சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Mass protests in Japan oppose “collective self-defence” laws

ஜப்பானின் மிகப்பெரிய போராட்டங்கள் "கூட்டு சுய-பாதுகாப்பு" சட்டங்களை எதிர்க்கின்றன

By Ben McGrath
31 August 2015

Use this version to printSend feedback

ஜப்பானின் சட்டமன்றம் அல்லது டயட் எனப்படும் மேல்சபையில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிற இராணுவ சட்டமசோதாவிற்கு எதிராக ஞாயிறன்று டோகியோவில் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஜப்பானில் நிலவும் பரந்த போர்-எதிர்ப்பு உணர்விற்கும் மற்றும் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே ஆதரவளிக்கும் சீனாவிற்கெதிரான அமெரிக்க போர் உந்துதலுக்கு எதிரான எதிர்ப்பிற்கும் ஓர் அறிகுறியாகும்.

டோக்கியோவில் பத்தாயிரக்கணக்கானவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே போராட்டத்தில் பங்கெடுத்தனர், அதை ஏற்பாடு செய்தவர்கள் அக்கூட்டத்தில் 120,000 பேர் இருக்கலாமென மதிப்பிட்டார்கள். ஜப்பான் எங்கிலும் சுமார் 200 இடங்களில் சிறிய சிறிய பேரணிகளும் நடத்தப்பட்டன. ஒசாகாவில், அந்த சட்டமசோதா மற்றும் அபே அரசாங்கத்தைக் கண்டித்து 25,000 பேர் ஒன்றுகூடினர்.

பல்வேறு குழுக்கள் அந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்திருந்தன. சில குழுக்கள், ஜப்பான் ஜனநாயக கட்சி (DPJ) போன்ற எதிர்கட்சிகளுடன் தொடர்புப்பட்டவை. "சமாதானம், போர் வேண்டாம்", “சட்டமசோதாவை இப்போதே கைவிடு", “அபே பதவி விலகு!” ஆகியவை உட்பட அந்த போராட்டக்காரர்கள் அறிவிப்புப்பலகைகளை ஏந்தி இருந்ததுடன், முழக்கங்களையும் முழங்கினார்கள்.

அந்த சட்டமசோதா இரண்டு சட்டவரைவுகளை உள்ளடக்கியது. ஒன்று, பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு சட்டத்தையோ அல்லது வழமையான நீடிப்பு பற்றிய சட்டவாக்க உரிமையில்லாமல் தற்காப்பு படைகளை (SDF) அனுப்புவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும். மற்றொரு சட்டவரைவு, தற்போதைய சட்டங்களில் 10 திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது, அவை ஒரு கூட்டாளிக்கு, பெயரிட்டு கூறுவதானால் அமெரிக்காவிற்கு, இராணுவ ஆதரவு வழங்க ஜப்பானை அனுமதிக்கும்.

அந்த சட்டமசோதா, குறிப்பிட்டு கூறுவதானால் சீனாவிற்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான போர்களில் இணைய ஜப்பானை அனுமதிக்கும். அமெரிக்கா அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக டோக்கியோ மீள்இராணுவமயப்படுவதை ஊக்குவிக்கிறது. இந்த "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்பது அப்பிராந்தியம் முழுவதிலும் சீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்த மற்றும் சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்க நோக்கங்கொண்ட ஒரு பரந்த மூலோபாயமாகும். அபே அரசாங்கம் ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்களை ஆக்ரோஷமாக பின்பற்றுவதற்காக அதன் ஆயுதப்படைகள் மீதான இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வருகிறது.

ஜப்பான் ஜனநாயக கட்சி தலைவர் காட்சுயா ஒகாடா (Katsuya Okada) மற்றும் ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி (JCP) தலைமை நிர்வாகி கஜோ ஷி (Kazuo Shii) ஆகியோர் அபேயின் இராணுவவாத நிகழ்ச்சிநிரலின் எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொண்டு, நேற்றைய போராட்டத்தில் உரையாற்றினர். “அப்பாவி மக்கள் நெருக்கடியை உணரக் கூடியவர்கள் என்பதையும், மிகவும் கோபமாக இருக்கிறார்கள் என்பதையும் அபே நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று ஒகாடா தெரிவித்தார். ஷி: “சட்டமசோதாக்களுக்கு எதிராக ஜப்பான் முழுவதிலும் பிரச்சாரத்தை விரிவாக்கி நாங்கள் நிச்சயமாக அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவோம்,” என்றார்.

ஆனால் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஏதோவொரு வழியில் சீனாவிற்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளன. 2012 இல் பதவியிலிருந்த போது, இதே ஜப்பான் ஜனநாயக கட்சி தான் பெய்ஜிங்கை ஆத்திரமூட்டி கோபப்படுத்தும் வகையில், கிழக்கு சீனக் கடலிலுள்ள சர்ச்சைக்குரிய சென்காயு/தியாவு தீவுகளைத் "தேசியமயமாக்கியது". அந்நேரத்தில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி அத்தீவுகள் மீதான ஜப்பானின் உரிமைகோரல்களை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்தாமைக்காக ஜப்பான் ஜனநாயக கட்சியை விமர்சித்தது, பிராந்திய பதட்டங்களை உருவாக்குவதாக சீனாவைக் குற்றஞ்சாட்டியது.

கீழ்சபையில் அந்த இராணுவ சட்டமசோதா மே மாதம் நிறைவேற்றப்பட்டதற்குப் பின்னர், சமீபத்திய மாதங்களில் போர்-எதிர்ப்பு போராட்டங்கள் ஒரேசீராக அதிகரித்துள்ளன, பல பிரிவு மக்களையும் பரந்தளவில் அது ஈர்த்து வருகிறது. இரண்டாம் உலக போரின் பயங்கரங்களை இன்னமும் நினைவுகூரும் வயதான மூத்த ஜப்பானியர்களோடு, ஜப்பான் அரசியலில் இருந்து வழமையாகவே  ஒதுங்கியிருந்த இளைஞர்களும் மாணவர்களும் அப்போராட்டங்களில் இணைந்துள்ளனர்.

ஜப்பான் டைம்ஸில், 75 வயதான மிஷியோ யமாடா, 1945 இல் டோக்கியோ மீது வீசப்பட்ட பேரழிவுகரமான அமெரிக்க குண்டுவீச்சு அனுபவத்தை நினைவுகூர்ந்தார். “(கடந்த ஏழு தசாப்தகால) அதிநவீன தொழில்நுட்பங்களால், போர் முன்னர் இருந்ததை விடவும் மிகவும் மரணகதியிலானதாக இருக்கக்கூடும்,” என்றார். “இந்த அணுஆயுத காலக்கட்டத்தில், மரண எண்ணிக்கை எந்தளவிற்கு பாரியளவில் இருக்கப் போகிறதென்பதை யாராலும் அறிய முடியாது. அபாயம் முன்பினும் மிக பெரியதாக உள்ளது. மீண்டும் அது நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதுஎன்றார்.

அவற்றில் பங்கெடுத்த பலர், அவர்களது போர் எதிர்ப்புணர்வே அவர்களை முதல்முறையாக இந்த போராட்டங்களுக்குள் ஈடுபடுத்தியதாக தெரிவித்தனர். “அபே அரசாங்கத்தின் கீழ் தான் விடயங்கள் மிக மோசமாகி இருப்பதாக கருதுபவர்கள், என்னைப்போலவே அதிகரித்த எண்ணிக்கையில் இருப்பதாக நினைக்கிறேன்,” இது 40 வயதான எட்சுகோ மாட்சுடா அசோசியேடட் பிரஸிற்குத் தெரிவித்தது. “நிறைய பேர் அரசியல் ஆர்வமுற்றிருப்பதுடன், அரசியல் குறித்து பேசுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” அவர் தெரிவித்தார்.

ஜூலையில் தொடங்கப்பட்டதும் மற்றும் அபே இன் இராணுவ சட்டமசோதாவிற்கு எதிராக மக்களின் 20,000 கையெழுத்துக்களை சேகரித்ததுள்ளதுமான யுத்தத்திற்கு எதிரான அன்னையர் (Mothers Against War) அமைப்பு உட்பட புதிய போராட்ட அமைப்புகள் தோன்றியுள்ளன. தன் தாயாருடன் போராட்டத்தில் பங்குபற்றிய 14 வயதான இளம் உயர்நிலை பள்ளி மாணவி தெரிவித்தார்: “எனக்கு வாக்குரிமை கிடையாது, ஆனால் நான் ஜப்பானில் தொடர்ந்து அமைதியை விரும்புகிறேன் அதனால் தான் இந்த சட்டமசோதா நிறைவேறுவதை நான் விரும்பவில்லை,” என்றார்.

மற்றொரு குழு, போர்-எதிர்ப்பு குழு 1000, அந்த பாதுகாப்பு சட்டமசோதாவிற்கு எதிராக 1,650,000 கையெழுத்துக்களைச் சேகரித்திருந்தது. தாராளவாத ஜனநாயகத்திற்கான மாணவர் அவசரகால நடவடிக்கை அமைப்பும், அல்லது SEALD, அந்த போராட்டங்களில் பிரசித்தமாக உள்ளது. அது டிசம்பர் 2013 இல் நிறைவேற்றப்பட்ட அரசு இரகசிய சட்டத்திற்கு (state secrecy law) விடையிறுப்பாக உருவாக்கப்பட்டது.

போரை என்றென்றைக்கும் உத்தியோகபூர்வமாக நிராகரிக்கின்ற மற்றும் ஜப்பான் ஒருபோதும் தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி படைகளைப் வைத்திருக்கக்கூடாது என்று அறிவிக்கின்ற அந்நாட்டு அரசியலமைப்பின் ஒன்பதாவது ஷரத்துக்கு முரண்படுவதால் இந்த இராணுவ சட்டமசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானதென்று பல வழக்கறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

ஒரு சட்டதிருத்தம் கொண்டு வருவதற்கு ஒரு தேசிய வெகுஜன வாக்கெடுப்பை தேவைப்படுவதால், அது கிட்டத்தட்ட நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்பதை முற்றிலுமாக நன்கறிந்திருந்த அபே, கடந்த ஆண்டு அந்த அரசியலமைப்பிற்கு "மறுபொருள்விளக்கம்" அளிக்க முனைந்தார். கருத்துக்கணிப்புகளுக்கு விடையிறுத்தவர்களில் சுமார் 60 சதவீதத்தினர் அந்த பாதுகாப்பு சட்டமசோதாவை முற்றுமுதலாக எதிர்ப்பதாகவும், அதேவேளையில் 80 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் கவலை வெளியிட்டதாகவும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டின.

இந்த புதிய பாதுகாப்பு சட்டங்களுக்கு ஜப்பானில் நிலவும் பரந்த எதிர்ப்பு, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவும் ஆழ்ந்து வேரூன்றிய போர்-எதிர்ப்புணர்வை பிரதிபலிக்கிறது. 1960இல், திருத்தப்பட்ட அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டமைக்காக நீடித்த பாரிய போராட்டங்கள் வெடித்தன, ஜப்பானில் காலவரம்பின்றி அமெரிக்க இராணுவ தளங்களைத் தொடர்ந்து வைத்திருக்க அனுமதிக்கும் அந்த உடன்படிக்கை, ஜப்பானை ஓர் அமெரிக்க இராணுவ கூட்டாளியாக பொறுப்பேற்க செய்தது. அப்போராட்டங்கள் அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் இன் திட்டமிடப்பட்ட ஜப்பான் விஜயத்தையே இரத்து செய்ய நிர்பந்தித்தன. அதன் உச்சக்கட்டத்தில், அமெரிக்க தூதரின் காரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்துக் கொண்ட போது, அவரை மீட்க அமெரிக்க இராணுவம் ஹெலிகாப்டரை அனுப்பியது.

அந்த உடன்படிக்கை இறுதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட போதினும், ஜப்பானிய பிரதம மந்திரி நொபுசுகி கிஷி இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார். இரண்டாம் உலக போரை அடுத்து, கிஷி போர் குற்றங்களுக்காக சந்தேகத்தின்பேரில் ஆரம்பத்தில் காவலில் வைக்கப்பட்டார். அவர் மஞ்சூரியாவின் ஜப்பானிய கைப்பாவை ஆட்சியின் ஒரு அதிகாரியாகவும், பிரதம மந்திரி ஹடெக் டோஜோவின் போர்கால மந்திரிசபையில் ஒரு மந்திரியாகவும் இருந்தவர். தாய்வழியில் கிஷியின் பேரன் முறையான அபே, மீண்டும் மீண்டும் கிஷி மீதான அவரது பெருமதிப்பை அறிவித்துள்ளார்.