சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Foreign policy dilemmas over China confront new Australian PM

புதிய ஆஸ்திரேலிய பிரதம மந்திரி சீனாவை நோக்கிய வெளியுறவு கொள்கையில் குழப்பநிலையை எதிர்கொள்கிறார் 

By Nick Beams
18 September 2015

Use this version to printSend feedback

புதிய ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்கோம் டர்ன்புல், சீன-ஆஸ்திரேலிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மீது துரிதமாக சட்டமசோதாவைக் கொண்டு வந்ததன் மூலமாக, சீனாவுடனான பொருளாதார உறவுகளுக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை சமிக்ஞை செய்துள்ளார்.

அந்த உடன்படிக்கை மீதான ஒரு நாடாளுமன்ற அறிக்கையை இன்னுமொரு மாதம் நிலுவையில் வைத்திருக்க முடியாது என்பது உண்மைதான் என்றாலும், அது 2016 இன் தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்தாண்டு இறுதிக்குள்ளேயே சட்டமசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென அறிவித்து, அவரது தாராளவாத-தேசிய கூட்டணி அரசாங்கம் புதனன்று மத்திய நாடாளுமன்றத்தில் அதை அறிமுகம் செய்தது

சீனச் சந்தையில் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்கு ஆர்வங்கொண்ட வணிக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவொரு முன்னாள் முதலீட்டு வங்கியாளரான டர்ன்புல், தலைமைக்காக அவர் போட்டியிட்ட போதும் மற்றும் அதற்கடுத்தும், ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்கு சீனாவுடனான பலமான பொருளாதார உறவுகள் அத்தியாவசியமானவை என்று  கருதுவதாகத் தெளிவுபடுத்தி இருந்தார்.     

இந்த வணிக உடன்படிக்கை, சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் பொருளாதார உறவுகளுக்கும் மற்றும் வாஷிங்டனின் ஆசியாவை நோக்கிய மூலோபாய "முன்னெடுப்பின்" கீழ் சீனாவை நோக்கிய ஒபாமா நிர்வாகத்தினது அதிகரித்த இராணுவவாத நோக்குநிலைக்கும் இடையிலான மோதல் சாத்தியக்கூறை மீண்டும் உயர்த்தி உள்ளது. பெய்ஜிங்கின் விரிவாக்கவாத உள்நோக்கங்களுக்குரிய ஆதாரங்கள் என்று கூறப்படும், தென்சீனக் கடலில் சீனாவின் தீவு சீரமைப்பு திட்டங்களுக்கு எதிராக கடந்த மாதங்களில் அமெரிக்கா ஓர் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை நடத்தியிருந்தது.

ஆனால், சீனாவைக் குறித்த அவரது மிக சமீபத்திய பிரதான உரையில், டர்ன்புல் மிகவும் வித்தியாசமான தொனியைக் காட்டினார். அந்த உரை, அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய ஆண்டு நினைவுதினமான ஆகஸ்ட் 6 இல் மற்றும் பசிபிக்கில் இரண்டாம் உலக போர் முடிந்த 75ஆம் நினைவுதினத்திற்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர், ஆஸ்திரேலிய-சீன வியாபார கூட்டமைப்பில் வழங்கப்பட்டது.

பிரதம மந்திரி டோனி அப்போட்டைப் பதவியிலிருந்து நீக்கிய இவ்வார பதவிக்கவிழ்ப்புக்கான இறுதி நடவடிக்கைகள் அத்தேதியின் போது எடுக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் கூட, அதற்கான டர்ன்புல்லின் தயாரிப்புகள் ஏற்கனவே நன்கு முன்னேறியிருந்தன. அவர் விரைவிலேயே பிரதம மந்திரி ஆவார் என்ற முன்கணிப்புகளோடு, டர்ன்புல் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் முக்கியமானவையாகும்.

இரண்டாம் உலக போரில் ஜப்பானுக்கெதிரான சீன போராட்டத்தின் தீர்க்கமான முக்கியத்துவத்திற்கு அழுத்தமளித்து, டர்ன்புல் அவரது கருத்துக்களைத் தொடங்கினார். கொல்லப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை (சுமார் 10 மில்லியன்) மற்றும், தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பான் நுழைந்த போது உபயோகித்த துருப்புகளின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாக சீனா 680,000 ஜப்பானிய துருப்புகளைப் பிடித்து வைத்தது என்ற உண்மை ஆகிய இரண்டையும் குறித்து அவர் பேசினார். சீனாவின் சகிப்புத்தன்மை இல்லையென்றால், “நமது போர் வரலாறு உண்மையில் மிகவும் வித்தியாசமாக முடிந்திருக்கும்,” என்றவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியர்கள் மற்றும் சீனர்களுக்கு தோற்றப்பாட்டளவில் அது மிகவும் முக்கியமானது, நமது தேசங்களின் உயிர்பிழைப்பிற்கான, நமது சொந்த இறையாண்மைக்கான ஒரு வீர போராட்டத்தை நாம் மறந்துவிட கூடாது, நாம் கூட்டாளிகளாக இருந்தோம்,” என்று கூறி தொடர்ந்த டர்ன்புல், “அதை நினைவுகூர்வது அமெரிக்கர்கள் மற்றும் சீனர்களுக்கும் மிகவும் முக்கியமாகும்,” என்றார்.

சீனாவின் பொருளாதார அபிவிருத்தியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி, டர்ன்புல் கூறினார், “நமது மக்களுக்கும், நமது கலாச்சாரத்திற்கும், நமது செல்வசெழிப்பிற்கும்" அதன் பங்களிப்பில்லாத "நவீன ஆஸ்திரேலியாவை" கற்பனை செய்வதும் சாத்தியமில்லை என்றார். “அனைத்திற்கும் மேலாக அனேகமாக நமது இருண்ட காலங்களில், நமது எதிரிகள் நமது வாசற்படியில் நின்று கொண்டிருந்தார்கள் என்று எடுத்துக்கொண்டால், நமது நகரங்கள் நேரடியான இராணுவ தாக்குதலின் கீழ் இருந்த போதுநமது வரலாறின் திருப்புமுனையில், அப்போது சீனாவே நமது உறுதியான, சளைக்காத கூட்டாளிகளாக இருந்தது.”

மிக முக்கியமாக, டர்ன்புல்லினது கருத்துக்கள் சீன அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடுகளோடு பொருந்தி உள்ளன, அது கிழக்கின் பிரதான இராணுவ தளத்தில் சீன மக்களது தியாகங்களை வலியுறுத்தி, இரண்டாம் உலக போர் நிறைவின் 75வது நினைவுவிழா கொண்டாடி இருந்தது.

உண்மையில் வரலாற்றுரீதியிலான பிரச்சினைகள் ஒருபோதும் வெறுமனே வரலாறு குறித்து மட்டுமே இருப்பதில்லை, மாறாக எப்போதும் சமகாலத்திய அரசியல் நிகழ்வுகளுக்கும் ஒரு நோக்குநிலையைக் காட்டுகின்றன. ஆகவே இது இந்த வகையிலானதாகும். டர்ன்புல்லின் அணுகுமுறை அமெரிக்க அரசியல், இராணுவ மற்றும் உளவுத்துறை ஸ்தாபகத்தின் வார்த்தையாடல்களில் இருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது, இவை அவர்களது ஆஸ்திரேலிய எதிர்பலங்களின் பிரிவுகளால் எதிரொலிக்கப்படுகின்றன, பெய்ஜிங் அதன் பிராந்திய பலத்தை ஸ்திரப்படுத்த முயல்வதால் தென்சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் "கடல் போக்குவரத்து சுதந்திரத்திற்கு" ஒரு அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக அவை வலியுறுத்துகின்றன.

டர்ன்புல்லின் கருத்துக்கள் "ஆஸ்திரேலியாவிற்கும் மற்றும் அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளிக்கும் இடையிலான உறவுகள் அதிகரிப்பதற்கு" அடித்தளத்தை வழங்குவதாக பெய்ஜிங்கில் எடுத்துக்காட்டப்படுகின்றன என்று Australian Financial Review இன் நேற்றைய செய்தி ஒன்று குறிப்பிட்டது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்துடனான ஒரு கல்வியாளர் வாங் ஜென்யு அப்பத்திரிகைக்கு கூறுகையில், டர்ன்புல்லின் தேர்வு அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவை "அதிகரிக்கும்". அது "வியாபாரம் மற்றும் முதலீட்டுக்கு" சாதகமாக இருக்கும். “அவ்விரு பொருளாதாரங்களும் ஒன்றோடொன்று பிணைந்தனை என்பதை" டர்ன்புல் "மிகச் சரியாக" புரிந்து கொண்டுள்ளார், என்றார்.

கடந்த மாத உரை கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டதில் சமீபத்தியதாகும், அவற்றில் டர்ன்புல், அமெரிக்காவும் அத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கங்களான தாராளவாத-தேசிய மற்றும் தொழிற்கட்சி இரண்டுமே முன்னெடுத்த "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" மீதான உத்தியோகப்பூர்வ போக்கிலிருந்து சற்றே விலகியிருந்தார்.

நவம்பர் 2011 இல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தளத்திலிருந்து ஒபாமா அம்முன்னெடுப்பை அறிவித்த பின்னர் உடனடியாக வழங்கிய ஓர் உரையில், டர்ன்புல் எச்சரிக்கையில், “நமது தேசிய நலன்கள், வாஷிங்டனுடன் ஒரு கூட்டாளியாகவும், பெய்ஜிங் உடன் ஒரு நல்ல நண்பராகவும் இரண்டு விதத்திலும் நாம் (வெறுமனே வார்த்தையாடல்களில் இல்லை) உண்மையோடு இருக்க கோருகின்றன என்ற யதார்த்தத்திலிருந்து கவனத்தைச் சிதறடிக்கும், சுதந்திர உலகின் தலைவர்களது கவர்ச்சியில் மயங்கிவிடாதவாறு" ஆஸ்திரேலியா மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென எச்சரித்தார்.

ஆறு வாரங்களுக்கு முன்னர், டர்ன்புல் மற்றொரு பிரதான உரையில், “பொருளாதாரம் மற்றும் இராணுவம் பலத்தில், இரண்டிலும், சீனாவின் வளர்ச்சி தாய்வானின் மீள்ஐக்கியத்திற்குப் பின்னர் எந்தவொரு விரிவாக்கவாத போக்குடனும் பொருந்தாது. சீனாவின் செல்வசெழிப்பில் வர்த்தகத்தின் மத்திய பாத்திரம் சமாதானமாக செல்ல வேண்டுமெனவும் அதன் உயர்விற்காக வாதிடுகிறது. உலகளாவிய பொருளாதார ஓட்டத்தைத் தொந்தரவிற்குள்ளாக்கும் எந்தவொரு மோதலில் இருந்தும், பெரும்பான்மையினரை விட சீனாவே நிறைய இழக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

டர்ன்புல் அதற்கு பின்னர் அந்த கருத்துக்களிலிருந்து பின்வாங்கவில்லை, ஆனால் சம்பவங்கள், அனைத்திற்கும் மேலாக கடந்த நான்காண்டுகளில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க உந்துதலின் தீவிரப்படல், சற்றே தாக்குபிடித்து வேறு நிலைப்பாட்டை எடுப்பதற்கு அவரை நிர்பந்தித்துள்ளது. கடந்த ஜனவரியில், அபோட் தலைமையின் ஸ்திரப்பாடு மீதும் மற்றும் அவர் நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருப்பதன் மீதும் சர்ச்சைகள் எழுந்த நிலையில், டர்ன்புல் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட உரை ஒன்றை லோஸ் ஏஞ்சல்ஸின் அமெரிக்க/ஆஸ்திரேலிய கலந்துரையாடலில் வழங்கினார். ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பிற்காக ஆஸ்திரேலியாவில் இருந்த ஒபாமாவின் முதன்மை நபரான, ஆஸ்திரேலியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஜெஃப்ரி ப்ளீச் முன்னிலையில் டர்ன்புல் விவரிக்கையில், இந்த முன்னெடுப்பு "நமது பிராந்தியத்தின் அமைதியான அபிவிருத்தியில், முக்கிய ஸ்திரப்படுத்தும் மற்றும் மறுஉத்தரவாதமளிக்கும் காரணியாகும்" என்றார்.

ஆனால் டர்ன்புல்லின் கருத்துக்களில் சில விடயங்கள் வாஷிங்டனை அதிருப்திகரமாக்கும் அம்சங்களும் இருந்தன. அவர் "ஆசிய வளர்ச்சியின் வேகத்தைக்" குறிப்பிட்டதுடன், “ஒரு நூற்றாண்டுக்கு அல்லது அதற்கு முன்னர் பிரிட்டன் அமெரிக்காவிடம் ஒப்படைத்ததைப் போல மிகவும் வித்தியாசமான" ஒன்றாக, உலக அதிகார ஒப்படைப்பு குறித்தும் பேசினார். ஆனால் அமெரிக்கா, சீனாவிடம் அல்ல, மொத்தத்தில் எந்தவொரு அதன் போட்டியாளரிடமும் அதை ஒப்படைக்க விரும்பவில்லை என்பதையே அம்முன்னெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

சீனப் பிரச்சினை" மற்றும் ஆஸ்திரேலிய முதலாளித்துவம் மீதான அதன் முக்கியத்துவம் குறித்த டர்ன்புலின் ஆழ்ந்த அக்கறையானது, அவர் தனிப்பட்டரீதியில் இணைந்துள்ள, கணிசமான வியாபார மற்றும் நிதியியல் நலன்களினது பெரும் ஆர்வத்தின் ஒரு வெளிப்பாடாகும். அவர்களது கண்ணோட்டங்கள், மறைந்த ஊடக வியாபார பெருந்தலை கெர்ரி பார்க்கரின் மகனான, கேசினோ சூதாட்ட அதிபர் ஜேம்ஸ் பார்க்கரால் தொகுத்தளிக்கப்பட்டன, இவருடன் தான் டர்ன்புல் நீண்டகாலமாக இணைந்துள்ளார். சீன-ஆஸ்திரேலிய வர்த்தக உடன்படிக்கையைப் பாதுகாத்தமைக்காக அபோட்டை பாராட்டிய பார்க்கர், அதை டர்ன்புல் "அடுத்த மட்டத்திற்கு" எடுத்துச் செல்வாரென தெரிவித்தார்.

உண்மையில், விவசாய-வேளாண்-துறையிலும் மற்றும் சேவைகள் மற்றும் நிதியியல் போன்ற முக்கிய துறைகளிலும் ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுப்புகளை வழங்கும் அந்த உடன்படிக்கையை பாதுகாத்ததில், அபோட் மற்றும் அவரது வர்த்தக மந்திரி ஆண்ட்ரூ ரோப்பின் உழைப்பு மிக கொஞ்சமே இருந்தது. அது, அதைவிட அதிகமாக, சீனா-விரோத முன்னெடுப்பிலிருந்தும் மற்றும் சீனாவைத் தவிர்க்கும் அமெரிக்க-தலைமையிலான பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையில் இருந்தும் ஆஸ்திரேலியாவை வெளியே கொண்டு வருவதற்கான சீன ஆட்சியினது முயற்சிகளோடு பிணைந்திருந்தது.

சீன-ஆஸ்திரேலிய வர்த்தக உடன்படிக்கையின் இந்த சூழல்கள், இராணுவ பிரச்சினைகளும் வர்த்தகம் மற்றும் பொருளாதார உடன்படிக்கைகளும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல, அவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்பதை தெளிவுபடுத்துகிறது.

இதன் தொடர்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா ஆதரவிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மீதான மோதலில் அடிக்கோடிடப்பட்டது. கிடைக்கக்கூடிய பொருளாதார வாய்ப்புகளுக்காக அபோட் அரசாங்கம் அவ்வங்கிக்கு ஆரம்பத்தில் கொள்கைரீதியிலான ஆதரவை வழங்கினாலும் பின்னர், மந்திரிசபையின் தேசிய பாதுகாப்புத்துறை கமிட்டியின் ஒரு பரிந்துரையை அடுத்து, அது அதிலிருந்து பின்வாங்கியது. AIIB ஒரு பாதுகாப்பு அபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக வலியுறுத்தி, தனிப்பட்டரீதியில் ஒபாமா உட்பட, அமெரிக்க நிர்வாகத்தின் உயர்மட்டங்களிலிருந்து அங்கே பலமான பரப்புரை இருந்தது.

ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்தும் வகையில், அப்புதிய வங்கியில் இணைய பிரிட்டிஷ் அரசாங்கம் பின்னர் முடிவெடுத்தது. அதற்கு விடையிறுப்பாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அவ்வங்கியின் ஒரு ஸ்தாபக உறுப்பினராக ஆக முடிவெடுத்தது.

டர்ன்புல் சீன-ஆஸ்திரேலிய உடன்படிக்கையை மற்றும் அவ்விரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவதை அவரது ஒட்டுமொத்த பொருளாதார நிகழ்ச்சிநிரலுக்கு மையத்தில் அமைத்துள்ளார்.

அப்படியிருந்தாலும், முன்னெடுப்பு மற்றும் அதில் ஆஸ்திரேலியாவின் இடத்தை மையப்படுத்திய மூலோபாய கேள்விகள், மீண்டுமொருமுறை மீளெழ உள்ளன. இன்னும் ஒருசில வாரங்களில், அந்த அரசாங்கம் பாதுகாப்புதுறை வெள்ளையறிக்கை வெளியிட உள்ளது, அதில் அது சீனாவை நோக்கிய, மிக முக்கியமாக தென்சீனக் கடல் பிரச்சினைகள் சம்பந்தமாக அதன் மனோபாவத்தை வரையறுக்கும். அந்த வெள்ளையறிக்கை இராணுவ தயாரிப்போடு எதிர்கொள்ளப்பட வேண்டிய ஓர் ஆக்ரோஷ மற்றும் விரிவாக்கவாத சக்தியாக சீனாவின் பாத்திரத்தை வரையறுத்தால், அது நிச்சயமாக பெய்ஜிங் உடனான உறவுகளைச் சீர்குலைக்கும், மற்றும் சாத்தியமான அளவிற்கு பொருளாதார எதிர்விளைவுகளையும் உண்டாக்கும்.

மறுபுறம் டர்ன்புல் தொனியைக் குறைந்தபட்சம் குறைத்து வைத்தால், அது, தாராளவாத-தேசிய கூட்டணிக்குள் இல்லையென்றாலும், ஆஸ்திரேலிய இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளுக்குள்ளும் அத்துடன் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் ஒரு மோதலைக் கொண்டு வரும் மற்றும் அமெரிக்காவிடமிருந்து ஆழ்ந்த விரோதத்தைக் கொண்டு வரும்.

வாஷிங்டன் அதன் முக்கிய நோக்கங்களாக கருதும் எதற்கும் எந்தவொரு எதிர்ப்பையும் ஏற்றுக்கொள்ளாது என்பதில் அது தீர்மானகரமாக இருப்பதை, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தொழிற்கட்சி பிரதம மந்திரி கெவின் ரூட் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட போதே தெரிந்தது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா சீனாவிற்கு சில விட்டுக்கொடுப்புகளை வழங்க வேண்டுமென ரூட் கருதியதால், அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க கன்னை தலைவர்களால் அவர் நீக்கப்பட்டார்.

அப்படியிருந்தும், ஐந்தாண்டுகளில், சீனா கூடுதலாகவோ, அல்லது குறைவாகவோ, ஆஸ்திரேலிய முதலாளித்துவத்திற்கு முக்கியமானதாக மாறியுள்ளது. நிலக்கரி மற்றும் இரும்பு எஃகு பிரதான ஏற்றுமதிகளாக இருந்த போது, சீனாவிற்கு வேறு வழியில்லை அது தொடர்ந்து வாங்கியே ஆக வேண்டுமென கருதப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் சாத்தியமான வளர்ச்சியடையும்  பகுதிகள் என்று கருதப்படும் சேவைத்துறைகள் மற்றும் நிதியியல் துறையில் அவ்விதமாக இருக்காது. அதில் பெய்ஜிங்கின் அரசியல் முடிவுகள் ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

மோசமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார கண்ணோட்டங்கள், சீனாவின் வளர்ச்சி குறைவு மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு கூர்மையான பின்னடைவு ஆகியவற்றிற்கு இடையே, தற்போதைய சந்தையைப் பேணுவதிலும் மற்றும் புதிய சந்தைகளைத் திறப்பதிலும் தீவிர போராட்டத்தை முகங்கொடுத்துள்ள பிரதான பெருநிறுவன மற்றும் நிதியியல் நலன்கள், அரசாங்கம் அத்தகைய வாய்ப்புகளைச் சிக்கலாக்கக்கூடாது என்பதில் அக்கறை காட்டும்.

ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் பொருளாதார நலன்களுக்கும், அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் மூலோபாய நோக்குநிலைக்கும் இடையிலான பதட்டங்களும் முரண்பாடுகளும் புதிய அரசியல் நெருக்கடிகளில் மேலெழும்பும் நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.