சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan corporate elite demands “tough” economic decisions from new government

இலங்கையின் பெருநிறுவன தட்டினர்உறுதியான பொருளாதார தீர்மானங்களை எடுக்குமாறு புதிய அரசாங்கத்தைக் கோருகின்றனர்

By Saman Gunadasa
24 August 2015

Use this version to printSend feedback

திங்கட்கிழமை நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து, இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஒரு “தேசிய அரசாங்கத்தினை” அமைப்பதற்கு விரைவாக உடன்பட்ட உடன், இலங்கையின் பொருளாதாரத்தை தாக்கும் ஆழமடைந்து வரும் பொருளாதாரப் பின்னடைவுக்குப் பதிலிறுப்பாக, சமூக செலவுகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளையும் வெட்டிக் குறைக்குமாறு பெருநிறுவன ஊதுகுழல்கள் வெளிப்படையாகவே புதிய அரசாங்கத்தை கோருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைத்துள்ள புதிய ஆட்சிக்கு பெருநிறுவன உயரடுக்கு இயங்குவிதியை முன்வைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைவரும் வலதுசாரி அமெரிக்கச்-சார்பு பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் இந்த புதிய அரசாங்கத்தில் சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) உறுப்பினர்களும் இணைந்துகொள்ள உள்ளனர்.

பெருநிறுவன உயரடுக்கும் அதன் பொருளாதார ஆலோசகர்களும், “‘உறுதியான’ பொருளாதார தீர்மானங்களை” எடுக்குமாறு ஐ.தே.க. தலமையிலான அரசாங்கத்தை ஊக்குவிப்பதோடு “வெளிநாட்டு முதலீட்டுக்கு உகந்த கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு” வலியுறுத்தியதாக நேற்றைய சண்டே டைம்ஸ் கூறியுள்ளது. பெருகும் நிதிப் பற்றாக்குறையை குறைத்தல், தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக உள்ள வரி வருமானத்தை உயர்த்துதல் மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளும் இதில் அடங்கும்.

பொருளாதார மற்றும் பெருநிறுவன ஆலோசகரான சிறிமால் அபேவர்த்தன, டைம்ஸ் உடன் பேசும்போது, நாட்டின் கடன் சுமையானது அதன் வரிவருமானத்தில் 700 சதவீதமாக உள்ளது, எனக் கூறினார். “இலங்கை இனிமேல் பொதுப் பணத்தினை வீணாக்க முடியாது” என அறிவித்த அவர், அரசுக்கு சொந்தமான 300 நிறுவனங்கள் “நேர்த்தியாக்கப்பட்டு”, அவற்றின் “போட்டித் தன்மைகள்” அதிகரிக்கப்பட வேண்டும் என கூறினார்.

அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் பத்திரிகை அறிக்கை, பூகோள வீழ்ச்சியின் கூர்மையான தாக்கத்தினை சுட்டிக் காட்டி, விரிவடைந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் இந்த வருட முதல் அரையாண்டுப் பகுதியில் ஏற்பட்ட ஏற்றுமதிச் சரிவையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. வருடா வருடம் ஏற்றுமதி வருவாய்கள் 4.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஜூன் மாதம் 944 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சரிந்ததாக அந்த வங்கி தெரிவித்தது. 2015, முதல் ஆறு மாத காலத்தில், ஏற்றுமதி வருமானமானது திரளான அடிப்படையில் 0.6 சதவீத்ததினால் வீழ்ச்சியடைந்த அதேவேளை, வர்த்தகப் பற்றாக்குறையானது 15.6 வீதத்தால் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர் வரை விரிவடைந்துள்ளது.

“2015 ஜூனில், பதினொராவது மாதமாக தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது. பிரதான தேயிலை கொள்வனவாளர்களான ரஷ்யா (29 சதவீத வீழ்ச்சி) மற்றும் மத்திய கிழக்கில் (24 சதவீத வீழ்ச்சி) கேள்வி குறைந்ததனால் இந்த நிலை ஏற்பட்டது”, என வங்கி சுட்டிக் காட்டியது. இது மிகப் பெருமளவில் பூகோளப் பொருளாதார வீழ்ச்சியினதும் ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கிலான அரசியல் கொந்தளிப்பினதும் விளைவாகும்.

இலங்கையின் பிரதான ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2008க்குப் பிந்திய மோசமடைந்து வரும் பெரும் மந்த நிலை போக்கையே இந்த ஒட்டுமொத்த வீழ்ச்சியும் பிரதிபலிக்கின்றது. “2015 மே மாதத்தில், ஐரோப்பிய சந்தைக்கான ஆடை ஏற்றுமதியானது, 11.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிப் போக்கு, 2015 மார்ச் மாதம் தொடக்கம், தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருகின்றது” என கடந்த மே மாதம் மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டது.

சென்மதி நிலுவை நெருக்கடி நெருங்குவதை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை சமிக்ஞை செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில், 1,954 மில்லியன் டாலர் உபரி வருமானத்துடன் ஒப்பிடும்போது, 2015 முதல் ஆறு மாத காலப்பகுதியின் சென்மதி நிலுவை பற்றாக்குறை 791,7 மில்லியன் டாலராக இருந்துள்ளது.

பற்றாக்குறையை பெருமளவில் மற்றியமைத்த வெளிநாட்டுக் கடன்கள், கடன் திரும்பச் செலுத்தும் சுமையை அதிகரித்துள்ளது. அத்துடன் சுற்றுலாத்துறையிலும் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள், பிரதானமாக மத்திய கிழக்கில் இருந்து அனுப்பும் பணம் போன்ற நிரந்தரமற்ற பகுதிகளில் பொருளாதாரம் பெருமளவில் தங்கியிருக்கின்றது.

முன்னால் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சீன நிதி உதவியிலான திட்டங்கள் நிறுத்தப்பட்டதனால் பொருளாதார நெருக்கடி மேலும் குவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் பெய்ஜிங்குடன் நெருக்கமாக செயற்பட்ட இராஜபக்ஷவுக்கு எதிராக, அமெரிக்காவின் பின்னணியில், கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையால், இராஜபக்ஷ வெளியேற்றப்பட்டு, சிறிசேன ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.

சிறிசேன, ஐ.தே.க. தலைமையில் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தினை அமைத்த ஜனவரியில் இருந்து, அரச வெளிநாட்டுக் கடன் துரிதமாக அதிகரித்தது. அரசாங்கம், அரச பிணைப் பத்திரம் மற்றும் அபிவிருத்திப் பிணை பத்திரம் போன்றவற்றின் ஊடாக அதிகரித்த வர்த்தக வீதத்தில், 3.8 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக் கொண்டது. இது, இந்தியன் ரிசேவ் வங்கியுடன் ஒரு பணப் பரிமாற்ற திட்டத்தினையும் ஸ்தாபித்துள்ளது. புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் நெருக்கமான பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக, மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு வருகை தந்தபோது இந்த ஒப்ந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மேலும், அரசாங்கமானது திறைசேரி பிணை முறிகள் மற்றும் பிணைப் பத்திரங்கள் ஊடாக, உள் நாட்டுச் சந்தையிலும் கடனை சேகரித்துள்ளது. இது 2014 முழுவதுமான 444 பில்லியன் ரூபாயுடன் ஒப்பிடும்போது, 661 ரூபாய்களாகும்.

திறைசேரியின் நிதி வங்குரோத்தினையே இந்தக் கடன் தொகைகள் சுட்டிக் காட்டுகின்றன. நேற்றைய சண்டே ரைம்ஸில் ஒரு பொருளாதார நிபுணரான பாலித எக்கநாயக்க சுட்டுக் காட்டும்போது, “திறைசேரியின் நிதி பொக்கிசம் ஏறக்குறைய வெறுமையாகிவிட்டது. ஊதியங்கள் மற்றும் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி போன்ற நாளுக்குநாள் தேவைகளுக்கான நடப்பு செலவுகளுக்காக வரி மற்றும் தீர்வைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மற்றும் வறுமை நிவாரணம், சுகாதாரம் மற்றும் கல்விச் செலவுகள், அபிவிருத்திச் செலவுகள், கடன் மற்றும் வட்டி மீள் செலுத்துகை மற்றும் ஏனைய செலவுகள் போன்ற மீத முள்ள செலவுகளுக்காக கடன்பட வேண்டியுள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.

கடந்த வருட மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதமாக விஞ்சியிருந்த வரவு-செலவுப் பற்றாக்குறையை சர்வதேச நாணய நிதியம் 5.2 வரை குறைக்குமாறு இட்ட கட்டளையை இலங்கை மீறியதால், அரசாங்கம் கோரிய 4 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்துவிட்டது.

அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது, 5.5 சதவீதம் வரை வரவு-செலவுப் பற்றாக்குறையை வெட்டிக் குறைக்கவுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க யூலை மாத்தில் சுட்டிக் காட்டினார். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தவுள்ளதே இதன் அர்த்தமாகும் –அதாவது, வரிகளை அதிகரித்தல், மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி திட்டங்களை வெட்டுதல் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டுதலும் ஆகும்.

வணிகத் தலைவர்கள், இத்தகைய “சீர்திருத்தங்களை” அமுல்படுத்தக் கூடிய ஒரு “உறுதியான அரசாங்கத்துக்கு” கோருகின்றனர். முன்னாள் இலங்கை முதலாளிகள் சம்மேளனத் தலைவர் சுரேஸ் ஷா, சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியதாவது: “பிரச்சினைகளில் மிகப்பெரியது, (கடந்த காலங்களில் இருந்த) சீரற்ற கொள்கைகளாகும், இதை அடுத்த ஆறு மாதங்களில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நான் நம்புகின்றேன்”.

அரசாங்கம், அரசுடமை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அதன் உத்தேச “இரண்டாம் தலமுறை” திட்டங்கள் பற்றி தனியார் துறையினருடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் என ஷா கோரிக்கை விடுத்தார். மற்றைய ஒவ்வொரு நாட்டினைப் போலவே, பெரு வர்த்தகர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களும், எஞ்சியுள்ள அரச தொழில்துறைகள் உட்பட ஒவ்வொரு வளங்களையும் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர்.

பல மாதங்களாக, தேயிலை மற்றும் றப்பர் கம்பனிகள், தினமும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் இலக்கை 16ல் இருந்து 18 கிலோவாக அதிகரித்தல் போன்ற நடவடிக்கை மூலம், தொழிலாளர்கள் மீது வேலைப் பழுவை அதிகரிக்க கோரிவந்துள்ளன.

இத்தகைய வேலைப் பழு அதிகரிப்புக்கு எதிராக மஸ்கெலியா கிளனியூஜி பெருந்தோட்டத்தில் டிசைட் பிரிவு தொழிலாளர்கள் கடந்த பெப்ரவரியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொலிஸ் கைதுக்கு உட்படுத்தியும் மூன்று தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ததுடன் மேலும் நான்கு பேரை இடைநிறுத்தியும் கடந்த யூலையில் ஒரு வேட்டையாடலை தோட்ட நிர்வாகம் கட்டவிழ்த்து விட்டிருந்தது.

யூலையில், மத்திய மலை நாட்டின் எட்டியாந்தோட்டையில் உள்ள கனேபால றப்பர் தோட்டத்தில், வேலைப் பழு மற்றும் சம்பள வெட்டுக்கு எதிராக இதேபோல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதற்கு எதிராக கம்பனி நிர்வாகம் தொழிலாளர்களில் 13 பேரை பொய் குற்றச் சாட்டின் பேரில் கைது செய்துது.

இந்த தாக்குதல்கள், தொழிலாளர்களின் எதிர்ப்புகளை நசுக்கவும் பூகோள முதலாளித்துவ நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தவும் முதலாளிகளும் சிறிசேன அரசாங்கமும் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றிய ஒரு எச்சரிக்கையாகும்.