சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Casualties of Fortress Europe: Refugees dead on land and sea

தரையிலும் கடலிலும் இறந்த அகதிகள்: ஐரோப்பிய கோட்டையால் பாதிக்கப்பட்டவர்கள்

By Marianne Arens and Patrick Martin
29 August 2015

Use this version to printSend feedback

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளின் போர் பிரதேசங்களிலிருந்து வெளியேறும் நிராதரவான அகதிகளின் இறப்பு எண்ணிக்கை, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் தெரிந்த வேறெதையும் விட, கோரமான காட்சிகளோடு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்த அகதிகளில் பரந்த பெரும்பான்மையினர், அவர்களது வீடுகள் மற்றும் குடும்பங்கள் மீது ஏகாதிபத்திய சக்திகளால், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவினால், அதற்கு உடந்தையாய் இருந்த பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து உள்ளடங்கிய ஏகாதிபத்திய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையிலிருந்து தப்பிக்க முயன்று வருகிறார்கள்.

சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகள் உள்ளடங்கலாக இந்த அகதிகள் அவர்களது தாய்நாடுகளிலிருந்து வெளியேறியதும், ஒவ்வொரு நிலையிலும் இன்னும் அதிக வன்முறையை முகங்கொடுக்கின்றனர்: பொலிஸ் மற்றும் எல்லை பாதுகாப்புப்படைகளிடமிருந்தும், ஒரு கப்பலிலோ அல்லது லாரியிலோ அகதிகளை மூச்சுத்திணறடித்து சாகடிக்கும் ஆள்கடத்தல்காரர்களிடமிருந்தோ, அகதிகளை தாக்க ஜேர்மன் பொலிஸால் அனுமதிக்கப்பட்ட சாக்ஸோனியிலுள்ள நவ-நாஜி குண்டர்களிடமிருந்தோ அவர்கள் வன்முறையை முகங்கொடுக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரங்களின்படி, 2014 இன் மொத்த எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு ஏற்கனவே 300,000 க்கும் அதிகமான பேர் மத்தியத்தரைக் கடலை கடந்துள்ளனர். இதில் மதிப்பிடப்பட்ட 180,000 பேர் குறுக்கு வழியாக துருக்கி பெருநிலத்திலிருந்து கிரேக்க கடலோர தீவுகளுக்கு வந்து, பின்னர் கிரீஸ், மார்சிடோனியா மற்றும் சேர்பியா வழியாக ஹங்கேரிக்கும், அங்கே இருந்து ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் சென்றதும் உள்ளடங்கும்.

நாளொன்றுக்கு 3,000 புலம்பெயர்வோர் பால்கன்கள் வழியாக இப்பாதையில் கடந்து செல்வதாக ஐ.நா. இந்த வாரம் முன்மதிப்பீடு செய்தது இது ஆண்டு விகிதத்தில் ஒரு மில்லியனை விட அதிகம், இவர்களில் பெரும்பான்மையினர் வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்டு, சவூதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கி போன்ற அமெரிக்க கூட்டாளிகளால் ஆயுதங்கள் வினியோகிக்கப்படும் சிரிய உள்நாட்டு போரினால் வெளியேறுபவர்கள்.

மற்றொரு 10,000 பேர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக துருக்கிக்கு இன்னும் அதிக ஆபத்தான பயணம் செய்துள்ளார்கள், இதில் குறைந்தபட்சம் 2,500 பேர் இந்தாண்டில் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை, வியாழனன்று இரவு மற்றும் வெள்ளியன்று காலை, லிபிய கடற்கரையையொட்டி மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கியதில் மற்றொரு 250 பேரின் மரணத்தால் உயர்ந்திருக்கிறது.

அந்த இரட்டை பேரிடர்களிலிருந்து குறைந்தபட்சம் 150 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது, இச்சம்பவங்களில் சுமார் 100 நபர்களை ஏற்றிய ஒரு சிறிய இரப்பர் படகும், 400க்கு அதிகமானவர்களை ஏற்றிய ஒரு பெரிய மீன்படி படகும் சம்பந்தப்பட்டிருந்தன. லிபிய Red Crescent அமைப்பு வெள்ளியன்று ஐ.நா. அதிகாரிகளுக்கு கூறுகையில், இரண்டாவது சம்பவத்தில், அதாவது பெரிய மூழ்குதலில் பலியானவர்களை மீட்கையில் அவர்களிடம் அனைவருக்கும் போதிய சவப்பைகள் இருக்கவில்லை என்றது.

அந்த மீன்பிடிப் படகு ஜூவாராஹ் துறைமுக நகரிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அது மூழ்கிய போது, அதில் பலியான பெரும்பான்மையினர் அப்படகின் அடியில் தப்பவியலாதவாறு சிக்கியிருந்தனர். சுமார் 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், கடலில் காணாமல் போனவர்களோடு மேற்கொண்டும் சடலங்கள் தேடப்பட்டு வருகின்றன. அந்த புலம்பெயர்வோர்களில் முக்கியமாக ஆபிரிக்கர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மீட்பு நடவடிக்கைகளில் மிகவும் மும்முரமான வாரயிறுதி நாட்களில் ஒன்றாக மாறியிருந்த ஆகஸ்ட் 22-23 இல், சிசிலிக்கு அருகே மத்தியத்தரைக்கடலில் இருந்து 4,400 புலம்பெயர்வோர் மீட்கப்பட்டதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்தது.

புடாபெஸ்ட் மற்றும் வியன்னாவிற்கு இடையே A4 நெடுஞ்சாலையில் நடந்த அந்த கோரமான துயரம், பாதுகாப்பான தரைவழி பாதையென கூறப்படுவது அகதிகளுக்கு மரணகதியிலான ஆபத்தாக இருப்பதைக் காட்டியது. கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த குளிரூட்டப்பட்ட பாரவூர்தியில் 59 ஆண்கள், எட்டு பெண்கள் மற்றும் இரண்டு வயது கூட ஆகாத ஒரு பெண் குழந்தையும், எட்டிலிருந்து பத்து வயதிலான மூன்று பையன்களும் என நான்கு குழந்தைகளும் மொத்தம் 71 பேர் இறந்து கிடந்தனர்.

அஸ்பினாங் நெடுஞ்சாலை நிறுவனத்தின் ஓர் ஆஸ்திரிய பணியாளர், நௌசித் ஏரி அருகில் ஒரு வாகனப்பழுதைப் பார்த்துவிட்டு வருகையில் வியாழனன்று ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த பாரவூர்தியைக் கண்டார்; ஏற்கனவே அதிலிருந்த அழுகிய பிணங்களிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. பொலிஸ் ஹங்கேரிய எல்லையிலுள்ள நெகெல்ஸ்டோர்ஃப் இல் ஒரு கால்நடை மருத்துவச் சேவையகத்திற்கு அவ்வண்டியை இழுத்துச் சென்றார்கள், அங்கே பொலிஸ் புலனாய்வாளர்கள் வாகனத்தை ஆய்வு செய்து சடலங்களை மீட்டெடுத்த பின்னர், அவற்றை வியன்னாவின் பிரேத பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பினர்.

அவர்கள் மூச்சுமுட்டி இறந்திருக்கலாமென கருதப்படுகிறது. அப்பாரவூர்தியின் கோழி இறைச்சிக்கான குளிரூட்டி அறையில், வெளியிலிருந்து காற்று உள்ளே செல்வதற்கு எந்த வழியும் இல்லை. தாங்கொணா மூச்சுத்திணறலில் இருந்து அகதிகள் பெரும்பிரயத்தனத்துடன் தப்பிக்க முயன்றபோது, உள்ளே என்ன கோரமான காட்சிகள் நடந்திருக்கும் என்பதை அந்த வாகனத்தின் உள்ஓரங்களில் நசுங்கியிருந்த தடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

வெள்ளியன்று ஹங்கேரிய பொலிஸ், பல சுங்கச்சாவடிகளிலிருந்த கண்காணிப்பு காணொளிகளை ஆராய்ந்து, நான்கு பேரை, மூன்று பல்கேரியர் மற்றும் ஒரு ஹங்கேரியரை, அந்த பாரவூர்தியின் சொந்தக்காரர்கள் மற்றும் ஓட்டுனர்கள் என்று கைது செய்தது. அப்போதிருந்து, ஊடகங்களும் அரசியல்வாதிகளும் குற்றகரமாக ஆட்கடத்துபவர்களுக்கு எதிராக வசையுரைகளை தொடுத்து வருகின்றனர். மதிப்பீடுகளின்படி, 71 அகதிகளில் ஒவ்வொருவரும் அந்த பயணத்திற்காக ஓராயிரம் யூரோ கொடுக்க வேண்டி இருந்திருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் அவற்றின் எல்லைகளை மிக பலமாக மூடிவிட்டதால் தான், மக்களை இடம்பெயர்த்துவது அந்தளவிற்கு ஒரு இலாபகரமான வியாபாரமாக ஆகியுள்ளது. முள்வேலிகள் மற்றும் கூர்மையான முறுக்கிய முள்கம்பிகள், பலமான பொலிஸ் கட்டுப்பாடுகள் மற்றும் தாக்கும் நாய்களைக் கொண்டு அவர்கள், போர் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக எல்லைக்கடந்து வருபவர்களைத் தடுக்க முயல்கிறார்கள்.

உண்மையில் யாரெல்லாம் மக்களை இடம்பெயர்த்துபவர்களை தடுக்க விரும்புகிறார்களோ, அந்த வியாபாரத்தின் அடித்தளத்தை அவர்கள் இழக்குமாறு செய்ய வேண்டும், அதாவது ஐரோப்பிய எல்லைகளை அகதிகளுக்காக திறந்துவிட வேண்டும், என்று புளோரியன் ஹாஸ்சல் Süddeutsche Zeitung இல் மிகச் சரியாக எழுதினார். ஐரோப்பிய அரசியல்வாதிகள் இதை செய்ய தயாராக இல்லை, என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பிரேதங்கள் நிரம்பிய அந்த ஊர்தி, ஒருசில மைல் தூரத்தில் வியன்னாவின் ஹோஃப்பர்க் மாளிகையில் மேற்கு பால்கன் மாநாடு நடந்து கொண்டிருந்தபோது தான் கண்டுபிடிக்கப்பட்டது. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஆஸ்திரிய சான்சிலர் வெர்னெர் ப்யேமேன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் பெடிரிகா மொஹிரினி ஆகியோர் ஆறு பால்கன் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தனர். அகதிகள் வரும் பாதைகள் மீது இன்னும் கடுமையான கட்டுப்பாட்டுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை மேற்கொண்டு பலப்படுத்துவதற்கும் ஒப்புக் கொள்வதே அக்கூட்டத்தின் நோக்கம்.

புலம்பெயர்வோர் விவகாரத்தை ஒருவர் "துரிதமாகவும், ஐரோப்பிய உணர்வுடனும், அதாவது ஒற்றுமையுணர்வுடனும், அணுக வேண்டுமென கூறி, அத்துயர செய்திக்கு மேர்க்கெல் விடையிறுத்தார். இது நடைமுறை எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பின்வரும் உண்மையிலிருந்து காணலாம்: அவரது அரசாங்கம் இப்போது கொசோவோ, மொண்டெனேக்ரோ மற்றும் அல்பானியாவை பாதுகாப்பான தோற்றுவாய் நாடுகளாக அறிவிக்க விரும்புகிறது, இதன் மூலமாக அத்தகைய நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் மக்களை இன்னும் வேகமாக திருப்பியனுப்ப முடியும்.

இது முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஜேர்மன் உள்துறை மந்திரி டு மஸியரால் கோரப்பட்டது. அவர் அகதிகளைத் திருப்பியனுப்புவதை, உதவிகளை நிறுத்துவதை வேகப்படுத்த விரும்புகிறார் மற்றும் ஜேர்மனிக்கு வரும் அகதிகளை அதைரியமூட்டி பின்வாங்க செய்வதில் ஆதரவளிப்பவர்களுக்கு ரொக்கப்பணம் கொண்டு பிரதியீடு செய்யவும் விரும்புகிறார்.

ஆஸ்திரியாவில், சமூக ஜனநாயகம் மற்றும் பழமைவாதிகளின் ஆளும் கூட்டணியும் அகதிகளுக்கு எதிராக கடுமையாக நகர்ந்து வருகிறது. உள்துறை மந்திரி Johanna Mikl-Leitner, இன்னும் அதிக எல்லை கட்டுப்பாடுகளையும் மற்றும் இடம்பெயர்த்துபவர்களை இன்னும் கடுமையான கெடுபிடிகளைக் கொண்டு தண்டிக்கவும் கோரியதன் மூலமாக சமீபத்திய அகதிகள் நெருக்கடிக்கு விடையிறுத்தார்.

Zeit im Bild தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு முந்தைய இரவு, ஆஸ்திரிய வெளியுறவுத்துறை மந்திரி செபஸ்டியன் குர்ஜ் தஞ்சம்கோருவோர் கொள்கையை இறுக்குவதற்கும், இன்னும் அதிகமாக ஆழ்ந்த எல்லைக் கட்டுப்பாடுகளுக்கும்" மற்றும் தஞ்சம் கோருவோருக்கான "நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கும்" அழைப்புவிடுத்திருந்தார். அதன் மொத்த 109 மைல் நீள தெற்கு எல்லையை ஒட்டி நான்கு மீட்டர் உயர முள்வேலி அமைத்துவரும் ஹங்கேரியை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்காட்டிய அவர், "ஹங்கேரியர்கள் மட்டுமல்ல, ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அரசுகளும் "அனேகமாக இத்தகைய விரும்பத்தகாத நடவடிக்கைகளை எடுக்கின்றன [எடுக்கும்], என்று எச்சரித்தார்.

வியன்னாவில் ஆஸ்திரிய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்ச திட்டம் குற்றகரமான கும்பல்கள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள IS படைகளை எதிர்க்க படைகளைப் பிரயோகிப்பதையும் உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே மே மாதம், லிபியாவில் ஓர் இராணுவ தலையீட்டை வழங்கும் திட்டங்களை முன்வைத்தது. இது போர்களை இன்னும் மேற்கொண்டு விரிவாக்கும் என்பதால், அது தான் மில்லியன் கணக்கானவர்கள் வெளியேற நிர்பந்திக்கப்படுவதற்கு முக்கிய காரணம்.

குறிப்பாக சிரிய மக்களை நோக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் மனோபாவம் எரிச்சலூட்டுகிறது. அசாத் ஆட்சியைத் தூக்கியெறிவதற்கு குளறுபடிகள் மற்றும் வன்முறையின் ஒரு அதிகரித்த நடவடிக்கைக்கு காரணமாக, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தால் சிரியர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அவரை நான்காண்டுகளாக கூறி வந்துள்ளன. ஆனால் கொலைக்களங்களின் விளைவால் மில்லியன் கணக்கான சிரியர்கள் தப்பியோடி வருகையில், அவை, அவர்களை ஐரோப்பிய மக்களின் வேலைகள் மற்றும் சுகாதாரத்தை அச்சுறுத்தும் படையெடுப்பாளர்களாக பூதாகரமாக சித்தரித்து, அவர்களைத் திருப்பியனுப்ப வேண்டும் அல்லது தடுத்து நிறுத்த வேண்டுமென கோருகின்றன.

ஆஸ்திரியாவில் செத்துக்கிடந்த 71 அகதிகளின் பிரேதங்களில் சிரியாவின் பயண ஆவணம் காணக்கிடைத்ததாக கூறப்படுவதால், அனேகமாக அவர்கள் சிரியாவிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். இதன் அர்த்தம், அவர்கள் 3,500 கிலோமீட்டர்கள் மிகக்கடுமையான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். அதிகரித்த எண்ணிக்கையிலான சிரியர்கள் துருக்கிக்கு தப்பியோடி வருகிறார்கள், வடக்கு ஆபிரிக்க-இத்தாலி பாதை முற்றிலும் அபாயகரமானதென ஆகிவிட்டதால், அத்துடன் மத்திய தரைக்கடல் அதிகரித்தளவில் பாரிய சவக்குழியாக மாறிவிட்டதால், அவர்கள் அங்கே இருந்து ஈஜியன் கடல் வழியாக பால்கனை கடந்து மேற்கு ஐரோப்பாவிற்கு பயணிக்கின்றனர்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

அகதிகள் நெருக்கடியும், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மனிதாபிமானமற்ற முகமும்