சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

வேலை அதிகரிப்பு மற்றும் சம்பள வெட்டுக்கு எதிராகப் போராடிய இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு

By our correspondent
2 September

Use this version to printSend feedback

வேலைச் சுமை அதிகரிப்புக்கும் ஊதிய வெட்டுக்கும் எதிராகப் போராடிய களனிவெலி கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான யட்டியாந்தொட்ட கனேபல்ல தோட்டத்தின் தொழிலாளர்கள் 13 பேரை ஜூலை 15 அன்று கைது செய்த கித்துல்கல பொலிசார், அவர்களை ருவன்வெல்ல நீதிமன்றத்தில் முற்படுத்தினர். மீண்டும் ஆகஸ்ட் 6ம் திகதி நீதிமன்றத்திற்கு முற்படுத்தும் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பொலிசில் கையொப்பமிடுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆறாம் திகதி தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த போது வழக்கு அக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதோடு குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இந்த தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள போலிக் குற்றச்சாட்டு என்னவெனில், தோட்ட நிர்வாகிக்கும் அவருக்கு ஒத்துழைத்த கருங்காலிகளுக்கும் தாக்குதல் தொடுப்பதாக அச்சுறுத்தினர் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டது என்பதை தொழிலாளர்கள் சுட்டிக் காட்டினர்.

ஜூன் மாதத்தில், மழையினால் வேலை நட்டம் ஏற்படுவதாக கூறி தொழிலாளர்களின் சம்பளம் நாள் ஒன்றுக்கு அரை நேரம் வெட்டப்பட்டுள்ளது. 5000 ரூபா வெட்டப்பட்ட இந்த சம்பளத்தை நிராகரித்த தொழிலாளர்கள், தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்தனர். தொழில் ஆணையாளர், தொழிலாளர்களின் கோரிக்கை சாதாரணமானது என தீர்மானித்தாலும், அதை அலட்சியம் செய்த நிர்வாகிகள், ஜூலை மாதத்தில் இருந்து வேலை நேரத்தை மாலை 3 மணிவரை அதிகரிப்பதற்கு தீர்மானித்தனர்: மீண்டும் பயிரடப்பட வேண்டிய பழைய மரங்கள் உள்ள பகுதியில் உற்பத்தி இலக்கு நாளொன்றுக்கு பால் கிலோ 3-4ல் இருந்து 5-6 வரை அதிகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் மழை நேரங்களில் ஒரு மணிநேர வெட்டும் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இதை நிராகரித்து வழமை போல் வேலை செய்துகொண்டிருந்த நிலைமையின் கீழ், நிர்வாகிகள் சம்பளத்தை நாள் ஒன்றுக்கு ஒரு மணித்தியாலம் வெட்டியுள்ளனர். தோட்டத்தின் கீழ் பிரிவில் 110 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜூன் மாத சம்பளத்தை நிராகரித்து ஜூலை ஆரம்பத்தில் இருந்து மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை முன்னெடுத்த தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு சேகரிக்கும் பாலின் தொகையை 2 கிலோ வரை குறைத்தனர். தொழிலாளர்கள் ஜூலை 15 வரை இவ்வாறு மெதுவாக வேலை செய்ததோடு, நிர்வாகிகள் நாள் சம்பளத்தை 1000 ரூபா கொடுத்து கருங்காலி தொழிலாளர்கள் மூவரைப் பயன்படுத்தி பால் வெட்டியுள்ளனர். கருங்காலிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி அந்த கொடுப்பனவை தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுக்குமாறு கோரி, தொழிலாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய போது, ஜூலை 15 அன்று தொழிலாளர்களுக்கு தாக்குதல் தொடுத்து அசிட் வீசுவதாக அச்சுறுத்தியதாக தோட்ட நிர்வாகிகள் கிதுல்கல பொலிசில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டில் தொழிலாளர்கள் 15 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் பற்றி வாக்குமூலம் கொடுக்க தொழிற்சங்க பிரதிநிதிகள் செபஸ்டியன், மைக்கல், ரத்னபால, தினேஸ் குமார், ரவீந்திரன், ஜெயராம், ரஞ்சித் குமார், புஸ்பரானி, குமாரி, இந்திரானி ஆகிய தொழிலாளர்கள் அன்று மாலை 4 மணியளவில் கிதுல்கலை பொலிசுச்குச் சென்றனர். அதற்குள் களனி தோட்டக் கம்பனியின் பிரதேச தலைவரான உதார பிரேமதிலக, புத்திக, சேனக பெர்ணான்டோ ஆகியோர், அவிசாவலை பிராந்திய பொலிஸ் அதிகாரி தலுவத்த உடன் பொலிசில் இருந்ததாக தொழிலாளர்கள் கூறினர். பிராந்திய பொலிஸ் அதிகாரி எந்தவொரு விசாரணையும் இன்றி தொழிலாளர்கள் மீது பாய்ந்து, “போராட்டம் செய்ய முடியாது,. கத்த முடியாது, கையை நீட்ட முடியாது,. அதைச் செய்தால் அதிரடிப் படையை போட்டு தோட்டத்தை நடத்துவோம்என அச்சுறுத்தினார். பெண்கள் தவிர ஏனையவர்கள் பொலிசில் சிறைப்படுத்தப்பட்டனர். ஜூலை 29ம் திகதி மாலை பொலிசார் தோட்டத்திற்குள் வந்து சம்பவம் தொடர்பாக மேலும் 24 தொழிலாளர்களிடம் வாக்குமூலமும் பெற்றனர்.

கருங்காலிகளுக்கு தாக்குதல் தொடுத்ததாகவும் நிர்வாகிகள் மீது அசிட் வீசுவதாகவும் அச்சுறுத்தினர் என்ற போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் மறுநாள் ருவன்வெல்ல நீதிமன்றத்திற்கு முற்படுத்தப்பட்ட 13 தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கு, ஆகஸ்ட் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு அவர்கள் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பொலிஸ் ஒடுக்குமுறை அத்துடன் நின்றுவிடவில்லை. ஆகஸ்ட் 3 அன்று, நிர்வாகத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒரு பெண் தொழிலாளியை கத்தியால் குத்த முயன்றார் என தினேஷ் குமார் என்ற தொழிலாளிக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிசார் விசாரணை நடத்தினர். மேலும் இப்போது நிர்வாகம் தோட்ட அலுவலகத்தில் ஒரு சட்டத்தரணியை வைத்து குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த சம்பவத்தின் போது தோட்டத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஆறுமுகம் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரசினதும் தேர்தல் வேட்பாளர்கள், போராட்டத்தை கைவிட்டு வேலைக்குச் செல்லுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வரும் அரசாங்கம் அந்தப் பிரச்சினையை தீர்க்கும் என அவர்கள் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்தனர். ஆயினும், தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலைமையில் போராட்டத்திற்கு வந்திருந்த தொழிலாளர்கள், தமது பிரச்சினைகளை தீர்ப்பது பாராளுமன்றத்தில் செய்ய முடியாது என்பதை தாம் புரிந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

வளர்ச்சி கண்டுவரும் உலகப் பொருளாதார பின்னடைவின் காரணமாக, உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும் நிலைமையின் கீழ், தொழிலாளர்களைச் சுரண்டுவதை உக்கிரமாக்கி, சம்பளத்தை வெட்டி மற்றும் வேலை நிலைமைகளை சரித்தும் கம்பனிகள் அதற்குப் பிரதிபலிக்க முயற்சிக்கின்றன. உலகச் சந்தையில் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் தேயிலை தொழிற்துறையின் தொழிலாளர்கள் மீதும் தோட்டக் கம்பனிகள் இதே போன்ற தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளன.