சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A world convulsed by crises

நெருக்கடிகளால் உலகம் அதிர்கிறது

Andre Damon and Barry Grey
12 September 2015

Use this version to printSend feedback

கடந்த மாதத்திலிருந்து, அன்றாடம் வெடித்த, ஒன்றோடொன்று தொடர்புபட்ட, ஓர் பூகோளமயப்பட்ட பேரிடரின் கோரக்காட்சிகளை அதிகரிக்கும் வகையில், உலகம் பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளின் பெருக்கத்தால் பீடிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார முகப்பில், சர்வதேச நிதியியல் சந்தைகள் பாரிய இலாப நஷ்டங்களுக்கு இடையே கட்டுப்பாடின்றி ஊசலாடுகின்றன, இந்நிலையில் உற்பத்தி மற்றும் முதலீட்டில் ஒன்றுதிரண்டுவந்த மந்தநிலையின் தாக்கம், 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னரிலிருந்து கட்டமைக்கப்பட்ட நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகையைக் கவிழ்க்க அச்சுறுத்துகிற நிலையில், அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் அதை பெரும் பிரயத்தனத்தோடு எதிர்கொள்ள முனைந்துள்ளன.

உலக முதலாளித்துவத்தினது முன்னணி மலிவு-உழைப்பு அரங்காக விளங்கும் சீனப் பொருளாதாரம், நிதியியல் பொறிவுக்குப் பின்னர் பெரிதும் பொருளாதார வளர்ச்சியை வழங்கிய இது, “எழுச்சிபெற்றுவரும் சந்தை பொருளாதாரங்கள்" என்றழைக்கப்படும் ஏனையவற்றின் ஒரு கூட்டத்தோடு சேர்ந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

புவிசார் அரசியல் முகப்பில், ஏகாதிபத்திய போர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈராக், லிபியா, சிரியா, யேமன் மற்றும் ஆபிரிக்காவின் பெரும் பகுதிகள் வரையில் ஒட்டுமொத்த நாடுகளையும் சீரழித்துள்ளதுடன், அதன் சமூக பேரழிவுகரமான தாக்கத்தின் கீழ், பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் கூர்மையடைந்து வருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய மற்றும் வளைகுடா கூட்டாளிகளால் மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் பெரும்பகுதிகள் நாசமாக்கப்பட்டமை, இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பின்னர் கண்டிராத அளவில் நம்பிக்கை எதுவுமற்ற அகதிகளை வெள்ளமென கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஐரோப்பாவிற்குள் நூறாயிரக் கணக்கான புலம்பெயர்வோர்கள் வந்த போது, பரந்த பெருந்திரளான மக்கள் அகதிகளுக்கு காட்டும் நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்புக்கும், மற்றும் ஐரோப்பாவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசாங்கங்களின் அலட்சியம் மற்றும் மனிதாபிமானமற்றத்தன்மைக்கும் இடையிலான இடைவெளியை அம்பலப்படுத்தி உள்ளது. அதனோடு சேர்ந்து இந்நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்தைக் கிழித்துக் கொண்டிருக்கும் மோதல்களையும் தீவிரப்படுத்துகிறது.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ஆட்சியைத் தூக்கியெறிவதற்காக ஒரேயடியான போருக்கான புதிய அழைப்புகளுக்கு இடையே, ரஷ்யா மற்றும் சீனா மீது வாஷிங்டன் அதன் இராஜாங்க மற்றும் இராணுவ அழுத்தங்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உலகெங்கிலும், முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரிய கட்சிகள், வலது மற்றும் "இடது" இரண்டுமே, முன்னொருபோதுமில்லா சமூக சமத்துவமின்மை மட்டங்கள், அதிகரித்துவரும் மக்கள் கோபம் மற்றும் அதிருப்தி ஆகியவற்றின் அழுத்தங்களின் கீழ் பொறிந்து வருகிறது. ஆளும் உயரடுக்குகள் வர்க்க போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியை முன்கூட்டியே தடுப்பதற்கும் புதிய வழிவகைகளைக் காண முனைகின்றன. தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் நிராயுதபாணியாக்க மற்றும் தங்களின் பிற்போக்குத்தனமான கொள்கைகளைத் திணிக்க அவர்களுக்கு போதிய அவகாசம் பெறுவதற்காக, அவை சிரிசா, ஜேர்மன் இடது கட்சி, பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி, அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்ற போலி-இடது கட்சிகளை அதிகரித்தளவில் சார்ந்துள்ளன

ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் தங்களைத்தாங்களே இனவாத மற்றும் புலம்பெயர்வோர்-எதிர்ப்பு வார்த்தையாடல்களின் அடிப்படையில், சர்வாதிபத்திய மற்றும் பாசிசவாத பிரபலங்களை ஊக்குவிப்பதைக் கொண்டு விளையாடுகின்றன. ஏனையவர்களோ, மக்கள் எதிர்ப்பைத் தணித்து, விரயமாக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்துடன் வன்முறையோடு கணக்கு தீர்த்துக் கொள்ள அடித்தளத்தைத் தயாரிக்கவும் கிரீஸில் சிப்ராஸ், பிரிட்டனில் கோர்பைன், அமெரிக்காவில் சாண்டர்ஸ் போன்ற "இடது" சக்திகளைக் கொண்டு பரிசோதனை செய்கின்றன.

நெருக்கடி விதிவிலக்கானதல்ல, மாறாக ஒரு விதிக்குட்பட்டதாகும். சம்பவங்களின் இந்த வேகம், தோற்றப்பாட்டளவில் புயல்களுக்கு இடையே அமைதிக்கான இடைவெளி கூட தராமல், ஒரு தீவிரமடைந்துவரும் மற்றும் ஆழ்ந்த பொது நெருக்கடியைக் குறிக்கிறது.

இந்த அபிவிருத்திகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறையின் ஒரு வரலாற்று நெருக்கடியின் வெளிப்பாடுகளாகும். உற்பத்தி சாதனங்களின் தனிச்சொத்துடைமை மற்றும் எதிர்விரோத தேசிய-அரசுகளுக்குள் உலகம் பிளவுபடுத்தப்பட்டிருப்பது என இவற்றை அடித்தளத்தில் கொண்டுள்ள முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளே, அங்கே எந்த பகுத்தறிவார்ந்த அல்லது முற்போக்கான தீர்வும் கிடையாது.

உழைக்கும் மக்கள் முதுகுக்குப் பின்னால் அதன் நெருக்கடியைத் திணிப்பதற்கு வரும் போது தவிர்த்து, முதலாளித்துவ வர்க்கமே கூட நம்பிக்கையின்றி பிளவுபட்டுள்ளது. அது குழப்பங்களால் தகர்ந்து போய், முடிவில் மூர்க்கமான மற்றும் வன்முறையான நடவடிக்கைகளை ஏற்பதில் போய் நிற்கிறது. மனிதயினத்தின் தலைவிதி அதன் கரங்களில் விடப்பட்டால், ஒரு மூன்றாம் உலக போரும், அணுஆயுத நிர்மூலமாக்கலும் தான் தவிர்க்கவியலாத விளைவாக இருக்கும்.

உலக அரசியல் நிலைமை அதிகரித்தளவில் 1930களின் வடிவத்தை ஏற்கிறது. 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டமான இடைமருவு வேலைத்திட்டத்தில் எழுதியதைப் போல, “முதலாளித்துவ உருக்குலைவின் அதிகரித்துவரும் பதட்டத்தின் கீழ், ஏகாதிபத்திய விரோதங்கள் அதன் உச்சக்கட்டத்தில் ஒரு முட்டுச்சந்தை எட்டுவதுடன், தனித்தனியான மோதல்கள் மற்றும் இரத்தந்தோய்ந்த உள்ளூர் கிளர்ச்சிகளை (எதியோப்பியா, ஸ்பெயின், தொலைதூர கிழக்கு, மத்திய ஐரோப்பா) தவிர்க்கவியலாதவாறு உலக பரிமாணங்களில் ஓர் ஒருங்கிணைந்த மோதலுக்குள் கொண்டு வருகிறது.”

இந்த சகாப்தத்தின்இன்றைய நமது சகாப்தத்தின்இயல்பைக் குறிக்க ட்ரொட்ஸ்கி "முதலாளித்துவத்தின் மரண ஓலம்" என்ற வார்த்தையைப் பிரயோகித்தார். பொருளாதார, புவிசார்அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் தொடர்ச்சியான வெளிப்பாடுகள், சமூகத்தின் புரட்சிக்கு முந்தைய நிலையின் குணாம்சமாகும் என்றவர் விவரித்தார். உயர்மட்டத்தில் திரண்டுள்ள ஏமாற்றி சேர்த்த செல்வவளம், அத்துடன் அதிகரித்த ஒடுக்குமுறை மற்றும் அதிகரித்துவரும் உலக போர் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு இடையே, பெருந்திரளான மக்களின் எதிர்ப்பானது பாரிய வறுமைக்கு எதிரான எதிர்ப்பாக வளர்கிறது.

ட்ரொட்ஸ்கி பின்வருமாறு வலியுறுத்தினார், மனிதயினத்தின் முன்னால் நிறுத்தப்பட்ட மத்திய மற்றும் அவசியமான கேள்வி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்வதும் மற்றும் புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதுமாகும் . பின்னர், இப்போது போலவே, மனிதயினத்தின் தலைவிதி பின்வரும் கேள்விகளில் கவனம்பெறுகின்றது: எது மிக வேகமாக அபிவிருத்தி அடையும், முதலாளித்துவம் காட்டுமிராண்டித்தன போருக்குள் சரிவதா அல்லது சோசலிச புரட்சிக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியிலான நனவுப்பூர்வ போராட்டமா?

பிந்தையது வெற்றி பெறுவதற்கு, தொழிலாள வர்க்கம் 20ஆம் நூற்றாண்டில் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் அதன் மூலோபாய அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகளின் மீது அதன் வேலைத்திட்டம், மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களை அமைத்து, அதன் தலைமையில் ஒரு கட்சியைக் கொண்டிருக்க வேண்டும். இது தான் திவாலான முதலாளித்துவ அமைப்புமுறையை வெற்றிகரமாக தூக்கியெறிய மற்றும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான இன்றியமையா அம்சமாகும்.

இடைமருவு வேலைத்திட்டம் ஆழமான வலியுறுத்தலுடன் தொடங்குகிறது: “ஒட்டுமொத்தமாக உலக அரசியல் நிலைமை, பிரதானமாக பாட்டாளிவர்க்க தலைமையின் ஒரு வரலாற்று நெருக்கடியால் குணாம்சப்பட்டுள்ளது.” இது இன்றைய நிலைமையின் சாராம்சத்தைத் தொகுத்தளிப்பதுடன், வர்க்க-நனவுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முன்னால் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை உலக தலைமையாக கட்டியமைக்கும் பணியை முன்நிறுத்துகிறது.