சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Syriza voted back into office amid mass abstention in Greek election

பெருந்திரளான மக்கள் கிரேக்க தேர்தலைப் புறக்கணித்ததற்கு இடையே சிரிசா மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

By Bill Van Auken
21 September 2015

Use this version to printSend feedback

திங்களன்று அதிகாலை 93 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டிருந்த நிலையில், கிரீஸின் சிரிசா கட்சி தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான அலெக்சிஸ் சிப்ராஸ் ஆல் கடந்த மாதம் அழைப்புவிடுக்கப்பட்டு ஞாயிறன்று நடந்த திடீர் தேர்தலில் அக்கட்சியே மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பி வந்துள்ளது.

முதலில் இவ்வாண்டு ஜனவரியில் சிரிசா பதவிக்கு வந்த போது ஏற்றிருந்த அடித்தளத்திற்கு, குறைந்தபட்சம் மேலெழுந்தவாரியாகவேனும் முற்றிலும் நேரெதிரான ஓர் அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிப்ராஸ் அதிகாரத்திற்குத் திரும்புகிறார். அப்போது அக்கட்சி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிதியியல் மூலதனத்தால் முந்தைய இரண்டு பிணையெடுப்பு உடன்படிக்கைகளுக்கு நிபந்தனையாக திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை நிராகரிக்க வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் தேர்தலை வென்றது. இப்போதோ ஒரு மூன்றாவது பிணையெடுப்பு உடன்படிக்கைக்கான நிபந்தனையாக, அவர் ஏற்றுக்கொண்ட "புரிந்துணர்வு உடன்படிக்கையில்" கட்டளையிடப்பட்ட முன்பினும் அதிக கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்காக சிப்ராஸ் பதவிக்கு திரும்புகிறார்.

இத்தேர்தல் இந்தாண்டு மூன்றாவது முறையாக கிரேக்கர்களை வாக்களிக்க அழைத்திருந்தது. கடந்த ஜனவரியில், அவர்கள் சிப்ராஸூம் சிரிசாவும் சிக்கனத்திட்டத்திற்கு எதிராக போராடுவார்கள் என்ற பரந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். கடந்த ஜூலையில், அவர்கள் இரண்டாவது முறையாக சிரிசா அரசாங்கத்தாலேயே அழைப்புவிடுக்கப்பட்ட ஒரு வெகுஜன வாக்கெடுப்பில் சிக்கனத்திட்டத்திற்கு எதிராக அதிகளவில் வாக்களிப்பதற்காக சென்றார்கள். அதன் பின்னர் சுமார் வெறும் ஒரு வாரத்திற்குள்ளேயே சிப்ராஸ் "முக்கூட்டு" என்றழைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் கட்டளையிடப்பட்ட சிக்கன நிபந்தனைகளை ஏற்க திரும்பினார்.

வெகுஜன வாக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்ட மக்கள் விருப்பத்தை அலட்சியப்படுத்தியமை, அதன் சிக்கன-எதிர்ப்பு தேர்தல் அடித்தளத்தை சிரிசா கைத்துறந்ததற்கு அடுத்த கட்டமாக நிகழ்ந்தது, இது கடந்த ஜனவரி தேர்தலை வென்ற ஏறத்தாழ அடுத்த கணமே தொடங்கிவிட்டிருந்தது. பதவியேற்று ஒரு மாதத்திற்கு குறைந்த காலத்திற்குள், அது முன்னர் திணிக்கப்பட்ட எந்தவொரு சிக்கன நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டியதில்லை என்பதை மட்டுமல்ல, மாறாக அது முன்னதாக தோற்கடிக்க சூளுரைத்திருந்த வெறுப்பூட்டும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதியவற்றை ஏற்றுக்கொள்ளவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளிக்கும் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

இந்த காட்டிக்கொடுப்பு கிரீஸ் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மூலோபாய அனுபவத்தை உள்ளடக்கி இருப்பதுடன், அதிகாரத்திலிருக்கும் போலி இடதின் வக்கிரமான தொழிலாளவர்க்க விரோத குணாம்சத்தையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட அடுக்குகளை அதன் பதவிகளில் கொண்டுள்ள மற்றும் அவர்களது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு முதலாளித்துவ கட்சியான சிரிசா, அதன் வெகுஜனவாத வார்த்தையாடல்களுக்கு பின்னால், விரைவிலேயே தன்னைத்தானே தொழிலாளர்களின் ஒரு எதிரியாக நிரூபித்தது.

ஞாயிறன்று தேர்தலில், கிரேக்க வாக்காளர்களில் 45.2 சதவீதத்தினர், அதாவது தெளிவாக பெரும்பான்மை வாக்குகள், முன்பில்லாதளவிற்கு வாக்கெடுப்பிலிருந்து விலகி, அதிருப்தியுடன் வாக்களிக்கவில்லை. இந்த எண்ணிக்கை, கடந்த ஜனவரியில் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டவர்களைவிட 9 சதவீதம் அதிகம் என்பதோடு, கட்டாய வாக்களிப்பு உள்ள ஒரு நாட்டில் இது இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

ஞாயிறன்று முன்பில்லாதளவில் பதிவான மிகக்குறைந்த வாக்குகள், பெருந்திரளான உழைக்கும் மக்கள் கிரீஸின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பிடமிருந்தும், முந்தைய நான்கு தசாப்தங்களாக கிரீஸில் செல்வாக்கு செலுத்திவந்த பழைய, மதிப்பிழந்த மற்றும் நலிவடைந்த கட்சிகளில் புதிய ஜனநாயகம் (ND) மற்றும் பாசோக் (PASOK)— தொடங்கி, "இடது" என்று கூறப்படும் சிரிசா மற்றும் புதிய கட்சிகள் வரையில், அதிகரித்தளவில் அன்னியப்பட்டிருப்பதன் ஒரு தெளிவான வெளிப்பாடாகும்.

ஞாயிறன்று வாக்கெடுப்பிலிருந்து என்ன மிகத் தெளிவாக வெளிப்படுகிறதென்றால், எந்தவொரு அரசியல் கட்சியினாலும் தன்னைத்தானே சிக்கனத்திட்டதிற்கு ஒரு நம்பகமான எதிர்ப்பாளராக முன்னிறுத்த முடியவில்லை. ஜூலை வெகுஜன வாக்கெடுப்பில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்ட கிரேக்க உழைக்கும் மக்களது வெகுஜன விருப்பத்திற்கு, அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் திணிக்கப்பட்டுள்ள பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் பாரிய வறுமைக்கு பொறுப்பான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்துவதற்கான அவர்களது விருப்பத்திற்கு, அவற்றில் ஒன்று கூட அரசியல் வெளிப்பாட்டை வழங்கவில்லை.

தேர்தல் ஒன்றையும் முடிவு செய்யப் போவதில்லை என்பது மில்லியன் கணக்கான கிரேக்கர்களுக்குத் தெரியும். அவர்களது எதிர்கால நிலைமைகள் மீதான அனைத்து அடிப்படை முடிவுகளும் அவர்களது முதுகுக்குப் பின்னால் ஏற்கனவே சிரிசா மற்றும் கிரீஸின் சர்வதேச கடன்வழங்குனர்களுக்கு இடையே, ஜூலையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையிலேயே எடுக்கப்பட்டுவிட்டன. 35 சதவீத வாக்குகளை வென்ற சிரிசாவும், 28 சதவீத வாக்குகளை வென்ற அதன் பிரதான போட்டியாளரான வலதுசாரி புதிய ஜனநாயகமும் இந்த உடன்படிக்கையால் கட்டளையிடப்பட்ட கடுமையான சிக்கன முறைமைகளைத் திணிப்பதற்கு சமஅளவில் பொறுப்பேற்றிருந்தன.

புதிய ஜனநாயகத்தின் தேர்தல் பிரச்சாரம், பெரிதும் சிரிசாவின் "பொய் வாக்குறுதிகளை" மற்றும் பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அதன் "திறனற்றதன்மையை" குற்றஞ்சாட்டுவதையே உள்ளடக்கியிருந்தது. ஏற்கெனவே மோசமடைந்துள்ள வாழ்க்கத்தரங்களை கொண்ட கிரேக்க வாக்காளர்கள் மீது மேலும் "தொழில்திறமையுடன்" தாக்குதல் நடத்துவதற்கான நோக்கமானது அவர்களை கவர்ந்து இழுக்கும் ஒரு புள்ளியாகவில்லை.

கிரேக்க நாடாளுமன்றத்தில் முன்ஊகிக்கப்பட்ட 145 ஆசனங்களுடன், சிரிசா அறுதிப்பெரும்பான்மை பெறமுடியாது போகும். அது புலம்பெயர்வோர்-விரோத மற்றும் யூத-எதிர்ப்பு வாய்ஜம்பங்களைப் பிரயோகிக்கும் ஒரு வலதுசாரி கட்சியான சுதந்திர கிரேக்கர்களுடன் கடந்த ஜனவரி தேர்தலுக்குப் பின்னர் செய்து கொண்டதைப் போன்ற கூட்டணியை மீண்டும் கொண்டு வர முயல்கிறது. சிப்ராஸ் அவரது முந்தைய அரசாங்கத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் மீதான முழு கட்டுப்பாட்டையும் இப்பிற்போக்குத்தனமான அரசியல் போக்கிடம் தான் ஒப்படைத்திருந்தார்.

சிரிசா தேர்தல் தலைமையகத்தில் சிரிசா ஆதரவாளர்களின் ஒரு உற்சாகமான கூட்டத்தின் முன், சிப்ராஸ் ஞாயிறன்று இரவு சுதந்திர கிரேக்கர் கட்சியின் தலைவர் பேனொஸ் கமெனொஸ் உடன் கைகோர்த்தவாறு மேடையில் தோன்றினார். வலதுசாரி கட்சிகளுக்கு 10 நாடாளுமன்ற ஆசனங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்கூட்டணி மயிரிழையில் பெரும்பான்மையைப் பெறக்கூடும்.

முக்கூட்டால் கட்டளையிடப்பட்ட சிக்கன திட்டத்தின் பாதுகாவலர்களான சிப்ராஸ் மற்றும் சிரிசாவின் மறுதேர்வு, ஐரோப்பிய முதலாளித்து தலைவர்களால் "ஸ்திரப்பாடு" மற்றும் "தொடர்ச்சிக்கான" ஒரு முன்னோக்கிய படியாக பாராட்டப்பட்டது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு, அது கிரீஸின் ஒரு முக்கிய முடிவு, அதுவொரு உறுதியான பெரும்பான்மையுடன் ஒரு ஸ்திரப்பாட்டு காலகட்டத்தினுள் நுழைகின்றது" என்று கூறி, தேர்தல் முடிவுகளைப் பாராட்டினார்.

டச் நிதி மந்திரி மற்றும் யூரோ குழும தலைவருமான ஜெரொன் திஜிஸ்செல்ப்லோம் சிப்ராஸைப் பாராட்டியதுடன், அவர் "கிரேக்க அதிகாரிகளுடன் நெருக்கமாக வேலை செய்யவும் மற்றும் அதன் இலட்சிய சீர்திருத்த முயற்சிகளில் கிரீஸுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும் தயாராக இருப்பதாக" தெரிவித்தார்.

அதேபோல, ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவரான ஜேர்மனியின் மார்ட்டின் சூல்ஸ் குறிப்பிடுகையில், “அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு தயாரான, ஓர் உறுதியான அரசாங்கம் இப்போது உடனடியாக அவசியப்படுகிறது,” என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தலைவர் பியர் மொஸ்கோவிச்சி கூறுகையில் சிப்ராஸ் ஆழமான சிக்கனத்திட்டத்தை முன்னெடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். “திங்கட்கிழமையிலிருந்து, கிரேக்க பொருளாதாரத்தைச் சீர்திருத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம்,” என்றவர் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் சஞ்சிகை Telegraph, சிப்ராஸ் மீண்டும் வென்றதும், பதட்டத்துடன் இருந்த கடன்வழங்குனர்கள் சிறிது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்" என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றில் சர்வதேச நிதி மூலதனத்தின் உணர்வுகளைத் தொகுத்தளித்தது. அக்கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு குறிப்பிட்டது: “கிரீஸின் சர்வதேச கடன் வழங்குனர்கள், அந்த இடது பிரதமர் யூரோவில் நிலைத்திருக்கும் அவரது வாக்குறுதிகளில் தங்கியிருக்க மாட்டோரோ என்ற அச்சங்களுக்கு இடையே, ஞாயிறன்று இரவு முன்னாள் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் ஆரவாரத்துடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்றனர்... மக்கள் விரும்பும் பிரதம மந்திரியே தொடர்ந்து இருப்பது, நீண்டகாலமாக அரசியல் நிச்சயமற்றத்தன்மையின் ஒரு காலக்கட்டத்தாலும் மற்றும் கருத்துக்கணிப்புகள் கடுமையான போட்டியை முன்கணித்த பின்னர் கோஷ்டி கூட்டணி பேச்சுவார்த்தைகளாலும் தளர்ந்து போயிருந்த முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தும்.”

சிரிசாவின் செய்தி தொடர்பாளர் Olga Gerovassili அவரது விடையிறுப்பில், அவர்களது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய சூளுரைத்தார்: “ஒரு பலமான நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் அது நான்காண்டு கால அரசாங்கமாக இருக்கும், அது வாக்குறுதியளித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும். இது தான் போராட்டத்தின் தொடக்கம் என்பதை உணர்ந்து, அது  கடன்வழங்குனர்களுடன் கடுமையான பேச்சுவார்த்தைகளைத் தொடரும்".

இந்த "போராட்டம்" தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இருக்கும், பெருந்திரளான கிரேக்க தொழிலாளர்களால் கடுமையாக எதிர்க்கப்படும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகையில் அது தவிர்க்கவியலாமல் அதிகரித்தளவில் அரசு ஒடுக்குமுறை பிரயோகத்தையும் உள்ளடக்கி இருக்கும்.

பல்வேறு புதிய சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே தேர்தல் முடிக்கப்பட வேண்டுமென்பது இத்திடீர் தேர்தல் நடத்தப்பட திட்டமிடப்பட்ட  நேரத்தின் மீது ஒரு மறுக்கவியலாத கூறுபாடாக இருந்தது. அடுத்த மாதம் கிரீஸ் அதன் கடன்வழங்குனர்களின் ஒரு மீளாய்வை முகங்கொடுக்கின்ற நிலையில், இப்போதைக்கும் அடுத்த மாதத்திற்கும் இடையே, கிரேக்க ஓய்வூதியங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு வெட்டுதல், பல தொடர்ச்சியான வரி உயர்வுகள், தனியார்மயமாக்கலின் புதிய சுற்று மற்றும் மேற்கொண்டும் அதிக வெட்டுக்களை உள்ளடக்ககூடிய 2016 வரவு-செலவு திட்டக்கணக்கு வரைதல் ஆகியவற்றுடன் அது பணிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, ஞாயிறன்று கிடைத்த வாக்குகளில் மூன்றாவது மிக அதிக பங்கைப் பாசிசவாத கோல்டன் டௌன் கட்சி பெற்றது, சிக்கனத்திட்டத்தின் ஒரு எதிர்ப்பாளராக காட்டிக்கொள்ளும் அக்கட்சி ஐரோப்பிய ஒன்றிய சிக்கன முறையீடுகளுக்கு சிரிசா அடிபணிந்ததன் மீதான மக்கள் கோபத்தை ஆதாயமாக்க முனைந்துள்ளது. அதன் பல தலைவர்கள் மரணகதியிலான வன்முறை நடவடிக்கைகளுக்காக சிறையில் இருக்கின்ற நிலையிலும், அக்கட்சி சுமார் 7.2 சதவீத வாக்குகளைப் பெற்றது, இது ஜனவரி தேர்தலில் கிடைத்ததை விட இரண்டு ஆசனங்கள் அதிகமாக, அதற்கு 19 நாடாளுமன்ற ஆசனங்களை வழங்கும் ஒரு மிதமான உயர்வாகும்.

நாடாளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தையேனும் வெல்வதற்கு அவசியமான 3 சதவீத உச்சவரம்பை பெற தவறிய கட்சி, சிரிசாவின் இடது அரங்கம் கன்னையின் முன்னாள் அங்கத்தவர்களாலும், மற்றும் கடந்த மாதம் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பல்வேறு தேசியவாத மற்றும் போலி இடது உட்கூறுகளின் ஒரு கூட்டுக்கலவையான மக்கள் ஐக்கியம் கட்சியாகும்.

சிரிசா அரசாங்கத்தில் தொழில்துறை, சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி கொள்கைக்கு பொறுப்பான மந்திரியாக சிரிசா அரசாங்கத்தில் சேவை செய்த பானஜியோடிஸ் லவாஷானிஸ் தலைமையிலான மக்கள் ஐக்கியம், தன்னைத்தானே சிரிசாவின் நிஜமான சிக்கன-எதிர்ப்பு நிகழ்ச்சிநிரலின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ள செய்த அதன் பிரச்சாரத்தில் படுமோசமாகமற்றும் நியாயப்படுத்தக்கூடிய வகையில்தோற்றுபோனது.

லவாஷானிஸ் மற்றும் அவரது பரிவாரங்களும் சிப்ராஸால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிக்கன பொதியைத் திணிப்பதில் அவர்களே முற்றிலும் உடந்தையாய் இருந்தார்கள், அவர்கள் கட்சியின் மத்திய குழுவில் ஒரு வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க மறுத்ததுடன், அக்கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர்களை சிப்ராஸ் தடுக்கக்கூடும் என்பது தெளிவான போது தான் அவர்கள் சிரிசாவிலிருந்து முறித்துக் கொண்டார்கள்.

அதேபோல, சிரிசாவின் கொள்கைகளுக்கு அதன் பிற்போக்குத்தனமான தேசியவாத எதிர்ப்பின் அடிப்படையில் இருந்த ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) எந்தவித வெற்றிகளையும் பதிவு செய்யவில்லை, கடந்த ஜனவரி தேர்தல் வாக்குகளோடு ஒப்பிடுகையில் அதன் உண்மையான வாக்கு சதவீதம் சற்றே குறைந்துள்ளது.

அவரது வெற்றி தெளிவானதும், ஞாயிறன்று ட்வீட்டரில் எழுதிய அவரது கருத்தில் சிப்ராஸ் தெரிவித்தார், “கடின வேலை மற்றும் போராட்ட பாதை நம் முன்னால் இருக்கின்றது.” ஆனால் உண்மையில் அவர் பொறுப்பேற்றுள்ள கொள்கைகள் கிரீஸில் தவிர்க்கவியலாமல் தீவிரப்பட்ட வர்க்க போராட்டத்தின் ஒரு காலக்கட்டத்தைத் தான் திறந்துவிடும். அதில் சிரிசா அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணிதிரள்வதே தீர்க்கமான கேள்வியாக இருக்கும்.