சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Drumbeat grows for escalating war against Syria

சிரியாவிற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த போர்முரசு உரக்க ஒலிக்கிறது

Bill Van Auken
11 September 2015

Use this version to printSend feedback

அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா இரண்டிலும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும், எரிச்சலூட்டும் விதத்தில், சிரியாவில் வன்முறையிலிருந்து தப்பியோடிவரும் அகதிகளின் கதியை அந்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான போரைத் தீவிரப்படுத்துவதற்கு போலிக்காரணமாக கைப்பற்றியுள்ளன.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், இருவரும் முறையே அவர்களது நாடுகளுக்குள் அகதிகள் அனைவரையும் இல்லையென்றால் கையளவிலானோரையாவது உள்நுழையாது செய்ய துடிப்போடு இயங்கிவருவதுடன், சிரியர்கள் தலை மேல் மிகவும் சக்திவாய்ந்த குண்டுகளைப் போட்டால், அனேகமாக அவர்கள் வீடுகளிலேயே இருக்க முடிவெடுப்பார்கள் என்ற அப்பட்டமான தர்க்கத்தின் அடிப்படையில் சிரியாவில் குண்டுவீச்சு நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே வாஷிங்டன், சிரியாவில் ரஷ்ய "ஆயத்தப்படுத்தல்" என்ற பெரிதும் மிரட்டும் எச்சரிக்கைகளோடு, ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கான ரஷ்யாவின் நீண்டகால இராணுவ உதவிகள் குறித்து அதனுடன் ஓர் ஆத்திரமூட்டும் மோதலைத் தொடங்கியுள்ளது.

இத்தகைய சமீபத்திய நிகழ்வுகள், சிரியாவில் அவற்றின் இரத்தந்தோய்ந்த தலையீட்டிற்காக மேற்கத்திய ஏகாதிபத்திய அதிகாரங்கள் பயன்படுத்தும் சாக்குபோக்குகளின் குறுகிய நோக்கிலான குணாம்சத்தை மட்டுமே அடிக்கோடிடுகின்றன. முதலாவதாக அது அசாத் ஆட்சிக்கு எதிராக "மனித உரிமைகளையும்", பின்னர் ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைப் பாதுகாத்தது. இப்போது அது அகதிகள் மற்றும் ரஷ்ய "தலையீடு" பிரச்சினையாகியுள்ளது.

உலகின் முக்கிய எண்ணெய்வள ஆதாரங்கள் மற்றும் உலக சந்தையை அவற்றோடு பிணைக்கும் குழாய்வழி பாதைகள் மீது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அப்பட்டமான புவிசார்-மூலோபாய நலன்களே, மேற்கத்திய தலையீட்டை உந்துகிற நிஜமான சக்திகளாகும். ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம்முதலும் முக்கியமுமாக, அமெரிக்க நிதியியல் பிரபுத்துவம்இராணுவவாத வன்முறையைத் தீவிரப்படுத்த திட்டமிடுகிறது.

இத்தகைய போக்குகள், சிரிய போரைத் தீவிரப்படுத்துவதற்கு வலியுறுத்தும் ஊடகங்களின் போர்முரசில் நேரடியான வெளிப்பாட்டைக் காண்கின்றன. இந்த போர் பிரச்சாரம், தாராளவாத "சாதனை பத்திரிகை" என்று கருதப்படும் நியூ யோர்க் டைம்ஸின் பக்கங்களில் இருப்பதை விட அந்தளவிற்கு அதிகளவில் வியாபித்தும் அல்லது அதிகளவில் ஏமாற்றுத்தனமாகவும் வேறெங்கும் இருக்காது.

இத்தொகுப்பின் முன்னணியில் இருப்பவர், டைம்ஸில் வெளியுறவு விவகாரங்களுக்கான கட்டுரையாளர் ரோஜர் கோஹன் ஆவார், “சிரியாவைக் குறித்த ஒபாமாவின் பெருங்கவலை" என்று தலைப்பிட்ட இவரது கட்டுரை ஒன்று வியாழனன்று வெளியானது.

200,000 அதிகமானவர்களின் உயிரிழப்பு, மில்லியன் கணக்கானவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டமை அல்லது நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள், உள்நாட்டு போரால் நாசமாக்கப்பட்ட ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின்சிரிய மக்களின் கதி, "மேற்கத்திய செயலின்மையின்" விளைபொருள் என்பதே கோஹனின் ஆய்வறிக்கையாக உள்ளது.

அமெரிக்க தலையீட்டுவாதம் (interventionism), ஈராக் போரில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, படுபயங்கரமான விளைவுகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் அமெரிக்கா தலையீடு செய்யாமல் இருப்பதும், சிரியாவில் எடுத்துக்காட்டப்படுவதைப் போல, சமஅளவில் நாசகரமானதாக இருக்கும். எதையும் செய்யாமல் இருப்பது அதை செய்ய முடிவெடுப்பதை விட குறைந்ததொன்றுமில்லை. தலையீட்டுவாதத்திற்கும் மற்றும் செலவு குறைப்பிற்கும் இடையே முடிவில்லாமல் ஊசலாட்டம் நிலவுகிறது ஏனென்றால் அமெரிக்காவினால் உலகை ஒரு சிறந்த இடமாக்க முடியும் என்ற கருத்துடன் அது பிணைந்துள்ளது,” என்றவர் எழுதுகிறார்.

என்னவொரு பிற்போக்குத்தனமான பொய்கள், அர்த்தமற்ற பேச்சுக்கள்! உண்மையில், கோஹன் ஈராக்கிற்கு எதிரான குற்றகரமான போருக்கு முன்னணி ஊடக ஆலோசகராக இருந்தார் என்பதை அவரது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. அதன் "படுபயங்கர விளைவுகளைப்" பொருத்த வரையில், அவையெல்லாம் அவருக்கு ஒருபோதும் பெரிதாக தெரியவில்லை. போரில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, ஓர் ஒட்டுமொத்த சமூகமே அழிக்கப்பட்டது தெள்ளத்தெளிவாகி நீண்டகாலத்திற்குப் பின்னர், 2009 இல், கோஹன் எழுதினார், “ஈராக்கின் சுதந்திரம் அது கொடுத்த படுபயங்கரமான விலைக்கு மேலதிகமான பெறுமதியுள்ளதாக நான் இன்னமும் நம்புகிறேன்.”

லிபிய தலைவர் மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து கவிழ்த்தி, படுகொலை செய்த ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போரை வென்றதற்குப் பின்னர், கோஹன் "தலையீட்டுவாதத்தின் முதல் வெற்றி" என்று தலைப்பிட்டு வெற்றி ஆரவார கட்டுரை ஒன்றை எழுதினார். அண்மித்தளவில் நான்காண்டுகளுக்குப் பின்னர், அந்நாட்டில் எதிர்விரோத போராளிகள் குழுக்களுக்கு இடையிலான இரத்தந்தோய்ந்த மோதல்களின் காட்சியே நிலவுகிறது. அது அகதிகள் அலையின் மையப்புள்ளியாகி இருப்பதுடன், அவர்களில் ஆயிரக் கணக்கானவர்கள் மத்தியத்தரைக்கடலை கடந்து வரும் முயற்சியில் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க-நேட்டோவின் 1995 பொஸ்னியா போருக்குப் பின்னரிலிருந்து, கோஹன் அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் நம்பகமான இதழியல் சேவகராக சேவையாற்றி, ஒவ்வொரு அமெரிக்க இராணுவ தலையீட்டையும் மற்றும் ஈரானிலிருந்து உக்ரேன் வரையில் ஸ்திரமின்மையாக்கும் நடவடிக்கைகளையும் ஆதரித்துள்ளார்.

அவர் ஒபாமாவின் சிரிய கொள்கையில் இப்போது குறை காண்கிறார் என்றால், அது ஒரு முழு அளவிலான போரைத் தொடங்க விரும்பும் அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தினுள் உள்ளவர்களது நிலைப்பாடுகளை முன்னெடுப்பதற்கே ஆகும்.

சிரிய அரசாங்கம் மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்ற ஜோடிக்கப்பட்ட கூற்றின் அடிப்படையில் சிரிய அரசாங்க படைகள் மீது குண்டுவீசுவதென்ற அதன் 2013 அச்சுறுத்தலில் இருந்து பின்வாங்கியதற்காக, கோஹன் வெள்ளை மாளிகையைக் குற்றஞ்சாட்டுகிறார். நேரடி அமெரிக்க இராணுவ தலையீட்டைத் தூண்டிவிடும் முயற்சியில், இரசாயன தாக்குதல்களை நடத்தியவர்கள் மேற்கத்திய ஆதரவிலான "கிளர்ச்சியாளர்களே" என்று அதற்குப் பின்னர் நிறைய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

ஒபாமாவிற்கு "விருப்பம்" இல்லை மற்றும் "அமெரிக்க பலத்தில் நம்பிக்கை" இல்லை என்பதாக அவர் விமர்சிக்கிறார். சிரிய போர் விமானங்களைப் "செயலிழக்கசெய்திருக்கலாம்", மற்றும் "கிளர்ச்சியாளர்களை முன்கூட்டியே ஆயுதமேந்த செய்திருக்கலாம், அது பாரியளவில் போரின் போக்கையே மாற்றியிருக்கும்என்று அவர் வலியுறுத்தினார்.

இவையனைத்துமே யதார்த்தத்தை ஏற்றுகொள்வதற்கு மாறாக, திரிக்கின்றன. ஒபாமா 2013 இல் சிரியா குண்டுவீச்சைக் கைவிட்டமை ஏதோ சிறிய நடவடிக்கையின் காரணத்தால் அல்ல, மற்றொரு போருக்கு மக்களிடையே அதிகரித்தளவில் நிலவிய எதிர்ப்பின் காரணமாகவே ஆகும். அமெரிக்க இராணுவவாதத்தின் எழுச்சி "உலகை சிறந்த இடமாக்கும்" என்ற கோஹனின் மில்லியன் கணக்கான "இறுக்கமாக பின்னிப்பிணைக்கப்பட்ட" கருத்தை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் தோல்விகள் தெள்ளத்தெளிவாக தெளிவுபடுத்துகின்றன. அப்போதிருந்து, வெள்ளை மாளிகையும் இராணுவமும் அவற்றின் போர் திட்டங்களை மீட்டுயிர்ப்பிக்க சதியாலோசனைகள் செய்து வருவதுடன், தலையீட்டிற்கான புதிய சாக்குபோக்குகளுக்காக இயங்கி வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களைப் "பாரியளவில்" ஆயுதமேந்த செய்வதைப் பொருத்தமட்டில், உண்மையில் இது நடந்துள்ளது. பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் வாஷிங்டனின் பிரதான அப்பிராந்திய கூட்டாளிகளான சவூதி அரேபியா, துருக்கி மற்றும் கடார் வழியாக, சிஐஏ இன் வழிகாட்டும் கரங்களின் கீழ், இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த ஆயுதங்கள் அசாத்தை வீழ்த்த தவறின, ஏனென்றால், பெருந்திரளான சிரியர்கள் வெளிநாட்டு-ஆதரவு இஸ்லாமிய கொலைகாரர்களுக்கு விரோதமாக இருந்தனர்.

சிரிய மக்கள் "மேற்கத்திய செயலின்மையால்" அல்ல, மாறாக ஈராக் மற்றும் லிபியாவின் சீரழிவில் இருந்து சிரியாவிற்குள்ளேயே வகுப்புவாத உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டது வரையில், ஒரு தொடர்ச்சியான குற்றகர நடவடிக்கைளால் பலியாகி உள்ளனர்.

ஒபாமா "துல்லிய படை பிரயோகத்தில் சிறப்பாக" இருந்தாலும், அதாவது டிரோன் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள், அவர் "அமெரிக்க இராணுவ பலத்தில் அசௌகரியமாக" உள்ளார் என்று கோஹன் கூறி முடிக்கிறார். அதிலிருந்து விடுபட்டு, மத்தியக்கிழக்கில் முழு அளவிலான மற்றொரு அமெரிக்க போரைத் தொடங்குங்கள் என்பதே இதிலுள்ள தெளிவான உள்நோக்கம்.

இதே முன்னோக்கை டைம்ஸ் இல் கோஹனின் சக கட்டுரையாளர் தோமஸ் பிரெட்மேன் எதிரொலிக்கிறார், இவர் ஈராக் போர் பிரச்சார பொறுப்பில் தலைமை வகித்தவர். இவர் புதன்கிழமை ஒரு கட்டுரையில் வாதிடுகையில், அகதிகள் பெருக்கெடுத்து வருவதை நிறுத்துவதற்கு ஒரே வழி, அவர்கள் தப்பிவரும் நாட்டுகளைச் சுற்றி தடைகளை எழுப்ப வேண்டும் அல்லது "தரைப்படைகளைக் கொண்டு அவற்றை ஆக்கிரமித்து, தீயவர்களை நசுக்கி, நிஜமான குடிமக்களுக்கு ஒரு புதிய ஒழுங்கமைப்பதைக் கட்டமைக்க வேண்டும், இந்த பரந்த திட்டத்திற்கு இரண்டு தலைமுறையாவது எடுக்கும்,” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் ஓர் இராணுவ மறுகாலனியாக்கம் என்பதாகும்.

சிரிய போரைத் தீவிரப்படுத்துவதற்கு உந்துகிற தர்க்கம் மேற்கொண்டு புதனன்று வாஷிங்டன் போஸ்ட் தலையங்கத்தில் வெளியிடப்பட்டது. சிரியாவில் குற்றகரமான ரஷ்ய ஆயத்தப்படுத்தலைச் சுட்டிக்காட்டி அது குறிப்பிடுகிறது, “சிரிய எதிர்காலத்திற்கான எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிநிரலும், அம்மண்ணின் அதிகாரம் ஆதரிக்கப்பட்டிருக்கும் வரையில் அர்த்தமற்றதுஎன்பதை திரு. ஒபாமா ஏற்க மறுக்கிறார் என்ற உண்மையை திரு. புட்டின் ஒப்புக் கொள்கிறார், ரஷ்யாவின் மீது சிரியா சார்ந்திருப்பதை அமெரிக்காவின் கண்ணோட்டத்திலிருந்து திரு. ஒபாமா பார்க்க விரும்புகிறார் என்றால், அதற்கு தொலைபேசி அழைப்புகளை விட அதிகமானது தேவைப்படுகிறது.”

ஓர் எச்சரிக்கை இதைவிட தெளிவாகவோ அல்லது மிகவும் அச்சுறுத்துவதாக இருக்க முடியாது. அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அரசு எந்திரத்தின் மிகவும் சக்திவாய்ந்த கூறுபாடுகள், கூலிக்கு மாரடிக்கும் அவற்றின் ஊடகங்களின் ஒத்துழைப்புடன், உலகின் இரண்டு பிரதான அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நேரடி மோதலை முன்னிறுத்துகின்ற ஓர் இராணுவ தலையீட்டுக்கு தயாரிப்பு செய்து வருகின்றன.