சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

US-Russian tensions rise over Syria

சிரியா மீது அமெரிக்க-ரஷ்ய பதட்டங்கள் அதிகரிக்கின்றன

By Bill Van Auken
17 September 2015

Use this version to printSend feedback

அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளால் ஆயுதம் வழங்கப்பட்ட மற்றும் ஆதரிக்கப்பட்ட இஸ்லாமிய போராளிகள் குழுவுக்கு எதிராக ரஷ்யா, ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை ஆதரிப்பதில் இன்னும் நேரடியாக தலையீடு செய்வதற்கான தயாரிப்பில், அது வடமேற்கு லடாக்கிய துறைமுக நகரத்திற்கு வெளியே ஒரு "முன்னோக்கிய-செயல்பாட்டு வான்படை தளத்தை" (forward-operating air base) நிறுவி வருகிறது என்ற அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் மீது வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையே பதட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அசாத் ஆட்சிக்கு தொடர்ந்து ரஷ்யா ஆதரவளிப்பதற்கு எதிராக எச்சரிப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி வெறும் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக செவ்வாயன்று அவரது ரஷ்ய எதிர்பலமான வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஐ தொலைபேசியில் அழைத்திருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

அந்த உரையாடல் குறித்த வெளியுறவுத்துறை அமைச்சக வாசிப்பின்படி, சிரியா அரசாங்கத்திற்கான ரஷ்ய ஆதரவானது "மோதல் அபாயங்களைத் தீவிரப்படுத்தி விரிவாக்கி வருவதுடன், தீவிரவாதத்திற்கு எதிரான எமது பகிர்ந்துகொள்ளப்பட்ட இலக்கைப் பலவீனப்படுத்துவதாக" கெர்ரி தெரிவித்தார்.

வாஷிங்டனால் ஒன்றுதிரட்டப்பட்ட, அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டணிகளான துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் ஏனைய பிற்போக்கு சுன்னி எண்ணெய் முடியாட்சிகள் தலைமையிலான "கூட்டணி" என்றழைக்கப்படுவதற்கு ரஷ்யா அடிபணிந்திருந்தால் மட்டுந்தான் சிரியாவில் ரஷ்யா சட்டப்பூர்வ பாத்திரம் வகிக்கலாம் என்று முந்தைய கருத்துக்களை கெர்ரி மீண்டும் வெளிப்படையாக அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார்.

சிரியாவில் ரஷ்யாவின் எந்தவொரு விரிவார்ந்த பிரசன்னமும், அந்நாட்டினுள்ளே விமான தாக்குதல்கள் நடத்திவரும் அமெரிக்க இராணுவத்துடன் "மோதலை" அபாயப்படுத்துவதாக, முந்தைய கலந்துரையாடல் ஒன்றில் கெர்ரி இன்னும் மிக பட்டவர்த்தனமான ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ISIS (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) இலக்குகளுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டுள்ளன என்ற அறிவிப்புடன், ஆஸ்திரேலியாவின் போர்விமானங்கள் திங்களன்று சிரியாவிற்குள் அதன் முதல் வான்வழி தாக்குதல்களைத் தொடங்கியது, அதனுடன் சேர்ந்து அமெரிக்க தலைமையிலான வான்வழி போர் சூடுபிடிக்க அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையே பிரெஞ்சு பாதுகாப்புத்துறை மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் புதனன்று France Inter Radioக்கு கூறுகையில், ISIS இன் முன்னேற்றங்களைத் தடுக்கும் முயற்சியில், குறிப்பாக சிரியாவின் பெரிதும் அழிக்கப்பட்ட முன்னாள் தொழில்துறை மற்றும் வர்த்தக தலைநகரமான அலெப்போ நகருக்கு அருகில், பிரெஞ்சு போர்விமானங்கள் வரவிருக்கும் வாரங்களில் அவற்றின் சொந்த வான்வழி தாக்குதலைத் தொடங்குமென கூறினார். லு திரியோன் வலியுறுத்திய, இன்னமும் "சுதந்திர சிரியா இராணுவம்" என்று அழைத்துக் கொள்ளுகிற, “கிளர்ச்சியாளர்கள்" என்றழைக்கப்படுகிற அந்த இஸ்லாமிய சக்திகள், அந்நகரில் இருந்த மேற்கத்திய அரசாங்க-சார்பு பிரிவின் மீது செவ்வாயன்று ஒரு மரணகதியிலான சிறுபீரங்கி குண்டுவீச்சை (mortar shelling) நடத்தினர், அதில் 38 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 14 பேர் குழந்தைகள்.

ரஷ்ய படைகளுடன் ஓர் இராணுவ மோதல் அபாயம் அதிகரித்துவரும் நிலையில், உக்ரேனில் அமெரிக்க-தூண்டுதல் பாசிச-முன்னெடுப்பான கடந்த ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து மாஸ்கோவுடன் கிரிமியா இணைக்கப்பட்டதற்காக அதை தனிமைப்படுத்தும் அதன் நடவடிக்கையின் பாகமாக, வாஷிங்டன் ரஷ்யாவுடனான இராணுவத்திற்கும்-இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை முறித்துக் கொண்டுள்ளது.

சிரியாவில் அவ்விரு நாடுகளது இராணுவ படைகளுக்கு இடையிலான எந்தவித நேருக்கு நேரான "மோதல்களையும் தவிர்க்க", அத்தகைய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ரஷ்யா பரிந்துரைத்திருப்பதை வெளியுறவுத்துறை செயலர் கெர்ரி புதனன்று ஒப்புக்கொண்டார். அம்முறையீடு விவாதிக்கப்படும் ஆனால் அத்தகைய தொடர்புகள் குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிரியா மண்ணில் மாஸ்கோவ் எந்த நேரடி தலையீட்டோ அல்லது எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆயத்தப்படுத்தலையோ செய்யவில்லையென ரஷ்ய அதிகாரிகள் மறுத்துள்ள, அதேவேளையில், சிரியா அரசாங்கத்திற்கு அதன் உதவியானது, அந்த அரசாங்கத்தைத் தூக்கியெறிய முனைந்துள்ள ISIS மற்றும் ஏனைய இஸ்லாமிய சக்திகளைத் தோற்கடிப்பதற்கு மிக அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஜிகிஸ்தானின் துஷான்பெயில் கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பில் (Collective Security Treaty Organization) நேற்று பேசுகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சிரியாவிற்கான ரஷ்ய இராணுவ உதவிகளை நியாயப்படுத்தினார். “நாங்கள் ஒரு பயங்கரவாத ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் சிரியா அரசாங்கத்தை ஆதரிக்கிறோம். அதற்கு தேவையான இராணுவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நாங்கள் வழங்குகிறோம், தொடர்ந்து வழங்குவோம். இதர நாடுகளும் எங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்,” என்றார்.

"புவிசார் அரசியல் அபிலாஷைகளை ஓரத்தில் வைத்துவிட்டு, அரசாங்கங்களை மற்றும் ஆட்சிகளை மாற்றுவது உட்பட, அவற்றை யாரேனும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருந்தாலும், சந்தர்ப்பவாத நோக்கங்களை அடைவதற்காக தனித்தனி பயங்கரவாத குழுக்களை நேரடியடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தும் கொள்கையிலிருந்தும், இரட்டை நிலைப்பாடு என்றழைக்கப்படுவதிலிருந்தும் விலகி கொள்ளுமாறு" மேற்கத்திய சக்திகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.

சிரியாவின் ஜனாதிபதி அசாத் "எதிர்ப்பின் ஆரோக்கியமான பாகத்துடன்" ஓர் அரசியல் சமரசத்திற்கும் தயாராக உள்ளார் என்பதையும் புட்டின் குறிப்பிட்டார்.

அசாத்தை வெளியேற்றாமல் எந்த சமரசமும் சாத்தியமில்லையென வாஷிங்டன் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகள் வலியுறுத்தினர். அசாத் ஆட்சியினது திடீர் வீழ்ச்சியானது, ISIS அல்லது அல் கொய்தா இணைப்புபெற்ற அல்-நுஸ்ரா முன்னணி இவற்றில் ஏதேனும் ஒன்று டமாஸ்கஸைக் கைப்பற்றினால் மட்டுமே நடக்குமென சில ஐரோப்பிய அதிகாரிகள் அஞ்சுவதால், அக்கொள்கையை அவர்கள் கேள்விக்கு உட்படுத்தினர்.

பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி பிலிப் ஹாம்மாண்ட் கடந்த வாரம் அறிவுறுத்துகையில், அசாத் ஆறு மாதம் "இடைமருவு காலத்திற்கு" பதவியில் இருக்கலாம் என்றார், இத்திட்டத்தை சிரியா அரசாங்கம் நிராகரித்ததுடன், அதுபோன்றவொரு நடைமுறையை முடிவெடுக்கவும் மற்றும் காலஅளவைத் தீர்மானிக்கவும் இலண்டனின் உரிமையை அது கேள்விக்குட்படுத்தியது.

கடந்த வாரம் ஈரானுக்கான ஓர் அரசு விஜயத்தின் போது, ஆஸ்திரிய வெளியுறவுத்துறை மந்திரி செபஸ்தியன் குர்ஜ் செய்தியாளர்களுக்கு கூறுகையில், “ஒரு நடைமுறைரீதியிலான பொதுவான அணுகுமுறை" அவசியப்படுகிறது, “இஸ்லாமிய அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் அசாத் ஈடுபாடும் இருக்க வேண்டுமென" தெரிவித்தார். “பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை தான் முன்னுரிமை என்பது என் கருத்து. ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற சக்திகள் இல்லாமல் இது சாத்தியமே இல்லை,” என்பதையும் குர்ஜ் சேர்த்துக் கொண்டார்.

மாஸ்கோவின் அதிகாரிகள், சிரியாவிற்குள் செல்லும் ரஷ்ய விமானங்கள் இராணுவ மற்றும் மனிதாபிமான பொருட்கள் இரண்டையும் கொண்டுள்ளன என்றுரைத்தனர். இத்தகைய விமானங்கள் அவர்களது வான்வெளியினூடாக செல்வதற்கு ரஷ்யாவை அனுமதிக்கக்கூடாதென பல்கேரியா மற்றும் கிரீஸ் அரசாங்கங்களுக்கு வாஷிங்டன் அழுத்தமளித்துள்ளதால், அப்போதிருந்து அவை ஈரான் மற்றும் ஈராக்கை சுற்றிய ஒரு பாதையில் மாற்றிவிடப்பட்டுள்ளன. ISISக்கு எதிரான போரில் அவர்களது நேசநாடு என்று கூறப்படும் பாக்தாத் ஆட்சிக்கும் அதேபோல அவர்கள் அழுத்தமளிப்பார்களா என்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் கருத்துரைக்க மறுத்துவிட்டனர்.

இரண்டு மிகப்பெரிய கான்டோர் போக்குவரத்து விமானங்களின் ஒரு சராசரி கடந்த 10 நாட்களாக [லடாக்கியா விமான நிலையத்தில்] ஒவ்வொரு நாளும் தரையிறங்கி உள்ளன, அதேவேளையில் சரக்கு கப்பல்கள் டார்டோஸ் துறைமுக நகரில் ரஷ்ய தளம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளது,” என்று McClatchy செய்தி நிறுவனம் அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு கூறியது. சுமார் 200 ரஷ்ய கடற்படை அதிரடிபடையினர் அனுப்பப்பட்டுள்ளதோடு சேர்ந்து, “1,500 மக்களுக்கு முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட வீடுகள், ஆறு அதிநவீன T-90 டாங்கிகள், ஆயுதமேந்திய வீரர்களை ஏற்றிச்செல்லும் 36 அதிநவீன வாகனங்கள் மற்றும் 15 பீரங்கி பாகங்கள்" ஆகியவையும் இதுவரையில் அனுப்பப்பட்டுள்ளதில் உள்ளடங்குமென அது குறிப்பிட்டது.

இந்த பொருள் விவரப்பட்டியல் துல்லியமானவை என்றால், அப்பகுதிக்குள் வாஷிங்டன் கொண்டு சென்றுள்ள இராணுவ தளவாடங்கள் மற்றும் நபர்களோடு ஒப்பிடுகையில் இது மிக மிக குறைவாகும். மோசூல் மற்றும் ஏனைய இடங்களில் ஈராக்கிய படைகளை விரட்டியடித்து, அவர்களது ஆயுதங்கள் மற்றும் சாதனங்களைக் கைப்பற்றிய பின்னர், அமெரிக்க ஆயுதங்களின் மிகப்பெரிய ஆயுதக்கிடங்குகள் இப்போது ISIS இன் கரங்களில் உள்ளன. இதற்கிடையே 3,000க்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, அதேவேளையில் அமெரிக்க போர்விமானங்கள் ஈராக் மற்றும் சிரியாவின் மீது நாள் முழுவதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஆனால் இந்த ஆயத்தப்படுத்தல்களுக்கு இடையிலும், வாஷிங்டன் ISIS மீது ஓராண்டாக குண்டுவீசியும் மிகச் சிறியளவே சாதித்துள்ளது. உளவுத்துறை தகவல்களின்படி, இஸ்லாமிய போராளிகள் குழு ஓராண்டுக்கு முன்னர் அது கட்டுப்பாட்டில் கொண்டிருந்த அதேயளவிலான பிராந்தியங்களைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, அதேயளவிலான போராளிகளையும் கொண்டுள்ளது.

இது ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து புதனன்று வந்த ஒரு குறிப்பிட்ட கருத்தின் உட்குறிப்பாக இருந்தது. “ஒரு நியாயமான கேள்வி எழுகிறது, அதாவது அந்நாடுகளின் இராணுவ படைகளை அப்பிராந்தியத்திற்குள் அனுப்பியதிலிருந்து நாம் என்ன பலன்களைப் பெற்றுள்ளோம், அவை மேலே பறக்கும் வெளிநாட்டு விமானங்களை எண்ணுவதில் தான் மிகவும் ஆர்வமாக உள்ளன,” என்று அந்த அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. “துரதிருஷ்டவசமாக, (இஸ்லாமிய அரசுக்கு) எதிரான சண்டையில் கூட்டணி மிக குறைந்த தேட்டங்களையே பெற்றிருப்பதாக தெரிகிறது.”

இந்த மதிப்பீடு அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் லாய்ட் ஆஸ்டின், செனட் சபையினது ஆயுத சேவை குழுவின் முன் வழங்கிய விளக்கவுரையில் கூர்மையாக உறுதிப்பட்டது. சிரியாவிற்குள் அமெரிக்கா பயிற்சியளித்த எத்தனை சிரியா "கிளர்ச்சியாளர்கள்" சண்டையிட்டு வருகிறார்கள் என்று செனட்டர்களால் கேட்கப்பட்டு, ஜெனரல் ஆஸ்டின் பதிலுரைக்கையில், “மிகவும் சிறிய எண்ணிக்கை தான்… நாம் நான்கு அல்லது ஐந்து என்று தான் பேச முடியும்,” என்றார். வெறுமனே 100க்கு சற்று அதிகமான அதுபோன்ற போராளிகள் தான் தற்போது பயிற்சியில் இருப்பதாக பெண்டகன் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த 500 மில்லியன் டாலர் பயிற்சி திட்டத்தை ஒரு "தோல்வியாக" மற்றும் ஒரு "அரசியல் வீழ்ச்சியாக" குறிப்பிட்டு செனட்டர்கள் விடையிறுத்தனர்.

என்ன தெளிவாகிறது, சிரியாவில் ISIS ஐ தோற்கடிப்பதில்லை, மாறாக ஆட்சி மாற்றமே வாஷிங்டனின் பிரதான நோக்கம் என்பதே தெளிவாகிறது. அந்த எண்ணெய் வளம்மிக்க பகுதியிலும், மற்றும் யுரேஷிய பெருநிலப்பகுதியின் மிகவும் பரந்தளவிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை இராணுவரீதியில் திணிப்பதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் பாகமாக, ரஷ்யாவின் ஒரு மத்திய கிழக்கு கூட்டாளியை—மற்றும் அதற்கு சொந்தமான வெளிநாட்டு கடற்படை தளத்தை—அபகரிப்பதே அதன் நோக்கமாகும்.

இதுவரையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ரஷ்யாவிற்கு எதிராக அதன் இராணுவ அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்தி வந்துள்ளது. பெண்டகன் தணிக்கையாளர் மைக்கேல் மெக்கார்டு, புளும்பேர்க் செய்தியின் ஒரு பேட்டியில், அமெரிக்காவின் 2017 இராணுவ வரவுசெலவு கணக்கு மாஸ்கோவ் உடனான ஒரு மோதலுக்கான தயாரிப்பில் பெரிதும் மீள்வடிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

முந்தைய எந்தவொரு வரவு-செலவு திட்ட கணக்குடனும் ஒப்பிடுகையில் இந்த வரவு-செலவு கணக்கில் நாங்கள் செய்ய மிகவும் கருதிப்பார்த்த விடயம் ரஷ்யாவாகும்,” என்று கூறிய மெக்கோர்ட், இது “முதலீடுகள் மற்றும் தோரணைகளில் விடயங்களை நாம் சரியாக தான் செய்து கொண்டிருக்கிறோமா என்ற அர்த்தத்தில் செய்யப்பட்டது" என்பதையும் சேர்த்துக்கொண்டார்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தலைமை தளபதிக்கான வேட்பாளர் கடற்படை ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் முன்னர் விளக்கமளிக்கையில், ரஷ்யா "அமெரிக்காவின் உயிர்வாழ்வு அச்சுறுத்தலை முன்னிறுத்தக்கூடும்", மேலும் அதன் நடவடிக்கைகள் "எச்சரிக்கையொலிக்கு ஒத்ததன்றி வேறொன்றுமில்லை,” என்றார். முக்கியமாக, டன்ஃபோர்ட் பயங்கரவாதத்தை விட மிகப்பெரிய அச்சுறுத்தலாக ரஷ்யாவை பட்டியலிட்டார்.