சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Herfried Münkler declares Germany to be Europe’s “hegemon”

ஐரோப்பாவின்ஆதிக்க சக்தியாக ஜேர்மன் இருக்க வேண்டும் என ஹேர்பிரீட் முங்கலர் அறிவிக்கிறார்

By Johannes Stern
28 August 2015

Use this version to printSend feedback

மூன்று வாரங்களாக ஹேர்பிரீட் முங்கலர் எதுவுமே கூறாதிருந்தார். ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சமகால ஜேர்மன் ஏகாதிபத்தியவாதத்தின் தத்துவாசிரியருமான அவர் இப்போது தனது விடுமுறையில் இருந்து திரும்பி விட்டார் போலும். ஆச்சரியம் ஏதுமின்றி, திருவாளர் பேராசிரியர் தான் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்கிறார். Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையில் அவர் சமீபத்தில் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில், தனது வழக்கமான மந்திரமான ஐரோப்பாவிற்கும் உலகத்திற்கும் தலைமையேற்க ஜேர்மனிக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது என்பதை மீண்டும் உச்சாடனம் செய்கிறார்.

நாமே ஆதிக்கசக்தி” (“We Are the Hegemon”) என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில், “ஜேர்மனி ஐரோப்பிய மத்திய சக்தியாக ஆக வேண்டும், [ஐரோப்பிய] ஒன்றியத்திற்குள்ளாக தீவிரமாக அதிகரித்துச் செல்லும் மையவிலக்கு சக்திகளை முடக்குவதும், ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்காக முனைகின் வேளையில் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கத்திய ஐரோப்பியர்களின் வேறுபட்ட நலன்களை ஒன்றிணைத்து கொண்டுவருவதும், அத்துடன் இறுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முனையிலிருந்தும் மற்றும் அதன் மறுமுனையையிலிருந்து வரும் சவாலை நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதும் அதன் கடமை ஆகும்என்று முங்கலர் அறிவிக்கிறார்.

அத்தனை திசைகளிலும் ஜேர்மன் தலைமையேற்பதற்கான முங்கலரின் அழைப்புகள் எண்ணிலடங்காதவையாக இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அதிகாரத்தினை எடுப்பதற்கும் மற்றும் வரலாற்று துன்பங்களை உருவாக்கும் ஜேர்மனின் தாகம் தீர்க்கப்பட்டுவிட்டதாக நெடுங்காலமாக நம்பப்பட்டு வரும் நிலையில், அவை எத்தனை வேகத்துடனும் மூர்க்கத்துடனும் பேர்லின் உயரடுக்கின் மத்தியில் திரும்பிக் கொண்டிருக்கின்றன என்பதன் ஒரு அடையாளமாகவும் இவை இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இப்போது மிக வலிமையான சக்தியாகஇருக்கின்ற ஜேர்மனி பிரான்சுடன் சேர்ந்துஐரோப்பிய உட்கருவை உருவாக்க வேண்டும் என்று ஜூலையில் அறிவித்திருந்த இந்தப் பேராசிரியர், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் முன்னாள் பரம வைரி எந்தப் பாத்திரத்தையும் ஆற்ற முடியாது என்ற முடிவுக்கு இப்போது வந்து விட்டிருப்பதாகவே வெளிப்படையாகத் தெரிகிறது. ஐரோப்பிய திட்டத்தை பொறுத்தவரை பிரான்ஸ்பல தசாப்தங்களாக ஜேர்மனியுடன் இணையாக நின்றிருக்கிறதுஎன்ற அதேநேரத்தில் இப்போது அதுதலைமை இடத்தை இழந்துமுழுமையாகப்பின்தங்கி விட்டிருக்கிறதுஎன்று எழுதுகிறார்.

ஜேர்மனி மட்டுமே ஐரோப்பாவிற்கு தலைமையேற்க முடியும் என்று முங்கலர் முடிவு கூறுகிறார். அவர் எழுதுகிறார்: “ஜேர்மனியர்கள் தோற்கும்பட்சத்தில், அந்தப் பாத்திரத்தை எடுத்துக்கொள்ள ஆயத்தமாய் எந்த ஒரு மாற்று பிரதிநிதிகளோ அல்லது மாற்றீடுகளோ இல்லை. அப்பட்டமாகச் சொல்வதென்றால்: ஐரோப்பாவின் மத்திய சக்தியின் கடமைகளை நிறைவேற்றுவதில் ஜேர்மனி தோல்விகண்டால், பின் ஐரோப்பா தோல்விகாண்கிறதுஎன்கிறார்.

முங்கலரின் அரசியல் ஆதரவாளர்களில் சிலர் இவரை Kaiser இன் எழுச்சியானகாலத்தில் புகழுச்சிக்குச் சென்ற தேசியவாதியும் யூத-விரோத வரலாற்றாசிரியருமான ஹென்றிச் வொன் ரைட்ஷ்க்க (Heinrich von Treitschke 1834-1896) உடன் ஒப்பிடுகிறார்கள். ஜேர்மன் முடியாட்சி மற்றும் மூன்றாவது குடியரசின் இரண்டின் சித்தாந்தவாதிகளுமே, இப்போது முங்கலர் கூறுவது போலவே, ஜேர்மன் தலைமையின் கீழ் ஐரோப்பா ஒன்றுபடுவதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தனர் என்பதோடு இல்லையென்றால் ஐரோப்பா நாசகதிக்கு ஆளாகும் என்றும் எச்சரித்து வந்திருந்தனர்.

முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் சான்சலர் பெத்மான்-கொல்வேக்கின் செப்டம்பர் வேலைத்திட்டத்தினால் (1914) பலமான ஈர்க்கப்பட்ட ஜேர்மனியின் போர் தளவாடங்கள் ஆணையத்தின் தலைவரான வால்ட்டர் ராத்னவ் பின்வருமாறு கூறினார்: “ஐரோப்பாவின் இறுதியான தலைமை என்பது ஒதுக்கிவைக்க முடியாததாய் இருக்கிறது, ஏனென்றால் ஜேர்மனி போன்ற ஒரு எழுந்து வரும் மத்திய சக்தியானது தனது அண்டைநாடுகளை உடலுறுப்புகள் போல் ஒட்டவைக்கும் வலிமை கொண்டிரா விட்டால் அது அவற்றின் பொறாமைக்கு மீண்டும் மீண்டும் ஆளாக நேரிடுகிறது. பழைய-ஐரோப்பிய அமைப்பை உருக்கொடுப்பதும் வலுவூட்டுவதும் ஜேர்மனியின் பணியாக இருக்கிறது.”

1943 ஏப்ரலில் புதிதாக உருவாக்கப்பட்டதொரு ஐரோப்பியக் குழுவுக்கு நாஜி வெளியுறவு அமைச்சர் ஜொகாயிம் வொன் றிப்பன்ரொப் இன் வழிகாட்டல்கள் பின்வருமாறு இருந்தது: “மகா ஜேர்மன் குடியரசின் மேலாதிக்கம் முழுமையாக அமுலானால் தான் வருங்கால ஐரோப்பா நீடித்திருக்கமுடியும் என்பது இன்று தெளிவாகத் தெரிகிறது. ஆகவே அந்த மேலாதிக்கத்தைக் கைப்பற்றுவதே வருங்காலப் புதிய ஒழுங்கமைப்பின் உட்கருவாகக் கருதப்படவேண்டியதாகும்.”

சில வாரங்களுக்குப் பின்னர், ஜோசப் கோயபல்ஸ் தனது நாட்குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “ஒரு ஐக்கிய ஐரோப்பாவை உருவாக்குவது நமது போராட்டத்தின் இலக்காக இருந்தாக வேண்டும். ஆனால் ஜேர்மனியர்கள் மூலமாக மட்டுமே ஐரோப்பா ஒரு தெளிவான ஒழுங்கமைப்பை உருவாக்கமுடியும். வேறொரு தலைமை சக்தி ஏறக்குறைய இருப்பதாக தெரியவில்லை.”

ஐரோப்பா குறித்த கருத்தாக்கத்தில் முங்கலர் மற்றும் நடப்பு ஜேர்மன் அரசாங்கத்தின் கருத்துகளுக்கும் நாஜிக்கள் மற்றும் Kaiser’ சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் திகைக்க வைக்கின்றன. அதேபோல ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் இலக்குகள் குறித்துப் பாடம் எடுக்கும் பேராசிரியரின் முயற்சிகள் முந்தைய பிரச்சார உத்திகளை நினைவூட்டுகின்றன. கேய்சரின் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளும் நாஜிக்களும் தமது மூர்க்கமான அணுகுமுறையை ஒரு தற்காப்பு பதிலிறுப்பாக சித்திரப்படுத்தினர். அதேபோலவே இப்போது முங்கலர், மேலாதிக்க சக்தியின் பாத்திரத்தை ஏற்க அதன் அண்டைநாடுகளிடம் இருந்து ஜேர்மனி அழுத்தம் பெறுவதாகக் கூறுகிறார்.

முதலாம் உலகப் போரில் ஜேர்மன் சாம்ராஜ்யமானது கூட்டு சக்திகளுக்கு [British Empire, French Republic, Italy and Japan] எதிரான ஒருதற்காப்பு போரைக் குறித்துப் பேசியது. நாஜிக்கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான தமது அழித்தொழிப்பு பிரச்சாரத்தை கிரெம்ளினில் இருக்கும்யூத-போல்ஷிவிக் போர்வெறியர்களின் சதிக்கு எதிரான ஒருமுன்கூட்டிய தாக்குதலாகக் கூறி நியாயப்படுத்தினர். முங்கலர் தனது பங்கிற்கு வெளியில் இருந்தான அநேக சவால்களுக்குப் பிறகு தான், இறுதியில், குறைந்தபட்சம் அரசியல் வர்க்கத்திற்குள்ளாகவேனும், ஜேர்மனி வெகுகாலமாக எந்த பாத்திரத்திற்குத் தயாரிப்புடன் இருந்திருந்திருந்ததோ அந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நனவுடன் செயலாற்ற வேண்டும், அதன்மூலம் அதற்கு நீதி வழங்கவேண்டும், அதில் தவறக் கூடாது என்ற ஒரு புரிதல் [ஜேர்மன்] கூட்டாட்சிக் குடியரசுக்குள் நிலவத் தொடங்கியதுஎன்று எழுதுகிறார்.

உண்மையில், முங்கலர் ஆதரிக்கும்உலக அதிகாரத்தினை பிடிப்பதற்கான ஜேர்மனியின் புதிய முயற்சி என்பது முதலாம் உலகப் போருக்கு முன்னரான தயாரிப்பு திட்டம் போலவும் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் உலகத்தை வெல்வதற்கான நாஜிக்களின் கற்பனாலட்சியத்தைப் போல நெடுங்காலத் திட்டமாய் இருந்து வருவதாகும். ஜேர்மன் ஏகாதிபத்திய அகங்காரத்தின் இப்போதைய வடிவமும் அதன் மூதாதையரின் வடிவங்களுக்கு குறையாமல் தோல்வியுறும் தகுதி படைத்ததாகும் என்பதையும் ஒருவர் சேர்த்துக் கூறலாம்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுமலர்ச்சி எவ்வாறு தயாரிப்பு செய்யப்பட்டது மற்றும் இப்போது எவ்வாறு அமல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து உலக சோசலிச வலைத் தளம் பல கட்டுரைகளில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறது.

இங்கே சுருக்கமாய் பார்ப்போம்: 2012 நவம்பருக்கும் 2013 செப்டம்பருக்கும் இடையில், 50 முன்னணி அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், இராணுவ மற்றும் வணிக ஆளுமைகள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்துபுதிய சக்தி - புதிய பொறுப்புஎன்ற ஒரு மூலோபாய ஆய்வறிக்கையை உருவாக்கினர். 2014 மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் ஜனாதிபதி  கௌவ்க்கும் மற்றும் கூட்டாட்சி அரசாங்கமும் அறிவித்த வெளியுறவுக் கொள்கை திருப்பத்திற்கான அடித்தளங்களை இது அமைத்துத் தந்தது. விரிவாக்கவாத மற்றும் இராணுவவாத வெளியுறவுக் கொள்கையை நோக்கிய இந்தத் திருப்பமானது ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் மறுஆயுதபாணியாக்கலிலும், மத்திய கிழக்கிலான இராணுவத் தலையீட்டிலும் மற்றும் கிரீஸ் சூறையாடப்பட்டதிலும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறது.

புதிய சக்தி - புதிய பொறுப்புவெளியானதற்கு பின்னர் அதன் அநேக சூத்திரங்கள் வார்த்தை மாறாமல் ஜனாதிபதி கௌவ்க், வெளியுறவு அமைச்சர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் வொன் டெயர் லைன் இன் பேச்சுகளில் காணப்படுவதை காணமுடிந்தது. மற்ற விடயங்களுடன் சேர்த்து, “ஒரு வர்த்தக மற்றும் ஏற்றுமதி தேசமாகஜேர்மனி தனது பொருளாதார மற்றும் புவி-மூலோபாய நலன்களை இன்னும் மூர்க்கமாக பாதுகாக்க வேண்டும் என்று அது கோருகிறது. “அதிக செலவுள்ள மற்றும் நீண்ட-காலத்திற்கான இராணுவ நடவடிக்கைகள்ஒருநடைமுறைரீதியான ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கையின்அங்கமாக இருக்கும் என்று அது தெரிவிக்கிறது.

இந்த மூலோபாய ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்களது உத்தியோகப்பூர்வ பெயர்ப்பட்டியலில் முங்கலரின் பெயர் காணப்படுவதில்லை. ஆனாலும் முங்கலர் தீவிரமாக அபிவிருத்தி செய்து வரும் ஜேர்மனிஐரோப்பாவின் மத்திய சக்திஅல்லதுமத்தியில் இருக்கும் சக்திஎன்கிறதான கருப்பொருள் இந்த ஆவணத்தில் காணப்படுகிறது. “ஏன் ஐரோப்பா?”என்கிற தலைப்பின் கீழான பகுதியில் அந்த ஆய்வறிக்கைஜேர்மனி மிக அடிக்கடியும் மிகத் தீர்மானகரமாகவும் தலைமை கொடுக்க வேண்டியிருக்கும்என்கிறது. காரணம் ஜேர்மனியின்வரலாறு, அதன் இருப்பிடம், அதனினும் அதிகமாக அதன் இப்போதைய பொருளாதார வலிமையும் மற்றும் அதன் புதிய புவியரசியல் வலிமையும் ஆகும்என்று அது விளக்குகிறது.

அரசுஇன்னும் திறம்பட்ட அரசியல் கட்டுப்பாட்டைநடைமுறைப்படுத்தற்கும் அரசின் வெளியுறவுக் கொள்கையை திறம்பட விளக்கதனது சொந்தக் குடிமக்களை ஊக்கப்படுத்தும்பொருட்டுஜேர்மன் மக்களுடன் மிகவும் உறுதிப்பட்ட கலந்துரையாடலில்ஈடுபடுவதற்குமான தேவை என்ற இந்த ஆய்வறிக்கையின் இன்னுமொரு கருப்பொருளை இந்தப் பேராசிரியர் தனது சமீபத்திய கட்டுரையில் கையிலெடுக்கிறார்.

Frankfurter Allgemeine Zeitung இல் முங்கலர், “ஐரோப்பாவின் மத்திய சக்திக்கு முன்பாக முன்நிறுத்தப்படும் சவால்களைசந்திப்பதற்குபெரும்பான்மை வாக்காளர்கள் இந்த சவால்களை சந்தித்து அது தொடர்பான தமது சொந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள விருப்பம் கொள்வதுஜேர்மனிக்கு அவசியமாக இருக்கிறது என்று எழுதுகிறார். “மத்திய அதிகார பாத்திரத்தின் சந்தர்ப்பங்கள் மற்றும் ஆபத்துகள் வெளிப்படையாக பேசப்படக் கூடிய மற்றும் விவாதிக்கப்படக் கூடிய ஒரு பொது விவாதம்அவசியமாக இருக்கிறது என்று அவர் தொடர்ந்து எழுதுகிறார்.

ஒருவிவாதத்தின் தேவை குறித்துப் பேசுவதற்கு முங்கலருக்கு தைரியம் தேவையாக இருக்கிறது. ஏனென்றால் இவர் தனது சித்தாந்த சகோவான ஹம்போல்ட் பேராசிரியர் ஜோர்க் பாபரொவ்ஸ்கி உடன் சேர்ந்துகொண்டு, ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், ஜேர்மனி வல்லரசு அரசியலுக்கு திரும்புவதன் மற்றும் 1914 மற்றும் 1939 இல் கண்டது போலவெளிநாட்டில் போர் மற்றும் அழிவு உள்நாட்டில் சர்வாதிகாரம் மற்றும் ஒடுக்குமுறைஎன்ற அதன் வரலாற்று தொடர்ச்சியின்சந்தர்ப்பங்கள் மற்றும் அபாயங்கள்குறித்து பகிரங்கமாகப் பேசுகிற அனைவரையும், குறிப்பாக Münkler-Watch இன் மாணவர் குழுவையும் மற்றும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பையும் குரலெழுப்ப விடாமல் தடுக்க முனைந்து வந்திருக்கிறார்.

இரண்டு வருடங்கள் காதுகிழிய போர்ப் பிரச்சாரம் செய்தும் கூட, இரண்டு உலகப் போரின் பயங்கரங்களைக் கண்டிருக்கும் ஜேர்மன் மக்கள்உலக அதிகாரத்திற்கான பிடிப்புக்குள் இழுக்கப்படுவதற்கு மறுக்கிறார்கள், இராணுவவாதம் மற்றும் போருக்கான எதிர்ப்பு பெருகிக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை முங்கலர் மற்றும் குழுவினரை மேலும் மேலும் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பின்புலத்தில், முங்கலரின் கருத்துக்கள் குறைந்தபட்சம் பேர்லின் பின்தொடரும் இலக்குகளை தெளிவாக்குகின்றன என்பதோடு, ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவையும் உலகையும் மீண்டுமொருமுறை பேரழிவுக்குள் மூழ்கடிப்பதற்கு முன்பாக தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக தலையீடு செய்ய வேண்டியிருப்பதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.