சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Dangerous developments in Germany

ஜேர்மனியில் அபாயகரமான அபிவிருத்திகள்

Johannes Stern
29 October 2015

Use this version to printSend feedback

ஜேர்மனியின் அரசியல் அபிவிருத்திகள் அதிகரித்தளவில் அபாயகரமான திசையில் நகர்ந்து வருகின்றன. போரால் நாசமாக்கப்பட்ட நாடுகளிலிருந்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோடிவரும் அகதிகளின் கதியைக் குறித்த பரந்த மக்கள் அனுதாபங்களுக்கு இடையிலும், ஏதேச்சாதிகார ஆட்சியை சட்டபூர்வமாக அவசியப்படுவதாக நியாயப்படுத்தும் வகையில் இனரீதியில் தூண்டிவிடப்பட்ட ஓர் அரசியல் ஸ்தம்பிப்பு சூழலை உருவாக்குவதற்காக, இராணுவ-உளவுத்துறை அமைப்புகள், ஊடகங்களில் உள்ள வலதுசாரி சக்திகள், பேரினவாத மற்றும் நவ-பாசிச அரசியல் அமைப்புகளது சதிக்கூட்டம் ஒன்றின் தலைமையில் ஒரு வஞ்சக பிரச்சாரம் நடந்து வருகிறது.

1945 இல் ஹிட்லரின் மூன்றாம் ரைஹ் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல்முறையாக, இனவாத மற்றும் பாசிச வனப்புரைகளைப் பாவிப்பது அன்றாட அரசியல் சம்பாஷைணைகளின் பாகமாகி உள்ளது. தேச மக்களின் முன்னால் அவர்களது பாசிச வீராவேசங்களை முழங்க, ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative für Deutschland - AfD) கட்சி மற்றும் ஆவேசமான புலம்பெயர்வோர்-விரோத பெஹிடா இயக்கம் போன்ற அதிதீவிர வலதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகளை ஊடகங்களில் அழைக்காமல் ஒரு நாள் கூட செல்வதில்லை.

கடந்த வாரம், AfD தலைவர் Björn Höcke ஓராயிரம் ஆண்டு-பழைய ஜேர்மனியின் தேசிய-பேரினவாத கட்டுக்கதைகளுக்கு புத்துயிரூட்டுவதற்காக ஒரு ஜேர்மன் கொடியோடு தொலைக்காட்சியில் தோன்றினார். அவரது ஆரவார உரைகளின் குறிப்பு-வாசகங்களை (sub-text) —ஜேர்மனியில் வெளிநாட்டு தாக்கங்களுக்கு எதிராக அதன் இனவாத தூய்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வாசகங்களை தவறவிடுவது சாத்தியமே இல்லை.

நடுத்தர அளவிலான நகரமான ஏர்ஃபோர்ட் நகரத்தில் Höcke மேடையேறிய ஒரு கூட்டத்திற்கு ஊடகங்கள் பரந்த ஒளிபரப்பை வழங்கவும் முடிவு செய்திருந்தன, அக்கூட்டத்தில் அந்த எதிர்கால தலைவர் (führer) அறிவித்தார்: “ஏர்ஃபோர்ட் ஓர் அழகிய ஜேர்மன் நகரமாகும், அது ஜேர்மனாகவே விளங்க வேண்டும்.” அக்கூட்டத்தில் பேசிய மற்றொரு பேச்சாளரான AfD இன் அலெக்சாண்டர் கௌலான்ட் ஜேர்மனியை பாதுகாக்க தவறுவதற்காக சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தலைமையிலான பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக - சமூக ஜனநாயக கூட்டணியைக் கண்டித்தார். “ஜேர்மன் மக்களின் தலைவிதியை மேர்க்கெலின் கரங்களில் இருந்து நாம் சரியான நேரத்தில் எடுப்போம்,” என்று அறிவித்த அவர், “அவ்விதத்தில் அங்கே ஜேர்மன் மக்களே இருப்பார்கள்,” என்றார்.

ஜேர்மனியில், இதுபோன்ற கருத்துக்களின் தோற்றுவாய்கள் மற்றும் முக்கியத்துவத்தை நன்கு புரிந்து கொள்ளமுடியும். Stern இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரை ஒன்று, “நாஜி பிதற்றல்களுக்குள் காலங்கழித்துக் கொண்டிருப்பதற்காகவும்" மற்றும் நாஜிக்களின் "இனவாத தத்துவங்களுக்கு" புத்துயிரூட்டுவதற்காகவும் AfD ஐ குற்றஞ்சாட்டியது.

நாஜி-குரலோடு அச்சுறுத்தும் சொல்லாட்சியில் தங்கியிருப்பது, ஒரு புதிய அரசியல் சூழலின் பாகமாக உள்ளது, இதில் ஆளும் கூட்டணியினுள் உள்ள மிக வலது-சாரி கூறுபாடுகளோடு, மிக நெருக்கமாக வேலை செய்து வருகின்ற அரசின் பாதுகாப்பு மற்றும் இராணுவ எந்திரத்தின் உட்கூறுகளால் மேர்க்கெல் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். நேற்று மட்டுமே, கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) தலைவர் Horst Seehofer கூறுகையில், மேர்க்கெல் நிறைய அகதிகள்-விரோத அதிதீவிர கொள்கைகளை ஏற்கவில்லையானால் சட்டத்திற்கு அப்பாற்பட்ட "அவசரகால நடவடிக்கைகள்" குறித்து எச்சரித்தார்.

Seehofer, அகதிகளை வெளியிலேயே நிறுத்துவதற்காக, முற்றிலும் கடுமையான எல்லை கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துமாறும், எல்லைச் சுவர்களைக் கட்டமைக்கவும், பொலிஸ் மற்றும் இராணுவ படைகளைப் பெருமளவில் நிலைநிறுத்தவும் கோரி வருகிறார்.

Spiegel இதழ் Seehofer இன் மொழியை "நாஜி-போன்றது" என்று குறிப்பிட்டதுடன், “சர்வாதிபத்திய சிந்தனையை ஊக்குவிப்பதாக" அவரைக் குற்றஞ்சாட்டியது.

பாதுகாப்பு எந்திரத்தின் பிரிவுகள் இந்த திசையில் தான் அழுத்தமளிக்கின்றன. மேர்க்கெல் அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று அரசு பாதுகாப்பு படைகள் பொறுமையாக காத்திருப்பதாக Welt am Sonntag குறிப்பிட்டது. “பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தினால்" பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி பின்வருமாறு கூறியதாக அது மேற்கோளிட்டது: “உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து பெருமளவில் மக்கள் உள்வருவது நமது நாட்டை ஸ்திரமின்மைக்கு இட்டுச் செல்லும்.”

ஜேர்மன் ஆளும் உயரடுக்கில் நிலவும் அதிதீவிர வலதுசாரிக்கும், உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பொதுவாக நிலவும் இடது உணர்வுக்கும் இடையே அங்கே ஒரு பரந்த இடைவெளி நிலவுகிறது. Höcke மற்றும் கௌலான்ட் போன்றவர்கள் அருவருப்பாக மென்று துப்புவதை ஊடகங்கள் வாயில் எச்சில் ஊற பார்த்துக் கொண்டே, வலதுசாரி ஆர்ப்பாட்டங்களை பிரதான அரசியல் சம்பவங்களாக செய்தியில் காட்டுகின்றன, அதேவேளையில் அவை, நூறாயிரக் கணக்கானவர்களால் ஆதரிக்கப்படுகின்ற பாரிய அகதிகளுக்கு-ஆதரவான ஆர்ப்பாட்டங்களைக் குறைத்துக் காட்டுகின்றன.

அதிதீவிர வலதின் வனப்புரை நிஜமான மக்கள் ஆதரவை ஈர்க்கவில்லை என்றாலும், ஜேர்மனியின் அபிவிருத்திகள் சுயதிருப்தி அடைய அனுமதிக்கவில்லை. அதிதீவிர வலதின் அரசியல் எந்தளவிற்கு சட்டபூர்வத்தன்மையை பெற்றுள்ளதோ அது, ஜேர்மன் அரசாங்கத்தால் பின்தொடரப்படுகின்ற அதிகரித்தளவிலான இராணுவவாத மற்றும் ஜனநாயக-விரோத கொள்கைகளின் துணைவிளைவாகும்.

1933 மற்றும் 1945 க்கு இடையே கொடூரமான குற்றங்கள் நடத்தப்பட்டிருந்த போதினும், ஜேர்மன் ஆளும் வர்க்கம் ஜேர்மனியை ஓர் உலகளாவிய இராணுவ சக்தியாக மாற்றும் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய நோக்குநிலைக்கு ஒரு வலதுசாரி இயக்கத்தை அணித்திரட்டுவதும், ஓர் எதேச்சதிகார ஆட்சியை உருவாக்குவதும் அவசியப்படுகிறது.

பத்து மில்லியன் கணக்கான ஜேர்மனியர்கள் —அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கம் அதிதீவிர வலதிற்கு அதிகரித்துவரும் அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்கு ஆழமாக விரோதமாக உள்ளன. அவர்கள் போர் மற்றும் இனவாதத்தை எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களது எதிர்ப்பு நடைமுறையில் இடது கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி (இது கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளோடு பக்கவாட்டிலிருந்து ஆட்சி செலுத்துகிறது) மற்றும் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளால் தடுக்கப்படுகின்றன.

வலதிலிருந்து அதிகரித்துவரும் அபாயத்தைக் குறித்து ஒரேயொரு அரசியல் சக்தி மட்டுமே எச்சரித்துள்ளது, அது ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பாகும். இக்கட்சியைக் கட்டியெழுப்புவதும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகளைக் கட்டியெழுப்புவதும் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள ஒரு முக்கிய மூலோபாய பணியாகும்.