின் அடிப்படையில் தான் தொழிற்சங்கங்கள் அவர்களது 2015 ஹார்பர்-எதிர்ப்பு நடவடிக்கையை வடிவமைத்திருந்தன.

ஒன்டாரியா தாராளவாதிகள் பாரிய சமூக செலவின வெட்டுகளை நடைமுறைப்படுத்தி ஆசிரியர் வேலைநிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கிய போதினும், ஹார்பரின் ஒரு நெருங்கிய கூட்டாளியான ஹூடக்கிற்கு எதிராக 2014 ஒன்டாரியோ மாகாண தேர்தலின் போதும் மற்றும் அதற்கு முன்னரும் தொழிற்சங்கங்களின் பிரச்சாரம், அவர்களுக்கு தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான ஆதரவளிப்பதற்குக் கட்டமைப்பை வழங்கியது.

தொழிலாள வர்க்கம் ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கத்துடன் கடுமையான மோதலுக்கு வரும். அதன் நிகழ்ச்சிநிரல் ட்ரூடோவின் இனிப்பான வாய்ஜம்பங்களாலோ அல்லது தாராளவாதிகளின் போலித்தனமான "முற்போக்கான" தேர்தல் அடித்தளத்தாலோ தீர்மானிக்கப்படாது, மாறாக ஆழ்ந்த முதலாளித்துவ நெருக்கடியாலும் மற்றும் அது அதிகரித்துவரும் புவிசார் அரசியல் மோதல்களின் தீவிரப்பாட்டாலும் தீர்மானிக்கப்படும்.

வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்ய, கனடிய தொழிலாளர்கள் ஓர் அரசியல் இருப்பு நிலை கணக்கை வரைவது அவசியமாகும்.

சிக்கனத் திட்டங்கள் மற்றும் போரின் பல ஆண்டுகளுக்குப் பின்னர், கிரீஸிலிருந்து அமெரிக்காவின் வாகனத் தயாரிப்பு ஆலைகள் வரையில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் அது ஒழுங்கமைந்த அரசியல் வெளிப்பாட்டைக் காணவில்லை. இது ஏனென்றால் தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் NDP போன்ற அமைப்புகளால் அரசியல்ரீதியில் தடுக்கப்பட்டுள்ளது, அவை சமரசமின்றி முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு சவால்விடுப்பதற்கு எதிராக உள்ளன. அவை தொழிலாள வர்க்கத்தை அல்ல, மாறாக உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட அடுக்குகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

அதன் அடிப்படை நலன்களை வலியுறுத்த, தொழிலாள வர்க்கம் தன்னைத்தானே ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைத்துக் கொண்டு, ஏகாதிபத்திய போர், நிதியியல் பிரபுத்துவம் மற்றும் நாடுகடந்த பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதற்காக போராட வேண்டும்.

இதற்கு போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை, அனைத்திற்கும் மேலாக, தொழிலாளர்களது அரசாங்கத்திற்கான மற்றும் சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பிற்கான போராட்டத்தை நடத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர கட்சி அவசியமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் கனடிய பாகமாக சோசலிச சமத்துவ கட்சியைக் கட்டமைப்பதே இதன் அர்த்தமாகும்.