சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tamil nationalist appointed opposition leader in Sri Lankan parliament

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியவாதி எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்

By K. Nesan
10 September 2015

Use this version to printSend feedback

மூடியகதவுக்குள்ளே நடந்தவொரு தியாலோசனையின் பின்னர், கடந்தவாரம் இலங்கை பாராளுமன்றம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) தலைவர் இராவரோதயம் சம்பந்தனை எதிர் கட்சி தலைவராக நியமித்தது. பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய, “நான் இராவரோதயம் சம்பந்தனை எதிர்கட்சி தலைவராக அங்கீகரிக்கிறேன்என்று சபைக்கு அறிவித்தார்.

இந்த நியமனம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் செல்வாக்கை கீழறுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான கொழும்பு ஆட்சியின் நெருக்கமான உறவுகளை பலப்படுத்துகின்றது. சீனாவுடனான ராஜபக்வின் நெருக்கமான உறவுகளை எதிர்த்த வாஷிங்டன், ஆட்சி-மாற்ற நடவடிக்கை ஒன்றை தூண்டிவிட்ட பின்னர், ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோற்கடித்தார். சீனாவைக் குறிவைத்த வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, அமெரிக்காவின் புவிசார் மூலோபாய வட்டத்திற்குள் இலங்கை பலவந்தமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

அப்பிடியிருந்தும் ஆகஸ்ட் 17 பொது தேர்தல்களில், எந்தவொரு கட்சியும் 225 பாராளுமன்ற ஆசனங்களில் அறுதி பெரும்பான்மை பெறவில்லை. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களை வென்ற போதினும், ராஜபக் அங்கத்தவராக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு (UPFA) 93 ஆசனங்களை வென்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களை வென்றது. ஐக்கிய தேசிய கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சிறிசேன ஆதரவு கன்னையினை அடித்தளமாக கொண்ட பெரிதும் ஸ்திரமற்ற ஒரு "தேசிய ஐக்கிய" அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது.

சம்பந்தன் எதிர் கட்சி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அரசாங்கத்தில் இணைய மறுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ராஜபக்-சார்பு விசுவாசிகள், தம்மை ஒரு "சுயாதீனமான" கன்னையாக அங்கீகரிக்க வேண்டுமெனக் கோரி ஜனாதிபதி சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியிருந்தனர். இது ராஜபக் ஆதரவாளரான குமார வெல்காமவை எதிர் கட்சி தலைவராக நியமிக்க வேண்டுமென அர்த்தப்படுத்தியது. சிறிசேன இந்த கடிதத்தை நிராகரித்து, சம்பந்தனுக்கு முன்னுரிமை வழங்கினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையோ அல்லது கொழும்பு ஆட்சிக்குத் தேவையான அமெரிக்க சார்பு வெளியுறவு கொள்கை நடவடிக்கையோ அது எதுவாக இருந்தாலும் அதை ஆதரித்து வாஷிங்டனுக்கு ஓர் அரசியல் கைக்கூலியாக இருக்கும் எதிர்கட்சி தலைவரை நியமிப்பதே சிறிசேனவின் நோக்கமாக இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா வடிவமைத்த ஆட்சி மாற்ற நடவடிக்கையை நிபந்தனையின்றி ஆதரித்தது. நியமிக்கப்பட்டதற்குப் பிந்தைய அவரது உரையில், சம்பந்தன் அவர் "நாட்டுக்கு விசுவாசத்துடன்" இருப்பதாக உறுதியளித்தார்.

ஊடகங்களின் பிரிவுகள் சம்பந்தனை முன்மாதிரியான எதிர் கட்சி தலைவரென பகிரங்கமாக பாராட்டின. Daily Mirror எழுதியது: ஜனாதிபதி தனது அரசாங்க விவகாரங்களை முடமாக்க கூடியவர் என்று அவர் பயம்கொள்ளும் ஒரு எதிர் கட்சி தலைவரை விரும்பமாட்டார். அதற்கு மாறாக, பாரம்பரிய அர்த்தத்தில் அரசாங்க நடவடிக்கைகளை எதிர்க்காத ஒருவரைத்தான் அவர் விரும்புவார்.

1983இல் இருந்து 2009 வரையிலான இலங்கையின் உள்நாட்டு போரின் போது அந்நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக தற்போதைய ஆட்சியிலுள்ள உயரதிகாரிகள் நடத்திய போர் குற்றங்களை மூடிமறைப்பதும் சம்பந்தன் நியமிக்கப்பட்டதன் மற்றொரு பிரதான நோக்கமாகும். Daily Mirror குறிப்பிட்டதாவது, கொழும்பு ஸ்தாபகம் சம்பந்தனை முன்னிலைப்படுத்தியது, ஏனென்றால் "மனித உரிமைகள் பிரச்சினையில் இலங்கை மீது கடுமையாக உள்ள சர்வதேச சமூகத்தின் பிரிவுகள், இந்த நியமனத்திற்குப் பின்னர் அவற்றின் குரல்களை தணித்துக் கொள்ளுமென அது நம்புகிறது".

இப்போது கொழும்பில் ஓர் அமெரிக்க ஆதரவு ஆட்சி நிறுவப்பட்டுள்ள நிலையில், வாஷிங்டனும், புதிய அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் அனைத்துமே சர்வதேச போர் குற்ற விசாரணைகள் நடத்துவதன் மீதான வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குகின்றன. இத்தகைய வாக்குறுதிகள் இராஜபக்ஷ வெளியேறுவதற்கு முன்னர் அவருக்கு அழுத்தமளிப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட சிடுமூஞ்சித்தனமான தந்திரங்களாக இருந்தன. (பார்க்கவும்: இலங்கை போர் குற்ற விசாரணை மீதான அமெரிக்க நிலைமாற்றம் தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துகிறது)

இந்த நடைமுறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வகிக்கும் பாத்திரம் என்னவென்றால், உள்நாட்டு போரின் இரத்த ஆற்றில் முழுவதும் நனைந்த, எளிதில் உடையக்கூடிய ஒரு அமெரிக்க-சார்பு அரசாங்கத்திற்கு "ஜனநாயக" மூடுதிரையை வழங்க உதவுவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்வதுமாகும்.

1977ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு தமிழ் அரசியல்வாதி முதல்முறையாக இந்த பதவிக்கு கொண்டு வரப்பட்டிருப்பது ஒரு வரலாற்று மைல்கல் என்றும் தமிழ் சிறுபான்மையினருக்கு ஆதரவாக அரசாங்க நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் ஒரு பரந்த மாற்றத்தின் அறிகுறி என்றும் எதிர்கட்சி தலைவராக சம்பந்தனின் நியமனத்தை ஊடகங்கள் தூக்கிப் பிடித்தன.

அசோசியேடெட் பிரஸ் எழுதியது: சில இனவாத சிங்கள தலைவர்களின் ஆரம்ப எதிர்ப்பு இருந்தபோதினும், சம்பந்தனின் நியமனம் தேசிய அரசியலில் தமிழ் சமூகத்திற்கு இடமளிக்கப்படுவதற்கு ஒரு மறுஉத்தரவாதமாக பார்க்கப்படுகிறது. தமிழர்கள் நீண்டகாலமாக கல்வி, அரசு வேலைகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் பாரபட்சமாக நடத்தப்படுவதாக குறைகூறி வந்துள்ளனர்.

அதேபோல, லங்காசிறி தமிழ் வானொலி பேட்டி ஒன்றில், யாழ்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம் கூறுகையில், “அங்கே தெற்கில் ஒரு நல்லாட்சிக்கான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்திற்குள் தமிழர்களின் நலன்களை எடுத்துக்காட்டுவதற்கு இந்த எதிர்கட்சி தலைவர் பதவி இராஜதந்திர ரீதியிலான உள்பாதைகளை அமைக்க உதவும்,” என்றார்.

சம்பந்தனை எதிர் கட்சி தலைவராக நியமித்தது, இலங்கை ஆளும் வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியோடு தமிழ்-சிங்கள இன மோதல்களுக்கு முடிவு காண முடியும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்ற கூற்றுகள் அபாயகரமான நப்பாசைகளாகும். அவை வரலாற்றால் மறுத்துரைக்கப்படுகின்றன, இலங்கையின் முதலாளித்துவ ஆட்சியில் ஆழமாக வேரூன்றிய மோதல்களைத் தீர்க்க, ஆளும் வர்க்கத்தின் பல்வேறு கன்னைகளும் இலாயக்கற்வை என்பதையே அது எடுத்துக்காட்டுகின்றது. ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்திய போருக்கும் எதிரான போராட்டத்தில், சிங்கள தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் ஒரு போராட்டத்தால் மட்டுமே இனரீதியிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

கடந்த முறை ஒரு தமிழ் அரசியல்வாதி எதிர் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை, உள்நாட்டு போருக்கு முன்னறிவிப்பாக இருந்தது நிரூபணமானது. 1977 இல், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் . அமிர்தலிங்கம் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற எதிர் கட்சிக்கு தலைமை கொடுத்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளுக்கு எதிராக முழு அளவிலான தாக்குதலை முன்னெடுத்தது. வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு முன்னுரிமை வழங்கியும், சுதந்திர வர்த்தக வலயங்களை ஸ்தாபிக்க மற்றும் ஆழ்ந்த சிக்கன திட்டங்கள் மூலமாக அரசு செலவுகளை வெட்டவும் சட்டமசோதா கொண்டு வந்தது. இந்த தாக்குதலுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பின் உச்சகட்டமாக, 1980ம் ஆண்டு பொது வேலைநிறுத்தம் நடாத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி 100,000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி, தொழிற்சங்கங்களுக்கு தடைவிதித்து எதிர்வினையாற்றியது. தொழிலாள வர்க்கத்தை இனரீதியிலான வரையறையில் பிளவுபடுத்துவதற்கு உதவிய, தமிழர் விடுதலைக் கூட்டணியின் திவாலான தேசியவாத முன்னோக்கில் சார்ந்திருந்த ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கியது. 1977 தேர்தல்களுக்கு பின்னர் உடனடியாக, ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள், 300க்கும் அதிகமான தமிழர்களை கொன்று, வகுப்புவாத தாக்குதல்களை திட்டமிட்டு ஒழுங்கமைத்தனர். 1983 இல், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், வரலாற்றிலேயே படுமோசமா தமிழர்களுக்கு எதிராக "றுப்பு ஜூலை" கலகங்களை ஒழுங்கமைத்தது.

1983 கலகங்களுக்குப் பின்னர், டஜன் கணக்கான தமிழ் ஆயுதமேந்திய குழுக்கள் உருவாயின. அவற்றில் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகள் மிகவும் பலமானதாக மேலெழுந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி விரைவில் அரசியல் களத்திலிருந்து மறைந்ததுடன், நாடு உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கியது, அந்த யுத்தம் 2009 இல் வட இலங்கையில் விடுதலை புலிகளை இரத்தக்களரியில் நிர்மூலமாக்கியதுடன் முடிவுக்கு வந்தது.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மீண்டும் சிக்கனத் திட்டங்கள் மற்றும் போர்களுக்கு தயாரிப்பு செய்துவரும் அத்தகைய சக்திகளின் அரசியல் வழிதோன்றல்கள் மீது, இன்று, தொழிலாளர்கள் எந்த அரசியல் நம்பிக்கையும் வைக்க முடியாது.