சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The French Republic as killing machine

The Killers of the Republic, by Vincent Nouzille

கொல்லும் எந்திரமாக பிரெஞ்சு குடியரசு

குடியரசின் கொலைகாரர்கள், ன்சன் நுசிய் ஆல் வெளியிடப்பட்டது

By Anthony Torres
9 September 2015

Use this version to printSend feedback

http://www.wsws.org/asset/3e54f2a3-4330-4239-a837-701599adebbK/Nouzille+Book+Cover.jpg?rendition=image240

சுதந்திர பத்திரிகையாளர் வன்சன் நுசிய் ஆல் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசின் கொலைகாரர்கள் (Les Tueurs de la République), பிரெஞ்சு அரசால் நிகழ்த்தப்பட்ட குற்றகரமான படுகொலைச் சதி பற்றிய ஒரு விரிவான அம்பலப்படுத்தல் ஆகும். பிரதமர் கீ மொலே (Guy Mollet) ஆல் அல்ஜீரிய விடுதலைக்கு எதிரான போரில் முன்னெடுக்கப்பட்ட படுகொலைக்குப் பின்னர், முன்னெப்போதும் இல்லாத அளவு படுகொலையை ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டின் கீழ் பிரெஞ்சு உளவு ஸ்தாபனம் மேற்கொண்டிருக்கிறது.

அரசியல், இராணுவ மற்றும் உளவு அதிகாரிகள், அதேபோல முன்னாள் உளவாளிகள் மற்றும் கொலைகாரர்களுடனான விரிவான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு, 1962ல் அல்ஜீரிய யுத்தம் முடிவடைந்ததிலிருந்து வேறு எந்த பிரதமரையும் விட அதிகமான “குறிவைக்கப்பட்ட கொலைகளை” ஹாலண்ட் மேற்கொண்டிருக்கிறார் என்று நுசிய் காட்டுகிறார். பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களின் “ஒரு கொலைப்பட்டியலை” அவர் வைத்திருக்கிறார், அவர்களை ஹாலண்ட்டும் பாதுகாப்பு சேவைகளும் வழக்கு விசாரணை எதுவுமின்றி படுகொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

நுசிய்யின் படி, ”இப்பட்டியல் அதி இரகசியமானது. பிரான்சுவா ஹாலண்ட் அதனை அவரிடமிருந்து தூரத்தே வைக்காது பெருவிருப்புக்குரியதாய், எலிசே ஜனாதிபதி மாளிகையில் அவரது அலுவலகத்தில் வைத்திருக்கிறார். அது ஆளை முடிப்பதற்கு இரகசியமாக அனுமதி கொடுக்கப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அது பிரெஞ்சு அல்லது நட்பு நாடுகளின் படையினர்கள், இரகசிய முகவர்களுக்கு ஒப்படைக்கப்படும் குறிவைக்கப்பட்ட கொலை பணிகளாக இருக்கும். நன்கு தகவலறிந்த வட்டாரங்களின்படி, வெளிவிவகாரப் பாதுகாப்பு பொது ஆணையகம் (DGSE) இன் நடவடிக்கைப் பணி (SA) மற்றும் இராணுவ சேவைகளின் சிறப்புப் படைகள் இந்த அளவு வேலைகளை முன்னர் ஒருபோதும் செய்திருந்ததில்லை.

மக்களின் முதுகுகளுக்குப் பின்னால் செய்யக் கூடிய படுகொலைப் பட்டியலை ஹாலண்ட் தயார்செய்திருக்கிறார், அதற்கு உடந்தையாக செய்தி ஊடகம் அமைதியாக இருத்தலுக்கும் ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியை (PS) ஆதரிக்கும் இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சிகளின் குட்டிமுதலாளித்துவ சக்திகளுக்கும் அவர் நன்றிதான் சொல்ல வேண்டும்.

நுசிய் மேலும் கூறுகிறார், “இந்த அசாசாரணமான நடவடிக்கைகள் மீதாக பிரான்சுவா ஹாலண்ட் மட்டுமே தீர்மானம் செய்கிறார். ஜனாதிபதி இலக்குகளின் அவரது பட்டியலை அவருக்கு ஆலோசனை வழங்கக் கூடிய மற்றும் எப்படி அமைதியாக இருப்பது என்பதை அறிந்த, கையளவேயான நம்பத்தகுந்த சகாக்களிடம், பிரதானமாக மூன்றுபேர்: அவரது தலைமைத் தளபதி ஜெனரல் பெனுவா புகா (Benoît Puga), பாதுகாப்பு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் (Jean-Yves Le Drian) மற்றும் டிஜிஎஸ்இ-ன் இயக்குநர், நாட்டு தூதரான பேர்னார் பாஜொலே (Bernard Bajolet) ஆகியோரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்.

இது பிரெஞ்சு முதலாளித்துவ ஜனநாயக சீரழிவின் முன்னேறிய நிலையை சுட்டிக்காட்டுகிறது. பிரெஞ்சு அரசியலமைப்பு மரண தண்டனையை தடைசெய்கிறது. எதனையும் செய்வதற்கு, குறிப்பாக வழக்கு விசாரணை செய்யப்படாத ஒருவர், வாழ்வதா சாவதா என்பதை தன்னிச்சையாக தீர்மானிப்பதற்கு எவரும் புகா, லு திரியோன் அல்லது பாஜொலே ஐ தேர்ந்தெடுக்கவில்லை. பிரெஞ்சு மக்கள் மீதும் உலக மக்கள் மீதும் பெரும் மின்னணு உளவுவேலையை மேற்கொண்டு வரும் மிகப் பிற்போக்கு சக்திகள், இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகளுக்கு, கையெழுத்திட்ட வெற்றுக் காசோலை போல் ஹாலண்ட் அதிகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் மாலியில் இடம்பெற்ற நடவடிக்கைகளிலிருந்து தனிநபர்களை அல்லது முழு இயக்கங்களையும் இலக்காக வைத்து நடத்தப்படும் படுகொலைகள்வரை நுசிய் மேற்கோள்காட்டுகிறார். எலிசே மாளிகையின் தேசிய உளவுத்துறை ஒழுங்கமைப்பாளர் அன்ஜ் மோன்சினி ஐ அவர் மேற்கோள் காட்டுகிறார்: “அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் எதிரான தாக்குதலுக்கு எதிராக பிரான்ஸ் எப்போதும் பதில்கொடுக்கும் என்பது, அதுபற்றி அறிய அக்கறைகொள்ளும் உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவருக்கும் நல்ல விஷயமாகும்.

பிரான்சும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் பிரான்சின் முன்னாள் காலனித்துவ பேரரசின் பெரும் பகுதிகளையும் (லிபியா, ஐவரி கோஸ்ட், சிரியா, மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு உள்ளடங்கலான) அதன் சுற்று வட்டாரங்களையும் ஆக்கிரமிக்கையில், பிரெஞ்சு உளவு நிறுவனம் “மனிதக் கொலை”க்கான ஒரேமாதிரியான நிலையைக் கொண்ட, வரிசைக்கிரமமான “ஒரே மாதிரி நடவடிக்கைகளை” (homo operations) சமாந்தரமாக நிறுவியது. “ஒரேமாதியான நடவடிக்கைகள்” என்பன பிரான்சை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அல்லது ஆள் கடத்தல்களுக்கு “பழிவாங்க” வடிவமைக்கப்பட்டவை ஆகும். உண்மையில் அவை ஏகாதிபத்தியத்தால் இலக்கு வைக்கப்பட்ட முழு மக்கள் தொகையையும் அச்சுறுத்த உதவுகிறது.

நுசிய் இன் புத்தகம், அல்ஜீரிய யுத்தத்திற்கும் மொலே அரசாங்கத்திற்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தின் பிரிவுகளால் 1958 முழுவதும் நடத்தப்பட்ட கலக சதி ஊடாக ஐந்தாவது குடியரசை நிறுவியதற்கு பின்னரில் இருந்து, “ஒரேமாதிரி நடவடிக்கைகளின்” (homo operations) நீண்ட வரலாற்றை மதிப்பாய்வு செய்கிறது. 1958ல் கலக சதிகாரர்களால் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட மொலேயும் பின்னர் டு கோலும், நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்களை சுற்றி வளைத்து கொல்வதற்கு அதி-வலது “பிரெஞ்சு அல்ஜீரியா” வட்டாரங்களிலிருந்து வருவிக்கப்பட்ட கொலைகாரர்கள், முதலில் மொலே ஆலும் பின்னர் டு கோல் ஆலும் எப்படி கட்டளையிடப்பட்டார்கள் என்பதை அவர் வரிசையாய் விளக்குகிறார்.

அரசியல் வலதுகளால் மட்டும் அல்லாது மொலேயின் சமூக ஜனநாயகவாதிகளின் கீழ் பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகளும் ஆதரித்திருந்த இந்த யுத்தம், ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபகத்தையுமே செல்வாக்கிழக்க வைத்தது. பிரெஞ்சு அரசானது, சிறிதுகாலத்திற்கு, வழக்கமான பணிகளில் இருந்து தன்னை தூர வைத்துக் கொண்டு, இலக்கு வைக்கப்பட்ட கொலைகளைப் பயன்படுத்துவதற்கு கடமைப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆபிரிக்காவில் அதன் நலன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய முயம்மர் கடாஃபியின் லிபிய ஆட்சிக்கு எதிராக பயன்படுத்திய வன்முறை வழிமுறைகளை நுசிய் எடுத்துக்காட்டுகிறார். 1970 களிலும் 1980களிலும் வலெரி ஜிஸ்கார்ட் டெ'ஸ்டாங் (Valéry Giscard d’Estaing) மற்றும் பிரான்சுவா மித்திரோனின் ஜனாதிபதி பதவிக் காலங்களில் லிபிய ஆட்சியை தூக்கி எறிவதற்காக, குறிப்பாக பெங்காசியில் வலதுசாரி கிளர்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் லிபிய ஆட்சியை தூக்கி எறிய, எண்ணிறைந்த முயற்சிகள் நடைபெற்றன. இந்த உண்மைகள் 2011ல் கடாஃபியை கவிழ்ப்பதற்காக பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியையும் நேட்டோ சக்திகளையும் உந்தித் தள்ளிய நீண்டகால ஏகாதிபத்திய நலன்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

நாஜி ஒத்துழைப்பாளரான விச்சி ஆட்சியின் முன்னாள் அலுவலரும் 1969ல் நிறுவப்பட்ட சோசலிஸ்ட் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியான மொலே அரசாங்கத்தின் கீழ் அமைச்சராகவும் பணியாற்றியவருமான, மித்திரோனின் கீழ் ”ஒரேமாதிரியான நடவடிக்கைகள்” எண்ணிக்கை அதிகரிப்பு தொடங்கியது. ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் இலக்குகளை படுகொலை செய்ய நடவடிக்கை சேவை மற்றும் சிறப்புப் படைப் பிரிவுகளை அவர் அழைத்தார்.

பசிபிக் கடலில் பிரெஞ்சு அணு ஆயுத சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த 1986ல் கிரீன்பீஸ் இன் வானவில் படைவீரன் (Rainbow Warrior) எனும் கப்பல் மீது குண்டுகளை வீசிய பிரெஞ்சு முகவர்கள் பிடிபட்ட பின்னர், மித்திரோனும் கூட நடவடிக்கை சேவையை நவீனப்படுத்தும் முகமாக, மேலும் தன்விருப்பம்போல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அல்ஃபா அணி என்ற ஒன்றை உருவாக்கினார். இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளை இந்த அல்ஃபா அணிதான் இன்றும் பணியாகக் கொண்டிருக்கிறது.

இந்த இரகசிய நடவடிக்கைகளில், பிரான்சில் இடதுசாரி மாணவர்களைத் தாக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருந்த நவ-பாசிச குழுவான, ஒன்றிய பாதுகாப்பு குழு (GUD) போன்ற அதி-வலதுசாரி சக்திகள் மீது மித்திரோன் எப்படி தங்கி இருந்தார் என்பதையும் நுசிய் காட்டுகிறார். அத்தகையோருள் ஒருவர்தான் ஒலிவியே டி (“Naf-Naf”) எனப்படும் லெபனானில் பலாஞ்சிஸ்டுகளுக்காக சண்டையிட்ட முன்னாள் GUD உறுப்பினர். அவரது நடவடிக்கைகளில், முன்னாள் பாராசூட் படைவீர்ர்கள் மற்றும் வெளிநாட்டு கூலிப் படையினர் மற்றும் கோலிச-எதிர்ப்பு ஆயுதமேந்திய இரகசிய இயக்கத்தின் (OAS) முன்னாள் உறுப்பினர்கள் உள்பட” பிரெஞ்சு அல்ஜீரியா ஆதரவாளர்களின் காரியாளர்களை அவர் அணிதிரட்டினார்.

1980களின் துவக்கத்தில் மித்திரோனின் PS-PCF அரசாங்கத்தின் “சிக்கன நடவடிக்கை திருப்பம்” தொடர்பாக அவரின் கீழ் நடத்தப்பட்ட “ஒரேமாதிரியான நடவடிக்கைகள்” தொழிலாள வர்க்கத்திற்குள் PS மற்றும் PCF ஆகியனவற்றை செல்வாக்கிழக்க வைத்தன. PCF-ன் தொழிலாள வர்க்க அடித்தள இழப்பானது விரைந்து கூடியது. பொது மக்கள் அந்நியப்படல் மற்றும் அரசியல் நிறுவனம் மீதுபற்றுதல் இன்மை ஆகியவற்றின் வெடிப்பின் நிலைமைகளின் போது, ஆளும் வட்டாரங்களானது  என்றுமிலாதவாறு அதிகரித்த யுத்தம் போன்ற தங்களின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு மூலோபாயமாக பேரளவிலான அரசு கொலைகளுக்கு சுதந்திரமாய் திரும்புவதை உணரத்தொடங்கின. அவர் ஆணையிட்டு நடக்கும் கொலைகளின் அளவைப் பார்க்கும்பொழுது ஹாலண்ட் முன்னிருந்தவர்களைக் காட்டிலும் தெள்ளத்தெளிவாகவே விஞ்சிவிட்டிருக்கிறார்.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் வாஷிங்டனின் இராணுவத் தலையீடுகளுடன் பிரெஞ்சு ஏகாதிபத்திய தலையீடுகளை ஒருங்கிணைத்து, அவரது முன்னவரான நிக்கோலா சார்க்கோசி பிரான்சை நேட்டோவின் ஒருங்கிணைந்த ஆணைக்குள் கொண்டுவந்த பின்னர், ஹாலண்ட் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மாதிரியாகக் கொண்டு, பெரும் அளவிலான மின்னணுமுறை உளவறிதல் மற்றும் இலக்கு வைத்து கொல்லுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

நுசிய் எழுதுகிறார்: “பிரான்சுவா ஹாலண்ட் இந்த (கொலைப்) பட்டியல் மற்றும் அது சம்பந்தப்படும் நடவடிக்கைகள் பற்றியதில் கூச்சப்படவில்லை என்று காணக்கூடியாக இருப்பது, அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட கீ மொலே பேர்வழிகளை நினைவுபடுத்துகிறது. …… பிரான்சுவா ஹாலண்டின் உறுதிப்பாடானது இராணுவம் மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் பல நினைவுகளை திரும்பக் கொண்டுவருகின்றன. ‘வெளிப்படையாகச் சொன்னால், அல்ஜீரிய யுத்தத்திற்குப் பின்னர் நாம் இதனை பார்த்திருக்கவில்லை. அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒரு ஜனாதிபதியே பொறுப்பு எடுக்கிறார் என்பது அரிதானது’ என்கிறார், இந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி.”

நுசியின்படி, “Operation Serval இன் போது, (அதாவது மாலி யுத்தத்தின் போது), 600லிருந்து 1000க்கும் அதிகமான ஜிகாதி போராளிகள் கொல்லப்பட்டனர், எலிசே மாளிகையின் ஆணைகளின்பேரில் உயர் மதிப்பு வாய்ந்த இலக்குகளிடையே தலைகள் உருண்டன…..குறைந்தபட்சம் மாலியில் 15 பேர் அழிக்கப்பட்டனர்.” கொலைப் பட்டியலில் அடிக்கடி புதிய வருகைகளும் இடம்பெறுகின்றன என்று நுசிய் மேலும் கூறுகிறார்.

பிரெஞ்சுக்காரர்கள் உள்பட, அரசியல் எதிராளிகளை அரசே கொல்லும்பொழுது, தற்போதைய காலகட்டத்திற்கும் அல்ஜீரிய யுத்த காலகட்டத்திற்கும் இடையில் ஒரு இணைஒப்பீட்டை, கள்ளத்தனமான நடவடிக்கைகளில் வல்லுநர்களே வரைகின்றனர் என்ற உண்மையானது, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அரசியல் திவாலை கோடிட்டுக்காட்டுகிறது. வெடிக்கும் உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒன்றும் அளிக்காது, பதிலாக அது யுத்தம் மற்றும் அரசு படுகொலையை அடித்தளமாகக் கொண்டு ஒரு வலதுசாரி சூழலை உருவாக்கவே திரும்புகிறது.

எலிசே மாளிகையில் ஹாலண்டை சூழவுள்ள முக்கிய பிரமுகர் குழுவின் உறுப்பினர் ஒருவரை நுசிய் மேற்கோள்காட்டுகிறார்: “ஹாலண்ட் பிரபலமாக ஆக முடியாதிருந்தால் அல்லது உள்நாட்டு அரங்கில் வெற்றியை ஈட்ட முடியாதிருந்தால் குறைந்தபட்சம் அவர் ஒரு உண்மையான போர்த் தளபதியாகவாவது தனது தோற்றத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். அவர் பிரதானமாக ஒரு சில நவீன பழமைவாத ராஜீய தூதர்கள் மற்றும் போர்வெறிகொண்ட படைத்தளபதிகளின் ஆளுமை செல்வாக்கின் கீழ் இருக்கிறார்.”

ஐந்தாம் குடியரசின் மிக இழிபுகழ்பெற்ற ஜனதிபதியான ஹாலண்ட், வெறுக்கத்தக்க சிக்கன பொருளாதாரக் கொள்கையை தான் மேற்கொண்டிருக்கிறார் என்பதை நன்கு உணர்ந்தே, அவர் குற்றச்செயல், ஆக்கிரமிப்புப்போர் மற்றும் படுகொலை சம்பந்தமாக அரசியல்சாசனத்திற்கு விரோதமான முன்னெடுப்பு போன்றவற்றில் அடைக்கலம் புகுந்துள்ளார். மக்களை உளவறிதல் கண்காணிப்பு மீதான பல்வேறு  சட்டங்கள் மற்றும் அதிகரித்துவரும் இராணு வரவு-செலவு திட்டங்கள் ஆகியன, பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை எதிர்க்கும் எவருக்கும் எதிராக இயக்கும் ஒரு கொலை எந்திரத்தை வளர்த்தெடுப்பதற்கே பயன்படுத்தப்படும்.

இந்த புத்தகமானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும்: அரை நூற்றாண்டுக்கு முன்னர், அல்ஜீரிய யுத்தத்தின்பொழுது SA ஆலும் பிரெஞ்சு அல்ஜீரிய ஆதரவு படையினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் கடந்த காலத்திலான ஒரு விடயம் மட்டும் அல்ல. அரசு இது போன்ற குற்றங்களை மீண்டும் கருத்தில் கொள்ள முடியும், அது அவ்வாறு செய்வதை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.